Advertisement

அத்தியாயம் 32

        நித்யா கிளம்புகிறேன் என அறைக்குச் சென்ற நொடியில் தமிழ் பரிதியைப் பார்க்க , அவன் சின்னதுரையிடம் வாக்குவாதம் செய்துக்கொண்டே அறைக்குச் செல்ல , அவரோ முகத்தில் அடிக்காத குறையாக கதவைச் சாத்திக் கொண்டார். அப்படியே கதவில் ஓங்கி குத்தியவனின் காதில் இசையின் முனங்கல் கேட்க , இசை அருகில் வந்து தங்கையை மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுக் கொண்டிருந்தான்.

 லதாவும் இசையை பிடித்துக் கொண்டு மகனுக்கு அலைப்பேசியில் நடந்தப் பிரச்சினைகளை அழுதுக் கொண்டே சொல்லி இசை மருத்துவமனை வர மறுக்கிறாள் என்றுக் கூறி கொண்டிருந்தார்.

தெய்வானை மகளருகில் செல்ல , வலியில் பற்களைக் கடித்துக் கொண்டு ,

“ஏம்மா அது அண்ணன் பிள்ளையாவே இல்லாம இருந்தாக் கூட வாயும் வயிறு மா இருக்கிற பொண்ண அடிக்கலாமா … எங்க அத்தை என்னைய அடிச்சா நீங்க சும்மா இருப்பீங்களா… போங்க முதல்ல அவங்கள அண்ணனோட இருக்க வையுங்க … அவங்க இந்த வீட்ட விட்டுப் போனா எனக்கும் இங்க யாரும் வேண்டாம்… “

விநாயகம் தலையில் கை வைத்து அமர்ந்துவிட.. சாந்தா அறைக்குச் சென்ற அவரது அண்ணன் பின்னேயே சென்று.. அதைக் கதவை தட்டி ,

” அண்ணே செஞ்ச தப்புக்கு என்னையக் கொன்னு போட்டுறு… அந்த பிள்ளைகள வாழ விடு…” என அழுது மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் கதவடைத்தவர் திறந்தது போலத் தெரியவில்லை.

தமிழ் அப்போது தான் உள்ளே கொண்டு வந்திருந்த தன் பைகளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் அருகில் வந்தவள் ,

“அப்பா நித்திய நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் பேசிக்கலாம் … ” என்றவள் லதா அருகில் சென்று ,

” ம்மா அண்ணிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகலாம் … நான் நித்தியக் கூட்டிட்டு வாறேன்…” என்றவளிடம் , இசை

“தமிழ் அண்ணி இங்க இல்லைனா நானும் இங்க இருக்க மாட்டேன்  என்னையவும் நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுங்க…” என்றவாறே எழ , லதா பரிதியிடம் ,

” மாப்ள நீங்களும் அம்முவும் உங்க தங்கச்சிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க … இது பிரசவ வலி தான் …. நான் ஆஸ்பத்திரிக்கு தேவையானத எடுத்துட்டு மாமாக் கூட வாறேன்…” எனவும் பரிதி தங்கையை தூக்கிக் கொண்டு காருக்கு ஓடினான்.

லதா மகளை நிறுத்தி , ” நித்யாவ நாம எப்படி கூட்டிட்டுப் போக முடியும் … அவங்க பெரியப்பா பெரியம்மா அழைச்சிட்டு போய் அடுத்து என்னனு பார்த்துப்பாங்க… நீ இப்ப மாப்பிளையோட உங்க அண்ணிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போ .. நான் அப்பா கார்ல வாறேன்…” என்றவாறு கிளம்ப ,

அவர் கையை உதறிய தமிழ் , “நீ என்ன சொல்றமா… நித்யாவ … இவ்வளவு நடந்ததுக்குப் பிறகும் அவங்க பெரியப்பா வீட்டுக்கு அனுப்பச் சொல்றியா … “என கோபமாக கேட்க ,

” பின்ன நம்ம வீட்ல  எப்படி டி வச்சுக்கிறது… சும்மாவே உன் மாமனார் ஊழல் செஞ்ச விஷயத்துல உங்கப்பா ஹெல்ப் பண்ணலனு கோபத்துல இருக்கார் … இதுல நித்யா விஷயத்துல எப்படி தலையிடுறது…”

“அம்மா என்ன சொல்ற அப்பா விருப்ப ஓய்வு வாங்க என் மாமனார் தான் காரணமா … “

” பின்ன… அவர் மேல உள்ள குற்றச்சாட்டுக்கு எல்லா ஆதாரமும் அப்பா கையில இருக்கு … உங்கப்பா தப்புக்கு துணை போவாரா… ஆனா பொண்ணு இந்த வீட்ல வாழும் போது எப்படி அது முடியும்.அதான் வி.ஆர்.எஸ்க்கு எழுதிக் கொடுத்தார்… இப்ப அதையும் தான சொல்லிக் காண்பிச்சார் உன் மாமனார் … வா போகலாம் ..” என்றவாறு கைப்பிடிக்க..

தமிழ் அப்படியே நின்றுக் கொண்டாள். “வா இசை வலியில துடிக்கிறா….” லதாவிடம் எதுவும் பேசாமல் கிருஷ்ணனிடம் வந்தவள் ,

“அப்பா… எப்போ நீங்க கோழையானீங்க …யாராயிருந்தாலும் நீங்க நடவடிக்கை எடுத்துருக்கணுமேப்பா… எனக்கும் அண்ணனுக்கும் எவ்வளவு நல்ல விஷயங்கள சொல்லி வளர்த்தீங்க … என் ஒருத்தி வாழ்க்கைக்காக பார்த்து அத்தனை பேர் வாழ்க்கைய வீணடிச்சிட்டிங்களேப்பா… நீங்களா இருந்தா எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாதே …உங்க உயிருக்கே மிரட்டல் விடுத்தப்பக் கூட தைரியமா இருந்தீங்க  இப்ப பாருங்க.. எப்படியும் காசு அவர நிரபராதினு சொல்லும் … “

” என் பொண்ணு எனக்கு உயிரேமா….” தந்தையின் பதிலில் அழுகை வரும் போதே … நித்யா வெளியே வந்துக் கொண்டிருந்தாள். முடிந்த வரை அத்தனை பேருமே நித்யா போகாதே எனக் கத்திக் கொண்டே அருகில் வர , அவள் காதில் எதுவும் விழவில்லை.. கணவன் மட்டுமே நினைவில் நின்றான் …பதில் சொல்லாமல் நடந்தவளை தமிழும் , ஈஷ்வரும் பிடிக்க … ஈஷ்வரின் மொபைல் ஒலிக்க ஆரம்பிக்க … காதில் வைத்தவனுக்கு மாடி பால்கனியில் நின்றிருந்த வழுதியிடமிருந்து தகவல் வரவும் , நித்யா கையை விட்டு விட்டான்.

தமிழும் மேலேப் பார்க்க ,வழுதி வேண்டாம் என்பது போல் தலையசைக்க அவளும் கையை எடுத்துக் கொண்டாள்.

அவள் வெளியேறுவதைக் கண்ட இசையும் காரிலிருந்து இறங்கி , வலியோடு பரிதியிடம் ,

” நீங்க நிறுத்துங்கண்ணா…” என்றவளுக்கு அதற்கு மேல் மயக்கம் வருவது போல் இருக்க மாமனார் காரருகில் சென்று விட்டாள்.

உடனேயே கிருஷ்ணனும் லதாவும் மருமகளை அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். ஈஷ்வரிடம் நித்யாவைக் காட்டி விட்டு பரிதியும் தமிழும் பின்னேயே செல்ல , தெய்வானையும் கூட வந்தார்.

அருகிலிருந்த மருத்துவமனையிலயே பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டவள் உள்ளே நுழைவதற்கு முன்னேயே லதாவிடம் ,

“நித்யா அண்ணி ..அண்ணன் கூட இருந்தா மட்டும் தான் எங்க வீட்டு ஆளுங்க இங்க இருக்கணும் … இல்லனா நான் யாரையும் பார்க்க விரும்பல அத்தை….” என்று விட்டாள்.

பரிதியும் தெய்வானையும் ஒருவரை ஒருவர் பார்க்க , நித்யாவும் வெளியே காத்திருக்க , குழந்தையின் அழுகுரல் கேட்கவும்.. அந்த சூழ்நிலையிலும் அனைவர் முகத்திலும் ஒரு வித மகிழ்ச்சியின் சாயல் … செவிலியர் வந்து தாய் சேய் இருவரும் நலம் என்று விட்டுச் செல்ல …,

தமிழ் கிருஷ்ணன் அருகில் வந்தவள் ,

“அப்பா உங்க வீட்டு வாரிசு நல்லபடியா வந்தாச்சு … நான் எங்க வீட்டு வாரிசுகளையும் நல்லபடியா இந்த உலகத்துக்கு கொண்டு வரணும் … நித்யா பாவம் பா … அம்மா சொன்னாங்க நித்யாவ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தா என் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடும்னு…

“நித்யா இருந்த இடத்துல என்னைய வச்சுப் பாருங்க… அப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பீங்களா … “

” அப்பா நித்யாவ நான் பார்த்துக்கிறேன்…. அண்ணி சொன்ன அம்மா வீட்டு ஆளுங்கள்ல நானும் ஒருத்தி தானே… நித்யா வழுதி மாமாவோட சேர்ந்து வந்தா நானும் வாறேன் … இல்லையா நானும் வரல…நீங்களும் என்னையத் தேடி வர வேண்டாம் … ” எனவும் பரிதியைத் தவிரஅனைவரும் பதறி அவளை  அழைத்துக் கொண்டு கொண்டு அருகில் வர … கையைக் காட்டி நிறுத்தியவள் , 

” நான் கிளம்புறேன்.. ” என்றவாறு மருத்துவமனையை விட்டு வெளியேற … அதுவரை மன உளைச்சலில் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த பரிதிக்கு மனைவியின் வார்த்தைகள் காதில் இறங்க இறங்க மேலும் வார்த்தைகளற்றுப் போனவன் அவள் பின்னேயே சென்றவனைத் திரும்பி பார்த்த தமிழ் ,

“சாக்கி …. நித்யாவப் பார்த்துக்கப் போறேன்னு தான் சொன்னேன் … உன்னைய விட்டுப்போறேன்னா சொன்னேன்… நான் இல்லாம நீ இருந்துடுவ… ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாதே… பிகாஸ் ஐ லவ் யூ சாக்கி ..”

பரிதியால் பேசவே முடியவில்லை … தமிழ் கையைப் பிடித்துக் கொண்டு காருக்குச் செல்லப் போக , உதறியவள் ,

“சாக்கி நீ என்னையப் பத்திக் கவலைப்படாத .. முதல்ல அத்தையப் பாரு … அடுத்து அடுத்து அவங்க எவ்வளவு தாங்குவாங்க… நீ ரொம்ப நல்லவன் சாக்கி … இந்த சூழ்நிலைல நான் உன் பக்கத்துல இருந்தாக்கூட உன் நினைப்பு அப்பா, அம்மா , அண்ணன், தங்கச்சினு தான் இருக்கும்.. அவங்க வாழ்க்கை சரியாகாம உன் வாழ்க்கைய மட்டும் பார்க்கிற சுயநலவாதி நீ இல்லையே ….

நீ அதுக்காக இதுக்காகனு என்னைய கல்யாணம் பண்ணினாலும் நான் உன்னை உனக்காக தானடா கல்யாணம் பண்ணினேன் …”

“டப்பாஸ்… அது எப்படி .. நீ இல்லாம என்னால இருக்க முடியும்னு … நிஜமா காதல் …காதல்வலி… எப்படி இருக்கும்னு இளாவையும் அவன் மனைவியையும் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்னு தான் சொல்வேன்… வீட்ல நடந்ததெல்லாம் நினைச்சுப் பார்த்தா ரொம்ப மனசு வலிக்குதுடி…இதுல நீயும் என்னைய விட்டுப் போறேங்கிறியே டப்பாஸ் … “

பரி அழ மட்டும் தான் இல்லை …. ஆனால் அவன் குரல் … “

பரிதியின் கைப்பிடித்து அவனது காருக்கு அழைத்துச் சென்றவள் , அவனது வலது கரம் எடுத்து தன் வயிற்றின் மீது வைத்தவள் ,

“சாக்கி … உன் குழந்தை … நம்ம குழந்தை.. “

தமிழைக் கட்டிக் கொண்ட பரிதி,

“எப்படி..எப்படி.. உன்னைய இந்த நிலமையில விட்டு இருக்க முடியும் … அப்பா … தாய்மாமானு பதவிகள் கிடைச்சிருக்கு… ஆனா ஒரே நேரம் துக்கம் …சந்தோஷம்… மாறி மாறி என்னால முடியல டப்பாஸ்…”

“உன் ஃபீல் தானடா வழுதி மாமாவுக்கும் இருக்கும்… நினைச்சுப் பாரு… அதோட இப்ப நீ தெரிஞ்சுக்கிட்ட காதல .. நீயும் உணர்ந்தா நான் இன்னும் சந்தோஷமா அடுத்த வேலைகளைப் பார்ப்பேன்.. எனக்கு வந்த கோபத்துக்கு உங்கப்பா வச்சிருந்த தடிய வாங்கி அவர் மண்டைலயே போடணும் போல….” எனவும் பரிதி ,

“தமிழ்…. ” என கத்த ,

“பார்த்தியா அவர் எவ்வளவு பெரிய பாவம் பண்ணப் பார்த்தார் அப்பக் கூட நீ விட்டுக் கொடுக்கல .. அதுதான் நீ … கேட்டா அவர் அப்படியே வளர்ந்துட்டார்.. ஊறிட்டார்… நீச்சலடிச்சார்னு சொல்லுவ… என்னடா சாதி மதம் … மனுஷங்கடா நாம … எங்கப்பா சாமி கும்பிடலனாலும் அந்த கடவுள் மனுஷங்களுக்கு என்ன பாடங்கள் எடுத்தாரோ அதை அப்படியே ஃபாலோ பண்ணுவார் … ஆனா உங்க அப்பா காலையிலயே எந்திரிப்பாராம் ….. விளக்கு வச்சு வணங்குவாராம் வெள்ளையும் சொள்ளையுமா விபூதி போட்டுட்டு திரிவாராம் ஆனா செய்றது எல்லாம் ஃபிராடுத்தனம் கேடித்தனம்….”

” தமிழ் ப்ளிஸ்… ” என்ற பரிதியிடம் ,

“கொஞ்சும் போது டப்பாஸ்… டப்பாஸ்  கோபப்படும் போது தமிழ்… தமிழ்… போடா… ஆனாலும் உன்னைய பிடிச்சு பைத்தியமா சுத்துறேன் பாறேன்… ப்ச் விடு விடு… நீ உன் பக்கம் சரி … நான் என் பக்கம் சரி … உங்கப்பாவுக்கு அவர் பக்கம் சரி இதான் சொல்லுவ… ” பரிதி உணர்ச்சிவசப்பட்டவன் ,

“டப்பாஸ் என்னைய இவ்வளவு தெரிஞ்சு புரிஞ்சு வச்சுருக்க… ஆனா நான்…”

“டேய் சாக்கி ரொம்ப எமோஷனல் ஆகாத .. உங்கப்பா கிட்ட எதிர்த்துப் பேசி .. அவர் அந்த தடிய என் மண்டைலயே போட்டுட்டா… அதான் நான் அங்க பேசாம இங்க பேசுறேன்.. அந்த அளவுதான் என் தைரியம்….” பரிதிக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது. அவளை இழுத்து அணைத்துக் கொண்டவனிடம் ,

“சரி நாம சண்டை போட்டுக்கிட்டோம் … நான் கிளம்புறேன்” என்ற தமிழ் அவன் நெஞ்சில் முத்தமிட்டுக் கொண்டே ,

“இப்ப நான் ஒன்னு சொன்னா … ” என்றவள் அவனைப் பிரிந்து ,

” சினிமா டையலாக்னு கிண்டல் பண்ண மாட்டியே ” என்றவாறு ,

Advertisement