அத்தியாயம் -41

ஹர்ஷா அதிர்ந்து போய் அப்படியே நின்றிருக்க, அவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே ஹாசி தன் வாயில் இருந்த சிகரெட்டை பத்த வைக்க போக, வேகமாக அவள் அருகில் ஓடியவன் அந்த சிகரெட்டை தட்டிவிட்டு, கையில் இருந்த லைட்டரை பிடுங்கி,

“என்னடி பண்ணுற” என்று பதறி போய் கேட்க,

அவளோ கூலாக “பார்த்தா தெரியல தம் அடிக்க போறேன் தம்மு….. தம்மு…..ரொம்ப ஒரு மாதிரி ஸ்ட்ரஸா இருக்கு. அதான் அடிக்கலாமேன்னு……” என்றவளை கண்கள் தெறிக்க பார்த்தவன்,

“என்னடி பேசுற…நீ தம் அடிப்பியா…”

“ஹாஹாஹா….. என்ன ஹர்ஷா.. நான் வளர்ந்த கல்ச்சர் என்ன? வளர்ந்த இடம் என்ன? அங்க இது எல்லாம் பெரிய விஷயமே இல்லைங்கறது உனக்கு தெரியாதா? இப்போ எதுக்கு தம்ம தட்டிவிட்ட” என்றவள் கோபமாக கேட்க,

தலையில் கை வைத்து அமர்ந்தவன் ‘இதைதான் கார்ல வரும்போது யோசிச்சுட்டு வந்திருப்பாளோ’ என்று எண்ணியவன் அதை அவளிடமே கேட்க,

அவளோ தோள்களை குலுக்கி தன் தடுமாற்றத்தை மறைத்துவிட்டு, அவன் அருகில் சென்றவள் “இப்போ எதுக்கு இதை கைல வச்சிட்டு இருக்க. என்கிட்ட குடு” என்று லைட்டரை பிடிங்கி கொண்டாள்.

“ஹோ….. உனக்கு தம் ஸ்மெல் பிடிக்காதுல சரி நான் பால்கனிக்கு போறேன் நீ தூங்கு” என்று போக போனவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் “ஹாசி ஒரு மனுஷனுக்கு ஒரே நாளுல எத்தனை ஷாக்தான் குடுப்ப. இன்னைக்கு இந்த கோட்டா போதும்.

என்னால முடியல. நீ பண்றதுல எனக்கு நெஞ்சு வலி வந்துரும் போல, தம்மு கும்முன்னு சொல்லிட்டு இருக்காம வந்து படுமா. நான் டயர்ட் ஆகிட்டேன்” என்றவன் அப்படியே பெட்டில் சோர்ந்து போய் படுத்துவிட்டான்.

ஹாசியோ அவன் கோவப்படுவான். நான் அப்படிதான் பிடிக்கலைனா டைவர்ஸ் பண்ணிட்டு போன்னு சொல்லலாம்னு பார்த்தா….. படுத்தே விட்டானய்யாங்கற மாதிரில்ல இருக்கு இவன் பண்றது’ என்று நினைத்தவள் அவனையே யோசனையாக பார்த்து கொண்டு நின்றாள்.

“என்ன பார்த்துட்டேதான் இருக்க போறியா இல்ல தூங்க போறியா. ஒழுங்கா பெட்லயே படு. கண்ட கண்ட கதை படிச்சுட்டு சீரியல் பார்த்துட்டு சோபால படுக்கறேன், கீழ படுக்கறேன்னு ஒளறிட்டு இருக்காதா”

“எதே ஒளரலா…. ஹாலோ…. நான் ஏன் கீழ படுக்கணும் நீ போய் கீழ படு மேன். நான் பெட்ல படுக்கணும்”

‘இவகிட்ட பேசியே என் ஆவி போகுது’ என்று மனதுள் புலம்பியவன் “அட வாடி சும்மா எப்போ பாரு முட்ட கண்ண வச்சி உருட்டி உருட்டி முழிச்சுட்டு எதாவது தத்தக்கா பித்தக்கான்னு பேசிட்டு” என்றவாறு அவள் கையை பிடித்து இழுக்க,

அவன் இப்படி இழுப்பான் என்று எதிர்பாரதவள் அவன் மேலேயே பொத்தென்று விழுந்தாள்.

“ஆத்தி……” என்றவன் கத்த, படக்கென்று அவன் மீது இருந்து உருண்டு பெட்டின் அடுத்த பக்கம் சென்று அமர்ந்தவளுக்கும் ஒரு நிமிடம் பட படப்பாகதான் இருந்தது.

“என்ன ஹர்ஷா இது இப்படியா இழுக்கறது”.

“தப்புதான்டி தப்புதான் பார்க்க ஆள் ஒல்லியா இருக்கியேன்னு இழுத்தது தப்புதான் பார்க்கதான் இப்படி இருக்க, ஆனா வெயிட்டு சொர்ணா அக்கா வெயிட்டு இருக்கடி. ஹப்பா மூச்சு விடவே முடியல” என்றவன் சொல்ல,

அவனை கடுப்பாக பார்த்தவள் “யார் அந்த சொர்ணா அக்கா அவங்கள எப்போ நீ தூக்குன? அவங்க வெயிட் உனக்கு எப்படி தெரியும்?” என்றவள் தொடர்ந்து கேள்விகளை கேட்க,

ஹர்ஷா சத்தமாக சிரிக்க துவங்கினான்.

அவன் சிரிப்பதை புரியாமல் பார்த்தவள் “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கற”

“ஹாஹஹாஹா….. ஒன்னும் இல்ல சும்மா….”

“ஹிஹிஹி….சும்மா சிரிக்கறவங்களுக்கு பேரு பைத்தியம். உனக்கு தெரியுமா…. தெரியாதா”

“ம்ம்ம்….. கல்யாணம் பண்ணுனாலே அவங்க பைத்தியம்தான். அது தெரியுமா உனக்கு. அப்புறம் சொர்ணாக்கான்னா ஒரு எமோஷன் உனக்கு அது புரியாது” என்றவன் கொடுப்புக்குள் சிரித்தவாறு அவளை மேல் இருந்து கீழாக பார்க்க,

பல்லை கடித்தவள் “ஹர்ஷா….” என்று கத்த,

அவனோ “சரி எனக்கு தூக்கம் வந்துடுச்சு, நான் தூங்கறேன்” என்றவன் திரும்பி படுத்து கொள்ள,

ஹாசியோ யார் அந்த சொர்ணாக்கான்னு சொல்லாமலே தூங்கறான்னே, அதுமட்டும் இல்லாம எமோஷன்னு வேற சொல்றான் யாரா இருக்கும்’ என்று நினைத்தவள் “ஹர்ஷா….. ஹர்ஷா….” என்றவள் கத்தியும் எந்த பதிலும் அவனிடம் இல்லாமல் போக,போனை எடுத்தவள் சொர்ணாக்கா என்று கூகுளில் சேர்ச் பண்ண, வந்த போட்டோவை பார்த்து அதிர்ந்து ‘ஆத்தி நான் என்ன இந்த அம்மா மாதிரியா இருக்கேன். அடேய்….. ஹர்ஷா…. உன்னை…’ என்றவள் திரும்ப,

அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான். ‘நீ காலைல எந்திரி அப்போ இருக்கு உனக்கு’ என்றுவிட்டு தானும் சென்று படுத்துவிட்டாள்.

அடுத்த நாள் காலை ஹாசி எழும்போது ஹர்ஷா கை அணைப்பில் இருந்தாள்.

முதலில் கோபமாக நிமிர்ந்தவள் அவனும் உறக்கத்தில் இருப்பதை கண்டு, நாமதான் தூக்கத்துல உருண்டு வந்திருப்போம் போல என்று நினைத்து அவனை ரசித்து பார்க்க துவங்கினாள். ஆணவனின் நெருக்கத்தில் மயங்கிதான் போனாள் பேதை.

பல வருட கனவு இன்று பழித்ததை எண்ணி மனதுள் மகிழ்ந்தவள் அவனையே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள். ஆடவனின் கூர் நாசியும், வளர்ந்தும் வளராமலும் இருக்கும் குறுந்தாடியும், ஏறி இறங்கும் மார்பும் என அவனில் தொலைந்து போனவள் தன்னை மறந்து அவனில் மூழ்கி போனாள்.

எவ்வளவு நேரம் அவனையே பார்த்து கொண்டிருந்தாளோ போன் அடிக்கும் சத்தம் கேட்டு தன்னிலை அடைந்தவள்’டேய் பிராடு என்னை மயக்க பாக்குறியா? கொன்னுடுவேன் உன்னை. இன்னும் நீ என்கிட்ட பட வேண்டியது நிறைய இருக்கு வெயிட் பண்ணு’ என்று நினைத்தவள் தன்னை சுற்றி வளைத்திருக்கும் அவனது முரட்டு கரங்களில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆஆ……” என்ற அலறலோடு எழுந்தவன், கையை தேய்த்து கொண்டே ஒன்றும் புரியாமல் விழிக்க,

அவனை முறைத்தவள் “என்னடா அட்வான்டேஜ் எடுக்கலாம்னு பாக்குறியா. இப்படி இறுக்கி பிடிச்சுட்டு படுத்திருக்க, ஏதோ நான் வளர்ந்த இடம்……” என்றவள் சொல்லும்போதே,

“போதும் ஹாசி இது சாதாரண விஷயம்”

“ஆமா சாதாரண விஷயம்தான். அதுவும் நான் வளர்ந்த இடத்தாலதான் இது சாதாரண விஷயம். இங்க இருக்க பொண்ணுங்ககிட்ட இப்படி நடந்துகிட்டேனா கையை ஒடச்சிடுவாங்க” என்றவள் கோபமாக சொல்ல,

ஹர்ஷாவோ அவளை ஆழ்ந்து பார்த்து “இங்க இருக்க பொண்ணுங்களை என்னோட பெட் ரூம் வரை நான் கூப்பிட மாட்டேன். என்கூட என் ரூம்ல இருந்த இருக்க போற ஒரே பொண்ணு நீதான். நீ மட்டும்தான். அதுவும் என் பொண்டாட்டி”

“ஹர்ஷா தேவையில்லாம பேசாத இதைபத்தி நாம ஏற்கனவே பேசிட்டோம். மறுபடியும் மறுபடியும் என்னை பேச வைக்காத, பொண்டாட்டி பன்னு ரொட்டின்னு உளராம, ஒழுங்கா சொன்ன மாதிரி நல்ல பையனா ரூம் மெட் மாதிரி ஒரு வருஷம் இருந்தமா, அதுக்கப்புறம் என்னை எங்க ஊரை பார்த்து அனுப்புனமான்னு இருக்க பாரு சொல்லிட்டேன்” என்றவள் சொல்ல,

ஆணவனுக்கு ஏனோ மனதில் அவனையும் அறியாமல் வலி ஏற்பட்டது. அது எதனால் என்பதை யோசிக்க விடாமல் போன் அடிக்க, அதை எடுத்து பார்த்தவன் ஆபிசில் இருந்து போன் எனவும் அட்டன் செய்து பேசியவன் “சரி ஓகே நான் உடனே கிளம்பி வரேன்” என்றுவிட்டு பாத்ரூம் நோக்கி ஓடினான்.

அவன் போவதை பார்த்தவள் தோள்களை குலுக்கி கொண்டு தானும் குளிக்க, மித்ரா அறை நோக்கி சென்றாள்.

ஹர்ஷா கிளம்பி கீழே வர, அவனை மேலும் கீழும் பார்த்த தேவகி பாட்டி “என்னடா காலைலயே கிளம்பி இருக்க”

“ம்ம்…. ஆபிஸ்ல இருந்து போன் வந்திச்சு நான் போகணும். டிபன் ரெடியா?”

“என்ன அர்ஷா கிளம்பறேன்னு சொல்ற, இன்னைக்கு மித்ரா மாப்பிள்ளைக்கூட விருந்துக்கு வர்றா”

“அவ வர்றது சாப்பிட, நீங்க செஞ்சு வைக்க போறீங்க. அவ சாப்பிட போறா, இதுல நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன்?”

கிருஷ்ணன், “என்ன ஹர்ஷா இப்படி சொல்ற? மாப்பிள்ளை வரும்போது நீ இங்க இல்லைன்னா அது மரியாதையா இருக்காது. நான்தான் உன்னை பதினைஞ்சு நாள் லீவு போட சொன்னேன்ல”

“ப்பா….. நான் போயிட்டு வந்துடுவேன். ஒரு முக்கியமான வேலை முடிச்சுட்டு உடனே கிளம்பிடுவேன். ப்ளீஸ்ப்பா புரிஞ்சுக்கோங்க”

“இல்ல ஹர்ஷா….. மாப்பிள்ளை….”

ஹாசி, “விடுங்க மாமா. அவரு போயிட்டு வரட்டும். அதான் வேலைன்னு சொல்றாருல்ல, அண்ணாட்ட நான் பேசிக்கறேன்” என்று சொல்ல,

ஹர்ஷா அவளை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான்.

கிருஷ்ணன் ஏதோ சொல்ல வர “இல்ல மாமா என்கிட்ட கேட்டுட்டுதான் அவர் ஆபிஸ்க்கு வரேன்னே சொன்னாரு. ஒன்னும் பிரச்சனை இல்ல. அவரு போயிட்டு வரட்டும். அதான் சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்றாருல்ல” என்றவள் சொல்ல,

ஹர்ஷாவோ ‘ஆத்தி இவ இப்போ நமக்கு சப்போர்ட் பண்றாளா இல்ல வேற ஆப்பு பின்னாடி வச்சிருக்காளா தெரியலையே’ என்று மனதில் புலம்பினாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.

மித்ரா நிரஞ்சன் சொன்னது போல் மறுவீட்டு விருந்திற்கு வந்துவிட்டனர். ஹர்ஷா இல்லாததை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை தங்கையுடன் பேசியவன் பேச்சி பாட்டியிடம் பேசி கொண்டிருந்தார். அவரும் ஊருக்கு கிளம்புவதாக சொல்ல, அவரை அணைத்து விடுவித்தவன் “எங்களோட அமெரிக்காக்கு வாங்க பாட்டி ஜாலியா இருக்கும்” என்று சொல்ல,

அவரோ “அந்த பேரிக்கா எல்லாம் எனக்கு செட் ஆகாது. நமக்கு வாய்க்கா, வரப்புதான் சரியா இருக்கும். நீ உனக்கு நேரம் கிடைக்கறப்ப இங்க வாயா” என்று சொன்னவர் சற்று நேரத்திலேயே கிளப்பிவிட்டார்.

ஹர்ஷா வேலையை முடித்து வர மூன்று மணி ஆனது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கிருஷ்ணன்தான் அவனை முறைத்து கொண்டிருந்தார்.

நிரஞ்சன் மற்றவர்களுக்காக சாம்பிரதாயத்துக்கு இரண்டு வார்த்தை அவனோடு பேசியவன் அதன்பின் அவனை கண்டுகொள்ளவில்லை.

ரஞ்சன், “மாமா ஆபிசில் இருந்து போன் மேல போன் வருது நாங்க அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்பறோம். அது வரை நீங்க அங்க வந்து எங்க கூட இருக்கலாமே. மித்ராக்கும் உங்க கூட இருந்த மாதிரி இருக்கும்” என்க,

பத்மா, கிருஷ்ணன் இருவரும் மகளை பிரிய போகிறோம் என்ற கவலையில் அவளை பார்க்க, அவளும் கண்ணில் நீரோடு அவர்களைதான் பார்த்து கொண்டிருந்தாள்.

ரஞ்சன் அவர்கள் பதிலுக்கு காத்திருப்பதை கவனித்த கிருஷ்ணன் “இல்ல மாப்பிள்ளை அது……”

மித்ரா, “அப்பா….. ப்ளீஸ்ப்பா…. காரணம் எதுவும் சொல்லாதீங்க. வாங்கப்பா எல்லாரும் ஒன்னா இருக்கலாம்” என்று சொல்ல,

பத்மா மாமியாரை பார்க்க அவரோ “நமக்கு எப்போவும் புள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம். நாம என்ன வெளி ஊருக்கா போக போறோம் இதோ இருக்கு அடுத்த தெரு அங்கதானே வாங்க போயிட்டு நம்ம பொண்ண பிளைட்ல ஏத்திவிட்டுட்டு அப்புறம் இங்க வரலாம்” என்றவர் ஹாசியை நக்கலாக பார்த்து கொண்டே சொல்ல,

ஹாசி முகமோ பேயரைந்தார் போல இருந்தது. அட கடவுளே நம்ம ஆத்தாவ சமாளிக்க முடியாதே. அது முன்னாடி ஹர்ஷாவ நாம ஒன்னுமே பண்ண முடியாதே சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டோம். இதை பார்க்க மாட்டோமா’ என்று நினைத்து கொண்டு தாய் வீட்டிற்கு கிளம்ப சென்றாள்.

ஒருவழியாக அனைவரும் கிளம்பி ரஞ்சன் வீட்டிற்கு வர அவர்களை பார்த்த ரேவதிக்கு மிகுந்த மகிழ்ச்சி “ஹப்பாடா நானே சொல்லலாம்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க” என்றவர் அவர்களை தடபுடலாக வரவேற்றார்.

உறவுகளை விட நண்பர்கள்தான் கஷ்ட்டத்திலும் நஷ்டத்திலும் உடன் இருந்து நமக்கு தோள் கொடுப்பர். இங்கு நண்பர்களாக இருந்தவர்கள் உறவாக மாறி ஒன்றாக இருக்கும் தருணத்தை மகிழ்ச்சியாக செலவழித்தனர்.

மறுவீட்டு விருந்து, திருமண அலைச்சல் என அனைத்தும் முடிந்து அனைவரும் நார்மல் வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.

ஹாசி ஆபிசில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க, மித்ராவிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

‘இவ என்ன இப்போ கூப்பிடறா’ என்ற யோசனையோடே போனை எடுத்த ஹாசியிடம், அமெரிக்கா கிளம்பும் முன் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் ஷாப்பிங் செல்ல வருகிறாளா” என்றவள் கேட்க,

சற்று நேரம் யோசித்தவள் “சரி வரேன், ஈவினிங்தானே” என்று கேட்க,

ஆமாம் என்ற பதில் அவளிடம் இருந்து வந்தவுடன், ஒரு மாலின் பெயரை சொல்லி அங்கிருக்கும் ஐஸ்கிரீம் பார்லரில் காத்திருப்பதாக சொல்லி போனை வைத்து விட்டாள்.

மித்ரா அடுத்ததாக தன் அண்ணனுக்கும் அழைத்து ஹாசினியை அழைத்து வர சொல்ல, மனைவியுடன் முதன்முதலில் வெளியே செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தில் தங்கையிடம் சரியென்றவன் வேகவேகமாக தன் வேலையை முடிக்க துவங்கினான்.

மணி எப்போது நான்கு ஆகும் என்று காத்திருந்தவன் நான்கு மணி ஆன அடுத்த நிமிடம் வாசலை நோக்கி ஓடினான்.

அப்போது அவனுக்கு எதிரில் வந்த அர்ச்சனா மீது இடிக்க சென்று பின் விலகி நின்றவன் “சாரி மேடம்” என்று விட்டு ஓட,

அர்ச்சனாவோ ஓடும் அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள். அப்போது அவள் தோளில் ஒரு பட யார் என்றவள் திரும்பி பார்க்க அவள் தோழிதான் அங்கு நின்றிருந்தாள்.

அவளை பார்த்து கண்களை எட்டாத சிரிப்பை உதிர்த்த அர்ச்சனா “போலாமா” என்று கேட்க,

அவளோ “என்னடி ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”என்று கேட்க,

அவளோ “வேண்டான்னு விலகிட்டோம்தான் ஆனா மூணாவது மனுஷனா அவனை பார்க்கறது பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னவள் பெருமூச்சை வெளியிட்டு “எனிவே இதான் நிதர்சனம் ஏத்துக்க பழகிக்கறேன்” என்றுவிட்டு நடக்க துவங்க,

அவள் தோழியோ வீட்ல பேச பயமும் இருக்கு, லவ் பண்ணுனவனும் வேணும்னு நெனச்சா எப்படி முடியும். தைரியமா பேச முடியாத முதுகெலும்பு இல்லாத உனக்கு எல்லாம் எதுக்குடி லவ்வு, தலையெழுத்து” என்று தலையில் அடித்துக் கொண்டு அவளும் சென்று விட்டாள்.

ஹர்ஷா ரெஸ்ட் ரூம் சென்று தலையை ஒதுக்கி சட்டையை நீட்டாக டக் இன் செய்து வெளியில் வர, அவனை ஆவென்று பார்த்த சுமேஷ் “என்னடா பொண்ணு பார்க்க போற மாப்பிள்ளை மாதிரி ரெடி ஆகற” என்று கேட்க,

அவனோ “ஆமா எனக்கே எனக்கான பொண்ணதான் பார்க்க போறேன்” என்று சொன்னவன் “தள்ளு தள்ளு உன்னை மாதிரி மொட்ட பசங்க கூட எல்லாம் பேச எனக்கு நேரம் இல்ல. நான் என் பொண்டாட்டிய பார்க்கணும்” என்றுவிட்டு செல்ல,

“டேய் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆணவத்துல ஆடாதடா. நானும் சீக்கிரம்……”

“கிழவன் ஆவ. மாப்பிள்ளை ஆக எல்லாம் வாய்ப்பே இல்ல ராசா. நான் இருக்க வரைக்கும் அதுக்கு விட மாட்டேன்” என்றவன் கத்தி சொல்ல,

சுமேஷோ’இவனுக்கு அப்படி நாம என்ன பண்ணிட்டோம்னு இப்படி கொலை வெறில சுத்திட்டு இருக்கான். ம்கூம்…. முதல்ல இவன் சாவகாசத்தை விடணும்’ என்றவன் புலம்பி கொண்டே வீட்டிற்கு கிளம்பினான்.

ஹர்ஷா ஹாசியுடன் நேரம் செலவிட விரும்பினான். ஆனால் அவர்கள் மட்டும் வெளியில் சென்றால் கண்டிப்பாக அவள் எதாவது வம்பிலுப்பாள் சுமுகமான உறவு இருவருக்கும் இடையில் இருக்காது என்று எண்ணியதால் பத்மா சொன்ன போதும் கூட ஹாசியை அவன் வெளியே எங்கேயும் அழைத்து செல்லவில்லை.

ஆனால் அவன் அப்படி அழைத்து செல்லாததையே ஹாசி சரியாக தவறாக எண்ணி கொண்டாள். ‘பன்னாட நாயி நம்ம கூட எல்லாம் வெளிய வருமா. இதே அந்த அச்சுவோ குச்சுவோ அது கூடன்னா நாக்கை தொங்க போட்டுட்டு போயிருப்பான் பிராடுகாரன்’ என்று தனக்குள் திட்டி கொண்டது வேறு கதை.

ஹாசி ஆபிஸ் வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவளுக்கு அழைக்க அவளோ அழைப்பை ஏற்கவே இல்லை.

‘ம்ச்…. போன எடுக்க மாட்டிக்கிறா பிசியா இருக்காளா இல்லை வேணும்னே போனை எடுக்கலையான்னு தெரியலையே’ என்று யோசித்து கொண்டே வண்டியை பார்க்கிங்கில் விட்டவன் உள்ளே செல்ல,

அங்கு பார்த்த காட்சியில் அவன் காதுகளில் புகை வர துவங்கியது.

அப்படி என்ன பார்த்திருப்பான் என்பதை அடுத்த எபியில் நாம பார்க்கலாம்.