எல்லோரும் ரோஷ்ணியை கவனிப்பதில் பிஸி ஆக இருந்தனர்.ஆனால் ரோஹிணி,கார்த்திக்,அர்ஜுன் மூவரும் இவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு இருந்தனர்..அவள் மனதிற்குள் எப்படி புழுங்குகிறாள் என்று புரிந்தது.

 

பேபி ஐ தூக்கி கொண்டு மேலே ரூமிற்கு சென்று விட்டாள்.

 

பேபி ஐ கார்ட்டூன் பார்க்க வைத்து விட்டு இவள் இந்த பக்கம் திரும்பி  சத்தம் வராமல் அழுதாள்

 

அவள் மேலே வருவதை பார்த்து அர்ஜுன் மேலே வந்தவன் பார்த்தது அவளின் அழும் முகத்தை தான் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவளின் கீழே மண்டியிட்டு அமர்ந்து இப்ப சொல்லு என்றான் ..

 

அவனை பார்த்ததும் அழுவதை நிறுத்தி விட்டு முறைக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அப்பொழுதும் அவனிடம் பேச வில்லை .கீழே இருந்து சாப்பிட கூப்பிட்டதும் முகத்தை கழுவி கொண்டு கீழே சென்று விட்டாள்.

 

எல்லோரும் சாப்பிட அமர்ந்ததும் பேபி யும் டைனிங் டேபிள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது.

 

தோசை பிடிக்கும் என்பதால் ஷ்ரத்தா பிட்டு வாய்க்கு கொண்டு செல்லும் வரை வாங்க வரும் அப்புறம் ஊவ்வே என்றது ..

 

என்ன பேபி உனக்கு தான் தோசை பிடிக்கும் அப்புறம் என்ன என்று கேட்டாள் 

 

மம்ம தோசை பிதிக்கும் ஆதா இது ஊவ்வே என்றது.

 

தோசை எல்லாம் நன்றாக தான் இருந்தது ..சரி மாவு புளித்து விட்டதோ என்று டெஸ்ட் செய்ய மூக்கின் அருகில் கொண்டு செல்லும் பொழுது தான் கண்டு பிடித்தால் இது வேறு ஆயில் என்று.

 

இவர்கள் என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று மாதங்கி என்னமா என்றார் ..

 

சுத்தமான தேங்காய் எண்ணெய் இருக்கா ?பாட்டில் ஹேர் ஆயில் இல்லை ..தேங்காய் வைத்து ஆட்டியது என்றாள்.

 

இருக்கு என்று வேலை ஆட்களிடம் கொண்டு வர சொன்னார்.

 

அவர்கள் வந்த கொடுத்ததும் அதை கையில் தடவி கொண்டு பேபி க்கு ஊட்டினாள்..இப்பொழுது சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

 

இவர்கள் செய்வதை அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர்.

 

அதுக்கு விளக்கம் கொடுக்கும் பொருட்டு “அங்க வீட்டில் தேங்காய் எண்ணெய் தான் குக் பண்ணுவோம் இவ அதையே சாப்பிட்டதால் இந்த ஆயில் வாசனை பிடிக்கலை” என்றாள்.

 

கேட்கணும் நினைத்தேன் நீ எப்படி கண்டுபிடிச்ச ரோஷ்ணி பிரேக்னேட் இருக்க சான்ஸ் இருக்கும்னு என்று விக்ரம் கேட்டான்.

 

அது பெரிய விஷயம் இல்லை அவங்க ஸ்மைல் சொண்ணுச்சு என்று சும்மா விளையாட்டாக சொன்னாள்.

 

“நான் அந்த டைமில்   ஹாஸ்பிடல் போவேன் ல அங்க நிறைய பேரின் முகம் இப்படி தான் தேஜஸ் ஆ இருக்கும்” என்றாள்.

 

அவளுக்கு என்னவோ தோன்றியது ரோஷ்ணியை செக் செய்ய சொன்னாள் .ஆனால் இது எல்லாம். சும்மா விக்ரமை ரோஷ்ணியிடம் திட்டு வாங்க வைப்பதற்காக விளையாட்டுக்கு சொன்னாள்.

 

“பாரு உன் தங்கச்சி எவ்வளவு அறிவாளி நீயும் தான் டாக்டர் சொல்லிட்டு இருக்க ஒன்றுக்கும் யூஸ் இல்லை என்று விக்ரமை ரோஷ்ணி கிண்டல் செய்தாள்.

உன் தங்கச்சி பிரக்னெண்ட் அப்போ நீ வீட்டில் தானே இருந்த ஆனால் உன்னால் கண்டு பிடிக்க முடிந்ததா”  என்று வேறு  கேட்டாள்.

 

என் தங்கச்சி கன்ஸீவ் ஆகி முதல் 5 மாசம் சிரிக்கவே இல்லை இதில் எங்க இருந்து நான் கண்டுபிடிக்க என்று சாதாரணமாக தான் சொன்னான்.

 

ஆனால் சொல்லி முடித்த பிறகு தான் வார்த்தையின் கணம் அவனுக்கு உறைத்தது.. வேகமாக அர்ஜுன் முகம் பார்த்தான்.

 

அவன் மட்டும் இல்லை அனைவருமே அர்ஜுன் முகத்தை பார்த்தனர்.

 

அர்ஜுன் நிமிராமல் தட்டை தடவி கொண்டு இருந்தான். கனமான நிமிடங்கள் அர்ஜுன் க்கு ..அவன் இனிமேல் ஷ்ரத்தா வை எவ்வளவு வேண்டும் என்றாலும் பார்த்து கொள்ளலாம் ..ஆனால் அந்த நேரத்தில் அவள் அடைந்த வலிக்கு இவன் மட்டும் தானே பொறுப்பு .

 

“மாதங்கி க்கு மிகவும் வருத்தம் ஆகி விட்டது இன்னும் தன் மகன் என்ன என்ன வார்த்தைகள் எல்லாம் தாங்க வேண்டி வருமோ” என்று மனதிற்குள் நினைத்தார்.

 

ஷ்ரத்தா எந்த ரியாக்ஷன் கொடுக்காமல் பேபி க்கு தோசை ஊட்டி கொண்டு இருந்தாள்.

 

அர்ஜுன் சாப்பிடாமல் இருப்பது பார்த்து பேபி தோசை பிட்டு ” அஜ்ஜூண் ஆ காத்து” என்று அவன் வாயின் அருகில் கொண்டு சென்றாள்.

 

அர்ஜுன் எதுவும் சொல்லாமல் வாங்கி அவளின் தலையை தடவி கொடுத்தான்.

 

பேபி யும் நேரம் காலம் தெரியாமல் “மம்மா கூதம் சாப்பிடாமல் இப்பதி தான் இதுப்பாங்க நான் தான் ஊத்தி விதுவென்” என்றது ..

 

அர்ஜுன் எழுந்தே விட்டான்.அவன் செய்த பாவம் அவனை துரத்துவது போல் ஒரு உணர்வு வந்து விட்டது. 

 

ஷ்ரத்தா க்கு அய்யோ என்று ஆனது …ஒருவர் செய்த தவறின் பெயரில் அவரை குத்தி காட்டி கொண்டே இருப்பது தவறு என்று நினைப்பவள் அவள் …ஆனால் அவளை வைத்து இங்க ஒருவன் கஷ்டபடுகிறான்..

 

அர்ஜுன் எழுந்ததும்” உட்கார்ந்து சாப்பிடு அர்ஜுன் …இன்னும் நிறைய இந்த மாதிரி நீ கேட்க வேண்டிய சூழ்நிலை வரும் எல்லாவற்றிற்கும் எழுந்து போய்டுவியா” என்று ஷ்ரத்தா தான் பேசினாள்.

 

அங்கிருந்த அனைவரும் ஆ வென பார்த்தனர் ..பாருடா இவள் அவனுக்கு சிபாரிசு என்று . அர்ஜுன் உட்கார்ந்து விட்டான்.ரொம்ப வருடங்கள் கழித்து அவள் அவனுக்காக பேசுகிறாள்.

 

உட்கார்ந்த அர்ஜுன் “நீங்க கண்டினீயு பண்ணுங்க மாமா” என்று விக்ரமை பார்த்து சொன்னான்.

 

விக்ரமுக்கு எதை பற்றி சொல்ல சொல்கிறான் என்று சந்தேகம் வந்து விட்டது .

 

அதான் “ஷ்ரத்தா வின் பிரக்னெண்ட்  நாட்கள் பத்தி சொல்லுங்க “என்றான் .

 

“அது எதுக்கு இப்போ” என்றான்

 

“சொல்லுங்க மாமா ..எப்படியும் அது எனக்கு தெரியணும்” என்றான்.

 

அவளுக்கு  பிரக்னெண்ட் தெரிந்ததே 3 வது மாதம் தான்..எங்க கிட்ட சொன்னாள்…நான் தான் அடித்தேன் .. நோ வே இந்த பேபி வேணாம்னு சண்டை போட்டேன்.

 

அவள் முடியவே முடியாது எனக்கு வேணும் சொல்லி அழுதுட்டே இருப்பாள்..ஒரு டாக்டர் ஆக எனக்கும் ஒரு உயிரை கொள்ள மனசு வரவில்லை..

 

ஆனால் இந்த பேபி யால் என் சிஸ்டர் அவளோட கனவு எல்லாவற்றையும் தொலைத்து விடுவாள் சொல்லி ரொம்ப வருத்தமா இருந்தது.

 

சின்ன வயதில் இருந்து பார்த்த ஷ்ரத்தா எல்லாம் போய் எப்பவும் அமைதியாகவே இருப்பா..அந்த பையன் யாரு என்னன்னு ரொம்ப கேட்டேன்..ஒரு தடவை கூட பதில் சொல்லலை.

 

என்ன கேட்டாலும் ஒரே பதில் தான் வரும் ” யாராச்சும் வந்தால் நான் எங்கேயாவது போயிடுவேன் ” இதே தான் சொல்வாள்.

 

ஒரு கட்டத்தில் எதுவும் கேட்காமல் விட்டுட்டு அவளோட ஹெல்த் பற்றி யோசிக்க ஆரம்பிச்சோம்.

 

ரொம்ப வெயிட் லாஸ் ஆகி இருந்தது..அப்பறம் மெண்டலி ரொம்ப வீக் ஆக இருந்தாள்.

 

 

முதல்  5 மாதம் சிரிக்க கூட மாட்டாள் அப்புறம் செக் அப் போணா அவளை ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட் கிட்ட காட்ட சொல்லிட்டாங்க .

 

நீங்களே சொல்லுங்க எங்களுக்கு அப்ப எப்படி இருக்கும்னு….எங்க வீட்டு பொண்ணு என்ன பைத்தியமா..

 

உண்மையாவே அப்பலாம் தோணும் இதுக்கு காரணம் யாருன்னு கண்டுபிடிச்சு அவனை அடிகணும்னு..ஆனால் இவள் தான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள்.

 

அப்புறம் ஹாஸ்பிடல் போய் கவுன்சிலின் கொடுக்க கொடுக்க கொஞ்சம் நல்லா பேச ஆரம்பித்தாள்….அதுக்கு அப்புறம் எல்லாமே பேபி பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

டெலிவரி க்கு அவ்வளவு வலி அவ்வளவு பயம் ஆனால் வெளியே எதுவுமே காட்டிக்கொள்ள வில்லை .

 

ஆனா உங்க ப்ரெண்ட் வர்ஷினி கிட்ட சொல்லி இருக்கா…..ஒரு வேளை எனக்கு எதாவது ஆகி விட்டால் குழந்தையை அர்ஜுன் கிட்ட கொடு என்று சொல்லி விட்டாள் அப்படி அர்ஜுன் இந்த குழந்தையை வாங்கிக்க வில்லை என்றால் ஊட்டியில் ரகு அண்ணா கிட்ட கொடு என்று சொல்லி விட்டாள்.என்று விக்ரம் கதை சொல்லி முடித்து விட்டான் ..

 

 

அப்படி ஒரு அமைதி கேட்ட அனைவருக்கும் கண்ணில் நீர் வந்து விட்டது..

 

அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

 

ஷ்ரத்தா,பெரியம்மா ,மாதங்கி மூவரும் அமர்ந்து இருந்தனர் . 

 

“எனக்கும் பேபி க்கும் டிரஸ் வேணும் ஷாப்பிங் போய்ட்டு வரலாமா அத்தை” என்றாள்.

 

ரோஷ்ணி செக் அப் காக பெரியம்மா வுடன் செல்வதாக இருந்தது.

 

ஆனால் மாதங்கி வீட்டில் இருக்க வேண்டும் ரோஹிணி க்கு கஷ்டம் வெளியே சென்றாள்.

 

அதை சொன்னதும் புரிந்து கொண்டாள் ஆமாம்ல நான் மறந்துட்டேன்..

 

“ஒன்னும் பிரச்சனை இல்லை நானும் பேபியும் போய்ட்டு வரோம் “என்றதும் பெரியம்மா அர்ஜுன் கூட்டிட்டு போ என்றார்.

 

மா..எனக்கு தெரியாத சென்னையா நான் போய்ட்டு பத்திரமாக வந்து விடுவேன் என்றாள் .

 

“எனக்கும் தெரியும் பாப்பா ஆனா அர்ஜுன் கூட தான் போகனும்” என்று அழுத்தமாக சொல்லி விட்டார்.

 

“சரி” என்று சொல்லி விட்டு மேலே ரூமிற்குள் சென்றாள்.

 

அர்ஜுன், அரு இருவரும் டிவி பார்த்து கொண்டு இருந்தனர் .

 

“ஷாப்பிங் போகனும் “என்று மொட்டையாக சொன்னாள் ..

 

முதல் தடவை அவனின் காதில் விழ வில்லை .

 

“காது கேட்க வில்லையா ஷாப்பிங் போகனும் கூட்டிட்டு போ” என்றாள்.

 

அப்பொழுது தான் அவனை சொல்கிறாள் என புரிந்தது ..எப்படியும் பேபி க்கு டிரஸ் வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான்.

 

போலாம் அதுக்கு முன்னாடி அந்த கப்போர்டு ஓபன் பண்ணி பாரு என்றான் ..

 

சரி ஓபன் பண்ணி பார்ப்போம் என திறந்தால் கலர் கலராக அத்தனை செட் ஸ்கர்ட் அண்டு டாப்ஸ்..

 

காலேஜ் படிக்கும் பொழுது இவள் அதை மட்டும் தான் அணிவாள்.

 

ஸ்கர்ட் போட்டு கொண்டு சுற்றி சுற்றி வருவாள்..ஒரு இடத்தில் நிற்க மாட்டாள்.பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும் அர்ஜுன் க்கு….

 

நான் இது எல்லாம் போடுவதை விட்டு விட்டேன் யாருக்காவது கொடுத்து விடு என்றாள்.

 

ஏன் ?என்றான்.

 

எனக்கு இப்போ ஒரு பொண்ணு இருக்கா…நான் கொஞ்சம் டீசெண்ட் ஆக உடை அணிய வேண்டிய அவசியம் உள்ளது என்றாள்.

 

“ஸ்கர்ட் அண்டு டாப்ஸ் ரொம்ப டீசெண்ட் ஆன டிரஸ் தான் என்று சொல்லி விட்டு …நான் ஹாலில் வெயிட் செய்கிறேன் வாங்க” என்று சென்று விட்டான்.

 

இவளும் கிளம்பி பேபி யும் கிளப்பி அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்..

 

இவர்கள் கல்லூரி காலத்தில் ஷாப்பிங் செய்யும் மாலிர்க்கு அழைத்து வந்தான் .

 

அதை பார்த்ததும் “ஏன் இந்த ஊரில் வேற மால் இல்லையா ?”என்றாள்.

 

இங்க தான் நல்லா இருக்கும் என்று அழைத்து சென்றான்.

 

உள்ளே சென்று இவள் வழக்கமாக துணி எடுக்கும் கடையில் பேபி க்கு துணி எடுத்தாள்…

 

அர்ஜுன் கவனித்து கொண்டே இருந்தான் …எவ்வளவு  துணி எடுத்தாலும் அதற்கு பணம் செலவு செய்யும் வசதியில் இருப்பவள் இப்படி பார்த்து பார்த்து துணி எடுப்பது ஆச்சர்யமாக இருந்தது ..

 

ஒவ்வொரு ட்ரெஸ் எடுத்த பிறகும் அரு விடம் காட்டி பிடித்து இருக்கிறதா என்று கேட்டாள் அது சரி என்று சொன்ன பிறகு தான் செலக்ட் செய்தாள்.

 

அவளுக்கும் டிரஸ் எடுத்தாள்…இப்பொழுது வந்து இருக்கும் நியூ டிசைனில் ஆனால் டீசெண்டாக இருந்தது …மறந்தும் கூட ஸ்கர்ட் இருக்கும் பிரிவிற்கு செல்லவில்லை …ஆனால் பார்வை அங்கே சென்றது ..அவள் முகத்தில் தயக்கத்தை பார்த்த அர்ஜுன் அவளின் அருகில் சென்று” ஏன் ஸ்கர்ட் எடுக்க மாட்ற?” என்று கேட்டான் .

 

அவளுக்கு இருந்த எரிச்சலில் “ஏன்னா நான் இப்போ ஒரு பொண்ணுக்கு அம்மா இல்லையா ..அந்த மாதிரி டிரஸ் எல்லாம் போட கூடாது” என்று கத்தினாள் ..அவள் கத்தியது தெரிய வில்லை அர்ஜுன் க்கு ஆனால் அதன் பின் எதோ ஒன்று இருப்பது போல் தோன்றியது.

 

“யாராவது எதாவது சொல்லி இருக்காங்களா?”என்று கேட்டான்.

 

“ஆமாம் அர்ஜுன் இந்த கடந்து போன 4 வருடத்துல என்னை நிறைய பேர் எத்தனையோ கேள்விகள் கேட்டு இருக்காங்க அதுக்கு இப்போ என்ன பண்ண போற நீ” என்றாள்.

 

குழந்தை இவர்களை கவனிப்பதை பார்த்து அவள் பேசுவதை நிறுத்தி விட்டு வேறு பிரிவிற்கு க்கு சென்று விட்டாள்.

 

அர்ஜுன் பேபி யின் கையை பிடித்து கொண்டு ஸ்கர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு 3 செட் எடுத்தான் ..வீட்டில் ஏற்கனவே இருப்பதால் கம்மியாகவே எடுத்தான்.

 

அதை  கொண்டு சென்று அவளின் ஷாப்பிங் பேகில் போட்டு …”இது வரைக்கும் கேட்க முடிய வில்லை … ஆனால் இனிமேல் யாராவது உன்னை கேட்க்குறது என்ன சும்மா ஒரு பார்வை பார்க்க சொல்லு அப்ப தெரியும் இந்த அர்ஜுன் என்ன செய்வான் என்று சீரியஸ் ஆக சொன்னான் .”

 

“உன் படத்தோட டைலாகா இது? …ஆனால் ஒண்ணு சொல்லட்டா அர்ஜுன் …உன்னோட வசனம்,திரைக்கதை எல்லாம் முதல் முதலாக பார்த்தது நான் தான் மறந்துடாத “என்றாள் ..

 

என்ன பேசினாலும் திருப்பி அடிக்கிறாலே என நொந்து கொண்டான்.

 

இதற்கு மேல் இவளிடம் பேசுவது வேஸ்ட் என்று அவள் ஷாப்பிங் செய்வதை இருவரும் வேடிக்கை பார்க்க சென்று விட்டனர் .

 

 

அப்பொழுது அங்கு வந்த ஒரு பெண் “வாவ் .. டைரக்டர் அர்ஜுன் சார் என்றாள்.

இவனின் அருகில் வந்து ஒரே ஒரு செல்ஃபி “என்றாள்.

 

ஓகே என்று எடுத்து கொண்டான் …அதை பார்த்து ஷ்ரத்தா முறைத்தாள்.

 

“அய்யய்யோ மங்கம்மா இருக்கிறதை மறந்து விட்டோமே” என்று வேகமாக நகர்ந்து அவள் அருகில் சென்று நின்று விட்டான்.

 

ஷாப்பிங் முடித்து ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டு விட்டு வந்தனர் ஆனால் அவள் முறைப்பதை நிறுத்த வில்லை . அரு விடம் மட்டும் நன்றாக பேசி கொண்டே வந்தாள்.

 

வீட்டிற்கு வரும்போதே 3 மணி ஆகி இருந்தது …வந்தவுடன் வேலை இருக்கிறது என்று வெளியே சென்று விட்டான் .

 

அரு தூங்கும் நேரம் என்பதால் அவளை படுக்க வைத்து விட்டு …இவளும் வந்து ஹாலில் அமர்ந்து இருந்த பெரியம்மா மடியில் படுத்து கொண்டாள்.

 

அவரும் அவளின் தலையை கோதி கொண்டே மாதங்கி இடம் பேசி கொண்டு இருந்தார்.

 

கொஞ்சம் நேரத்தில் சரண் வந்தவன் அவள் மடியில் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து அவருக்கு கால் வலிக்கும் என்று இவன் மடியில் மாத்தி கொண்டான் …அவள் நல்ல உறக்கத்தில் இருந்ததால் எதுவும் தெரிய வில்லை .

 

ஒரு 1 மணி நேரம் சென்று  அர்ஜுன்  வந்தவன் சரண் மடியில் படுத்து இருந்தவளை பார்த்தான்.

 

ஃப்ரெஷ் ஆகி …அவன் மகளை பார்த்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு …இங்கே வந்து அவன் மனைவிக்கும் நெற்றியில் 

ஒரு முத்தம் கொடுத்தான் ..

 

“டே எழுந்துக்க போராடா …எழுந்தா திட்டுவா “என்று சரண் திட்டினான்.

 

அர்ஜுன் எதுவும் பதில் சொல்லாமல் சிரித்தான் . .அவன் எதுவோ யோசித்து கொண்டு இருப்பது தெரிந்தது.

 

மாதங்கி அதை பார்த்து விட்டு “என்ன யோசனை கண்ணா?” என்றார்.

 

ஒன்றும் இல்லை ..”.இண்டஸ்ட்ரி ல எனக்கு கல்யாணம் ஆனதே யாருக்கும் தெரியாது…சொன்னா ஒய்ஃப் எங்கன்னு நோண்டுவாங்கண்ணு சொல்லவும் இல்லை ..இப்போ சொல்லணும் …நாளைக்கு நாங்க ஃபேமிலி யோட வெளிய போறப்ப யார் இந்த பொண்ணுன்னு தேவை இல்லாத நியூஸ் லாம் வரும் “அதான் எப்படி சொல்லலாம்னு யோசிக்கிறேன்.

 

சரணும் அதை ஆதரித்தான்..ஆமாம் அர்ஜுன் நான் கூட லாஸ்ட் வீக் கேள்வி பட்டேன்..”மோஸ்ட் எளிஜிபில் பேச்சுலர் இன் சினி ஃபீல்டில் உன் நேம் கூட சொல்றாங்க” 

 

“எஸ் அதான் நெக்ஸ்ட் வீக் ஒரு விருது விழா இருக்கு …இது வரைக்கும் மேக்ஸிமம் அவாய்டு பண்ணி விடுவேன்… பட் இந்த தடவை அட்டெண்ட் பண்ணலாம்னு இருக்கேன் ..அதுவும் ஃபேமிலி கூட …அதுக்கு ஷ்ரத்தா என்ன சொல்லுவா தெரியல அதான் யோசித்து கொண்டு இருக்கிறேன்” என்றான்.

 

 

விக்ரம் ,பெரியம்மா,பெரியப்பா அனைவரும் அங்கு தான் இருந்தனர் அவன் செய்த தவறை சரி செய்ய மிகவும் கஷ்ட படுகிறான் என்று அவர்களுக்கும் புரிந்தது.

 

 

வந்ததில் இருந்து விக்ரம் பெரிதாக அர்ஜுன் இடம்  பேசவே இல்லை ..நாளை இவர்கள் கொச்சின் செல்வதாய் இருந்தனர் .. ரோஷ்ணி இங்கே அம்மா வீட்டில் கொஞ்சம் நாள் இருந்து விட்டு வரட்டும் என்று இவர்கள் மட்டும் செல்கின்றனர்..இன்னும் ஷ்ரத்தா விடம் சொல்ல வில்லை ..அவளை வேறு சமாளிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான்.

 

விக்ரம் எழுந்து அர்ஜுன் இடம் வந்து …_அவ வருவா நான் வர வைக்கிறேன் “என்றான்.

 

“தாங்க்ஸ் மாமா “என்றான் அர்ஜுன்.

 

“அர்ஜுன் நான் சொல்கிறேன் என்று தப்பா நினைக்காத உண்மையாகவே உன்மேல் எனக்கு இப்பவும் நம்பிக்கை வரவில்லை …எதுவோ ஒரு நம்பிக்கை அவளை இங்க விட்டுட்டு போறேன் பார்த்துக்கோ “என்று மட்டும் சொன்னான் ..சொல்லி விட்டு அர்ஜுன் பதிலுக்காக கூட வெயிட் செய்ய வில்லை ரூமிற்கு சென்று விட்டான் .

 

கொஞ்சம் நேரம் கழித்து அரு தான் முதலில் எழுந்து மம்மா என்று கத்தினாள்.

 

அர்ஜுன் சத்தம் கேட்டு தூக்க சென்றான்.அது அவனிடம் வரவே இல்லை … மம்மா வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தது ..

 

அதற்க்குள் மகளின் குரலில் வேகமாக எழுந்து ஷ்ரத்தா சென்றாள் …அங்கு சென்றால் அர்ஜுன் அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தான் .சென்றவள் பேபி அருகில் படித்து அனைத்து கொண்டு “மம்மா இங்க தான் பேபி இருக்கேன்” என்று சமாதானம் செய்தாள். அதுவும் சமாதானம் ஆகி விட்டது ..

 

அதை பார்த்த அர்ஜுன் என்னவோ தனியாக உணர்ந்தான் …அவனின் முகத்தில் அதை படித்தவள் ..”பேபி அர்ஜுன் கிட்ட போ “என்றாள்.

 

பேபி எழுந்து அர்ஜூன் மடியில் படுத்து விட்டாள்..அப்பொழுதும் அவன் முகம் தெளிய வில்லை ..

 

என்ன? என்று ஷ்ரத்தா கேட்டாள்..

 

“ஒரு வேளை இவள் பிறந்ததில் இருந்து நான் கூடவே இருந்து இருந்தா நான் தூக்க வந்ததும் வந்து இருப்பா தானே” என்றான் ..

 

பழச மாத்த முடியாது அர்ஜுன் …அவளை இப்போ இருந்து பார்த்துக்கோ அதுவே போதும் என்று சொல்லி மூவரும் வெளியே வந்தனர்.

 

அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்…விக்ரம் அவர்கள் ஊருக்கு போவதை பற்றி சொன்னான் ..ஷ்ரத்தா முகமே சுருங்கி விட்டது. .ஒரு வழியாக சமாதானம் செய்தனர்.

 

கூடவே அவார்டு பங்சன் பற்றி சொல்ல எந்த பதிலும் தரவில்லை..யோசித்து சொல்கிறேன் என்று மட்டும் சொன்னாள்  .

 

ஒரு வழியாக மறுநாள் விக்ரம் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பி சென்றனர்.