Advertisement

                              36

     சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.

     கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான் என்பது தெரியவில்லை. வண்டி நின்றதும்,

     “மானும்மா!” என்று அவன் குரல் கொடுக்க,

     “அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று கேட்ட மையு மருத்துவமனையின் அருகே வண்டி நிற்பதைக் கண்டு,

     “எ எதுக்குங்க ஹாஸ்பிட்டலுக்கு?! ரெண்டு முறை  வாந்தி எடுத்ததுக்காகவா?! இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க!” என்றவளுக்கு அப்போதே லேசாய்ப் பொறி தட்ட, தான் இந்த மாதம் மாதவிடாய் ஆகாதது நினைவுக்கு வர, சட்டென முகம் பிரகாசமாகி,

      “ஐ!! ந நமக்குப் பாப்பா வரப் போகுந்துங்க!” என்று காரிலேயே உற்சாகமாய்க் கத்தியவள், சட்டென கணவனை இழுத்து முத்தம் பதிக்க, மித்ரனுக்கும் அவளின் மகிழ்ச்சி கண்டு அளவில்லா சந்தோஷம் எழுந்தது. இதுவரை மனதுள் இருந்த கலக்கத்தை நொடியில் தூக்கிப் போட்டுவிட்டு, மனைவியின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,

     “அதான் மானும்மா கன்பார்ம் பண்ணிக்கலாம்னு தான் கூட்டிட்டு வந்தேன்!” என்றவன், அவளைக் கீழே இறக்கிவிட்டு நடப்பதற்குக் கைகொடுக்க,

    “ம்ஹும்!” என்று அவள் தூக்கிக் கொள் என்பது போல் கைகொடுக்க,

     “ம்!” என்று சிரித்தபடி அவளைக் கையில் ஏந்தியவன், உள்ளே சென்று அவளை வெயிட்டிங் ஹாலில் அமர வைத்துவிட்டு, ரிசப்ஷனில் சென்று தனது பெயரைக் கூறி மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று கூற, இரண்டே நிமிடத்தில் அவர்களை உள்ளே வரச் சொன்னாள் அவனின் தோழி ரோசி.

     மித்ரன் மையுவைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருவதைப் பார்த்ததும்,

     “ஹே மேன்! என்ன இது? வொய்ஃபைக் கையிலேயே தூக்கிட்டுச் சுத்துற?! கீழ இறக்கு மேன். அவளை யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டோம்!” என்று சிரித்தபடியே அவர்களை வரவேற்று அமரச் சொல்ல, மனைவியை அமர வைத்துவிட்டுத் தானும் அவள் அருகே அமர்ந்தபடி,

     “என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டு வந்தா உனக்கு ஏன் பொறாமை ரோஸ்?! இன்னும் என்மேல இருக்க லவ் போகலையா?!” என்றான் பள்ளிப் பருவத்தில் அவள் தன்மேல் கொண்ட தீராக் காதலை நினைவு கூர்ந்து!

     “அதை ஏன் மேன் நியாபகப் படுத்துற?! அப்புறம் உன்மேல கோபம் வந்துடும்! ஆனா உன்மேல இருக்க லவ் எப்போவுமே போகாது மேன்! பட் னோ ஜெலஸ் அட் ஆல்! ஐ ஜஸ்ட் ஃபெல்ட் ஷி இஸ் சோ லக்கி! தட்ஸ் இட்!” என்றுவிட்டு,

     “கல்யாணத்தைக் கூட எங்ககிட்ட மறைச்சிட்ட இல்லை?!” என்று உரிமையுடன் கோபம் கொள்ள,

     “எங்க சண்டைக்கு வந்துடுவியோன்னு தான்!” என்று சிரித்தவனை மையு வெட்டவா குத்தவா எனப் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனியாது,

    “ஷி இஸ் மைத்ரேயி. மை லவ்வபிள் சோல்!” என்று அவளுக்கு அறிமுகப் படுத்த,

     “இருந்தாலும் ரொம்ப வெறுப்பேத்துற மேன் நீ?!” என்று திட்டியவள்,

     “ஹாய் மைத்ரேயி! ஹவ் ஆர் யூ?!” என்று ரோசி அன்புடன் கேட்க,

     ‘இங்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான்டி இருந்தேன் வெள்ளப் பன்னி!’ என்று மனதிற்குள் அந்தப் பெண்ணை வறுத்தெடுத்தவள்,

     “ஹெலோ ஆர் யூ ஹியர்!” என்றதும்,

     ‘ம் இருக்கேன் இருக்கேன்! நீங்க பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு இன்னும் கல்லாட்டாம்தான்!’ என்று எண்ணியவள்,

     “ஹெலோ! ஏதோ இருக்கேன்” என்று சிரித்து வைக்க, அப்போதே மையுவின் முகத்தைப் பார்த்தவன், அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது கண்டு,

     ‘அடடா! என் அருமைப் பொண்டாட்டியை வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசிட்டேனே! இதுதான் வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிகிறதோ?!’ என்று தன் தவறை செய்த பிறகே உணர்ந்தவன்,

     ‘விட்ரா விட்ரா பார்த்துக்கலாம்!’ என்று சமாளித்துக் கொண்டு,

     “ரோஸ் ஐ திங்க் ஷி இஸ் ப்ரெக்னன்ட்!” என்று முடிப்பதற்குள்,

     “ஓ! வாவ்! லெட்ஸ் கன்பார்ம் இட்!” என்று புன்னகையுடன் சொன்ன ரோசி, சில நிமிடங்களில் டெஸ்ட் செய்துவிட்டு மையு கருவுற்றிருப்பதை உறுதிப் படுத்த, இருவருக்குமே அளவில்லா சந்தோஷம். இதற்காகத்தானே அவர்கள் வீட்டினர் அத்தனை  பயந்தது. எங்கே தங்கள் பிள்ளைக்கு வாரிசு என்று இல்லாமல் போய்விடுமோ என்று! இப்போது விஷயம் தெரிந்தால் என்று இருவர் மனதிலுமே மலர் எவ்வளவு சந்தோஷம் கொள்வார் என்றே எண்ணமே உதிக்க இருவரும் ஒருவரை ஒருவர் எல்லைக் கடந்த சந்தோஷத்துடனும், காதலுடனும் பார்த்துக் கொண்டனர்.

     “ஏ மேன்! இன்னும் எவ்ளோ நேரம் ரெண்டு பேரும் பாத்துட்டே இருப்பீங்க! ஜஸ்ட் கோ அண்ட் செலேப்ரெட் தி வண்டர்புஃல் மொமென்ட்!” என்று ரோசி சொல்ல,

     “தேங்க் யூ தேங்க் யூ வெரி மச் ரோஸ்!” என்றவன், மனைவி வாந்தி எடுத்ததையும் கூறி அதற்கான மாத்திரைகளையும் எழுதிப் பெற்றுக் கொண்டு அவளிடம் விடைபெற்றுக் கிளம்ப, மையு சந்தோஷத்தில் ரோசி மேல் இருந்த கடுப்பை ஓரம் தள்ளிவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினாள்.

     காரின் உள்ளே சென்று அமர்ந்ததும் மித்ரனை  அருகே இழுத்து தன் அன்பு முத்தங்களை அள்ளி வழங்கியவள்,

     “தேங்க் யூ தேங்க் யூ வெரி மச் டா தீரா!” என்று அவனை இறுகக் கட்டிக் கொள்ள, சில நொடிகளில் அவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

     “ஏய்! என்ன?! என்ன மானும்மா இது? இவ்ளோ சந்தோஷமான நேரத்துல இப்படியா அழறது?!” என்று மனைவியின் முகம் நிமிர்த்தி அவள் கண்களைத் துடைக்க,

     “ம்! ம்! எ எனக்கு என்ன என்ன பேசுறதுன்னே தெரியலைங்க! நான் நான் அம்மாவாகிட்டேன்! நான் எ  எனக்குள்ள இருந்து ஒரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரப் போறேன்! இந்த வயித்துக்குள்ளயும் என் செல்லப் பாப்பா வந்துடுச்சு!” என்று அவள் அதிக உணர்ச்சிவயப்பட, அவன் மனதுள் சற்று நேரத்திற்கு முன் இருந்த சந்தோஷம் போய் பதட்டம் குடியேறியது.

     ஆனாலும் மனைவியிடம் எதையும் வெளிகாட்டாமல், “ஏன்?! என் மானும்மாவுக்கு என்ன?! அவளால இன்னும் நிறையக் குழந்தைகளை எனக்குப் பெத்துக் கொடுக்க முடியும்” என்று அவன் மனைவியின் நெற்றியில் இடித்து மூக்கோடு மூக்கை உரசி முத்தமிட,

      “ம்! அப்படியா சொல்றீங்க?! அப்போ நாம எத்தனை பாப்பாங்க பெத்துக்கலாம்?!” என,

     “ம் என் மானு குட்டிக்கு எத்தனை பாப்பா வேணுமோ அத்தனை பாப்பாங்க!” என்றவனிடம்,

     “அப்போ ஒரு நாலு குழந்தைங்க! முதல்ல ஒரு பொண்ணு பாப்பா, ரெண்டாவது பையன், அப்புறம் பையன், நாலாவது பொண்ணு!” என்று அவள் பட்டியல் வாசிக்க,

     “என் மானும்மா க்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே!” என்றவன், மீண்டும் மனைவியைத் தோளோடு சேர்த்து சாய்த்துக் கொண்டு முத்தமிட்டுவிட்டு வண்டியை எடுக்க,

    “என்னங்க நிறைய ஸ்வீட்ஸ் வாங்கிட்டுப் போகணும்ங்க வீட்டுக்கு. அத்தை அத்தை ரொம்ப சந்தோஷப் படுவாங்கல்ல! நான் நினைச்ச மாதிரியே இந்த வீட்டுக்கு சீக்கிரமே சந்தோஷத்தை கொடுத்துட்டேன் பார்த்தீங்களா! இனி அத்தை என்கிட்டே இன்னும் பாசமா இருப்பாங்க இல்லை!” என,

     “எப்போவும் அம்மாவுக்கு உன்மேலே பாசம்தான்டா.” என்றான் தாயையும் விட்டுக் கொடுக்காமல்.

     “பாசம் இருக்குங்க! ஆனா என்மேல வருத்தமும் இருக்கு அவங்களுக்குன்னு எனக்குத் தெரியும்! நான் உங்க வாழ்க்கையில வந்தது அவங்களுக்கு இஷ்டமில்லைன்னும் எனக்குத் தெரியும்! அது எதனாலன்னும் எனக்குத் தெரியும்!” என்று வருத்தமாய்ச் சொன்னவள், சட்டென சோகம் மறந்து சிரிப்பை ஏந்தி,

     “ஆனா ஒரு அம்மாவா அவங்க யோசிச்சதுல எந்தத் தப்பும் இல்லைங்க! எல்லோரும் அவங்க பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பாங்கதானே. அதானே அத்தையும் நினைச்சாங்க!” என்றவள்,

     “ஆனா இப்போ, இப்போ அவங்க சந்தோஷப் படுவாங்கல்ல! அவங்களுக்கு ஒரு குட்டி மித்ரனையும், மானுவையும் கையில கொடுத்துட்டா அவங்க மனக் கஷ்டமெல்லாம் பறந்து போயிடுமல்ல!” என்று அவள் ஆசையோடும் ஆர்வமோடும் கேட்க,

     “இப்போவும் அவங்க சந்தோஷமா தான்டா இருங்காங்க. நாம சந்தோஷமா வாழுறதைப் பார்த்து. விஷயம் தெரிஞ்சா இன்னும் ரொம்ப சந்தோஷப் படுவாங்க!” என்றவன், காரில் இருந்த அந்த சிடி ப்ளேயரை ஆன் செய்துவிட்டு ஒரு கையால் மனைவியின் தலையை வருடியபடியே வண்டியை ட்ரைவ் செய்ய,

     “மலர் போல சிரிக்கின்ற பிள்ளை

     கண்டு மகிழாத உயிரோன்றும் இல்லை!

     மடி மீது தவழ்கின்ற முல்லை,

     மழலைச் சொல் இன்பத்தின் எல்லை…

     பூப்போல பூப்போல பிறக்கும்

     பால்போல பால்போல சிரிக்கும்

     மான்போல மான்போல துள்ளும்

     தேன்போல தேன்போல இனிக்கும்…

     உள்ளாடும் உயிரொன்று கண்டேன்,

     அவன் உருவத்தை நான் என்று காண்பேன்?

     தள்ளாடி தள்ளாடி வருவான்,

     தணியாத இன்பத்தைத் தருவான்… (பூப்போல)

என்ற அழகான கானம் அவர்களின் மனதிற்கு ஏற்றாற்போல் ஒலிக்க, மையுவும் அவனோடு சேர்ந்துப் பாடலை ரசித்தபடியே சந்தோஷ மிகுதியில் கணவனின் தோள் சாய்ந்தபடி ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் உற்சாகமாய்.

                        *******

     தான் செய்தது தவறு என்று உணர்ந்து சில நாட்களாய் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்த ப்ரேம், அவன் தன் திருமணத்திற்குப் பின் இஎம்ஐ யில் வாங்கிப் போட்டிருந்த பொருட்களுக்கு கடந்த சில மாதங்களாய் பணம் செலுத்தாததால், கடையின் உரிமையாளர் வேலை செய்யும் பையனை வீட்டுக்கே அனுப்பிவிட,

     “ப்ரியா இந்த மாசச் சம்பளத்தையாவது குடு ப்ரியா! உனக்காகத்தான் வீட்ல வாசிங்மேஷின், ஏசி, கட்டில், சோபான்னு கண்டதையும் வாங்கிப் போட்டுட்டு இஎம்ஐ கட்ட முடியாம திண்டாட்டு இருக்கேன்! நீ என்னன்னா உன் பாட்டுக்கு வேலைக்குப் போற வர, பத்து பைசா வீட்டுக்குன்னு கொடுக்கறதில்லை!” என்று பிரேம் இத்தனை நாட்களாய் இருந்த பொறுமையைக் காற்றில் பறக்கவிட்டு, அவளிடம் கத்திக் கொண்டிருக்க, அவள் எப்போதும் போல் இப்போதும் பேசாமடந்தையாகவே தங்கள் அறையில் இருந்த புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

     “ப்ரியா நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துகிட்டு இருக்க?! என்னைப் பார்த்த என்ன பையித்திக்காரன் மாதிரி தெரியுதா உனக்கு?!” என்று ப்ரேம் மேலும் கத்த, அவள் அப்போதும் அமைதி காக்க,

     “சீ! என்னதான்டி நினைச்சுட்டு இருக்க உன்மனசுல?! அப்படி என்ன தப்பு செய்துட்டேன் நான்?! உன் மேல ஆசைப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேனே அதுவா?!” என, அவனைக் கேவலமாய் ஒருபார்வை பார்த்தவள், அப்போதும் பதில் பேசாமல் வேலையில் மூழ்க,

     “திஸ் இஸ் டூ மச் ப்ரியா?!” என்றான் ப்ரேம் ஆதங்கத்துடன்.

     “ம்!” என்று அவள் லேசாய்ச் சிரிக்க,

     “என்னடி என்னைப் பார்த்தா சிரிப்பு வருதா உனக்கு?! அவ்ளோ வசதி படைச்ச வீட்ல பொறந்தும், பத்து பைசாக்கு வக்கில்லாம நான் கூப்பிட்டதும் என் கூட வந்தியே? அப்போவும் உன்னை ஏத்துகிட்டேன்ல என்னை என்னைச் செருப்பால அடிக்கணும்?!” என்று ப்ரேம் தன் தலையிலேயே அடித்துக் கொள்ள,

     இத்தனை நாள் அவள் பேசாமல் இருந்ததில் அவன் கொஞ்சமாவது திருந்தி இருப்பான் என்று எண்ணிக் கொண்டிருந்த ப்ரியாவிற்கோ அவனின் இந்தப் பேச்சு, அவன்மேல் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் மொத்தமாய்ச் சிதைத்து விட, அவனை அருவருப்பாய் பார்த்தவள்,

     “என்ன சொன்ன? பத்து பைசாக்கு வக்கில்லாம நீ கூப்பிட்டதும் ஓடி வந்தேன்ன?!” என்று வெறுப்புடன் கேட்டவள்,

     “நீ பேசின பேச்ச உண்மைன்னு நம்பி, உன் கண்கள்ல தெரிஞ்ச காதலை உண்மைன்னு நம்பி, உன்னோட வந்தேன் பாரு. நீ இதுவும் பேசுவ! இதுக்கு மேலயும் பேசுவடா!”

     “என்னிக்கு நீ என் கல்யாணத்தை நிறுத்தி என்னை உன்பக்கம் இழுக்க என் உயிரைக் கூட பொருட்படுத்தாம, என்னை படிக்கட்டுல தள்ளிவிட்டேன்னு தெரிஞ்சிதோ, அன்னிக்கே அன்னிக்கே என் மனசு விட்டுப் போச்சுடா! அந்த, அந்த நிமிஷமே நீ பண்ண வேலையை எல்லோர் முன்னாடியும் சொல்லி உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டு என்னால வாழ்ந்திருக்க முடியும்! ஆனா, ஆனா என் அம்மா, என் அம்மா உடைஞ்சு போயிடுவாங்கன்னுதான்  நான் இத்தனை நாளா, பொறுமையா இருக்கேன். அதோட உனக்கும் கொஞ்ச நஞ்சமாச்சும் புத்தி வருமான்னு பார்த்தேன். ஆனா, ஆனா நீயெல்லாம் திருந்தவே திருந்தாத ஜென்மம்னு இப்போ புரிஞ்சிடுச்சு. ஆனா நீ கவலைப் படாத! நான் உன்னை விட்டுட்டு என் அம்மா வீட்டுக்கு எல்லாம் போயிட மாட்டேன்! அப்படிப் போயிட்டா நீ என்னைவிட பணக்காரியா ஒருத்தியைச் தேடித் பிடிச்சு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டா?!” என்றவள்,

     “இந்த ஜென்மத்துல நான்தான் உனக்குப் பொண்டாட்டி! கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்னைக் காதலிச்சேன்னு சொன்ன மாதிரி, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உனக்கு பொண்டாட்டி மாதிரி மத்தவங்களுக்குத் தெரிவேன். ஆனா உனக்கு? உனக்கு நான் யாரு?! அதே ப்ரியா மேடம் மட்டும்தான். இனி என்னை பேர் சொல்லிக் கூட நீ கூப்பிடக் கூடாது! இனி உனக்கும் என் குழந்தைக்கும் கூட எந்த சம்மந்தமும் கிடையாது! ஒருவேளை நீ என்னை வீட்டை விட்டு அனுப்பலாம்னு நினைச்சன்னா நான் சத்தமே இல்லாம என் தம்பி மித்ரன் கிட்ட மட்டும் நீ செஞ்ச வில்லத்தனத்தை சொல்லி உன் எலும்பை எல்லாம் சத்தமில்லாம முறிக்க வச்சிடுவேன். அப்புறம் உன் பிசியோ தெரபிஸ்ட் வேலையெல்லாம் உன் எலும்புக்கிட்டயே எடுபடாது!” என்று படு மிரட்டலாய்ச் சொல்லிவிட்டு அவள் மீண்டும் புத்தகங்களை அடுக்கத் துவங்க,

     ‘அடிப்பாவி இவளைப் போய் பிள்ளைப்பூச்சி ரேஞ்சுக்கு நினைச்சிட்டோமே?! இவ என்னன்னா சொர்ணாக்கா மாதிரி மிரட்டுற?!’ என்று எண்ணியபடி சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமர்ந்துவிட்டான் பிரேம்.

     ‘அவ பிள்ளை பூச்சியாத்தான்டா இருந்தா, நீதான் பேசி பேசியே அவளை சொர்ணாக்காவா மாத்திட்ட!’ என்று மூளை வேறு அவனுக்கு கவுண்டர் கொடுத்து உசுப்பேற்ற,

     ‘அடச்சீ! நீ வேற தூரமா போ!’ என்றுவிட்டு பேயறைந்ததைப் போல் அவன் அங்கிருந்து எழுந்து செல்ல, ப்ரியாவின் கண்ணோரம் மெல்லிய கண்ணீர்த் துளி.

                          ******

     அண்ணன் பிள்ளைகள் வீட்டின் கூடத்தில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி, அண்ணி, கை நிறைய இனிப்புப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டும், அண்ணன் அண்ணியைத் தூக்கிக் கொண்டும் சிரித்த முகத்தோடு உற்சாகமாய் உள்ளே வருவதைப் பார்த்து,

     “என்ன அண்ணா, ரெண்டு பேரும் செம குஷியா இருக்கீங்க?!” என்று எழுந்து அவர்கள் அருகே வர,

     “ம் ம் குஷிதான்!” என்று மையு சொல்ல,

     “ம்மா! ம்மா!” என்று அவன் உற்சாகமாய்க் குரல் கொடுக்க, தங்கமலர் என்னவோ ஏதோவென்று வேகமாய் தங்கள் அறையில் இருந்து வெளியே வர, மகன் மருமகளின் உற்சாகத்தைக் கண்டதும் அந்த அன்புத் தாய்க்குப் புரிந்து போயிற்று.

     “ம்மா! உங்க மருமக உங்களுக்கு இன்னொரு பேரனை கொடுக்கப் போறா?!” என்று ஆனந்தமாய்ச் சொல்ல, தங்கமலரின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியே விட்டது.

     “ம மையும்மா!” என்று அவர் முதன்முதலாய் அவளிடம் நேரடியாகப் பேசி கண்களால் வினா எழுப்ப,

    “அ ஆமா அத்தை!” என்றவளுக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

     அப்போதே மருத்தவமனையில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ணன், ராஜசேகர் இருவரும் இதைக் கேட்க நேர, அவர்களுக்கும் அளவில்லா சந்தோஷம் எழுந்தது.

    சோபாவில் அமர்ந்திருந்த மையுவின் அருகே சென்று அவளைக் கட்டிக் கொண்ட மலர், அவளை ஆராயத் தழுவி,

     “என்னை என்னை மன்னிச்சிடு மையும்மா!” என்று கண்ணீர் சிந்த,

     “என்ன என்ன அத்தை இது?!” என்று அவர் கண்களைத் துடைத்தவளுக்கு, முன்பெல்லாம் தன் அம்மா, அவளைத் திருமணத்திற்கு உதவாதவள் என்று குத்திப் பேசி, சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் சொன்னது நினைவிற்கு வர, மலர் தன் மருமகள் நிலை பற்றித் தெரிந்தும் தன்னை ஒருநாளும் காயப்படுத்தாது இதுவரை இருந்தும் தன்னிடம் மன்னிப்பு வேண்டி நிற்பதும் எண்ணி அவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து போக,

     “ம்மா! நா நான் இனி உங்களை அப்படிக் கூப்பிடவா?!” என்றாள் கண்ணீர் பெருக…

                             -மான்விழி மயக்குவாள்…     

       

    

    

     

 

         

     

    

      

Advertisement