Advertisement

கரை காணா காதலே – 7

வீட்டிலிருந்து கிளம்பிய மஹதி அவளுடைய கம்பெனிக்கு வந்தடைந்தாள். ஒருவழியாய் மனதில் இருப்பதை அவளின் அம்மாவிடம் சொல்லியாகிவிட்ட திருப்தி அவளுக்கு.. இனி எதுவானாலும் பார்த்துகொள்ளலாம் என்ற ஒரு உறுதி வரவும்,

“போனதும் அந்த சிங்கப்பூர் யூனிவெர்சிட்டிக்கு அப்ளிகேஷன் அப்பளை பண்ணிடணும்..” என்று தன்னுள் பேசியவாறே அவளது அறைக்கு வந்தவள் கதவை திறந்ததும் அப்படியே ஷாக் அடித்தது போன்று அதிர்ந்து நின்றாள்…

அங்கே நடுநாயகமாக நின்றிருந்தது சாட்சாத் நம் நாயகனே தான்…

அவனை கண்டதுமே ஒரு விதமான படபடப்பு, நடுக்கம், பயம், இவையனைத்தும் அவளையறியாமலேயே அவளிடம் வந்து கண்களில் ஒற்றிக் கொண்டது…

வீட்டில் இருந்து கிளம்புகையில் இருந்த ஒருவித மனோ தைரியம் இப்போது அவனைக் கண்டதும் அப்படியே காணாமல் போனது.. நிச்சயமாய் வேதாந்தை இங்கே மஹதி எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தினில் அப்படியே தெரிந்தது..

“இவன் இங்க என்ன பண்றான்…” என்று தனக்குள் வாயாடியவளை,

கட்டை விரலையும், நடுவிரலையும் இணைத்து சொடக்கிட்டு அழைத்து என்ன என்பதை இரு புருவகளின் வழியே கேட்டான்…

அவன் அழைப்பில் அதிர்ந்தவள், தன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், இரு கைகளையும் கட்டி நெஞ்சின் மீது  வைத்து “இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க சார்… என்னோட ஆபீஸ், என்னோட கேபின் ஆனா என் அனுமதி இல்லாம இங்க எப்படி வந்தீங்க??” என்றாள் தீர்க்கமாய் அவனை பார்த்து…

‘பார்ரா.. பாப்பாக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா???’ என்று நினைத்தவன்  ஒருவேளை அவளது பயந்த சுபாவத்தை எதிர் பார்த்து வந்திருப்பானோ????

அவனை போலவே சொடக்கிட்டு அழைத்து, “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.. சொல்லுங்க இங்க எதுக்கு வந்தீங்க..?”

“எங்க காண்ட்ராக்ட் டீல் ஓகே பண்ணுனதுக்கே, வெளிநாடு போக முயற்சி செய்றீங்க??? இப்போ நான் இங்க வர்றதை சொல்லி இருந்தா நீங்க இங்க வந்து இருக்க மாட்டிங்கல???…. என்ன நான் சொல்றது சரி தானே..” என்றான் சிறிது நக்கல் தொனியில்….

அவனின் பதில் அப்பட்டமாய் அதிர்ந்து விழித்தாள்.. இப்போது தான் வீட்டில் பேசிவிட்டு வருகிறாள்.. அப்போ.. அப்போதென்றால் வீட்டில் யாராவது…?? ச்சே ச்சே இருக்காது என்று நினைத்தவள்  ”நான் முடிவு பண்ணி இருக்கேன்னு இவனுக்கு எப்படி தெரியும்???” என்று பல்லை கடித்தாள்…

அவளின் சிந்தனையை கவனித்தவன், மேலே யோசிக்க விடாமல்..“கூல் கூல் பேபி, எதுக்கு இவ்வளோ டென்ஷன், இந்தா இந்த தண்ணியை குடி..” என்றவாறே டேபிள் மேல் இருந்த தண்ணிரை எடுத்து கொடுத்தான்…

ஏற்கனவே அவன் மேல் கோவமாய் இருப்பவள், இப்போது தனது முடிவை அறிந்து கொண்டானே என்ற மித மிஞ்சிய கோவத்தில் இருந்தவள் அவனின் இச்செயலில், செந்தணலாய் சிவந்தவள் அவனின் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை தள்ளி விட்டாள்… அது உடைந்து சிதறியது…

“இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்??? எதுக்காக இங்க வந்து இருக்கீங்க?? இந்த அளவுக்கு கூட நான் நிம்மதியா இருக்கக்கூடாதா??”  என்று கண்களில் கனலை கக்கியபடியே கேட்டுக் கொண்டிருந்தாள்..

அவளின் கேள்வியில், மூச்சை இழுத்து பெருமூச்சாய் வெளியிட்டவன்,

“என் கம்பெனி  காண்டிராக்ட் டீல் ஓகே பண்ணிட்டு அதை செய்யாம, எப்படி வெளி ஊருக்கு போக நெனைச்சா என்ன அர்த்தம்..” என்றான்..

“ஹ்ம்ம் உங்க ப்ராஜெக்ட் பண்றதுல இண்டரஸ்ட் இல்லைன்னு அர்த்தம்…” என்றாள் அமர்த்தலாய்..

“இன்ட்ரெஸ்ட் இல்லைன்னாலும் பண்ணி தான் ஆகணும்” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்…

“அதான் எங்க கம்பெனி உங்க டீல் ஓகே பண்ணி இருக்கோம்ல..சோ நாங்க சொன்ன மாதிரி உங்க கான்ட்ராக்ட் பண்ணி தருவோமே.. நான் இருந்து தான் பண்ணனும்ன்னு எந்த அவசியமும் இல்லையே, உங்களுக்கு தேவை உங்க கான்ட்ராக்ட் முடிச்சு குடுக்கணும் அவ்வளவு தானே…”

அவளின் ஒவ்வொரு பதிலும் அவனுள் கோப தீயை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது, ஆனாலும் அதை வெளிக்காட்டதவன்,

“நீ என்கிட்டே இருந்து தப்பிச்சு போறதுக்காகவா, இவ்வளோ கஷ்டப்பட்டு நீங்க கோட் பண்ணின அமௌன்ட்டை பைனல் கோட் அமௌன்ட்டா பிக்ஸ் பண்ணுனேன்..” என்றவனை  விழி விரிய பார்த்தாள் மஹதி..

அவளுக்கு தோன்றியது இது தான்..

எதுவுமே அதுவாக நடக்கவில்லை, எல்லாமே திட்டமிட்டு நடக்கிறது.. இதற்க்கு யார் துணை..?? மேலும் மேலும் கேள்விகளாக பிறக்க, பிறக்க அவளுக்கு தலை சுற்றியது…

ஆனாலும் தன் முடிவில் இருந்து மாறாதவளாய் “நீங்க என்ன சொன்னாலும் சரி, என்ன செஞ்சாலும் சரி என் முடிவில் எந்த விதமான மாற்றமும் இல்ல… உங்களுக்கு எங்க கம்பெனில இருந்து எல்லா விதமான சப்போர்ட் கிடைக்கும் உங்க காண்ட்ராக்ட்க்காக, ஆனா அதை எல்லாம் நான் தான் பண்ணனும்ன்னு நெனைச்சா அது நடக்கவே நடக்காது.. ஐ வில் நெவர் டூ தட்…” என்றாள் உச்சபட்ச உக்கிரத்தில்…

அவளை மேல்பர்வையாக பார்த்தவன் “சோ உன்னால இதை பண்ண முடியாதுன்னு சொல்ற அப்படி தானே ????”

“இதை தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிட்டு இருக்கேன்”…

“இதுக்காக நீ அதிக விலை குடுக்கணும் மஹா”….

“எவ்வளவோ உன்னால அனுபவிச்சாச்சு, இன்னும் என்ன இருக்கு…?” இதை சொல்லும் போதே விழி நீர், விழி திரையை மறைத்திருந்தது…

அவள் கண்களையே பார்த்திருந்தவன், இதை கவனித்து விட்டான் அதை பார்த்தவனது இதயத்தில் சொல்லாலான வேதனை நிரம்பிற்று… அவளுக்கு முகத்தை கட்டாமல், திரும்பி நின்றவன், கலைந்து இருந்த முடியை ஒதுக்கியவன்

“உன்னை எப்படி கலங்க விட கூடாதுன்னு தான்டி என் கைக்குள்ளேயே வச்சுக்கணும்ன்னு நினைக்கிறேன், ஆனா நீ ஒதுங்கி ஒதுங்கி  போறதுல தானே குறியா இருக்க… இப்போ கூட இந்த நிலைமைல உன்னை கஷ்ட படுத்த வேணாம்ன்னு விட்டுட்டுன்னு மனசு சொல்லுது, ஆனா இதை விட்டா  உன்னை என் கூட இருக்க வச்சிக்கிற வாய்ப்பு இன்னும் கிடைக்காது, விடாதேன்னு மூளை சொல்லுது.. எனக்கு தேவையும் அதுதானே.. என்னை மன்னிச்சுடு மஹா…” அவனுக்குள் மருகியவன், முடிவாய் அவளை பார்த்து…

“சோ உன்னால இதை பண்ண முடியாது அப்படித்தானே????”

“அப்படியே தான்”

“வெல் உன் தங்கச்சி நிச்சயதார்த்தம் வர வெள்ளிகிழமை தானே ??”

கண்களை சுருக்கி அவனை பார்த்தவள், இவன் எதுக்கு சம்பந்தமே இல்லாமல் இதை கேக்கிறான் என்று யோசித்தவள்.. ஞாபகம் வந்தவளாய், உடல் அதிர அவனை நோக்கினாள்..

உன் எண்ணம் சரியே என்பது போல் அவளும் அவனை வைத்த கண் வாங்கமல் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்….

“வேணாம் என் வாழ்க்கைல விளையாடின வரை போதும், அவ லைப்லையும் விளையாடிடதீங்க…” குரல் நடுங்க கெஞ்சினாள் என்றே சொல்ல வேண்டும்…

அவன் வந்த போது, அவன் மேல் இருந்த கோவம், இப்போது சுத்தமாய் இல்லை… அவளின் இந்த மாற்றத்தை கவனித்த வேதாந்த் மொத்தமாய் சில் சில்லாய் நொறுங்கி கொண்டிருந்தான்.. ஆனாலும் விடாது, மேலும் அவளை ரணமாக்கவே பேசினான்..

“ரமேஷ் என்னோட பிஏ தான்… என் பிரண்டும் கூட.. என் விசுவாசின்னு கூட சொல்லலாம், நான் சொன்னா எதை வேணும்ன்னாலும் செய்வான்…”

‘எதை வேண்டுமாலும்’ என்ற இடத்தில் அதிக அழுத்தம் கொடுத்தான்…

“சொல்ல போனா கல்யாண மேடைல இருந்து, இந்த பொண்ணு வேணாம், எழுந்து வான்னு சொன்ன கூட என்ன, ஏதுன்னு கேக்காம கூட வந்திடுவான், அந்த அளவுக்கு என் மேல் மரியாதை…” என்றான் அமைதியான குரலில்…

அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியாத முட்டாளா அவள்…

இல்லை இதை விடவும் , கல்யாண மேடையில் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று தெளிவாக ஒருவர் கூற முடிமா என்ன????

மஹதியின் முகமே மாறி விட்டது…

ஜெயில் தண்டனை, ஊராரின் தூற்று பேச்சு, உடன் பிறந்த தங்கையின் ஒதுக்கம், இன்னும் இன்னும் எத்தனை கஷ்டங்கள்…

இப்போது தான் என்ன செய்ய வேண்டும், தன் மனது தன்னிடம் கேட்டதை நினைத்தவள் அதிர்ந்து விட்டாள்…. அவன் நினைத்ததை சாதித்து விட்டான்…

அவளை யோசிக்க விட்டவன் “நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும் மஹா… நீ இந்த ப்ராஜெக்ட் பண்ண ஒத்துக்கிட்டா மட்டுமே நான் எதுவும் செய்ய மாட்டேன்.. அதர்வைஸ்  எதுவுமே என் கையில் இல்லை…” என்றபடியே இரு கைகளையும் விரித்து காட்டினான்….

அவன் சொல்ல சொல்ல, ப்ரியா முதல் பார்வையிலையே ரமேஷின் போட்டோவை ஒளித்து வைத்து கொண்டது, பெண் பார்க்க வந்த பொழுது அவனை கண்டதும் கண்களில் காதல் நிறைய, முகம் சிவந்ததும், இதோ நிச்சயம் என்றதும் அதற்காக பார்த்து பார்த்து தயாராவதுமாய் இருக்கும் தங்கைக்கு கஷ்டம் தர அவள் துளி கூட விரும்பவில்லை…

இதை எல்லாம் விட தன்னால் தான் இந்த திருமணம் நின்றது என்றால் அவளால் என் திருமணத்திற்கு எதுவும் தடை வந்து விடுமோ என்று அன்று பாட்டியிடம் சொன்னது உண்மையாகி விடுமே….

தான் பட்ட அவமானம், கஷ்டம், மன அழுத்தம் எல்லாம் அவளுக்கு வேண்டாம்….

ஒருவாறு அவள் யோசித்து கொண்டிருக்க, அதில் அவளின் முகபாவனைகளை கண்டவன், எங்கே தானே தன் கட்டுபாட்டை இழந்து, அவளை அணைத்து, இவ்வளவு யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விடுவோமோ என்று அஞ்சியவன், விரைவாய் விரைய நினைத்தான்…

தொண்டையை செருமி அவள் யோசிப்பை தடை செய்தவன், “நான் சொன்னது உனக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் மஹா… முடிவு உன் கையில்… அது எனக்கு சாதகமாய் இருந்தாலும் சரி, உனக்கு பாதகமாய் இருந்தாலும் சரி…ஆனால் உன் பதிலுக்காக நான் காத்திருப்பேன்…”  என்று இளகிய குரலில் சொன்னவன், அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்…

அவளின் கண்ணீர் அவன் நெஞ்சின் செந்நீரை வெளியேற்றியது…

எல்லாம் அவனாலே….

அவன் மட்டுமே காரணம்…

அவன் தெரியமால் செய்த தவறுதான்…. ஆனால் தண்டனை என்னவோ அவளுக்கு… முழுமையாய் அனுபவிப்பவளும் அவளே….

அவள் வேதனை தீர அவன் மட்டுமே வடிகால்….

இதை அவள் புரிந்து கொள்ள போவது  எப்போது ????

அவளுக்கு காயங்கள் என்றுமே புதிதல்ல… அதற்கான காரணங்கள் தான் ஒவ்வொரு முறையும் புதிதாக பிறக்கிறது…

இக்கட்டான இந்நிலை… எதை யோசிப்பது எதை விடுவது….???

அடுத்து வந்த ஒரு வாரமும் மஹதி ஒருவித அமைதியுடனே இருந்தாள்.. வீட்டினரிடமும் அத்தனை ஒன்றும் பேசிடவில்லை.. தமிழும் சரி கமலாவதியும் சரி மஹதியின் அமைதியை கவனித்தாலும் அவளே யோசித்து ஒரு முடிவிற்கு வரட்டும் என்று கொஞ்சம் தள்ளியே இருந்துகொண்டனர்..

வெளிநாடு செல்லும் எண்ணம் அப்படியே அந்தரத்தில் தொங்க, வேதாந்த் கம்பனியின் ஆர்டருக்கான வேலையும் இனிதே ஆரம்பித்தது மஹதியின் மேற்பார்வையில்..

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரமேஷ், ப்ரியா நிச்சயதார்த்தமும் எவ்வித பிரச்சனையும் இன்றி நல்லமுறையில் நடந்தேற, அது நடந்து முடியும் வரைக்கும் மஹதியின் மனம் அடித்துக்கொண்டே தான் இருந்தது..

அவளுமே கூட ரொம்பவும் எல்லாம் கலந்துகொள்ளாது பட்டும் படாது போலவே இருந்துகொண்டாள்.. எக்காரணம் கொண்டும் ப்ரியாவின் முகத்தில் சிறு எரிச்சல் கூட வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தாள்…

ஆனால் அவளின் தெளிவில் கல் வீச என்றே ஒருத்தன் இருக்கிறானே.. வேதாந்த்.. அவனின் வேலைகளும் சிறப்பாகவே நடந்துகொண்டு இருந்தது..     

அந்த இனிய பொன்மாலை பொழுதில் அவினாஷி ரோட்டில் இருந்த காபி ஷாப்பில், எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் ரமேஷும் ப்ரியாவும்….

என்ன தான் நிச்சயம் ஆகி இருந்தாலும், இப்படி யாருக்கும் தெரியாமல் சந்திப்பதிலும் ஒரு சுகம் தான் போல… அதில் ஒரு த்ரில்லும்  இருக்கிறதே..

ரமேஷ் வந்ததில் இருந்தே, கையை கன்னத்திற்கு குடுத்து, ஒரு மெல்லிய புன்னகையுடனே அவளை பார்த்து கொண்டிருந்தான்… இல்லை இல்லை ரசித்துக் கொண்டிருந்ததான்.. அவன் ரசிப்பில் அவதியுற்று கொண்டிருந்தாள் ப்ரியா நாணத்தால்…

“எவ்வவவு நேரம் தான் எப்படியே பாத்துகிட்டே இருப்பாராம்..” என்று மனதிற்குள் அவனை வைதவள், அவளே பேச ஆரம்பித்திருந்தாள்…

“ஹ்ம்ம் ரமேஷ்…”

அவள் அழைத்தது அவன் காதிலையே விழவில்லை போல… இமைகள் ஒன்று சேர விடாமல் கருமணிகள் அசையாமல் இன்னும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்…

‘நாம சத்தமா தானே கூப்பிட்டோம், இவருக்கு கேக்கலையோ..’ எதுக்கும் மறுபடியும் கூப்பிடுவோம் என்றவாறே மறுபடியும் அவனை அழைத்தாள்..

“ரமேஷ் இங்க பாருங்க, நான் கூப்பிட்டது காதில விழுதா இல்லையா????’

“ரியா நீ கூப்பிட்டியா!!!!! நான் எதோ குயில் பாடுதுன்னுல நினைச்சேன்..” என்றான் விரிந்த புன்னைகையுடன்..

“அஹ்ஹான்ன் குயில் எப்படி பாடும்..” அதே  புன்னகையில் அவளும் கேட்டாள்..

“இதோ இப்போ நீ பேசினியே அதே மாதிரி தான் ரியா…”

“பரவாயில்ல… நீங்க தெளிவு தான்..” என்றாள் இதழ் பிரியா புன்னகையில்…

அந்த புன்னகையில் மயங்கியவன்…. “என்னை புடிச்சிருக்கா??? ரியா உனக்கு…” என்று கேட்க,

அவனின் கேள்வியில் திகைத்தவள்.. ”எவ்வளவு சீக்கிரமா இந்த கேள்வியை கேட்டுடீங்க…. பிடிக்காம தான் உங்களை மீட் பண்ண இவ்வளவு தூரம் வந்திருக்கேனா??? அப்போ உங்களுக்கு என்னை பிடிக்கலையா??? இதை கேக்க தான் இங்க வர சொன்னீங்களா??” என்று  சிறிது கோவத்தில் முக சுழிப்பில் கேட்டாள்…

அதில் விழி விரிய சிரித்தவன்…

கடிகார முள் போல உன்னை சுற்றி வந்திடுவேன்…

நொடி நேரம் நீ பிரிந்தால்.. மனம் நானும் வாடிடுவேன்..

கண்ணின் இமை போல உன்னை நானும் காத்திடுவேன்…

என்னவள் நீ இன்றி இனி என் காலம் நகராதே….

கவிநடையில் அவளுக்கு உரைத்து முடித்தான்…

அதை கேட்டவளது முகமோ , செம்பூவின் நிறத்தில் சிவந்தது….

வியப்பதும், மயங்குவதும் இவள் முறையாகிற்று….

“பரவாயில்ல ரமேஷ் நல்லாவே கவிதை சொல்லி தப்பிக்க பாக்குறிங்க!!…”

“ரியா இது நான் உள்மனசுல இருந்து சொன்னது தான்…” என்றான் காதலாய்….

“ஹ்ம்ம் பாப்போம் இதையே கல்யாணம் ஆனதும் சொல்றீங்களான்னு…??”

“இப்போ மட்டும் இல்ல, என் லைப்ல  கடைசி ஹார்ட் பீட் இருக்க வரைக்கும் சொல்லுவேன்..” என்று ரமேஷ் சொன்னதும், அவனது வார்த்தைகளில் சிறிது கர்வம் எட்டிப் பார்க்க,  

“அது தான் எனக்கும் வேணும்..” என்றாள் கொஞ்சம் நிமிர்வுடன்..

அவர்களின் பேச்சு தொடர்ந்தது… ஸ்வீட் நத்திங்க்ஸ் என்று சொல்வார்களே அதே போல… ஆனால் அதுவும் முடிவுக்கு வந்தது.. அவனின் கம்பெனி பற்றிய விவாதத்தில்..

“ஆமாம் ரியா, உங்க அக்கா அந்த கான்ட்ராக்ட்  வேண்டாம்னு சொல்லிட்டாங்க… ஏன் என்னனு தெரியலை??? உனக்கு எதுவும் தெரியுமா??? இல்ல அந்த ப்ராஜெக்ட் பண்ணினா உங்க கம்பெனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அதனால தான் கேட்டேன..” அவன் சாதாரணமாய் தான் கேட்டான்.. அக்கா, தங்கைக்கு இருக்கும் பனி  போர் அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே…..

இதை கேட்டதும் அவள் முகம் தானாய் இறுக்கியது… கூடவே இந்த நேரத்தில் அவளை பற்றிய பேச்சு எதற்கு என்ற கோவமும்… ஆனாலும் அதை அவனிடம் அதனை வெளிக்காட்ட முடியாதே…

மேலும் ரமேஷ் சொன்னதை நினைத்து பார்த்தாள்… நல்ல முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில் அவள் ஏன் இதை நிராகிக்கிறாள் என்ற எண்ணமும்…

ரமேஷ் சொன்னதற்காவே இதை பற்றி அவளிடம் கேட்க  வேண்டும் என்று முடிவெடுத்தாள்…

அவளின் பதிலிற்காக அவன் காத்திருப்பதை அறிந்து “நான் ஸ்டடிஸ்ல கான்சன்ட்டரேஷன் பண்றதுனால கம்பெனி மேட்டர்ஸ் எதுவும் தெரியலை… நான் அம்மா கிட்டே சொல்றேன்…” சிரித்த முகமாய் கூறினாள்…

மேலும் சிறிது நேரம் அவர்கள் காதலை பகிர்ந்துவிட்டு விடைபெற்றனர்…

வீட்டிற்கு போய் என்ன செய்ய காத்திருக்காளோ தெரியவில்லையே????

 

Advertisement