Advertisement

AVAV 11 (3)
அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், “ரெண்டு நாள்ல உலகம் ஒன்னும் புரண்டுடாது, சுத்தி இத்தனை பேர் இங்க இருக்காங்க, பாத்துக்கறேன், டென்ஷனில்லாம போயிட்டு வாங்க”, என்று தேறுதல் சொல்லி அவனை அனுப்பவேண்டியதாய் ஆனது.
நேற்று ஒரு நாள் கணவன் இல்லாமல், வீடே வெறிச்-செனத் தெரிந்தது நங்கைக்கு. இதற்கு முன்பும் வேறு ஊர்களுக்கு/ நாடுகளுக்கு செல்வான்தான். ஆனால், அப்போது இருவருக்கிடையே பேச்சுக்கள் மிகக் குறைவே, ஏன் பேசியதே இல்லையென கூறலாம். இப்போது அப்படியில்லையே? இருவருமே அன்றாட நிகழ்வுகளைப் பேசி,அவர்களது உணர்வுகளை பகிர்ந்து பழகியிருந்ததால், இந்த தனிமை முகத்தில் அறைந்தது.
த்ரிவிக் -கிற்கும் அப்படித்தான் என்பது அவனிடமிருந்து அரைமணிக்கு ஒருமுறை வந்த  அலைபேசி அழைப்பில் தெரிந்தது. ஒன்றுமில்லாத “எழுந்துட்டியா?”, “காஃபி குடிச்சியா?”, போன்ற உப்பு சப்பில்லாத கேள்விகள்… நங்கை மனதுக்குள் “உன்னை யாருடா டூருக்கு போகச் சொன்னது?”, என்று வைதாள்.
கடனே என்று எழுந்து, மெதுவாக அவளது வேலைகளை செய்தவள்… சமைக்கவும் வீடு துடைக்கவும் வேலையாட்கள் வந்து விட, பத்தி நிமிடத்தில் காஃபியும் வந்தது. குடித்த பின், குளிப்பதற்கு அவர்களது அறைக்குச் சென்றாள்.
குளித்து முடிக்கக்கூட இல்லை. மீண்டும் த்ரிவிக்-கின் அழைப்பு வர, அவசரமாக பாத் ரோபை [bath robe], கட்டிக்க கொண்டு வெளியே வந்தாள். அவனது இப்போதைய கேள்வி  “குளிச்சிட்டியா?”, “சாப்டியா?”, பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பதிலளித்தவள்…..
“என்ன டிரஸ் போட்டிருக்க?”, என்ற அவனது கேள்வியில் கடுப்பானாள், “என்ன போட்டிருந்தா உங்களுக்கு என்ன? உப்பில்லாத பத்தியக்காரனுக்கு ஊறுகாயப் பத்தி என்ன கவலை?” என்றாள், வெடுக்கென.
“ஆங்…”, என திகைத்தவன் … அவள் சொன்னது புரிந்து… முறுவலித்தபடி, “சாப்பிடக்கூடாதுன்னு தான் பத்தியம், பாக்கறதுல ஒன்னும் தப்பில்லையே?”, சன்னமான சிரிப்புடன்தான் சொன்னான், ஆனால் ஆழ்ந்து ஒலித்த அவனது குரலில், அவன் வலி தெரிந்தது மனைவிக்கு. கணவனின் ஆர்வப்பார்வைகள் இவள் அறியாததா? பார்வையோடு நிற்பதுதான் விந்தை. இவளுக்கே அவ்வப்போது தோன்றும், எப்படி இத்தனை கட்டுப்பாட்டுடன் இருக்கின்றான் என்று. இத்தனைக்கும் ஒரே படுக்கை, முக்கால்வாசி இரவுகளில், அவன் கைகள்தான் மனைவிக்குத் தலையணையாய்.
சரி, அவன்தான் முன்னேறி அடுத்த அடி வைக்கவில்லை, அவளாய் போய் அணுகினாளா என்றால் அதுவும் இல்லை. இல்லாத பொல்லாத வெக்கம், தயக்கம்.. அனைத்திற்கும் மேலாய் பயம்.. ஆம். பயமேதான். அவன் இரண்டு அடி அடித்தால் கூட பரவாயில்லை, ஆனால், என்னவாவது சொல்லிவிட்டால்? அதன்பிறகு மொத்த வாழ்க்கைக்கும் அந்த வடு நிற்குமே?  எனவே, படுத்தவுடன் உறங்கவேண்டும் என்பதற்காகவே, நிறைய உடலுழைப்பை செய்தாள், விளையாட்டும் அதில் சேர்த்தி.
ஒரு நாள் நடுநிசியில் த்ரிவிக், மற்றொரு அறை சென்று அங்கிருந்த எக்ஸ்சர்சைஸ் சைக்கிளை மிதியோ மிதியென்று மிதித்து, வியர்வையில் தொப்பமாக நனைந்து வந்தான். கால் போட ஆளுமில்லை/தலையணையும் இல்லை என்பதில் நங்கை முழித்து விட்டிருந்தாள். அவனைத் தேடித் செல்ல… ஹாலிலேயே அந்த சைக்கிளின் சப்தம் கேட்டுவிட, அரவமின்றி சென்று படுத்து விட்டாள்.  அவன் குளித்துவிட்டு வந்து படுத்தவனிடம், தாளமாட்டாது … “ஏதோ கோபத்துல தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன்? அதை இத்தனை சீரியஸா எடுத்துக்கணுமா?”, என்று அவனிடம் கேட்டே விட்டாள். கண்கள் கலங்கிப் பார்க்கும் மனைவியை கூர்மையாகப் பார்த்து…கரகரத்த குரலில் , “நானும் தெரியாமத்தான் நீ வேலைக்கெல்லாம் ஆகமாட்ட-ன்னு சொன்னேன். நீ விட்டுட்டியா என்ன?”, என்று எதிர்க்கேள்வி கேட்டான். என்னவென்று பேசுவாள்??
ஊர்ல உலகத்துல ஹஸ்பண்ட் வொய்ப் சண்டை போட்றதே இல்லையா? எல்லாரும் இப்படியா இருக்காங்க?, நங்கையின் மனம் குமுறியது. இவளது மனதை, தெளிவாக விளக்கினால்தான் எல்லாமும் என்றால், என்னதான் செய்ய முடியும்?
இப்பிரச்சனை தீர நங்கைக்கு ஒரே வழிதான் தெரிந்தது. க்ரீச்-சில் செய்திருந்த முதலீட்டை, அதன் வருமானம் மூலம் ஈட்டிய பின்தான் கணவனுடன் மனம் விட்டு பேசவேண்டும், என்று எப்போதோ முடிவெடுத்து இருந்தாள். இன்னமும் பத்து பதினைந்து நாட்கள். அடுத்த மாத க்ரீச்-சின் வரவுடன், நங்கை செய்த முதலீட்டு தொகை  நேராகிவிடும். அதன் பின் வரும் வருமானமெல்லாம், லாபக்கணக்கில் சேரும். அந்த நன்னாளை எதிநோக்கி காத்திருந்தாள் நங்கை.
த்ரிவிக் லைனில் இருப்பது நினைவுக்கு வர… “இப்ப பாத் ரோபோட இருக்கேன்… “, என்றாள்.
“ஓஹ்… ஸாரி”, என்றுவிட்டு அவசரமாக அழைப்பைத்  துண்டித்தான்.
“சரியான சாமியார்”, முணுமுணுத்தவாறு, அலைபேசியை அதனுடைய ஸ்டாண்ட்-ல் வைத்து…  த்ரிவிக்கினை வீடியோ காலில் அழைத்தாள்.
அவனுக்கு ஸ்க்ரீனில் நங்கை தெரியவில்லை,புடவைதான்  தெரிந்தது. “எங்க காணோம்? அதுக்குள்ள டிரஸ் சேஞ் பண்ணிட்டயா?”, த்ரிவிக்.
“ம்ஹூம்…. டிரஸ் செலக்ட் பண்ணத்தான் போன் பண்ணினேன்”, ஹாங்கரில் தொங்கிய பனாரசி கோரா காட்டன் புடவை ஒன்றையும், உப்படா லைட் வெயிட் புடவை ஒன்றையும் போனில் காண்பித்து, “ரெண்டுல எதை கட்டிக்க? சொல்லுங்க”
கோபமாக , “எதையோ கட்டிக்கோ … போடி”, என்று விட்டு கட் செய்தான். பின்னென்ன? வீடியோ கால் வந்ததும், அவளைப் பார்க்கலாம் என்று நினைத்தவனுக்கு வெறும் புடவையை காட்டி ஏமாற்றினால்?
அவனுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருந்தது. த்ரிவிக், காலையிலேயே எழும் பழக்கமுடையவனாதலால் விழிப்பும் வந்து விட்டது. மனைவியைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான், என்றோ… ஒரு வார்த்தை அவளை ஏசப்போய்… அது பூமராங்காக இவனைத் திருப்பி தாக்கியதை… அவளது வைராக்யத்தை.. விளைவாய் துவங்கிய தொழிலை… திட்டமிடலை …. விளம்பர யுக்தியை … பிரச்சனைகளை கையாளும் அவளது லாவகத்தை… என பலவும்.
ஐந்து நிமிடங்களில் புடவை மாற்றி, துளி ஒப்பனை செய்து, சுவாமிக்கு விளக்கேற்றிய நங்கை, கணவனை அழைத்தாள் .. எதிர்முனையில் அவன் எடுத்தால்தானே? வாட்சாப்பில் ஆன்லைன் என்று காண்பித்தது. உடனே கால் மீ மெசேஜ் அனுப்பினாள். ம்ஹூம்.. ஒன்றும் வரக்காணோம்.. காலை உணவு தயாராகி விட்டதாக அமிர்தம்மா சொன்னதால், சாப்பிட்டு முடித்தாள். அதுவரையில் கூட, அவனிடமிருந்து அழைப்பில்லை. இரண்டு மூன்று ஸெல்ஃபி எடுத்து அப்படியே அவனுக்கு ஷேர் செய்தாள்.  மேலும் அரைமணி நேரம் சென்றது. அவளும் க்ரீச் செல்லத் தயாராகி இருந்தாள்.
அவளே த்ரிவிக்-கை அழைத்தாள்.  இரு முறை  முழுதாக அடித்தபின்னும் பதில் இல்லாது போக.. மனது மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பத்து நிமிட இடைவெளி விட்டு அவனை அழைத்தாள். ம்ஹூம்… போன் அடித்தவாறே இருந்தது. நங்கைக்கு முகமே வெளிறிவிட்டது. என்னாச்சு தெரிலையே ? என்னை பத்திரமா இருக்கச் சொல்லிட்டு இவர் கேர்லெஸ்-சா இருக்காரோ? ஆண்டவா முருகா அவர்க்கு எதுவும் ஆகக்கூடாது…. புலம்பித் தவித்து விட்டாள்.
சிறிது நேரத்தில்  நங்கையின் அலைபேசி அழைக்க… முதல் ரிங்கிலேயே எடுத்து, “விக்ரம், விக்ரம்  …..”, பதட்டமாக பேச…
“ஹே … என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்சன்?”, என்ற அவன் குரல் கேட்கவும்தான் அவளுக்கு உயிரே திரும்ப வந்தது.
“நீங்க ஏன் போன் எடுக்கல ?”, என்றாள் நடுக்கத்துடன் புகார்க் குரலில்.
சற்று கோபமாக… “ஏண்டி ? ஏன்? காலைலேர்ந்து போன் பண்ணிட்டே இருக்கேன்-ன்னு நீதான் கோவப்பட்ட. சரி போய் ப்ரேக்பாஸ்ட முடிக்கலாம்னு போனேன், செல்லுல சார்ஜ் வேற கம்மி. சார்ஜிங்-ல போட்டுட்டு போனேன்”. என்று அவன் எகிறினான்.
“சாரி அது ரெண்டு, மூணு  முறை கால் பண்ணினேன், எடுக்கவேயில்லையா .. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.”, என்றாள் உண்மையாக.
சட்டென டென்சன் வடிய….. “அச்சோ.. நங்கை.. எனக்கு என்னைப் பாத்துக்க தெரியும், இப்போ மீட்டிங் கிளம்பிட்டேன்,  முடிஞ்ச உடனே,  நான் பேசறேன். ஓகே? “, என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். கண்கள், அவள் ஷேர் செய்திருந்த
படங்களைப் ரசனையாய் பார்த்தது. விரல்கள் தன்னை அறியாமல்… “அழகுடி நீ… ” என மெசேஜை பதிந்து அனுப்பியது. பார்த்த நங்கையின் முகம் இளங்காலை சூரியனாய் பிரகாசித்தது.[/QUOTE]

Advertisement