Advertisement

கரை காணா காதலே – 8

ரமேஷ் ப்ரியாவை சந்தித்து ஒரு வாரம் சென்று இருந்தது…

அவன் கம்பெனியின் ப்ராஜெக்ட் விஷயமாக மஹதியை சந்திப்பதற்காக மாலை அவள் கம்பெனிக்கு சென்று இருந்தான்.. அங்கு சென்றவனுக்கோ இன்ப அதிர்ச்சி..

அங்கு மஹதியின் அறையில் ப்ரியா இருந்தாள்.. அவளை கண்டவன் இனிமையாய் அதிர்ந்தான்…

 “ஹேய் ரியா நீ எங்க இங்க ??? என்று இன்னும் முகத்தினில் இருக்கும் அதிர்ச்சி பாவனை மாறாது கேட்க,

“ரமேஷ் வாங்க வாங்க.. எங்க கம்பெனிக்கு வந்துட்டு என்னை பார்த்து என்ன கேள்வி கேக்குறிங்க??” என்றாள் புன்சிரிப்பாய்…

“இல்ல இது மஹதி மேம் ரூம் இல்லையா.. சோ கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன்..” என்றான் அதிர்ச்சியை மறைத்து மழுப்பலாய்…

“அதுவா உங்க கிட்டே பேசிட்டு வந்தேன் இல்லையா, அதில் இருந்து நானும் ஈவ்னிங் டைம்ல வந்து என்ன நடக்குது, என்ன ஏதுன்னு பார்த்துகிறேன்..” என்றாள் ஹாயாக மஹதியின் இருக்கையில் அமர்ந்து..

“ ஏன் என்ன ஆச்சு??..” என்றான் யோசனையாய்..

ப்ரியாவோ, ரமேஷை சந்தித்துவிட்டு வீட்டில் நடந்ததை கூற ஆரம்பித்திருந்தாள்…

அவளால் வரும் வழியிலேயே பொறுக்க முடியவில்லை. முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது… அவளுக்கு இருக்கும் ஒரே எண்ணம், தன் அக்காவால், அதாவது மஹதியால் தன் வாழ்க்கைக்கு எதாவது இடைஞ்சல், அவப்பெயர் வந்து விடுமோ என்பது தான்…

தவறு செய்தது அவள் தானே.. தண்டனையும் அவள் தானே அனுபவிக்க வேண்டும் என்பது அவளின் கருத்து…

 

நேராய் வீட்டிற்குள் வந்தவள், வரவேற்ப்பு அறையில் தமிழும், கமலாவதியும் அமர்ந்திருக்க அவர்களிடம் சென்றாள்…

“அம்மா…” என்ற,  அவளின் ஒற்றை அழைப்பிலையே ப்ரியா கோவத்தில் இருக்கிறாள் என்று அறிந்து கொண்டார் தமிழ்…

“என்னமா, என்ன ஆச்சு?? கோவமா இருக்க மாதிரி இருக்கியே.. என்ன விஷயம்..??” என்று மென்மையாகத்தான் கேட்டார் தமிழ்.

அவளோ “ எங்க அவ.. அவ மனசுல என்ன தான் நெனைச்சுட்டு இருக்கா???” என்று சுற்றி முற்றி மஹதி இருக்கிறாளா என்று கண்களால் அலச,

“ஏன் என்ன ஆச்சு, அவ என்ன பண்ணினா??” இப்போது பதறியவர் கமலாவதி..

“இன்னும் என்ன பண்ணனும்… அவ ஏன் ரமேஷ் கம்பெனி ப்ராஜெக்ட் வேணாம்னு சொல்லி இருக்கா…?? ரமேஷ் இன்னிக்கு என்கிட்டே கேட்கிறப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு கூட தெரியலை.. உண்மையை சொல்லுங்க உங்களுக்கும் இது தெரியுமா தெரியாதா?? இல்லை எனக்குத் தெரியாம எல்லாம் சேர்ந்து எதுவும் பண்றீங்களா??” என்றாள் அடக்கமாட்டாத கோவத்துடன்..

இதை சொன்னதும் தான் தமிழுக்கும், கமலாவதிக்கும் போன உயிர் வந்தது போல இருந்தது…

இதை சமாளித்து விடலாம்.. நான் கூட வேறு எதாவது பிரச்சனையோ என்று பயந்து விட்டேன் என்று தமிழ், கமலாவதிக்கு கண் ஜாடை காட்டினார்…

“ப்ரியா அந்த ப்ராஜெக்ட் ஓகே ஆனபோது நம்ம கிட்டே அந்த அளவுக்கு மேன் பவர் இல்லடா.. இப்போ  தான் கொஞ்ச பேர் வேலைக்கு எடுத்து இருக்கோம்… அதனால தான் அப்போ வேணாம்னு சொல்லி இருந்தோம்மா, இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சே… அந்த ப்ராஜெக்ட் ரன் ஆக ஆரம்பிச்சுடுச்சு ப்ரியா…” என்றார் தமிழ் மென்மையாக..

“ஓ…” என்றவள் நெற்றியை சுருக்கி, “நிஜமா இதுதான் காரணமா??” என்று கேட்க,

“நிஜமா இதுதான்.. வேணும்னா நீ ஆபிஸ் போய்கூட பார்த்துட்டு வா.. நியு வொர்கர்ஸ் இருக்காங்க..” என்று தமிழ் அடித்துப் பேச,

“ஹ்ம்ம் சரிம்மா..” என்றுவிட்டாள் நல்லவள் போல..

கமலாவதி அவளைப் பார்த்தவர், “இது ஒரு சின்ன விசயம் இதுக்கு ஏன் அவ்வளோ குதி குதிச்ச..” என்று கேட்க,   

“அது…. நான்கூட ரமேஷ் அங்கே வேலை பார்க்கிறார், இந்த ப்ராஜெக்ட்  வேணாம்னு சொன்னா,  அதுக்கு பதிலா  என்னையும் வேணாம் சொல்லிடுவாங்கன்னு  மஹதி ஏதும் இதை செஞ்சிருப்பாளோன்னு  தான் கேட்டேன்…” என்றாள் கூலாக…

அவளின் பதிலில் இருவருமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. தமிழும், கமலாவதியும்…

“நான் ஏன் உன் வாழ்க்கையை கெடுக்கணும்னு  நினைக்க போறேன் ப்ரியா???” குரலில் சிறிது கோபம் தென்பட்டதோ மஹதிக்கு..

அவளில் குரலில் திரும்பியவள், அப்போது தான் கவனித்தாள், மஹதி அப்படியே கம்பெனியில் இருந்து தான் வருகிறாள் என்று…

அவளின் கேள்விக்கு பதிலுக்கு கொடுக்க வேண்டி குரலில் அவளும் சிறிது கோவத்தை தேக்கி “உனக்கு முன்னாடியே எனக்கு வாழ்க்கை  அமைய போகுதே.. அதுனால இருக்கலாம், இல்லை நமக்கு அமையாத வாழ்க்கை இவளுக்கு அமைய போகுதேங்கிற வன்மமாக கூட இருக்காலம்.. இன்னும் எவ்வளவோ ‘இருக்கலாம்…’ இருக்கு மஹதி…

நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்… உன்னால் என் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு… அதை விட்டுட்டு எனக்கு பிரச்னை குடுக்கணும்ன்னு நினைச்சா நான் மனுஷியா கூட இருக்க மாட்டேன்…” என்று கோவத்தில் இரைந்து விட்டு சென்றாள்…

அவளின் பேச்சில் மூவருமே உறைந்து நின்றனர்..

மஹதிக்கோ இவள் வாழ்க்கையை நான் ஏன் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம்…

தமிழுக்கும், காமலாவதிக்கும் இந்த பெண் இவ்வளவு பேசுபவளா, மஹதியை புரிந்து கொள்ளா விட்டால் கூட பரவாயில்லை.. ஆனால் இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம், அவள் ஏன் இவளுக்கு கெடுதல் நினைக்க வேண்டும், இவளை முதலில் இருந்தே கண்டித்து இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இருவருக்குமே தோன்றாமல் இருக்க வில்லை…

ப்ரியாவின் சிறுவயதிலையே அவள் அப்பா, ரவிச்சந்திரன் இறந்து விட்டார்.. தமிழும் தொழிலை கவனிக்க சென்று விட்டார்.. இவர்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்பு கமலாவதியை சேர்ந்து விட்டது…

அப்போது இருந்தே மஹதிக்கு கொஞ்சம் பக்குவம் அதிகம் எதை சொன்னாலும் அதை சரியாக புரிந்து கொண்டு விடுவாள்.. ஆனால் ப்ரியா அப்படி இல்லை.. அவள் அப்பாவிற்கு செல்லம் அதிகம் அதனாலையே சேட்டையும், வாயும் அதிகம்.. அவர் இல்லை என்று ஆனா போது கூட அவளை சமாளிக்க ரொம்பவும் திணறினர் இருவரும்.

ரவிச்சந்திரன் மறைவை மறைக்க அவளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து, அவள் எது செய்தாலும் கண்டும், காணாமலும் இருந்தனர்.. ஆனால் வயது ஏற  ஏற அவளது இந்த மனிதர்களை மதிக்காத பேச்சும். நடவடிக்கையும் அதிகமாகின..

என்னதான் அறிவுரை சொல்லி அவளை தேற்றினாலும் அவள் மஹதியிடம் அவள் குணத்தை மாற்றி கொள்ளவே இல்ல..ஏன் மாற்றிக்கொள்ள முயற்சிக்க கூட இல்லை.. அதிலும் அவள் மேல் ஒரு தவறு, வீண் பழி வந்து விட்டது என்பதற்காக அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பினாள், பள்ளியில், அக்கம் பக்கத்தில், பார்க்கும் இடங்களில் உன் அக்கா தானே அது என்று சுட்டி காட்ட தொடங்கினர்.. அதை தொடர்ந்து அவள் கோவமும், வெறுப்பும் மஹதி மேல் அதிகமாகின..

காலம் கடந்து யோசிப்பதால் என்ன பயன்???

“உன் வாழ்க்கையை நான் கெடுக்க நினைப்பதா ப்ரியா??? அது எப்படி என்னால் முடியும்??? உனக்காக தானே நான் அவனுடன் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் செய்ய ஒத்து கொண்டிருக்கிறேன்… என் வாழ் நாளில் யாரை பார்க்க கூடாது, சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தேனோ, அவனையே தினமும் பார்க்கும் படி, அவன் கொடுத்த ரணங்கள் மறக்காத படி செய்து கொண்டிருக்கிறேனே யாருக்காக உனக்காக மட்டுமே” என்று மனதிற்குள் பேசியவள், தாயையும், பாட்டியையும் நோக்கி சென்றாள்..

அவர்களின் முகத்தில் வேதனையின் சாயலை கண்டவள் முகத்திலும் வேதனையே!!!

அவளை கண்டதும் கமலாவதி தாள மாட்டாமல் அணைத்து கொண்டார்…

அவரின் அணைப்பில், மஹதிக்கு அணைப்போட்டு வைத்திருந்த அழுகை அருவியாய் பெருகியது….

“என் தப்பு தான் மதிமா, நான் தான் அவளை ரொம்ப செல்லம் குடுத்து வளத்துட்டேன், அதான் இப்போ அவ இவ்வளவு பேசியும் என்னால எதுவுமே பண்ண முடியலை…” என்று சொல்லியே கண்ணீர் விட்டார்..

அவரின் அழுகையில் மஹதி தெளிந்தவள், இது தான் அழும் நேரம் அல்ல.. அவர்களை தேற்ற வேண்டிய தருணம் என்று உணர்ந்தாள்..

“பாட்டி இங்க பாருங்க.. அவ இன்னும் சின்ன பொண்ணு தான்… கல்யாணம் பண்ணிக்கிற வயசு தான் ஆனாலும் இன்னும் உலகத்தை புரிஞ்சிக்க தெரியாதவ, ப்ரியா என்னை தானே பேசினா!!!! பேசினா பேசிட்டு போகட்டுமே..

அதனால என்ன, என் தங்கச்சி தானே பேசினா இதனால் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்ல பாட்டி, ஊரே பேசும் பொது அவள் பேசினா என்ன தப்பு.. அவ என்னை புரிஞ்சிக்காம பேசுறா, என்னையும் ஒரு நாள் புரிஞ்சிப்பா பாட்டி, நீங்க இதுக்காக எல்லாம் கவலை படாதீங்க..” என்று சொன்னவள் முகத்தில் ஒரு தெளிவு…

தங்கைக்காய் தான் விட்டு கொடுத்தாள்.. ஒரு மனிதனின் மிக சிறந்த பண்பாக கருதப்படுவது அவனின் விட்டு கொடுத்து செல்வதே…

விட்டு கொடுப்பவர்கள் விதையாகிறார்கள்…

விதையானவர்கள் மரங்களாகிறார்கள்…

ஆனால்  ஒருவர் விட்டுக்கொடுப்பதை இவன்(ள்)  தனக்கு அடங்கிவிட்டார் என்று தவறாய்  புரிந்துகொள்வதால் வாழ்க்கையே  பிரச்சனையாகிவிடும் அதை தவிர்த்து, விட்டுக்கொடுப்பதின் உண்மை அன்பை  புரிந்துகொண்டால் இந்த வாழ்க்கை  என்றும் மகிழ்ச்சியாகும்….

ஒரு வழியாய் மஹதி தான் அவர்கள் இருவரையும் சமாளிக்க வேண்டியதாக போயிற்று..

ஆனால் ப்ரியா என்ன சும்மா இருக்கிற ஆளா???

அடுத்த நாளே குண்டை தூக்கி போட்டு விட்டாள்..

காலையில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்த நேரம்.. “நானும் இனிமே கம்பெனில சில பொறுப்பு பாத்துக்கலாம்னு இருக்கேன்…சோ இனிமே ஈவ்னிங் ப்ரீ டைம்ல கம்பெனிக்கு வரேன்..”  என்றாள் அமைதியாக..

அதை கேட்ட தமிழுக்கும், கமலாவதிக்கும் சிறிது அதிர்ச்சியே!!!!
ஆனால் மஹதியோ “ நல்ல முடிவு ப்ரியா.. கம்பெனில உனக்கும் பங்கு இருக்கு தானே.. சோ நீ வர்றதுல எனக்கு சந்தோசம் தான்.. ஆல் தி பெஸ்ட்…” என வாழ்த்தினாள்..

அவளோ ஒரு அலட்சிய பார்வையை மஹதி மீது வீசிச் சென்றாள்.. அதை இவள் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை… நடந்தவை அனைத்தையும் ரமேஷிடம் சொல்லி முடித்திருந்தாள் ப்ரியா..

அவனுள் ஏதோ இனம் காணா குற்ற உணர்வு… ஆனால் அது என்ன, எதற்கு, என்று தெரியவில்லை.. அவன் ஆராயவும் விரும்பவில்லை.. ஆனால் ப்ரியா சொன்ன இந்த விஷயங்கள் எல்லாம் வைத்துப் பார்த்தாள் மஹதியின் வாழ்வில் என்னவோ ஒன்று பெரிதாய் நடந்திருப்பதாய் அவனுக்குத் தோன்றியது..

“நான் சாதாரணமாக தானே சொன்னேன் ரியா.. அதற்க்கு நீ ஏன் இவ்வளவு தூரம் நீ பேசிருக்கனுமா??” என்றான் மற்றதை விடுத்தது..

அவனின் இந்த கேள்வியில் அவளின் குடும்ப பின்னணி, அதாவது மஹதியை பற்றி முழுமையாய் தெரியாது பேசுகிறான் என்று தெரிந்து கொண்டாள் ப்ரியா…

மஹதியை பற்றி சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை…

மனம் வரவில்லையோ?? அல்லது சொன்னால் அவளுக்கு ஏதும் பாதகம் வந்து விடும் என்ற பயமோ!!! எதோ ஒன்று அவளை பதில் சொல்ல விட வில்லை…

“இல்ல எப்படியும் நானும் இதை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கணும் தானே அதான் கொஞ்ச நாள் கம்பெனி பத்தி தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்…” என்றாள் சமாளிப்பாய்..

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே மஹதி வந்து விட்டாள்..

“அடடே வாங்க ரமேஷ்..”

“ஹலோ மேம்..எப்படி இருக்கீங்க???” என்று ரமேஷ் எழுந்து நிற்க,

ரமேஷ், மஹதியை அழைத்த விதத்திலும் அவன் எழுந்து நின்ற விதத்திலும் ப்ரியாவிற்கு சுர்ரென்று  ஏறியது கோவம்..

“ரமேஷ் ப்ளீஸ் இந்த மேம் எல்லாம் வேணாமே, நாம தான் இப்போ சொந்தகாரங்க ஆக போறோமே.. சோ நீங்க என் பேர் சொல்லியே கூப்பிடலாமே..” என்று மஹதி தயக்கமாய் சொன்னாள் ரமேஷிடம் ப்ரியாவை பார்த்தபடி….

இதை கேட்டதும் ப்ரியாவின் கோவம் கொஞ்சம் மட்டு பட்டதோ!!! என்னவோ அமைதியாய் இருந்தாள்..

ரமேஷ் சின்ன சிரிப்புடனே “ சரிங்க மஹதி “ என்றான்…

அதன் பின் அவன் ப்ராஜெக்ட் சம்பந்தமாக விவாத்தித்து கொண்டிருந்தான் மஹதியிடம்… ப்ரியா அவற்றை கவனித்து கொண்டிருந்தாள்… பேசி முடித்ததும் கிளம்புகையில், எதோ ஞாபகம் வந்தவனாய் சொன்னான்..

“ரியா வர்ற சன் டே முகூர்த்த ட்ரெஸ் எடுக்க போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. உங்களுக்கு ஓகே வா??” என்று அக்கா தங்கை இருவரையும் பொதுவாய் பார்த்தே ரமேஷ் கேட்க,

“ஹ்ம்ம் அம்மா கிட்டே கேட்டுட்டு சொல்றோம் ரமேஷ்” என்று நல்ல பிள்ளையாய் பதிலளித்தாள் ப்ரியா..

“ஓகே..” என்றவன் கிளம்புகையில்,   “போகும் வழியில் என்னையும் வீட்ல விட்டுடுங்க ரமேஷ்” என்று அவனுடனே கிளம்பினாள் ப்ரியா..

மஹதியிடம் விடை பெற்று இருவரும் கிளம்பினர்…

அவர்கள் செல்வதை பார்த்த மஹதிக்கு தோன்றியது இது தான்… இப்போதும் போல எப்போதும் இருவரும் இதே போல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே…

வேதாந்த் வீட்டில் சத்யபாமா தன் இரண்டாவது மகனை கொஞ்சிக் கொண்டிருதார்.. ரிஷி – அந்த ஆண்டு செமஸ்டர் விடுமுறையை கழிக்க வீட்டிற்கு வந்திருந்தான்..

இரவு உணவிற்கு அனைவரும் ஒன்றாய் அமர்ந்திருந்தனர்..

“என்ன ரிஷி எக்ஸாம்ல எப்படி பண்ணி இருக்க??” குணா மகனிடம் கேட்டார்..

“நல்லா பண்ணிட்டு இருக்கேன்பா.. கண்டிப்பா நல்ல மார்க்ஸ் தான் வரும் பா..”

“ஆமா ஆமா சீக்கிரமா படிச்சுட்டு வந்து, அண்ணன் கூட சேர்ந்து நம்ம தொழிலை கவனிக்க ஆரம்பிடா… அப்போ தான் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண முடியும்..” சத்யா ஆரம்பித்து இருந்தார்..

அவரின் கல்யாணம் என்ற பேச்சிலையே, அமைதியாய் உண்டு கொண்டிருந்த வேதாந்தின் முகம் கடுமையாகியது.. அந்த கடுமையுடனையே அவர்க்கு பதில் கொடுத்தான்..

“நான் கேட்டேனா, உங்க கிட்டே கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு.. எப்போ பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் நீங்க அந்த விஷயத்தில் தலையிட வேண்டாம்.. ஸ்டே அவே ப்ரம் மை  லைப்..” என்று   கண்களில் மொத்த கனலையும் கக்கி கொண்டிருந்தான்…

அவனின் பதிலில்  மற்ற மூவருமே அதிர,  சொன்னவனும் பாதி சாப்பாட்டில் எழுந்து போய்  விட்டான்.. குணவோ, சத்யாவை முறைத்து கொண்டிருந்தார்…

“எதுக்கு சத்யா சாப்பிடும் போது , இந்த சம்பந்தம் இல்லாத பேச்சு???”

சத்யாவோ எதுவும் சொல்லாமல் எப்போதும் செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தார்… அதாங்க அழுது கொண்டிருந்தார்.. அவரின் கண்ணீரை கண்ட குணா, சலித்து கொண்டார்… ரிஷியோ எந்த பக்கம் பேசுவது என்று விழித்து கொண்டிருந்தான்…

வேதந்தோ அறைக்குள் சென்று நடை பயின்று கொண்டிருந்தான்… மனம் தீயாய் எரிந்து கொண்டிருந்தது..

தெளிவாய் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடையில், கல்லெறிந்து கலைத்து விட்டு, இப்போது தெளிவான நீர் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்… இதை எப்படி எதிர் பார்க்க முடிகிறது இவர்களால்???? இவ்வாறாய் மனதிற்குள் வறுத்து எடுத்து கொண்டிருந்தான் சத்யாவை…

அதை கலைக்க ரிஷி வந்து நின்றான்..

“சாரி அண்ணா..  அம்மா பேசினதுக்கு நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுகிறேன்… நீ மனசு மாறி இருப்பன்னு தான் அவங்க அப்படி பேசினாங்க…”

இங்கு  யாரும் தவறு செய்யவில்லை தான்… ஆனால் சத்யா அன்று அவர் செய்த செயல் தான் வினையாய் சுற்றி வருகிறது. தாய் செய்த தவறுக்கு, தமையன் மன்னிப்பு கேட்பது பொறுக்க முடியவில்லை வேதாந்திற்கு..

“ஹே ரிஷி இட்ஸ் ஓகே.. இது எப்பவும் நடக்கிறது தானே!!! இதுக்காக நீ பீல் பண்ணாதே ரிஷி… ப்ரீயா விடுடா…” என்றான் சமாதானமாய்…

ரிஷியும் அண்ணனின் பேச்சின் சமாதானமானவன் “அண்ணா நாளைக்கு சண்டே தானே?? நீ ப்ரீயா ???  நாம ரெண்டு பெரும் வெளியே ஷாப்பிங் போய் ரொம்ப நாள் ஆச்சுல.. சோ போகலாமா???” கேட்டு விட்டு அவனின் பதிலிர்க்காய் காத்திருந்தான்…

ரொம்ப நாள் கழித்து வந்திருப்பவன் கேட்கிறான் எப்படி மறுக்க முடியும்.., அவனை ஏமாற்ற மனம் இல்லாதவன் “ஹ்ம்ம் கண்டிப்பா போகலாம் ரிஷி..நீ சொல்ற மாதிரி ரொம்ப நாள் ஆச்சுல, போகலாம்..” என்றான் புன்சிரிப்பாய்..

மஹதி குடும்பத்தினரும், ரிஷி,வேதாந்த் ஷாப்பிங் போவோம் என்று சொன்ன ஞாயிற்று கிழமையும் வந்தது..

அன்று என்னவோ மஹதிக்கு மனதில் இனம் புரியா எதோ ஒன்று அரித்து கொண்டிருந்தது…

அன்று ஆபீசில் மிரட்டியவன் தான்.. அதன் பின் இன்று வரை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை… ஆனால் என்னவோ இத்தனை நாள் தோன்றாதது இன்று தோன்றுகிறது அவனை பற்றிய நினைப்பு… இது எதனால்..அவள் அவளையே கேட்டுக்கொண்டிருந்தாள்…

ஒரு வேளை பதில் வேதாந்திடம் இருந்து வருமோ?????

 

 

Advertisement