Advertisement

“என்னம்மா மருமகளைப் பின்னாடியே போய் கண்காணிக்குற?!” என்று ராஜசேகர் வினவ,

     “அட நீங்க வேறங்க! இந்தப் பையன்தான் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு என் மருமகளை சாப்பிடக் கூடக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான்!” என்று கவலையாய்ச் சொல்ல,

     “ஓ அதான் விஷயமா!” என்று சிரித்தவர்,

    “இருந்தாலும் உன் பையன் என்னைவிட பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்றான்மா. எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்குன்னா பாரேன்!” என,

    “ஹான்! பாரேன் உங்களுக்கு இந்த வயசுல என்ன நினைப்பெல்லாம் வருது!” என்று மலர் வெட்கம் கொள்ள,

     “ஐம்பதிலும் ஆசை வரும்,

     ஆசையுடன் பாசம் வரும்,

     இதில் அந்தரங்கம் கிடையாதம்மா…

     நாள் செல்ல நாள் செல்ல

     சுகம்தானம்மா!” என்று ராஜசேகர் பாட, தங்கமலர் வெட்கப்பட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தார்,

     “போதும் போதும் பாட்டெல்லாம் தூங்குங்க! என்றபடி அவர் ஆசைக்குத் தடை போட்டுவிட்டு.

                            ******

      அங்கு மொட்டை மாடிக்குச் சென்றவள், “ச்சே! மொட்டை மாடி லைட்டைக் கூடப் போடாம உள்ள வந்துட்டேனே! ஆனாலும் நல்ல வெளிச்சாமாத்தான் இருக்கு!” என்றவள்,

     “அட இன்னிக்கு பௌர்ணமி போல!” என்று வானத்து நிலவைப் பார்த்து அவள் மனம் மயங்க, அவளைப் பின்னிருந்து கட்டித் தூக்கியது இரு கரங்கள்.

     “ஹா!!” என்று பயத்தில் கத்தப் போனவளை சட்டெனத் தன் புறம் திருப்பி, தன் இதழ் கொண்டு அவள் வாயை அடைத்தவனைப் பார்த்து,

     “ப்ச் போங்க! போங்க!” என்று மையு அவன் மார்பில் குத்த,

     “கத்தாதடி! கீழ எல்லோருக்கும் கேட்டுடப் போகுது!” என்றதும்,

     “எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க?! இவ்ளோ நேரம் மாடியில் இருந்துக்கிட்டுதான் எனக்குப் போக்கு காட்டினீங்களா?!” என்றாள் தன் மான்விழிகளை உருட்டி மிரட்டலாய்.

     “ம்!” என்று தலையசைத்தவனின் மூக்கை,

     “ஹ!” என்று கடித்து வைத்தவள்,

     “எவ்ளோ நேரமா ஏமாத்துறீங்க இங்க உட்கார்ந்துகிட்டே?! மாசமா இருக்க பொண்டாட்டி இவ்ளோ நேரமா சாப்பிடாம இருப்பாளே, இந்த வீட்ல  அவளைக் கூப்பிட்டு சாப்பாடு போடக் கூட ஆள் இல்லையேன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காய்யா உனக்கு! ம்!” என்று சீறியவளை,

     “அச்சச்சோ! அப்படியா பண்ணாங்க எங்க வீட்டு ஆளுங்க! அவங்க மட்டும் தனியா உட்கார்ந்து மொக்கினாங்களா என் பொண்டாட்டியை விட்டுட்டு?!” என்று அவன் தெரியாதது போல் கேட்க,

     “ஹான்?!” என்று அவனை முறைத்தவள்,

     “அப்போ உங்க வேலைதானா இது! நீங்கதான் அத்தைக் கிட்ட சொல்லி வச்சிட்டீங்களா சாப்பிடக் கூப்பிடக் கூடாதுன்னு!” என்றாள் கணவன் ஏதோ தனக்காக ஸ்பெஷலாக செய்து வைத்திருக்கிறான் என்று கண்டுபிடித்தவளாய்.

     “அப்பாடா இப்போவாச்சும் என் மரமண்டைப் பொண்டாட்டிக்குப் புரிஞ்சுதே!” என்றவன், மொட்டை மாடிக்கு உள்ளே வரும் வாயிலின் கேட்டைப் பூட்டிவிட்டு, அவளை அப்படியே தூக்கி முன்புறம் திரும்பவிடாமல் நடக்க,

     “ம்! என்னங்க?! என்ன  சர்ப்ரைஸ்!” என்று அவளும் சிணுங்கியபடியே திரும்பப் பார்க்க,

     “மானும்மா இப்போ நீ திரும்பின, அப்புறம்!” என்றவன் அவள் வயிற்றோடு தன் முகம் உரசி குறுகுறுப்பு மூட்ட,

     “ம் இல்லை! இல்லை!” என்றவள், அப்போதும் மெல்லத் தலையைத் திருப்ப,

     “ஒரு செகண்ட் பொறுக்க மாட்டியா மானும்மா நீ?!” என்றவன் தங்கள் வீட்டு மாடியின் வலது புறம் இருந்த பூந்தோட்டத்தின் முன்பே சென்று அவளை இறக்கிவிட,

     “வாவ்!!” என்று கத்தியே விட்டாள் மையு.

     ஏற்கனவே இருந்த பூந்தோட்டம்தான் என்றாலும், மித்ரன் இன்று அதை மிக நேர்த்தியாய் ஒழுங்கு படுத்தி, ஆங்காங்கே மெழுகு வார்த்திகள் ஏற்றி வைத்து, நடுவே இருந்த ஜாதி மல்லிப் பந்தலின் கீழே காற்றினால் நிரப்பப்பட்ட நீச்சல் குளப் பையை விரித்து அதில் நீர் நிரப்பி இருந்தான். முதலில் திரைசீலைப் போல் மொட்டை மாடிச்சுவரைச் சுற்றி அமைக்கலாம் என்று நினைத்தவன், வீட்டைச் சுற்றி நிறைய இடமும், அதில் ஓங்கி உயர்ந்திருந்த மரங்களும் இருந்ததால், அதுவே தங்கள் வீட்டிற்குக் குடை போல் விரிந்திருக்க, சுற்றிலும் யாரும் பார்க்க முடியாது என்று உறுதி செய்து கொண்டு,  அப்படியே ஓபன் ஸ்பேசாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டான்.

     அதோடு, நீர் நிரம்பி இருந்த குளத்தில் கொஞ்சமாய் வெண்தாமரைப் பூக்களையும், செந்தாமரைப் பூக்களையும் வாங்கிப் போட்டிருந்தவன், அதன் அருகே இருவர் மட்டும் அமர்ந்து உண்ணும் அளவில் சிறய உணவு மேஜையும் அதில் அவளுக்குப் மிகவும் பிடித்த வகை வகையான கடல் உணவுகளையும் வாங்கி சூடு ஆறாத வண்ணம் ஹாட்பேக்கில் வைத்திருந்தான்.

     பௌர்ணமி நிலவொளியில் நீச்சல் குளமும், அதில் மிதந்த மலர்களும், சுற்றி இருந்த மெழுகுவர்த்தியின் ஒளிகளும், வகை வகையான பூக்களின் மணமும், வண்ணமும், மையுவிற்கு சினிமாவில் வரும் தேவலோகம் போன்ற பிரமிப்பை ஏற்படுத்த,

     “அய்யோ! என் செல்லப் புருஷா!!!” என்று அவன் கன்னத்தை ஆசையாய் எச்சில் செய்தவள்,

     “சீக்கிரம் சீக்கிரம் நீச்சல் குளத்துல இறக்கி விடுங்க!” என,

     “நோ! நோ! பாரஸ்ட் டின்னர்! அப்புறம்தான் விளையாட்டு! ஏற்கனவே மணி ஆகிடுச்சு இன்னும் லேட்டான இந்த மாதிரி நேரத்துல டைஜஸ்ட் ஆகாது. அதுவும் என்வி வேற” என்றவன், அவளை மெல்ல நாற்காலியில் அமர வைத்து, அவளுக்கு மிகவும் பிடித்த இறாலை எடுத்து வைக்க,

     “வாவ்!! யம்மி!” என்று ரசித்து உண்ண ஆரம்பித்தவள், அவனுக்கும் ஊட்டிவிட,

     “நீ சாப்பிடுடா!” என்றவன், தனக்கும் பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தான்.

    எல்லாமே அவளுக்குப் பிடித்த உணவு வகையாய் இருந்தாலும் அவள் கர்ப்பமாக இருப்பதால் அவன் அளவோடே வாங்கி வைத்திருக்க, வெகு சீக்கிரம் அனைத்தையும் காலி செய்தவள்,

     “என்னங்க இது?! எனக்கு இறால் எவ்ளோ பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியும்தானே! இத்துனூண்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க?! அத்தையும் வெறும் வெஜிடேரியனா செய்துக் கொல்லுறாங்க! எவ்ளோ நாளா கேக்குறேன் தெரியுமா?!” என்று அவள் சிணுங்க,

     “அம்மா செய்து தரலைன்னுதான் நான் அவங்களுக்குத் தெரியாம ஆர்டர் பண்ணேன்! இந்த நேரத்துல இதெல்லாம் அதிகம் எடுத்துக்கக் கூடாது மானும்மா!” என்று கணவன் சொல்ல,

     “ம்! அதான் அத்தையும் செய்தே கொடுக்க மாட்டேங்குறாங்க! சரி என் பாப்பாக்காக நான் பொறுத்துக்கறேன்!” என்றவளை, ஆசையோடும் அதே சமயம் சிறு கவலையோடும் அவன் பார்க்க,

     “ம் கண்ணு வைக்காதீங்க!” என்றவள், கையைக் கழுவிவிட்டு, அவனைத் தூக்கிக் கொண்டு போய் நீச்சல் குளத்தில் விடுமாறு சொல்ல, அவளை மென்மையாய் தூக்கிச் சென்று அதில் இறக்கிவிட்டவன்,

     “என்ஜாய் யுவர் டே பேபி!” என்று சிரிக்க, குளத்தில் இருந்த நீரை அள்ளி அள்ளி இறைத்து அவள் விளையாடத் துவங்க, அந்த சந்தோஷத்தின் அழகைக் கண்கொட்டாமல் ரசித்திருந்தான் அவளின் ரசிகன்.

     அவள் அணிந்திருந்த வெள்ளை நிற சல்வாரில் அவளின் நனைந்த அழகு அப்பட்டமாய்த் தெரிய, வைத்த கண் வாங்காமல் ரசித்திருந்த மித்ரனுக்கு, மையுவைப் பார்க்கப் பார்க்க, குளத்தில் மிதந்து கொண்டிருந்த தாமரைப் பூக்களுக்குப் போட்டியாய் வெண்ணிலவு விண்ணிலிருந்து இறங்கி வந்து விளையாடுகிறதோ என்பது போல் எண்ணம் தோன்ற அவன் உதட்டின் புன்னகை விரிந்தது.

     தன்னையே வைத்த வாங்காது ரசித்திருந்த கணவனை, அப்போதே கொஞ்சம் விளையாட்டு தவிர்த்து அவள் திரும்பிப் பார்க்க, அவன் முகத்தின் சிரிப்பும், ரசனையும் கண்டு அவள் நாணித் தலை கவிழ்ந்து நிமிர்ந்து தன் கண்களால் தலைவனுக்கு அழைப்பு விடுக்க, அதற்கு மேல் பொறுமையைக் கடைபிடிக்க முடியாதவனாய் அவளை நெருங்கியவன், தானும் குளத்தில் இறங்கி அவளை இறுகத் தழுவி அவள் இதழ்களை மெல்லக் களவாட, அவளும் அவனுக்குச் சளைக்காதவாளாய் காதல் யுத்தத்தைத் துவங்கி வைத்தாள்.

    தண்ணீரின் சில்லிப்பில் உடல் குளிரெடுக்க, காதல் கரை கடந்து தம்பதியருக்குள் மோகம் தலை தூக்க, அதன் தாக்கம் தாங்காத சங்கமித்ரன், மனைவியைக் கையோடு தூக்கிக் கொண்டு மொட்டை மாடியில் இருந்த அந்த ஒற்றை அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு, அவளை அங்கே இருந்த கட்டிலில் இட்டு அவள் உடைகளைக் களைய, கிறக்கத்துடன் அவனின் ஆசைக்கு இணங்கியவள், அவனை ஆரத் தழுவ, ஈரத்தின் குளிர்ச்சி நீங்கி வெப்பம் தகிக்க இரு உடல்களும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்து அவளை மனதாலும் மோகத்தாலும் மயக்கிக் கொண்டிருந்தான் அவளின் சங்கமித்ரன் இதுவே அவன் மனைவி அவனுக்கு ஆசை ஆசையாய் இணங்கும் கடைசிச் சங்கமம் என்று உணராமல்…

                             -மான்விழி மயக்குவாள்…

   

   

 

 

    

     

               

 

 

 

 

 

 

 

Advertisement