Advertisement

   கரை காணா காதலே – 9
அந்த பிரமாண்டமான மாலில் உள்ள, பட்டு புடைவகளுக்கு என்று பிரசித்தி பெற்ற அந்த டெக்ஸ்டைல் ஷாப்பிற்குள் நுழைந்தனர் ரமேஷ் மற்றும் ப்ரியா குடும்பத்தினர்..
ரமேஷ் வீட்டில் எல்லாரும் வந்திருக்க, ப்ரியா வீட்டிலும் அவள்  அத்தை தனலக்ஷ்மி – கணேசன் தம்பதியர் உள்பட அனைவரும் வந்திருந்தனர்..
முதலில் ப்ரியாவை அழைத்து செல்ல வேண்டாம் என்று தான் கமலாவதி எண்ணி இருந்தார்.. அவர் காலத்தில் இந்த மாதிரியான விஷயங்களில் பெற்றோர் எடுப்பது தானே முடிவு.. அதனால் அப்படி நினைத்து அவளை வேண்டாம் நாங்கள் போய் வருகிறோம் என்று சொல்லி விட அதற்கும்  முகத்தை தூக்கி வைத்திருந்தாள் ப்ரியா.
மஹதி தான் அவள் முகத்தை தூக்கி வைத்திருப்பது பொறுக்க முடியாமல், தன் பாட்டியிடம் சென்று எடுத்து சொன்னாள்..
“பாட்டி ஏன் ப்ரியாவை வர வேணாம்னு சொல்றிங்க??” என்றிட
“மதிமா நம்ம வழக்கத்துல இது எல்லாம் பழக்கம் இல்ல மதிமா, அதான் வேணாம்னு சொல்றேன்….”என்றார் அவரும்…
“பாட்டி அது எல்லாம் உங்க காலம், ஆனா இப்போ இருக்க பொண்ணுங்க எல்லாம் அவங்க கல்யாணத்தை பத்தி எவ்வளவு அசைகள், கனவுகள்ன்னு வச்சு இருக்காங்க தெரியுமா??? மேட்சிங் க்ரூமிங் அண்ட் ப்ரைட்டுன்னு நிறைய புது விஷயங்கள், இவென்ட் பிளானர்ஸ்ன்னு இன்னும் இன்னும் நிறைய வந்திருக்கு பாட்டி..
அவங்களுக்கு பிடித்ததை அவங்களே எடுக்கட்டும், அவங்களுக்கு தானே கல்யாணம் அவங்க சந்தோசம் தானே முக்கியம் பாட்டி சோ ப்ளீஸ் அவளையும் கூட்டிட்டு போகலாம் பாட்டி..”  என்று என்ன என்னவோ சொல்லி அவர் மனதை கறைத்து சம்மதம் சொல்ல வைத்து விட்டாள் மஹதி…
“எல்லாம் எனக்கும் புரியுது மதிமா.. காலங்கள் மாறுவதற்கேற்ப, நாமளும் மாறிடனும்ன்னு சொல்ற.. ஹ்ம்ம் மாப்பிளை வீட்டில் ஏதும் சொல்லுவங்களோன்னு தான் யோசிக்க வேண்டி இருக்கு …” என்றார்…
“அதனால என்ன பாட்டி அவங்கக்கிட்டயே   கேட்க வேண்டியது தானே” என்று சொன்ன மாத்திரத்தில் ரமேஷின் அம்மா வள்ளிக்கு  போன் செய்து இருந்தாள் மஹதி..
அந்தபுறம் அழைப்பு ஏற்க பட்டதும், கமலாவதியிடம் கொடுத்து விட்டாள்.. சில பல நல விசாரிப்புகளுக்கு பின், விஷயத்தை ஆரம்பித்திருந்தார் இவரும்..
“கல்யாண புடவை எடுக்க வர்றபோ, அதை கட்டிக்க போற பொண்ணையும் கூடிட்டு வரலாமான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்…” என்றதும், இந்த கேள்வியில் ரமேஷின் அம்மா அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.
பின்னே பெண் வீட்டில் இருந்து, ஒரு விஷயத்திற்கு அனுமதி கேட்பது என்பது எந்த மாப்பிளையின் பெற்றோருக்கும் கெத்து தானே..
“அதனால என்னம்மா நீங்க வரும்போது ப்ரியாவையும் கூட்டிட்டு வாங்க, அவளுக்கு ஆசை இருக்கும் இல்ல..” என்று தனது சம்மதத்தையும் தெரிவித்தார்..
ஒரு வழியாய் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர்.
“முகூர்த்த புடவை எடுக்க டைம் ஆகும், அதனால நாம முதல்ல அதை எடுத்துடுவோம்..” என்று வள்ளி கூற அனைவரும் அதை அமோதித்து புடவையை தேர்வு செய்ய ஆரம்பித்திருந்தனர்..
ரமேஷ் ப்ரியாவை சைட் அடித்து அவளை முகம் சிவக்க வைத்து கொண்டிருந்தான்.. அனைவரும் இதை பார்த்திருந்தாலும், கண்டும் காணாதும் மாதிரி இருந்தனர்..
அன்றே அனைவருக்கும் ஜவுளி எடுப்பதாய் இருந்ததால், அவரவர் அவர்கள் ரசனைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டிருந்தனர்..
அப்போது தான் வேதாந்தும், அவன் குடும்பத்தினர் உடன் அங்கே நுழைந்திருந்தான்.
ஆம், குடும்பத்தினர் உடன் தான்.. வேதாந்த், ரிஷி இருவரும் கிளம்புவதற்கு முன் குணாவும், சத்யாவும் வெளியில் கிளம்புவதற்காக தயாராகி இருந்தனர்..
“ஏங்க பசங்க கிட்டே சொல்லிட்டு கிளம்பிடலாம்ங்க…” என்றபடியே தன் சேலை மடிப்பை சரி செய்த படியே வந்தார் சத்யா..
வேதாந்தும், ரிஷுயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..
“வேதா நானும், அம்மாவும் வெளில கிளம்பறோம், இந்த வீக்ல நம்ம பிசினெஸ் வட்டாரத்துல ஒரு கல்யாணம் அதுக்காக ஷாப்பிங் போறோம்பா..”
“நாங்களும் ஷாப்பிங் போறோம் டாடி.. ஜாயின் வித் அஸ் டாடி…” என்று இயல்பாய் அழைத்தான் ரிஷி..
அவரோ வேதாந்தின் முகத்தை பார்த்தார்… அவருக்கு தான் தெரியுமே!!! கடந்த நான்கு வருடங்களில் அவன் அவர்களுடன் எங்கும் போவது இல்லை, வருவது இல்லை என்பது…
தன் அனுமதிக்காக தான் தன் முகத்தை பார்த்து கொண்டிருக்கிறார் என்று அறிந்த வேதாந்த், என்ன நினைத்தானோ!!! “ஆமாம் அப்பா, நாங்களும் வெளியே தானே போறோம்.. எங்க கூடவே வாங்களேன் “  என்றான்..
இதை கேட்டதும் குணசேகரன் விழிகள் விரிந்தன. ‘சொன்னது எம்மவன் தானா???’ மண்டைக்குள் மைன்ட் வாய்ஸ் கேட்டது.. அந்த சந்தேகத்தினுடையே இதை மனைவியிடம் தெரிவிக்க சென்றார்..
அவர் சொன்னதை கேட்ட சத்யா “ஏங்க நிஜமாத்தான் சொல்றிங்களா??? இல்ல கனவுல ஏதும் இருக்கிங்களா??” என்ற  சத்யாவை ஒரு முறை முறைத்தவர், 
“நிஜமாத்தான் சொல்றேன்.. வேணா என் கையை கிள்ளி பாரு” என்று சிறு பிள்ளை போல் கையை நீட்டினார்..
அதற்குள் ரிஷியின் அழைப்பு சத்தம் கேட்டிட, அனைவரும் கிளம்பி அந்த மாலிற்கு வந்திருந்தனர்.. அங்கு இருந்த கிப்ட் ஷாப்பில், டிஸ்ப்ளே பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்…
இங்கு ரமேஷ் எதோ ஒரு போன் கால் பேச வேண்டும் என்று வெளியே வந்திருந்தான்.. அவர்கள் இருக்கும் அந்த ஷாப்பிற்கு, எதிரில் அந்த கிப்ட் ஷாப் அமைந்திருந்தது..
ரமேஷ் போன் பேச வந்தவன், எத்தேசையாக அங்கே இருந்த வேதாந்த்தை கவனித்து விட்டான்.
“பாஸ் எங்க இங்க.. அதுவும் பேமிலி கூட வந்திருக்காரு…” என்று ஆச்சர்யப்பட்டவன், வேகமாய் அவனை அழைத்தான் செல்போனில்
“பாஸ்..” என்றான்..
“ஹாய் ரமேஷ், சொல்லுடா”
“என்ன பாஸ், பேமிலி ஷாப்பிங் போல சொல்லவே இல்ல…”
வேதாந்த் யோசனையாய், “நாம இங்க வந்தது இவனுக்கு எப்படி தெரியும்.. ஹ்ம்ம்” என்றவாறே சுற்றும், முற்றும் தேடினான்..
அவன் தேடுவதை கவனித்த ரமேஷ் “இங்க பாஸ் இங்க பாருங்க.. ” என்று கை அசைத்தான்…
அதில் அவனை கண்டு கொண்டவன் அவனிடம் சென்றான்..
“ஹே என்னடா விளையாட்டு இது, எங்க இருக்கன்னு சொல்லாம.. கை காட்டிட்டு இருக்க…” என்று சிறிதாய் கடிந்தவன்,
“அப்பறம் என்ன ப்ரியா கூட ஷாப்பிங்கா..” என்றான் கிண்டலாய்..
“இல்ல பாஸ் நீங்க வேற, மொத்த பேமிலியும் வந்திருக்கோம், முஹுர்த்தா பர்சேஸ்..”  சிறிது சலிப்புடன்
வேற என்ன அவர்களை தனிமையில் விடவில்லை அதனாலேயே… இதை கேட்டவனின் முகம் முழுதாய் பிரகாசித்தது.. இருக்காதா பின்னே, மொத்த குடும்பமும் என்றால், மஹதியும் வந்திருப்பளே, அதனாலையே இந்த பிரைட்னஸ்..
“பாஸ் வாங்க அப்பா, அம்மா வந்திருக்காங்க, அண்ட் ப்ரியா அவங்க பேமிலி இன்ட்ரோ குடுக்கிறேன்…” என்று அழைத்தான்..
“டேய் நியாயமா பாத்தா நான் தான் உனக்கு இன்ட்ரோ குடுக்கணும்.. என்ன செய்ய எல்லாம் என் நேரம்..”  என்று தனக்குள் பேசி கொண்டவன் ரமேஷ் பின்னே செல்ல போனான்..
அப்போது சரியாய் ரிஷியும், அம்மா, அப்பா என அனைவரும் வந்து விட எல்லாரையும் பார்த்து நலம் விசாரித்து விட்டு, அவர்கள் வந்திருப்பதர்க்கான காரணத்தை தெரிவித்து இருந்தான் ரமேஷ்.
அதை கேட்ட சத்யாவிற்கு தான் சிறிது மனத்தாங்கலாக போய் விட்டது.. ரமேஷ் கல்யாணம் நல்ல விஷயம் தான்.. ஆனால் அவனும், வேதாந்தும் ஒரே வயதுடையவர்கள் தான்.. இவன் தான் கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே எதோ விரோதியை பார்ப்பது போல் பார்க்கிறானே??
அதை மீறி வேறு எதையும் செய்து விடவும் முடியாது..ஏ ற்கனவே ஒரு தவறு செய்ததற்காக இன்னும் அவருடன் பேசாமல் இருக்கிறான்.. வேறு ஏதும் பண்ண போய் மொத்தமாய் அவன் விலக்கி விடுவனே என்ற பயம் அவருக்குள் இருந்தது..
இவை எல்லாம் யோசித்து விட்டு பெரு மூச்சொன்றை  வெளியிட்டார் சத்யா.. “பொண்ணு யாரு, எந்த ஊரு ரமேஷ்…” என்று கேட்க,
அவன் ப்ரியாவின் விவரங்களை சொன்னதும், அவருக்குள் ஒரு சந்தேகம், வேதாந்த் இருப்பதும் தெரியாமல் வாய் விட்டு விட்டார்..
“அவங்க வீட்டிலையா?? அவங்க எந்த பொண்ணை உனக்கு பேசி இருக்காங்க…” என்று கேட்டார், அதில் சிறிது பயமும், பதட்டமும் இரண்டறக் கலந்திருந்தது..
அவர் கேட்ட கேள்வியில், பார்வையிலேயே தன் தாயை எரித்து கொண்டிருந்தான் வேதாந்த்..
“அவங்க ரெண்டாவது பொண்ணு ப்ரியங்காதான் மா…”
சிறிது ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டவர் “சரிப்பா…” என்றார்..
வாங்க எல்லாரும் உள்ளே தான் இருக்காங்க,  என்று அவர்களிடம் அழைத்து சென்றான்..
ரமேஷின் பெற்றவர்களை முதலிலேயே அறிமுகம் ஆனதால், அவர்கள் இவர்களை கண்டதும் வரவேற்றனர்.. ப்ரியா குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார் வள்ளி..
“இவங்க தான் எங்க சம்பந்தி தமிழ்செல்வி, அவங்க மாமியார் கமலாவதி, இவங்க ப்ரியாவோட அத்தை, மாமா, இவதான் என் மருமகள்…” என்று ப்ரியாவை அறிமுக படுத்தினார்…
ஆனால் மஹதி அங்கு இல்லை.. அவள் இன்னும் புடவை தேர்ந்தெடுப்பதில் தான் இருந்தாள்.. இவர்களை இன்னும் கவனிக்கவில்லை… ஆனால் வேதாந்தின் கண்கள் அவளை தேடி, கண்டுபிடித்து விட்டது..
முதலில் சத்யாவை அடையாளம் காண முடியவில்லை தமிழுக்கு.. யோசித்து அவரை பார்த்தவர், நியாபகம் வந்ததும் அவசரமாய் கமலாவதியை பார்த்தார்.. அவரும் சத்யாவை கண்டு கொண்டேன் என்று பார்வையை உணர்த்தினார்…
இவர்கள் பார்வை பரிமாற்றத்தை குணாவும், சத்யாவும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்..
என்ன தான் மனகசப்புகள் இருந்தாலும், புதிதாய் அறிமுகம் படுத்தும் போது பேசாமல் இருப்பது சரி அல்ல என்று கமலாவதி அவர்களை வரவேற்றார்.. தமிழும் இன்முகத்துடனே பேசினார்..
அவர்கள் என்ன தான் வெளியே சிரித்து, இன்முகமாய் பேசுவது போல் இருந்தாலும் அவர்கள் உதட்டில் இருக்கும் புன்னகை, மனதில் இருந்து மனதார வரவில்லை…
அது சத்யாவிற்கும் தெரியும்.. அதை கண்டு யாரும் அறியா வண்ணம் முகம் சுணங்கத்தான் செய்தது..
“நாம எதையும் தெரிஞ்சிக்காம  பண்ணின வேலைக்கு இந்த மாதிரி எதிர்வினை பயன்களை அனுபவிச்சு தான் ஆகணும் சத்யா… ப்ரீயா விடு.. எல்லாரும் பாக்குறாங்க பாரு.. முகத்தை எப்பவும் போல வச்சுக்கோ..” மனைவியின் முக வாடியது பொறுக்காமல், சத்யா காதோரத்தில் சொன்னார்..
அதன் பின் அடுத்த அடுத்த விஷயங்களுக்கு பேச்சு  மாறியது..
வேதாந்த் மஹதியை தேடி சென்றான்… அவளிடம் சென்றதும் இரண்டடி முன் நின்று கிழிருந்து மேலாக அவளை ஆராய்ந்து கொண்டிருந்தான்..
முதல் முறை பார்த்த மஹதி இவள் இல்லை. கல்லூரிக்கு செல்லும் பட்டாம்பூச்சி சிறகை விரித்து, சிரிப்பும், குதூகலமும் எந்த நேரமும் விழிகளில் தேக்கி வைத்திருப்பவள், பூசினார் போன்ற உடல் வாகு என்று இருந்தவள் தன்னால் தானோ எப்படி ஆகி விட்டாள்???? என்ற சிந்தனை அவனுள் ஓடியது..
சிரிப்பும், குதூகலமும், நிறைந்த விழிகளில் இன்று ஜீவன் இல்லை.. உயிர்ப்பு இல்லை… பார்த்த முதல் தடவையிலே அவளுக்கு செல்ல பெயர் வைக்க தூண்டிய அந்த உடல் வாகு இல்லை.. எதோ வாழ்க்கை வாழ்வது ஒரு கடமை என்பது போலவே இருந்தாள்.. அவளை நினைத்து நினைத்து இவனுக்கு தான் மூளை சூடானது…
“அடேய் அவளை இந்த நிலைமைக்கு காரணமும் நீ தான்” மனசாட்சி மண்டைக்குள் கொட்டு வைத்தது..
இதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, “எந்த புடைவை தான் எடுப்பது ச்சை…” என்று சலித்து கொண்டிருந்தவளிடம் சென்றாள்..
“இந்த கலர் எடுத்துக்கோ மஹா.. உனக்கு பெர்பெக்ட் மேட்சா இருக்கும்..”  என்று அவனின் குரல் கேட்டது, அடித்து பிடித்து திரும்பிப் பார்த்தாள் இவன் எங்கே இங்கே என்பதுபோல்..
வேகமாய் அவளில் ஒரு பதற்றம் வேறு.. யாரும் பார்கிறார்களா என்ற பயம் வேறு.. மொத்தமாய் அந்த ஏசி அறையில் கூட அவளுக்கு வேற்கத் தொடங்க,
“ஹேய் கூல் கூல் மஹா.. எல்லாம் அந்த பக்கம் இருக்காங்க… என் பேரன்ட்ஸ் வந்திருக்காங்க…” என்றவன், திரும்பவும்,
“இந்த சேலை உனக்கு அழகா இருக்கும்…” என, அவளையும் அறியாது அவளின் பார்வை அந்த சேலை மீது பதிந்தது..  
மயில் கழுத்து கலரில், பாடரில்  சிறிது இளம் பச்சை, பன்னீர் ரோஜா பூ கலந்த நிறத்தில் மயில் நடனமாடுவதை போல் இருந்தது… அவன் தேர்ந்தெடுத்த புடவையை அவளுக்கு பார்த்த மாத்திரத்தில் பிடித்திருந்தது.. “இவ்வளவு நேரம் தேடி தேடி பார்த்தும் இது எப்படி கண்ணுக்கு தெரியாம இருந்தது.. இப்போ இவன் வந்து எடுத்து குடுக்கிறா மாதிரி ஆகிடுச்சே!!!! ச்சை ”  என்று தன்னை தானே வறுத்து எடுத்து விட்டாள்..
அந்த புடவை பிடித்தம் தான்.. ஆனால் அதை அவன் முன்னால் சொன்னால் அவள் கெத்து என்னாவது!!!!!!!
“என்ன கலர் இது, எனக்கு பிடிக்கவே இல்ல.. அண்ட் என் ட்ரெஸ் எனக்கு செலக்ட் பண்ணிக்க தெரியும்.. சோ மைன்ட் யுவர் ஒன் பிசினெஸ்…” காட்டமாகவே சொன்னாள்…
அவன் தான் பார்த்து விட்டானே.. அந்த புடவையை பார்த்ததும் விழியை அகல விரித்து வாவ் என்று சத்தம் வராமல் சொன்னதை.. என்ன அவன் கவனிக்கவில்லை என்று நினைத்தாள். ஆனால் அவன் அவளது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பவன் ஆகிற்றே!!!
‘இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியலையே  ஆண்டவா… நாம ஸ்மூத்தா பிஹேவ் பண்ணலாம்னு நினைச்சாலும், இவ அப்படி இருக்க விட மாட்டா போலையே???? சரி எப்பவும் போல மிரட்டி தான் காரியம் சாதிக்கணும் போலையே!!!! ஹ்ம்ம் அதையே செய்வோம்…’ என்று நினைதுக்கொண்டவன்,
“உனக்கு நீயே செலக்ட் பண்ணினா எப்படி, அது உனக்கு மட்டும் தான் அழகா தெரியும், இதுவே நாங்க செலக்ட் பண்ணி குடுத்தா அது எல்லார் பார்வைக்கும் அழகாவே தெரியும்.. அதனால சொல்றேன் இந்த புடவையை எடுத்துக்கோ மஹா…” என்றான் மிரட்ட வேண்டும் என்று நினைத்து அது முடியாதுபோன  மென்மையான தொனியில்…
“அப்படி யாருக்கும் அழகா தெரியணும்ன்னு நான் ட்ரெஸ் பண்றது இல்ல, ஏன் அப்படி நினைச்சு கூட பாக்கிறது இல்ல… சோ எனக்கு இது வேணாம், நான் வேற செலக்ட் பண்ணனும் வழியை விடுங்க..” என்று அங்கிருந்து நகர போனாள்..
அவளை நகர விடாமல் அவள் கையை பிடித்தவன்.. “இப்போ இந்த புடைவையை வாங்கிக்க முடியுமா??? முடியாதா???” என்ற அடக்கப்பட்ட கோவத்தில்..
“முடியாது என்ன பண்ண முடியும் உங்களால” அவளும் அதே அடக்கப்பட்ட கோவத்தில்..
அவர்கள் இருந்தது பட்டு புடவை செக்சன் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை… அவர்கள் குடும்பத்தினரும் புடவை எல்லாம் எடுத்து வேறு செக்சன்க்கு மாறி இருந்தனர்…
“ஒரு நிமிஷம் அங்க பாரு..” கண்களால் சைகை காட்டியபடியே அவளுக்கு பின்னல் இருந்த அந்த தூணை காட்டினான், அதரங்களில் மெலிதான புன்னகையை தவழ..
”அங்க என்ன இருக்கு” அவன் காட்டிய திசையை நோக்கியவள் கண்டது இதை தான்.
புது பெண்ணுக்கே உரிய பூரிப்பில், அங்கே அத்தனை பேர் இருந்தும், யாரையும் கவனத்தில் கொள்ளாமல், ரமேஷ் அவள் கைகளின் விரல்களுக்கு சொடக்கிட்டு கொண்டே பேசி கொண்டிருந்தான், அதை கேட்டுக் கொண்டிருந்தவளோ முகம் சிவக்க சிவக்க சிரித்து கொண்டிருந்தாள்”..
“அவங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க போறவங்க, அதான் அப்படி பேசிட்டு இருக்காங்க இதை என்னை ஏன் பாக்க சொன்னிங்க??” என்றாள் காட்டமாய்..
“இல்ல இப்போ இவ்ளோ சந்தோசமா பேசிட்டு இருக்காங்களே, திடீருன்னு எதாவது அசவர வேலை வந்து ரமேஷ் கிளம்பிட்டன்னா, ப்ரியா முகம் வாடிடாது?? இல்ல அவசரமா அவன் வெளிநாடு போகவேண்டி வந்து.. கல்யாணம் தள்ளிப்போனா???” என்ற கேள்வி தொனியிலேயே கேட்டான்..
அவன் சொல்ல வருவதை, புரிந்து கொள்ளவே சிறிது நிமிடம் ஆனது மஹதிக்கு..
அவனின் கேள்வியாக கேட்ட தொனியிலேயே , நான் அப்படி செய்வேன் என்ற கூற்றும் உள்ளடங்கி இருந்ததை புரிந்து கொண்டாள்..
இரு கண்களையும் மூடி யோசித்தவள் “காலையில் நாம் தான் பாட்டி கிட்டே பேசி கூட்டிட்டு வர சொன்னோம், அது அவளுடைய சந்தோசத்திற்காக, இவை எல்லாம் வாழ்கையில் ஒருமுறை நடக்க கூடியவை… நாளை திரும்பி பார்த்தால் இவை யாவும் இனிய நியாபகங்களாக என்றென்றும் தித்திக்கும், இதை எல்லாம் அவ மிஸ் பண்ண கூடாதுன்னு தானே கூட்டிட்டு வந்தோம்.. இப்போ எப்படி நாமே அதை கெடுக்கிற மாதிரி பண்றது…” என்று தீவிரமாக யோசித்தவள் எதுவும் பேசாமல் அவன் முன் தன் வலது கரத்தினை நீட்டினாள்..
இடது கையை தான் அவன் பிடித்து இருந்தானே!!!!

அவள் கை நீட்டியதும் புரியாமல் அவளை பார்த்தவன், அவள் கண்கள் சென்ற திசையை பார்த்தான்.. அவ கையில் இருந்த புடவையின் மீது இருந்தது.. அதை கண்டதும் புரிந்து கொண்டவன் போல், “நாம தான் நிறைய எக்ஸ்பெக்ட் பண்ணிட்டமோ…” என்றவாறே கையில் இருந்த புடவையை அவளிடம் கொடுத்தான்..
அதை பெற்று கொண்டவள், அவனிடம் வெடுக்கென்று முகத்தை திருப்பி சென்றான்.. அதன் கண்டவன் முகத்தில் புன்னகையின் சாயல்….
அவள் எந்த புடவை எடுத்தால் நமக்கென்ன என்று இருக்க வேண்டியது தானே.. அவளுக்கு பொருத்தமானதை நீ ஏன் எடுத்து கொடுக்க வேண்டும்???
என்னவளுக்கு நான் தானே எடுத்து கொடுக்க வேண்டும்???
அதற்க்கு அவள் சம்மதம் வேண்டுமே???
இப்போது அவள் இதயத்தில் உனக்கு ஒரு இடம் இல்லையே…
என் இதயத்தில் இருக்கிறதே!!!
இதயத்தில் இருப்பது தான் காதலா???
காதல் ஏன் இதயத்தில் முளைக்கிறது???
இதயத்தின் செயலால், இரத்தம் இறுதி வரை செல்கிறது.. காதலிலும் இறுதி துளி ரத்தம் உன்னை காதலிக்கும்… அங்கமெல்லாம் ஆயுள் வரை பரவி இருக்கும்..
அது போல தானே காதலும்.. இந்த காதல் என்பது இயற்கையின் எட்டாவது அதிசயம் தான்..
புடவையை பெற்று கொண்டவளின் மனமோ உலை கொதித்திடும் நீர் போல் கொதித்து கொண்டிருந்தது…
எதற்காக இவன் இதை எல்லாம் செய்ய வேண்டும்.. அனுபவித்த சோதனைகள் போதாது, இன்னும் பட வேண்டும் என்பதற்காகவா???
செய்பவை மற்றவருக்கு நன்மையாக இருந்தாலும், என்னை பொறுத்த வரையில் அவை தீமையே!!!!
அவனை நிரூப்பித்தலில் எதை நாடுகிறான் ???
நம்பிக்கை எனில், உனக்குத்தான் சொல்கிறேன்..
எத்தனை உரம் போட்டு வளர்த்தாலும், செயற்கை மரம்  செழிப்பை தராது….
இருவருமே மனதிற்குள்ளே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனரே தவிர, மறந்தும் வெளிப்படையாக பேசி விட வில்லை.. ஒரு வேளை பேசி இருந்தால் வரும் காலங்களில் வருபவையை வசந்த காலமாக மாற்றி இருக்கலாமோ???
நொடி முள்ளாய்
நிற்காமல்,
ஏன் சுற்றி கொண்டிருக்கிறாய்????
என் நேரங்களில்…

Advertisement