உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல மாலை கிளம்பிக் கொண்டிருந்தனர். சம்யுக்தா புடவையில் அழகாகத் தயராகி வந்திருக்க….

என்னவோ உன் முகத்தில குறையுதே… ஏன் ஒரு மாதிரி இருக்க?” என ஆரியன் கேட்க….

நல்லா தான் இருக்கேன்.” என்றாள்.

உன் முகமே சரி இல்லை. நீ நல்லாக் கூடப் பேசலை… என்கிட்டே எதையோ மறைக்கிறியா என்ன?” என்றவன்,

நான் இல்லாத போது யாரும் வீட்டுக்கு வந்தாங்களா?” என்று கேட்க…. ஆமாம் இல்லை என்று சொல்லாமல், “நான் என் சேலைக்கு மேட்ச்சா உங்களுக்குச் சட்டை எடுத்து வச்சேன், நீங்க ஏன் அதைப் போடலை?” என அவள் அதுதான் காரணம் என்பது போல பேச்சை மாற்ற….

ஹான் உன் புடவைக்கு மேட்சா நான் ரோஸ் கலர்ல சட்டை போடணுமா? போடி வேலையைப் பார்த்திட்டு.” என்றான்.

ஏன் போட்டா என்ன?”

நல்லா நாலு வேணா உனக்குப் போடுறேன். அந்தச் சட்டை எல்லாம் போட முடியாது.” என்றவன், அவள் கன்னத்தில் தட்ட…

அவர்கள் விருந்துக்குச் சென்ற போது, உறவினர் வீட்டில் அவனுக்கு எடுத்துக் கொடுத்தது. வேண்டுமென்றே தான் அதை எடுத்து வைத்திருந்தாள். அதற்குள் நேரம் ஆகிவிட்டது என சடகோப்பன் குரல் கொடுக்க…. எல்லோரும் திருமண வீட்டிற்குக் கிளம்பி சென்றனர்.

அங்கே போய்ச் சொந்த பந்தங்களைப் பார்த்ததில் சம்யுக்தாவும் கலகலப்பாக இருக்க… ஆரியனும் மனைவியிடம் கேட்டதை மறந்து விட்டான்.

சக்ரவர்த்தித் தனியாக சந்திரா தனியாக என அவர்களும் அந்த விசேஷ வீட்டிற்கு வந்திருந்தனர். சம்யுக்தா இருக்கிறது என்று நகைகளை அள்ளி போட்டுக் கொண்டு வராமல், தேவையானது மட்டுமே அணிந்திருந்தாள். அதனால் சந்திராவுக்கு ஒன்றும் கணிக்க முடியவில்லை.

இன்று சந்திரா பேசியதை தந்தையிடம் சொல்லி விடுவோமா என்று முதலில் நினைத்தவள், பிறகு அவரை வேறு டென்ஷன் செய்ய வேண்டுமா என நினைத்து விட்டு விட்டாள்.

மறுநாள் காலை திருமணம் முடிந்ததும் சம்யுக்தாவே, “நாம மதுரைக்குப் போகலாம், எனக்குக் கிளாஸ் போகணும்.” என்றாள்.

நீயா இப்படிச் சொல்ற.” ஆச்சரியமா இருக்கே என்றான் ஆரியன். கணவன் சண்டை என்று எதுவும் இல்லாமல் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்று அவளுக்கு இருந்தது. அதே போல அவனை இழுத்துக் கொண்டும் வந்து விட்டாள்.

சம்யுகத்தா அவள் அம்மாவிடம் மட்டும் நடந்ததைச் சொன்னவள், “என்ன மா அந்தப் பெரியம்மா இப்படி இருக்காங்க. அப்பா நிஜமா பாவம்.” என்றாள்.

உண்மையில் சக்ரவர்த்தி அந்த நிலையில் தான் இருந்தார். “இப்போது ஸ்ரீமதிக்குச் சென்னையில் சொந்த வீடு வாங்கிக் கொடு.” என சந்திரா நின்றார்.

இங்க ஊரல அவங்களுக்குச் சொந்த வீடு இருக்கு. நாமலே ஏன் ஆரம்பிக்கணும்?” என சக்ரவர்த்திக் கேட்க…

அதுல அவன் தம்பிக்கும் இல்ல பங்கு இருக்கு. என் பொண்ணு ஏன் வாடகை வீட்ல இருக்கணும்?” என்றார்.

சரி அவங்க வீடு வாங்கும் போது, நாமும் கொஞ்சம் பணம் கொடுக்கலாம். ஆனா மொத்தமா பணம் கொடுக்கிற அளவுக்கு முடியாது.” என்றார் சக்ரவர்த்தி.

சென்னையில வீடு வாங்கிறதுன்னா சும்மாவா… அம்பது லட்சத்துக்குக் குறையாம ஆகும். இவளுக்கு எல்லத்தையும் கொடுத்திட்டு, நான் நாமம் போட்டுட்டு போறதா…” என ஸ்ரீகாந்த் கேட்க…

அம்மா எனக்கு இப்பவே எதுனாலும் செஞ்சிடுங்க. அப்புறம் இவன் கொடுக்க மாட்டான்.” என்றாள் ஸ்ரீநிதி.

சம்யுக்தாவுக்கு நகை போட்டு, வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக் கொடுத்தேன். கல்யாண செலவு கூட நான் முழுசா செய்யலை… மாப்பிள்ளை வீட்ல தான் கல்யாணம் பண்ணாங்க. ஆனா ஸ்ரீநிதிக்கு கல்யாண செலவும் நானே பண்றேன்.”

என் ரெண்டு பெண்களுக்குமே சொத்துக் கொடுக்கிறேன். ஆனா இப்போ இல்லை…. எனக்குப் பிறகு தான்.”

ஸ்ரீநிதிக்கு அவங்க வீடு வாங்கும் போது, பணம் கொடுத்தா அப்புறம் சொத்து கிடையாது.” எனத் தெளிவாக சக்ரவர்த்திச் சொல்லி விட…

அவளுக்கும் என் பெண்ணுக்கும் ஒரே மாதிரியா?” என சந்திரா கேட்க…

அவளும் என் பொண்ணு தான். நீ எனக்குத் தெரியாம நகை செஞ்ச மாதிரி இந்துஜா எதுவும் அப்படிச் சேர்க்கலை… நானா போட்டது தான். உன்னைப் போலச் சாமர்த்தியம் அவளுக்கு இல்லை.” என்றார் சக்ரவர்த்தியும் குத்தலாக.

நீங்க என்னைக் கொன்னாலும், இந்துஜாவுக்கும் சம்யுக்தாவுக்கும் என்ன சேரனுமோ…. அது அவங்களைச் சேரும். நான் அந்த மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கேன்.” என சக்ரவர்த்திச் சொல்ல..

அப்பா, என்னையும் அப்படி நினைக்கிறீங்களா? எனக்கு உங்க சொத்து வேணும் தான். ஆனா எனக்கு வேற யாருக்கும் சேர வேண்டியது வேண்டாம்.” என்றான் ஸ்ரீகாந்த.

உன்னைச் சொல்லலை டா… உங்க அம்மா வீட்டு ஆளுங்களைச் சொல்றேன். என்னை முட்டாள்னு நினைச்சு தானே… என்னைக் கொல்ற அளவுக்குப் போனாங்க.”

நானும் கொஞ்சம் நிம்மதியா வாழ்ந்தேனா அதுக்குக் காரணம் அவங்க ரெண்டு பேரும் தான். அவங்களை நான் என்னைக்கும் நிற்கதியா நிறுத்த மாட்டேன். சம்யுக்தாவுக்குக் கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது. அதுவும் மாப்பிள்ளை நம்ம ஆரியன். அவன்கிட்ட உன் வேலையைக் காட்டின… உன்னைத் தொலைச்சிடுவான்.” என சந்திராவைப் பார்த்து சொல்லிவிட்டுச் சக்ரவர்த்திச் சென்றார்.

ஆரியன் அத்தானுக்கு நம்ம ஊர்லையே ஏகப்பட்ட சொத்து இருக்கு. சம்பளம் வாங்கிறதை விட அதிகம் சம்பாதிப்போம்னு தானே அவர் சொந்தமா பிஸ்னஸ் பண்றார். ஆனா எனக்கு அப்படியா? எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரின்னு அப்பா எப்படிச் சொல்றார்.” என ஸ்ரீமதி கேட்க…

உனக்கு அத்தானை விடப் பெரிய இடம் தான் பார்த்தாங்க. ஆனா அது யாரால போச்சுன்னு யோசிச்சு பாரு. அதோட உன் புருஷனுக்கு வயசு கம்மி தான். பையனுக்குச் சாப்பாடுக்கு கஷ்ட்டமா இருக்குன்னு தான், அவருக்குச் சீக்கிரமாவே கல்யாணம் பண்றாங்க. இன்னும் கொஞ்சம் வருஷம் போனா லட்சத்துக்குக் குறையாம சம்பளம் வரும். அப்போ நீ எங்களுக்குக் கொடுப்பியா? இல்லையில்ல…”

நான் ஒழுங்கா படிக்கவும் இல்லை. நான் நம்ம பிஸ்னஸ் தான் பார்க்கணும். எல்லாத்தையும் உனக்குக் கொடுத்தா அப்புறம் எனக்கு என்ன மிஞ்சும்?” என ஸ்ரீகாந்த நியாயம் கேட்க…

டேய், நான் உன்னோடதுல இருந்து உங்க அப்பாவை எடுத்து தர சொல்லலை டா…” என்றார் சந்திரா.

அம்மா நீங்க திரும்ப திரும்ப சம்யுக்தாவோடதும் கிடைக்கும்னு ஆசைப்படாதீங்க. அது நடக்காது விட்டுடுங்க. என்னோடதுல வேணா நான் ஸ்ரீநிதிக்குக் கொடுக்கிறேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் அதோட வேற எந்தப் பிரச்சனையும் பண்ணாம இருக்கணும்.”

நாம தான் பணம் பணம்னு அடிச்சுக்கிறோம். நாம என்னைக்காவது குடும்பமா சந்தோஷமா இருந்திருக்கோமா?”

இவ்வளவு நாள் போனது போச்சு… இனிமேலாவது கல்யாணம் பண்ணிட்டு அவங்கவங்க குடும்பம்னு இருக்கலாம்.” என்றான் ஸ்ரீகாந்த் தங்கையிடம்.

ஸ்ரீநிதிக்கு அவன் சொல்ல வந்தது புரிந்ததா தெரியவில்லை. ஆனால் எல்லோரிடமும் நம் ஜம்பம் பலிக்காது என அம்மா மகள் இருவரும் புரிந்து கொள்ளும் நாளும் வந்தது.

பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது, சிலர் மேல நமக்கு ஒரு பிரமிப்பு இருக்கும். இவரக்ளைப் போல நாமும் வர வேண்டும் என்று ஆசை இருக்கும். அது போலப் பள்ளியில் படிக்கும் போதே… பவித்ரனுக்கு ஆரியன் மீதும் ஒரு பிரம்மிப்பு எப்போதும் உண்டு. ஆரியன் அவனை விடச் சீனியர். ஆனாலும் ஆரியன் போலப் படிக்க வேண்டும் என்று ஆசை.

அந்தச் சின்ன ஊரில் இருந்தும், நன்றாக படித்து, நல்ல கல்லூரியில் சேர முடியும் என ஆரியன் காட்டி இருந்தான். ஆரியன் தேர்ந்தெடுத்த அதே துறையைத் தான் கல்லூரியில் பவித்ரனும் எடுத்துப் படித்தான்.

அவனுக்கு ஆரியனை அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஆரியனிடம் அதிகம் பேசியது இல்லை. ஆரியனுக்குமே அவனைத் தெரியும், அவ்வளவு தான். ஆனால் தன்னை ஒருவன் எடுத்துக்காட்டாக எல்லாம் கொண்டிருப்பான் என்று அவனுக்குமே தெரியாது.

சக்ரவர்த்திக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், ஊரில் பெரிய மனிதர். யாரிடமும் அடாவடியாக நடத்துக் கொண்டது இல்லை. அவர் வீட்டின் மாப்பிள்ளை என்றால் மகனுக்கு ஒரு நல்ல பின்பலம் இருக்கும். ஆனால் சந்திராவின் மகள் என்பதால் பெண் எடுக்க பவித்ரன் வீட்டில் தயங்கினர்.

என்னோட சீனியர் தான்மா ஆரியன். அவரே அங்க இருந்து பெண் எடுத்திருக்கார். நமக்கு என்ன? அவரு இருக்காரு இல்ல… நமக்கு என்ன பயம்?” என்றான்.

அதோட நாம நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா… யார் நம்மகிட்ட பிரச்சனை பண்ண முடியும்.” என்றான். அதன் பிறகு தான் பவித்ரன் வீட்டில் திருமணதிற்குச் சம்மதித்தனர்.

வா டா ராசா… ஆடு தானா வந்து பிரியாணி போட தலையைக் கொடுக்குது.