Advertisement

UD-1

காலை நேரத்து பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சௌபாக்கியாவின் சமையலறை, இது புதிதல்ல என்றாலும் இன்று கூடுதல் பதற்றம் அவர் முகத்தில்…

“என்ன ம்மா நீங்க… இவ்வளவு பதற்றமாக என்ன இருக்கு…? கொஞ்சம் நிதானமா இருங்க… பிபி ஏரிற போகுது…” என்ற வள்ளியின் சமாதான பேச்சுக்கு அருகில் இருந்தவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை…

திரும்பி பார்த்த வள்ளி, ‘இந்த வயசுல எதுக்கு இவ்வளவு பயம் இந்த அம்மாக்கு…’ என்ற எண்ணத்தோடு வெங்காயத்தின் தோலை உரித்துக்கொண்டிருக்கும் போது,

“இந்த வயசுல எதுக்கு எனக்கு டென்ஷன்னு தானே நீ நினைக்குற…?” என்று சரியாக அவளது எண்ணப்போக்கை அனுமானித்தபடி வேலையை பார்த்த சௌபாக்கியாவை புருவம் உயர்த்தி பார்த்து வைத்தாள் வள்ளி…

பின் தெளிந்து, கையிலிருந்த கத்தியையும் வெங்காயத்தையும் பொத்தென்று வைத்தவள், இடுப்பில் ஒரு கையை தோரனையாக வைத்தபடி, சமையல் மேடையில் ஒருப்பக்கமாக சாய்ந்தவாறு, “இது சரியா கேட்குது உங்களுக்கு, ஆனா முன்ன பேசுனது மட்டும் கேட்கலை அப்படி தானே…?”

“நீ என்ன வேணும்னாலும் கேளு, பேசு, யோசி ஆனா அதை வேலை செஞ்சுட்டே செய்…. டைமாச்சு…” என்றபடி தோசையை வார்த்தார்…

“ம்க்கும்…” என்றவள் சளிப்புடன் ஒரு பெருமூச்சை விட்டபடி, விட்ட தன் வேலையை தொடர்ந்தாள் வள்ளி…

சௌபாக்கியாவின் தோசை தயாராவதற்குள் வள்ளி வெங்காயம், புளி, உப்பு, வரமிளகாய் போட்டு அரைத்து வைத்திருந்தாள்…

அடுத்த தோசையை ஊற்றும் முன் வெளியே,” அம்மா டைமாச்சு…. பிரேக் பாஸ்ட் ரெடியா…?” என்று குரலெழுப்பினான் தமிழ்செல்வன்…

வந்த குரலுக்கு மறுகுரலாக, “இதோ ரெடி கண்ணா… ” என்றபடி, வள்ளியிடம் கண்ணசைவில் அடுத்த தோசையை ஊற்றும் படி சமிக்ஞை செய்துவிட்டு சட்டினியுடன் வேக நடையிட்டார் பரபரப்போடு….

அவர் சென்ற அடுத்த நொடி சிறு புன்னகையுடன் வள்ளி இன்னுமொரு தோசை கல்லை எடுத்து அடுப்பை பற்ற வைத்தார் என்ன நிகழும் என்றரிந்து…

“ஏன்ம்மா இவ்வளவு வேகமா வரீங்க… எங்கையாச்சும் இடிச்சுக்க போறீங்க…” என்ற கனிவு தமிழ்செல்வன் குரலில்…

உணவு மேஜையில் அவனுக்கான உணவை பரிமாறியபடி, “இன்னைக்கு கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் டா… அதுனால எல்லாமே லேட்…. டைம்க்கு எல்லாத்தையும் ரெடி பண்ணணுமே இல்லாட்டி உங்க எல்லாருக்கும் லேட் ஆயிருமே…” என்றதற்கு

“இதுல போய் என்னம்மா… நீ சொல்லி இருந்தா நான் கேண்டின்ல சாப்பிட்டு இருப்பேன் ஒருநாள் தானே…” என்றபடி உணவில் கை வைக்க போகும் நேரம், தட்டு பக்கம் இருக்கும் இருக்கைக்கு இடமாறிருந்தது வெடுக்கென்று…

சட்டென்று தலைக்கு ஏறிய கோவத்தை ஒருநொடி மூச்சை இழுத்துவிட்டு சமாதனம் செய்யும் போதே, சௌபாக்கியா

“டேய் சின்னவனே எத்தனை முறை சொல்லியிருக்கேன் இப்படி பண்ண கூடாதுன்னு… ஏன்டா கேட்க மாட்டீங்கிற…” என சற்று குரலை உயர்த்தி கேட்க,

அவசரமாக தோசையை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தவன், “ரொம்ப லேட் ஆச்சும்மா… ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்… அதான்…” என குனிந்த தலை நிமிராது பதில் அளித்தவன், தோசை தீரவும் தான் தலையை நிமிர்த்தினான்…

“அதுக்கு நீ நேரமா எந்திரிச்சு வந்திருக்கணும்… இப்படி சாப்பிட்ட தட்டை பிடுங்கி சாப்பிட கூடாது…” என்ற தமிழ்ச்செல்வனுக்கு, விரலை நக்கியபடியே

“ஒரு இரண்டு நிமிசம் முன்னாடி நீ வந்து உட்கார்ந்துட்டன்னு அதிகமா பேசாத… அப்புறம் முக்கயமான ஒன்னு நீ சாப்பிட கைதான் வைக்க போன, சாப்பிட்டுட்டு இல்ல…” என்றவன் அன்னையின் அப்புறம் திரும்பி பாவமான முகத்துடன்

“தோசைம்மா….” என மூக்கை சுருக்கி தட்டை ஏந்தி கேட்ட விதத்தில், கோபத்துடன் முறைத்து கொண்டிருந்தவர் லேசாக சிரித்தபடி சமையலறையை நோக்கி திரும்ப, வள்ளி இருகைகளிலும் இரு தட்டை ஏந்தியபடி வந்து நின்றாள்…

“இந்தாங்க அம்மா….” என்றபடி சௌபாக்கியாவிடம் நிட்டியவள், “இரண்டு கல்லு வச்சுட்டேன் ம்மா, இப்படி ஆகும்னு தெரிஞ்சு…” என்க, அவருக்கு பதிலாக ஒரு புன்னகையை தந்தவர்,

ஒரு தட்டை தமிழ்செல்வனுக்கு வைத்தவர், மற்றொன்றில் இருந்த தோசையை மகிழனுக்கு வைத்தார் லேசான முறைப்புடன்…

எதையும் சட்டை செய்யாது அடுத்த ஐந்து நிமிடத்தை உணவில் கவனத்தை செலுத்தியவர்கள் அதே வேகத்தில் தங்கள் அலுவலுக்கு கிளம்ப நிற்க,

தமிழ்செல்வன், “போயிட்டு வரேன் மா…” என்றதோடு வாசலில் குனிந்து தன் ஷூவை மாட்டி கொண்டிருந்தவனின் தோளில் ஓங்கி தட்டிவிட்டு, “பாய் டா…” என்றவன் சட்டென ஓடிவிட்டான் நமட்டு சிரிப்புடன்…

குனிந்திருந்த மகிழன் இதை எதிர்பார்க்காததால், “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…. டேய்…” என முதுகை தடவிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க, அடித்தவன் ஜெட் வேகத்தில் இடத்தை காலி செய்திருந்தான்…

அதில் முகத்தை சுருக்கியபடி அன்னையின் புறம் திரும்பி, “பாரு ம்மா… அவன… எப்படி அடிச்சுட்டு போறான்னு….” என புகார் வாசிக்க,

வாசல் நடையில் கைகட்டி சாய்ந்து நின்றிருந்தவர், நக்கல் சிரிப்பில், “நீ அவன் தோசையை பிடுங்குன்னல அதான்… தப்பு செஞ்சா தண்டனை உண்டு….” என்றவரின் முகத்தில் தோரனை தெரிக்க,

மகிழன், “அதுக்குன்னு இப்படியா அடிப்பாங்க… எப்படி வலிக்குதுன்னு தெரியுமா…?” என குறைப்படிக்க,

“எது…. அவன் இப்ப தட்டுனதுல உனக்கு வலிக்குதா…?” என்ற கேள்வியில் கேலியும் கலந்திருக்க, அவனோ

“ம்ம்ம்ம்…  ஆமா…” என முகத்தை கோபமாக்கி சொல்லவும்,

“நம்பிட்டேன்… கிளம்பு முதல்ல…” என்றவரை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தவன்,

“கிளம்புறேன்….” என்றதோடு தன் வண்டிக்கு உயிர் கொடுத்து செலுத்தியிருந்தான்…

சௌபாக்கியா ஒரு சிறந்த இல்லத்தரசி என்று சொல்லலாம்… ரெங்கராஜன் என்பவரோடு திருமணமாகி சென்னைக்கு வந்தவருக்கு உடன்பிறப்புகள் எவருமில்லை…

அன்னை தந்தைக்கு பிறகு, கணவன் இருமகன்கள் மட்டுமே உலகம் என்றானது… மூத்தவன் தமிழ்செல்வன் அழகு எத்தனையோ அதே அளவு பொறுமையும் அவ்வளவே… அதை அதிகம் சோதித்து பார்க்கும் வேலையை தனதாக்கி கொண்டவன் தான் இளையவன் மகிழன்…

தமிழ்ச்செல்வனுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகியிருக்க, மனைவி ஸ்வேதாவை அவரது தாய் வீட்டில் பிரசவத்திற்காக அனுப்பியிருப்பவனுக்கு நேர் எதிர் துருவம் மகிழன்…

பொறுமை என்பது அவனது அண்ணனிடமிருந்து பாதியை மட்டும் வாங்கி இருப்பவன்… துறுதுறுப்பும் சேட்டையும் அளவிற்கு சற்று அதிகமே…

ரெங்கராஜன் ஒரு விபத்தில் தவறி இரு ஆண்டுகள் கடந்த பின்னரே தமிழ்ச்செல்வன் திருமணம் நடந்தேரியது… மகிழனுக்கு பெண்கள் என்றால் நாட்டமே, தவிர அந்த நாட்டம் திருமண பந்ததில் இல்லை… விதவிதமாக பார்ப்பதை தவிர அடுத்த அடிக்கு செல்ல மாட்டான்…  எதிலும் நேர்மையும் ஓர் அளவோடும் நடந்து கொள்பவன்…

இருவரும் குணத்தில் இரு வேறு திசையாக இருந்தாலும் அறிவு என்னும் இடத்தில் முதலிடத்தில் சமமாகவே இருக்க, அவர்களுக்கு பிடித்த துரையில் பணியில் அமர்ந்தனர்…

தமிழ்ச்செல்வனின் கார் ஒரு ஐடி நிருவனத்தில் நிற்க, மகிழனின் இருசக்கரம் சிபிஐ அலுவலகத்தின் முன் நின்றது…

கை முட்டிவரை மடித்து விட்ட சட்டையும், வலது கரத்தில் இருந்த வெள்ளி காப்பை இறுக்கியபடி இடது கரத்தால் தன் முறுக்கிய மீசையை மேலும் முறுக்கியபடி கான்பெரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் மகிழன்…

“குட் மார்னிங் சார்…” வலது கையின் ஆள்காட்டி விரலோடு அடுத்த விரலை மட்டும் நீட்டி சின்னதாக சலியூட் வைத்தப்படி அங்கிருந்த சுழல்நாற்காளியில் அமரந்தான் தோரணையாக….

எப்பொழுதும் போல் இன்றும அவனது கம்பீரமான தோரணையின் இளகுவில் கவர்ந்த போனார் ரவிசந்ரன்…

மகிழனின் மேல் அதிகாரி, குரு என்னும் பதவியில் வைத்திருப்பவன், இருவரும் தனிமையில் இருக்கையில் நண்பர்கள் எனலாம்…

“குட் மார்னிங் மேன்….” என்றவர் தன் கையிலிருந்த பைலை அவன் புறம் நீட்டியபடி,

“எனக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு இப்பெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கு மேன்…” என்றபடி எழுந்து சுவரில் மாட்டியிருந்த திரையின் அருகில் சென்று நிற்க,

மகிழனோ கூறிய விழிகளோடு அவர் கொடுத்த பைலின் முதல் பக்கத்தை பார்வையிட்ட படி, “ஏன் சார் ஐம்பது வயசுல இந்த ஆசை ஏக்கம் உங்களுக்கு… ?” என விழிகளை உயர்த்தி கேட்டான் சற்று நக்கலும் சற்று தீவிரமும் கலந்த பாவனையில்…

“ம்ம்ம்… பொண்ணு இருந்திருந்தா உனக்கு கட்டி கொடுத்து உன்னை என்கூடவே வச்சு இருந்திருப்பேன்… அதான்…” என கண்ணடித்தவர் அடுத்த நொடி, முகத்தை கடினமாக்கி கொண்டார் பேச போகும் விஷயத்திற்காக…

“சோ மகிழன்… உன் கையில இருக்குற பைல் கேஸ் பத்தி உனக்கு தெரியும்னு நினைக்குறேன்….” என்று கேள்வியோடு நிறுத்த,

“யஸ்… கொஞ்சம் தெரியும்… நாட் டிடைய்லி…”

“ம்ம்ம்…. அதான் இதை பத்தின புல் டிடையல்ஸ் உனக்கு குடுத்து இருக்கேன்… இனி இதை நீ தான் ஹான்டில் பண்ண போற…” என்றதற்கு தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான் யோசனையாக….

அவனது முகத்தை கண்டு, “என்னாச்சு மகிழன்…? ஏதாச்சும் கேட்கணுமா…?”

“நத்திங் சார்…” என்றவன் அதே யோசனை முகத்துடன் அடுத்த பக்கத்தை திருப்பி பார்த்தான்…

ஆனால் அவனையே பார்த்திருந்தவர், “என்னன்னு சொல்லு மேன்…” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தவன்,

“ஸ்மக்லிங் பண்ணி இங்க வரது ஒருவித டிரக்ன்னு தெரியுது ஆனா அது இங்க இந்தியா உள்ள வந்ததும் எங்க எப்படி இடம் மாறி என்னவா போகுதுன்னு தெரியல…” என்றதற்கு ஆம் என்பது போல் தலையை ஆட்டி வைத்தார் ரவிசந்திரன்…

“ஆனா இப்படியொரு விஷயம் ஸ்மகில் ஆகுதுன்னு இன்பர்மேஷன் வந்து இருக்கு….” என்றதற்கும் ஆம் என்னும் தலையாட்டலே,

“இது உண்மையா பொய்ன்னும் தெரியாது…” என்றதும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தவர்,

“யூ ஆர் ரைட்… இது உண்மையா பொய்யான்னு தெரியாது… ஆனா உண்மையா இருக்கும் பட்சத்தில்…?”

மகிழனின் முகம் தீவிரமாக இருந்தது அது அடுத்து என்ன என்ற யோசனையில்…

“லுக் மகிழன்…. இந்த கேஸ எவ்வளவு கிரிடிக்கல்னு உனக்கு நான் சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் இல்ல… பார்த்து ஹேன்டில் பண்ணு…” என்றதோடு நிறுத்திக்கொள்ள,

ஒரு பெருமூச்சுவிட்டவன், லேசாக மேஜையில் தட்டிவிட்டு, “கிரிடிகல் கேஸ் எல்லாத்தையும் என்பக்கம் தள்ளிவிட்டுட்டு நீங்க ஃபிரீ ஆயிருறீங்க…” லேசான முறைப்பு அவனிடத்தில்…

ஆனால் அதை கண்டு கொள்ளாதவர், இதழோர சிறு புன்னகையுடன் “போ மேன்… போய் வேலையை பாரு….” என்றதோடு வேறொரு கோப்பையை ஆராய தொடங்க,

“ம்ம்ம்… பார்க்குறேன்… பார்க்குறேன்… நானே பார்க்குறேன்…வேற வழி இல்லையே…” போலியான சலிப்பு அவன் குரலில்…

இருக்கையில் இருந்து எழுந்து, மீண்டும் ஒரு சலியூட் வைத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறியவன், நேராக தன் அறை நோக்கி வேக நடையில் செல்கையில் எங்கிருந்தோ இடையில் இருந்து வந்து தோற்றி கொண்டான் மகிழனின் அசிஸ்டன்ட் பிரவீண்…

அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும், பிரவீண் கம்பீரமாக “குட் மார்னிங் சார்…” என சலியூட் வைக்க,

“ம்ம்ம்… குட் மார்னிங்….” என்றவன், எதிர் இருக்கையை காட்டி,

“உட்காருங்க…பேசணும்…”என்றதும், அமர்ந்தவனை பார்த்து

“என்னை வேவு பார்த்துட்டே இருப்பீங்களா…?” என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கேட்கவும், முதலில் பதறியவன்

“அச்சோ சார் அப்படி எல்லாம் இல்ல…” என்று பதில் தந்தவன் பின் நிதானமான குரலில்,

“நீங்க உள்ளே வரும் போதே பார்த்தேன்… ரவி சார் கேபின் போனீங்க… சோ உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்… மத்தபடி வேவு எல்லாம் பார்க்கல சார்..” அவனையே கூர்ந்து பார்த்து கொண்டிருந்த மகிழன்,

“அதெப்படி எல்லா டைமும் இப்படியே நடக்குது… நீ எனக்கு அசிஸ்டன்ட் ஆனதுல இருந்து நான் எங்க போனாலும் நீ அங்க இருக்க…? அது டியூடிலையும் சரி, ஆஃப்லையும் சரி… ஆஃபீஸ்க்குள்ளையும் சரி, வெளிய பெர்சனல் வொர்க்லையும் சரி… நீ அங்க இருக்க… உன் மேல லேசா சந்தேகமாவே இருக்கு….” தாடையை நீவியபடி சொன்னவனை கலவரமாக பார்த்த பிரவீண்,

“சார்…. நான் உண்மையை தான் சொல்லுறேன் சார்… எனக்கும் அந்த டௌட் இருக்கு சார்… நீங்க என்னை பாளோ பண்ணுறீங்களோன்னு… கஸ்ட்ட பட்டு வேலைக்கு வந்து இருக்கேன் சார்… கமிட்மென்ட் ஜாஸ்தியா வேற இருக்கு… பிரச்சினை பணணிறாதீங்க சார்…” என்றவனை பார்த்து முறைத்த மகிழன் பின் சட்டென சிரித்தும் விட்டான்…

அவன் சிரித்ததும் பிரவீணும் லேசாக சிரிக்க, “ஆனா நீ என் மண்டை மேல இருக்குற சிசிடிவி மாதிரின்னு சொன்னா அது தப்பில்ல…” என்றபடி அவன்புறம் ரவிசந்திரன் தந்த கோப்பையை நகர்த்தி வைத்தான்…

இதை மகிழன் இருக்கையில் அமர சொல்லி பேச வேண்டும் என்று சொல்லும் போதே யூகித்து இருத்தான் பிரவீண்…

மகிழனின் பழக்கம் இது, புது கேஸ் என்றால் முதலில் நிதானமாக அமர்ந்து அதை பிரவீணுடன் தலை முதல் அடிவரை முழுவதும் ஆராய்ந்து ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவான்… அதில் சில நேரம் புரியாத சில விஷயங்கள் கூட புரிய வாய்பிருக்கும் என்பதால்…

ஆனால் இதை பிரவீண் தவிர வேறு யாருடணும் பேச மாட்டான்… பிரவீண் இல்லையென்றால் தானே யோசித்து கொள்வானே தவிர அவனது இடத்தை வேறொருவருக்கு தந்ததும் இல்லை… அது அவன் மேல் கொண்ட நம்பிக்கையால் ஒன்று என்றால்… மற்றொன்று அவனது பத்தி கூர்மை ஒருபுறம்…

பிரவீண் அந்த கோப்பையை வாங்கி பொறுமையாக படித்து மூளைக்குள் அலசிய பின் நிமிர்ந்து மகிழனை பார்த்தான் அடுத்து என்னவென்பதை போல…

மகிழனோ, மேஜை மேல் இருந்த மார்கர் பென்னை(pen) இருவிரல்களுக்குள் சுழற்றியவாரு யோசித்து கொண்டிருந்தான், பிரவீண் முழுவதும் படித்து முடிக்கும் வரை….

“பர்ஸ்ட் திங்…” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்து, அறையில் தன் மேஜைக்கு அருகில் திருப்பி வைத்திருந்த வெள்ளை பலகையை நேராக்கியவன்,

“இந்த ஸ்மக்லிங் நீயூஸ்… உண்மையானு தெரிஞ்சுக்கணும்… “

“இது டிரக் ஸ்மக்லிங் தானான்னு கன்பார்ம் பண்ணனும்… ” என்ற பிரவீண்க்கு,

“எக்ஸேட்லி… அப்படி அது ஒரு டிரக்னா என்ன மாதிரி டிரக் அது… எப்படி கை மாறுது…” என்றபடி மகிழன் அந்த போர்டில் ஹின்ட் போல் எழுதிக் கொண்டே வர, பிரவீண்

“யாரு இதை பண்ணுறாங்க… இதுனால வர பிராபிட் எவ்வளவு…” என்று அவன் சொல்ல,

மகிழன், “எத்தனை நாளா நடக்குது…? யாரு ஹெல்ப் பண்ணுறது… இதோட ஸ்சோர்ஸ் ஆஃப் இன்கம்ங் அண்ட் அவூட்கோயிங்…?”

“இந்த டிரக்கோட பாதிப்பு என்ன? ஒருவேலை இந்த நியூஸ் பொய்யா இருக்கும் பட்சத்தில்…?” என்று பிரவீண் கேள்வியாக நிறுத்த, அதுவரை பலகை புறம் திரும்பி இருந்த மகிழன், பொறுமையாக மார்க்கரை மூடி வைத்தபடி திரும்பி மேஜையின் அருகில் வந்து

“இல்ல பிரவீண்… ஏனோ இது பொய் இல்லன்னு தோணுது… அப்படி பொய்யா இருந்தா ஏன் கரெக்டா லாஸ்ட் மூன்னு முறை  ஸ்மக்லிங் பண்ணுன டேட், பிளைட், டைம்மிங் எல்லாம் மென்ஷன் பண்ணணும்…?” கேள்வியாக நிறுத்த,

அதே கேள்வியோடு பிரவீண், “நம்மளை குழப்பணும்னு…”

“அதுக்கு என்ன அவசியம்…?”

“ம்ம்ம்… வேற ஏதாச்சும் விஷயம் நடக்க போறதுக்கு நம்மளை இப்படி டைவர்ட் பண்ண…” என்றதில் புருவம் சுருக்கியவன்,

“இருக்கலாம்… எதுக்கும் நமக்கு வந்த இந்த இன்பார்மேஷனை சீக்கிரெட்டா டீல் பண்ணணும்…” என்றதில் குழப்பத்துடன்,

“பட் வொய் சார்…?”

“நீங்க சொன்ன மாதிரி நம்மளை வேற விஷயத்தில் இருந்து டைவர்ட் பண்ணணும்னு நினைக்குறவங்களுக்கு தெரிய கூடாதுன்னு தான்… லெட்ஸ் சீ… என்ன நடக்குதுன்னு…” என்றபடி வந்து இருக்கையில் அமர,

“அப்ப அடுத்தது என்ன சார்…”

“இப்ப நம்ம கிட்ட இருக்குற ஒரே விஷயம் இந்த டேட், பிளைட் நேம், டைமிங்… அதை விசாரிங்க… ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்ப்போம்… பட் யாரோட கவனமும் இங்க நம்ம பக்கம் வந்துற கூடாது… ” என்றதும் பிரவீண் தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்,

“ஓகே சார்… விசாரிச்சுட்டு உங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணுறேன் சார்… ” என்றபடி ஒரு சலியூட் வைக்க, அதை தலையசைத்து பெற்று கொண்டவன் தன் மற்ற  வேலையில் கவனத்தை திருப்ப பிரவீண் அந்த அறையை விட்டு வெளியேறினான்…

உண்மையா பொய்யா என்று ஆராய தொடங்கியவனுக்கு காரணங்களும் காரணவாதிகளையும் அறியும் போது இத்தனை கம்பீரம் திடம் அவனிடத்தில் நிலைத்திருக்குமா…?

தொடரும்…

 

 

 

 

 

Advertisement