காரில் ஏறும் போது இவளும் பேபி யும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். காரில் ஏறியதே பெரிது என்பதால் அதற்கு மேல் அர்ஜுன் எதுவும் பேசவில்லை.

 

“மம்மா நம்ம இப்போ எங்க போறோம்” என்று பேபி ஷ்ரத்தா விடம் கேட்டது .

 

“பேபி இங்க வருவாங்கன்னு அப்பா பேபி க்கு இங்க ஒரு பெரிய வீடு வச்சுருக்கேன் .இனிமேல் அதில் தான் நீ,நான், மம்மா ,தாத்தா ,பாட்டி எல்லோரும் இருக்க போறோம்” என்று அர்ஜுன் பதிலளித்தான் .

 

இந்த பதிலுக்கு கண்டிப்பாக  ஷ்ரத்தா தன்னை முறைத்து கொண்டு இருப்பாள்  என்று கண்ணாடி வழியாக அவளை பார்த்தால் அவள் உறங்கி கொண்டு இருந்தாள் ..

 

முகத்தில் அப்படி ஒரு சோர்வு ..இனிமேல் அவளை ஒரு சிறு கவலை கூட தராமல் பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

 

அடுத்த 10 நிமிடத்தில் வீடு வந்து விட்டது ..இவன் இறங்கி பேபி ஐ தூக்கி கொண்டு ஷ்ரத்தா வை எழுப்பினான் .

 

நல்ல தூக்கத்தில் இருந்ததால் அர்ஜுன் கனவில் வந்து இருக்கிறான் என நினைத்து .. “டோண்ட் டிஸ்டர்ப் மீ இன் டிரீம்” என்று சொல்லி விட்டு  மறுபடியும் உறங்கினான் ..

 

அந்த வார்த்தை அர்ஜுன் மனதை அவ்வளவு குளிர்வித்தது…இவன் அவளின் நினைவில் உறங்கியது போல் அவளும் இவன் நினைவில் தான் தூங்குகிறாள் என புரிந்தது.

 

அதற்குள் மாதங்கி தன் மூன்று மக்களும் குடும்பத்தோடு வந்து இருப்பதால் ஒன்றாக சேர்த்து ஆரத்தி எடுக்க நினைத்து இவர்களுக்காக அனைவரும் நின்று கொண்டு இருந்தனர் .

 

இவன் சிலை போல் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு பேபி தான் அவளின் அம்மாவை எழுப்பினாள் ..பேபி யின் குரலிற்கு உடனே எழுந்து விட்டாள் ..அதன் பிறகு தான் சுற்றம் உரைத்தது . வேகமாக இறங்கி சென்று அனைவருடனும் நின்று கொண்டாள் ..

 

விக்ரம் & ரோஷ்ணி,கார்த்திக்& ரோஹிணி,ஷ்ரத்தா & அர்ஜுன் ,சரண் & வைஷ்ணவி அனைவருக்கும் ஆரத்தி சுற்றி பொட்டு வைத்தார் ..

 

அர்ஜுன் மனதிற்குள் மிகவும் நிம்மதியாக உணர்ந்தான். மனைவி மகளுடன் வீட்டிற்குள் நுழையும் போது இத்தனை நாள் வாழ்கையில் இருந்த பிடிப்பற்ற தன்மை போய் முழுமையான சந்தோசத்துடன் நுழைந்தான்.

 

வெளியில் இவனை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் விஷயம் ” இவருக்கு என்ன பெரிய டைரக்டர் அது இல்லைன்னா பிஸினஸ் ,பணத்துக்கு பஞ்சம் இல்லை .” என 

 

ஆனால் இவனுக்கும் தானே தெரியும் கடந்த 4 வருடங்களாக இவன் வாழ்ந்த வாழ்கையை யாரும் வாழ கூடாது என நினைப்பான்.

 

உள்ளே சென்றதும் விக்ரமின் அம்மா அப்பாவிற்கு ஒரு அறையை காட்டி ஓய்வு எடுக்க சொல்லி விட்டு, மாதங்கி ரோஹிணி க்கு ரூம் ஏற்பாடு செய்ய சென்று விட்டார் .அவள் கை குழந்தை வைத்து இருப்பதால் அனைத்திற்கும் அம்மாவை தேடினாள்..

 

ரோஷ்ணி விக்ரமுடன் அவளின் அறைக்கு சென்று விட்டாள் ..

 

சரண் சோஃபாவில் அமர்ந்து விட்டான் ..வைஷ்ணவி அனைவருக்கும் குடிப்பதற்கு எதாவது ரெடி பண்ணுவோம் என கிச்சென் சென்று விட்டாள்.

 

ஹாலில் மீதம் இருந்தது அர்ஜுன் குடும்பத்தினர் மட்டுமே.

 

“நம்ம ரூம் க்கு போலாமா?” என்று ஷ்ரத்தா வை பார்த்து கேட்டான்.அவள் பதில் அளிக்கும் முன் மகள்” ஓ போலாமே” என்றாள் .அதற்கு மேல் இவள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அர்ஜுன் உடன் நடந்தாள் ..

 

போவதற்கு முன் சரணிடம்” ரூம் போய்ட்டு ரெஃபிரஷ் ஆகி வரேன் அண்ணா “என்று சொல்லி விட்டு சென்றாள் .

 

மேலே வந்து ரூம் திறந்து பார்த்ததும் ஷ்ரத்தா விற்கு அப்படி ஒரு அதிர்ச்சி ..சுவர் முழுவதும் அவளின் வண்ண வண்ண புகைப்படங்கள் ..

 

“வாவ் மம்மா..நிதைய உங்க போட்டோ என்றது ..ஆனால் என் ஃபோட்டோ ஒன்று கூடம் இல்லை என்று அழ ஆரம்பித்து விட்டது” ..அர்ஜுன் க்கு என்ன செய்வது என்றே தெியவில்லை ..”மகள் இருப்பதே நேற்று தான் தெரியும், இதில் போட்டோ க்கு நான் எங்கே போவேன்” என நொந்து கொண்டான்.

 

ஷ்ரத்தா வேண்டும் என்றே அவனே சமாதானம் செய்து கொள்ளட்டும் என்று பாத்ரூம் உள் சென்று விட்டாள் .

 

அர்ஜுன் பேபி ஐ சமாதானம் படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

 

சமாதானம் செய்வதை விட அவன் அவனின் மகளை மிகவும் ரசித்து கொண்டு இருந்தான் ..வானில் இருந்த தேவதையே குழந்தையாய் இருப்பது போல் இருந்தது அப்படி ஒரு கொள்ளை கொள்ளும் அழகு .அதுவும் அவள் கை ஆட்டி ஆட்டி கேள்வி கேட்கும் அழகில் அடிமையாகி போனான் .

 

பேபி நாளைக்கே உன் ஃபோட்டோ இங்க மாட்டிடலாம் என்று சமாதானம் பேசி சரி செய்தான் .அப்பொழுதும் விடாமல் தோப்புக்கரணம் போட வைத்து விட்டது . இவன் தோப்புக்கரணம் போடும் போது வெளியே வந்த ஷ்ரத்தா இவர்கள் என்னவோ செய்யட்டும் என்று விட்டு  கீழே சென்று சரணுடன் அமர்ந்து விட்டாள்.

 

வைஷ்ணவி அதற்க்குள் அனைவருக்கும் தேநீர் கொடுத்து விட்டு வந்தாள்.மணி 7 ஆகி விட்டதால் அவர்களை வீட்டிற்கு கிளம்ப சொல்லி அனுப்பி விட்டாள்.

அவர்கள் சென்றதும் இவள் ஹாலில் தனியாக அமர்ந்து இருந்தால் அப்பொழுது மாதங்கி வந்து “மாற்றுவதற்கு டிரஸ் வாங்கி கொண்டு வரலாமா என்று கேட்டார் ..இல்லை ஹோட்டலில் இருந்து பெட்டியும் வர வைத்து இருந்தனர் ..அதுவே இப்போதைக்கு போதும்” என்று சொல்லி விட்டாள் .

 

அனைவரும் பயண களைப்பில் இருந்ததால் அவரவர் அறைக்கே உணவை அனுப்ப சொல்லி வேலை ஆட்களிடம் சொல்லி விட்டு இவரும் சோஃபாவில் வந்து அமர்ந்தார்.ராகவனும் வந்து அமர்ந்து விட்டு” பேபி எங்கம்மா” என்று கேட்டார் ..

 

அப்பொழுது கரெக்டாக அர்ஜுன் பேபி உடன் இறங்கி இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான் ..அவன் குழந்தை உடன் இறங்கியதை பார்க்கவே கவிதை மாதிரி இருந்தது ..அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தாள் அருந்ததி .

 

வந்தவன் பேபி ஐ அவன் அப்பாவிடம் கொடுத்தான் அது போகாமல் அர்ஜுன் ஐ இறுக்கமாக பிடித்து கொண்டது..

 

“கொஞ்சம் பழகட்டும் விடுடா” என்று சொல்லி விட்டார்..அது இறங்கி சென்று அம்மா வின் மடியில் ஏறி அமர்ந்து விட்டது ..

 

அர்ஜுன் வெளியே சென்று விட்டான் .கொஞ்சம் நேரம் கழித்து மாதங்கி “பேபி க்கு என்ன கொடுப்ப இப்போ நைட் சாப்பிட” என்று கேட்டார் .

 

அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன் என்று எழுந்ததும் தான் நியாபகம் வந்து சாரி நீங்களே சொல்லுங்க என்று கேட்டாள் .

 

அவர்களும் நிறைய குழந்தைகள் வளர்த்தவர்கள் தானே ..

 

“விடு அவங்க தான் உன்னை பார்த்துக் கிட்டாங்க சோ அவங்க தான் ஃபர்ஸ்ட்  

நியாபகம் வருவாங்க” ..

 

நேற்றிலிருந்து பால் தான் குடிச்சிருக்கா இப்போ இட்லி குடுக்கலாம் லைட் புட் தான் அது நான் போய் கொண்டு வரேன் என்று கிட்சென் சென்றார்.

 

பேபி இவளின் மொபைலில் கார்ட்டூன் பார்த்து கொண்டு இருந்தது..இவள் தூங்க இரவு 1 ஆகிடும் ..ஆனால் ஷ்ரத்தா மிகவும் டயர்ட் ஆக உணர்ந்தாள்

 

மாதங்கி அரு க்கு இட்லி கொண்டு வந்து கொடுத்தார் ..

 

நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு படுங்க இவள் தூங்க 1 ஆகிடும்  என்று இருவரையும் வற்புறுத்தி சாப்பிட அனுப்பினாள் இவள் பிறகு சாப்பிடுவதாக கூறி அருந்ததி க்கு இட்லி ஊட்ட ஆரம்பித்தாள்.

 

அப்பொழுது கரெக்டாக அர்ஜுன் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு உள்ளே வந்தான். 

 

அவன் நுழைவதை பார்த்த அவன் மகள் “அஜ்ஜுன் “என்று கத்தினாள்.ஷ்ரத்தா கூடம் எதிர்பார்க்க வில்லை இவ்வளவு அழகாக கூப்பிடுவாள் என்று அர்ஜுன் வேகமாக அவளை தலைக்கு மேல் தூக்கி சுற்றினான்..

 

பார்த்திருந்த அவனின் பெற்றோருக்கு கண் கலங்கி விட்டது அவர்கள் மகனின் இந்த சிரிப்பை 4 வருடம் கழித்து பார்க்கின்றனர் அல்லவா அவ்வளவு சந்தோசம் .

 

அவன் சோபா வில் அமர்ந்து அவனின் மடியில் பேபி ஐ உட்கார வைத்து விட்டு ஷ்ரத்தா வை பார்த்தான் . அவள் இவனை கண்டு கொள்ளவே இல்லை ..

 

இட்லியும் சாம்பாரும் மிக்ஸ் பண்ணி கொண்டு இருந்தாள் ..அவளின் மகளுக்கு இட்லி என்றால் அலர்ஜி ஆனால் இப்பொழுது அவளின் உடல் நிலைக்கு அது தான் சரியான உணவு கஷ்டபட்டு ஊட்டுவோம் என்று அர்ஜுன் எதிரில் இருந்த சோபா வில் அமர்ந்தாள்.

 

இவள் ஊட்டுவதற்கு ஏதுவாக இவன் பேபி ஐ நேராக உட்கார வைத்தான் .

 

“பேபி ஆ காட்டு “என்று இவள் இட்லியை அருகில் கொண்டு சென்றதும் அது “மம்மா இது உவ்வே வேதாம்” என்றது ..

 

“பேபி இன்னைக்கு மட்டும் சாப்பிடு பிளீஸ்.. மாம்மா பாவும்ல என்று கெஞ்சினாள்” ..அர்ஜுன் சுவாரசியமாக பார்த்து கொண்டு இருந்தான்..” பார்ரா என் பொண்ணு அவள் அம்மாவை பிளீஸ் லாம் கேட்க வைக்கிறா ” என மனதிற்குள் கவுண்டர் கொடுத்து கொண்டு இருந்தான்.

 

எங்கே அப்பா மடியில் இருந்தால் ஏமாற்றி ஊட்டி விடுவார்களோ என்று அ இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

இதை ஷ்ரத்தா எதிர்ப்பார்த்து இருந்தால் அவள் நடக்க ஆரம்பித்ததும் இவளும் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

மாதங்கி தான் இராகவனிடம் பொலம்பினார்.  “ஷ்ரத்தா ரொம்ப டயர்டாக இருக்கிறாள் பேபி நம்ம கிட்ட வந்தாலாவது நம்ம ஊட்டலாம்” என்று சொன்னார்.

 

ஒரு வழியாக பேபி சாப்பிட ஆரம்பித்தது.ஆனாலும் ஒரு இடத்தில் நின்று எல்லாம் சாப்பிட வில்லை ..”வீட்டில் ஹாலில் உள்ள ஒவ்வொரு பொருளையும் எடுத்து இது என்ன ?அது என்ன? உடைக்கலாமா வேண்டாமா “என்று ஆராய்ச்சி செய்து கொண்டே நடந்து கொண்டு இருந்தது.

 

அர்ஜுன் எழுந்து சென்று பேபி ஐ தூக்கி நடந்து கொண்டே ஷ்ரத்தா விடம் வந்து வந்து அவளை சாப்பாடு வாங்க வைத்தான் ..ஷ்ரத்தா ஒரே இடத்தில் அமர்ந்து விட்டாள்.

 

ராகவன் மகனின் செயலில் மாதங்கி ஐ பெருமையாக பார்த்தார்…ஒழுங்கா சாப்பிடுங்க என்று அவர் முறைத்ததும் சாப்பிட ஆரம்பித்து விட்டார் ..

 

அவர்கள் சாப்பிட்டு முடித்து தூங்க செல்வதற்கு முன் ஷ்ரத்தா வை சாப்பிட சொல்லி விட்டு சென்றனர்.அது வரையும் பேபி சாப்பிட்டு முடிக்க வில்லை ..பார்த்திருந்த அர்ஜுன் க்கு ஒரு நாளிலே இவள் என்ன இவ்வளவு வால் தனம் செய்கிறாள் இவளை எப்படி தான் ஷ்ரத்தா தனியாக சமாளித்தாள்.என்று தோன்றியது ..

 

ஒரு வழியாக பேபி சாப்பிட்டதும் ஷ்ரத்தா சாப்பிட சென்றாள்.அப்பொழுது தான் கார்த்திக் ரூமில் இருந்து வெளியே வந்தான் ..வந்து பார்த்தால் ஹாலில் அர்ஜுன்,ஷ்ரத்தா,அருந்ததி மட்டும் இருந்தனர் ..

 

“என்ன இப்ப தான் சாப்பிட போறியா இவ்வளவு லேட் ஆகிடுச்சு “என்று கேட்டு கொண்டே வந்தான் .

 

“இப்பதான் சாப்பிட்டு முடித்தாள் இன்னும் தூங்க நைட் 1 ஆகிடும் எப்பவும் இதே போராட்டம் தான் இவ கூட” என்று சொல்லி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

 

கார்த்திக் போய் அர்ஜுன் அருகில் அமர்ந்து “நீ சாப்பிட்டியா “என்றான் ..

 

இப்ப தான் வெளியே போய் சாப்பிட்டு வந்தேன் ..

 

“இன்னைக்கும் வெளியவா” அதான் ஷ்ரத்தா வீட்டுக்கு வந்து விட்டால்  அப்புறமும் என்ன என்றான் ..

 

அம்மா சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு குழந்தையை பார்க்க ஆரம்பித்து விட்டான் .

 

கார்த்திக் ஷ்ரத்தா அருகில் சென்று அமர்ந்து பொதுவாக பேசி கொண்டு இருந்தான். 

 

“ஏன் உங்க அத்தை பையன் வீட்டில் சாப்பிடாம வெளியே போய் சாப்பிட்டு வராங்க ..?”என்று கேட்டதும் முதலில் கார்த்திக் க்கு யாரை கேட்கிறாள் என்றே புரிய வில்லை பிறகு தான் அர்ஜுன் ஐ கேட்கிறாள் என்று புரிந்தது .

 

“அது நீ வீட்ட விட்டு போனதும் அத்தை அவனை திட்டிடாங்க..அவங்களோட வளர்ப்பு தப்பாக போயிடுச்சு சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணாங்க..அவன் கூட பேசுறதையும் நிறுத்திட்டாங்க..நீங்க எப்போ பேசுறிங்களோ அப்ப தான் நான் வீட்டில் சாப்பிடுவேன்” என்று சொல்லி விட்டான்.

 

 

 

அதுக்கு அப்புறம் இரண்டு பேருக்கும் நடுவில் டிஸ்டன்ஸ் அதிகம் ஆயிடுச்சே தவிர குறையவே இல்லை .

 

அவன் கிட்ட அவங்க பேசியே 4 வருடம் ஆகிடுச்சு என்று கூறி கொண்டு இருந்தான்.

 

கேட்ட அவளுக்கு தான் மனதை பிசைந்தது. .நமக்கு தான் யாரும் இல்லை என்றால் அவனையும் அப்படி ஆக்கி விட்டோமே என்று அதே சமயம் மாதங்கி மேல் இன்னும் மரியாதை வந்தது யாரோ ஒரு பெண்ணிற்காக சொந்த மகனையே விலக்கி வைத்து இருப்பது ..

 

சாப்பிட்டு விட்டு பேபி க்கு டேப்லெட் கொடுக்க பெரும் போராட்டம்…கார்த்திக் ,அர்ஜுன் இருவருமே போராடினர் அவளிடம் ஒரு வழியாக டேப்லெட் கொடுத்து முடிக்க 11 ஆனது.

 

கார்த்திக் படுக்க சென்று விட்டான் ..மீதம் இருந்தது இவர்கள் தான் ..அர்ஜுன் ,ஷ்ரத்தா இருவருக்குமே டயர்டு ஆனால் அவர்களின் பேபி பகல் 11 மணி போல் விளையாடி கொண்டு இருந்தாள்.

 

“இவ தூங்க 1 ஆகும் நீ போய் தூங்கு” என்று மொட்டையாக அர்ஜுன் இடம் சொன்னாள்.

 

“இவ்வளவு வருஷம் நீ தான பார்த்து கிட்ட இனிமேல் நான் பார்த்துக் கிறேன்” என்றான் .

 

“ஏன் என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறியா ? என்று கேட்டாள் .. அது இல்லாமல் உன்னை நம்பி என் பொண்ணை விட்டுட்டு நான் எப்படி தூங்குவேன்” என்று வேறு கேட்டாள்.

 

அர்ஜுன் க்கு ஏண்டா இப்படி கேட்டோம் என்று நொந்து கொண்டான்.

 

இவளுக்கு பதில் சொன்னாலும் நம்மை இவள் புரிந்து கொள்ள நாள் ஆகும் என்று அர்ஜுன் அமைதி ஆகி விட்டான் .

 

12 மணி போல ரோஹிணி குழந்தை அழுகிறது என்று தூக்கி கொண்டு மாதங்கி வெளியே வந்தார் .

 

இவர்கள் மூவர் இருப்பதையும் பார்த்து “என்ன தூங்கலையா?” பதட்டமாக ..

 

“ஐயோ அத்தை. அங்க பாருங்க உங்க பேத்தி எவ்வளவு ஆக்டிவ் ஆக விளையாடி கொண்டு இருக்கிறாள் .இது எல்லாம் எனக்கு சாதாரணம் நானே இவள் 1 மணிக்காவது தூங்கினால் போதும் என்று நினைத்து கொண்டு இருக்கேன் ..இதில் எங்கே நாங்கள் தூங்குவது “என்றாள்.

 

அவர் அப்பொழுது தான் நார்மல் ஆகி ஷ்ரத்தா உரிமையாக தன்னிடம் பேசுவதை கவனித்தார் ஆனால் காட்டிக் கொள்ள வில்லை .

 

“விடு விடு அது அவங்க அப்பா மாதிரி போல அவனும் நைட்டில் இப்படி தான் படுத்துவான்” என்றார்.

 

அவர் கையில் இருந்த குழந்தையை இவள் மடியில் வைத்து தட்டி கொடுத்தாள்..

 

பாரேன் அத்தை மடிக்கு போனதும் அழுகை காணும் என்றார்.

 

அதற்குள் குழந்தையை பார்த்து விட்டு அரு வந்து என் மடியில் படுக்க வைக்கணும் என்று உட்கார்ந்து கொண்டாள் .

 

உன் மடி குட்டி குழந்தையை வைக்க முடியாது என்றாள்.

 

அது அழுவதற்கு ரெடி ஆனதை பார்த்து அர்ஜுன் வந்து அவன் மடியில் அரு வை உட்கார வைத்து இருபுறமும் இவன் கையை வைத்து இப்போ மடி பெரிசு ஆய்டுச்சு இப்ப வைக்கலாம் என்றான் .

 

ஷ்ரத்தா அவனை முறைத்து கொண்டே குழந்தையை வைத்து அவளும் பிடித்து கொண்டு இருந்தாள்.

 

 

மாதங்கி அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தார் ..இப்படி தானே அவரின் மகனை காண ஆசைப்பட்டார்.