ஹர்ஷா குளித்துவிட்டு கீழே வர பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அவரை கண்டு கொள்ளாதவன் கண்கள் ஹாசியை காணாமல் தேட துவங்கியது.
‘எங்க போனா வெளியே ஏது இருக்காளோ’ என்று கண்களை சூழலவிட்டவன், கிச்சனில் நின்று பத்மாவுடன் பேசி கொண்டே காபி குடித்து கொண்டிருந்தவள் மேல் நிலைத்தது.
தலைக்கு குளித்து இருந்தவள் இரு பக்கமும் முடி எடுத்து ஒரு கிளிப் போட்டு இருந்தாள். இள ரோஜா நிற மென் பட்டு அணிந்திருந்தவள் முகமும் ரோஜா நிறத்தை பிரதிபலிக்க, அஞ்சனம் பூசிய அவள் விழிகள் பத்மாவுடன் பேசும்போது பல பாவனையை வெளிப்படுத்த அவள் அழகில் சொக்கி போனவன் அப்படியே அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்து கன்னங்களில் கை வைத்து பார்க்க துவங்கினான்.
‘அட…. அட…. அட…. என்ன அழகா இருக்கா. ப்ரெஷா……செடில இருந்து பறிச்ச ரோஜா மாதிரி இருக்காளே….. இன்னைக்குதான் இவ அழகா இருக்காளா…இல்ல எப்போவும் அழகா இருப்பாளா…’ ஹைய்யோ நாம இவளை கவனிச்சு பார்த்தது இல்லாததால ஒன்னும் தெரிய மாட்டிகிதே.
ஒருவேளை நமக்கு கண்ணுதான் சரியில்லையோ, பொண்டாட்டி ஆகிட்டாங்கறதுக்காக நம்ம கண்ணு அவளை அழகா காட்டுதோ’ என்று நினைத்தவன் கண்களை தேய்த்து ‘பொய் சொல்லாத கண்ணு பொய் சொல்லாத. இந்த மாய பிம்பத்தை அழிச்சுட்டு அவ உண்மையான முகத்தை காட்டு’ என்றவாறு கண்களை அழுத்தி தேய்த்து கொண்டிருந்தான்.
அதை கவனித்த பாட்டி “என்னடா அர்ஷா ஏன் கண்ணை போட்டு இப்படி தேய்க்கற. கண்ணுல எதுவும் விழுந்துடுச்சா என்ன?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவன் மீண்டும் அவன் மனைவியை பார்த்துவிட்டு, இப்போவும் அழகாதான் தெரியறா. ஆனாலும்……ரெக்கை மட்டும் இருந்தா என் ஆளு தேவதை டா……’ என்று நினைக்க,
அவன் முன் வந்து நின்ற அவன் மனசாட்சி’யாரு அர்ச்சனாவா….. அவளை நீ இப்படி எல்லாம் சொன்னது இல்லையே’ என்று சந்தேகம் கேட்க,
அதை முறைவன் மானங்கெட்ட மனசாட்சியே கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா. அவ இனி யாரோட ஆளோ. நான் சொன்னது என் ஆள….. என் பொண்டாட்டிய…..’ என்று பல்லை கடித்தவனை கண்டு நக்கலாக சிரித்த மனசாட்சி ‘எப்போல இருந்து அவ உன் ஆளு ஆனா. வீட்ல சொன்னதுக்காகதானே கல்யாணம் பண்ணுன’.
‘எப்படி பண்ணுனா என்ன. அவ என் பொண்டாட்டிதானே அப்போ என் ஆளுதான். நீ கேவலமா யோசிக்காம போ அங்கிட்டு’ என்றவன் கிச்சனை பார்த்து “ம்மா……” என்று குரல் கொடுத்து தான் வந்ததை தெரியப்படுத்திவிட்டு போனை நோண்ட துவங்கினான்.
மனசாட்சியோ ‘டேய் அப்போ நீ அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டியா’ என்க,
‘லவ் எல்லாம் இல்ல. ஆனா அவதான் என்னோட லைப். அவதான்….. அவ மட்டும்தான் என் வாழ்க்கை முழுக்க அதனால வாழ நினைக்கறேன்னு சொல்லலாம். காதல்……’ என்று இழுத்து பெரு மூச்சுவிட்டவன் ‘எதிர் காலத்துல வரும்னு நினைக்கறேன். எப்படி இருந்தாலும் அவளுக்கு உண்மையா இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதனால எனக்கு டைம் வேணும் பார்க்கலாம்’ என்று சொல்ல,
அவனை கேவலமாக பார்த்த அவன் மனசாட்சி ‘இப்படி பேசற எத்தன பேரை பார்த்துருக்கேன். நீ சீக்கிரம் உன் பொண்டாட்டி காலுல விழ போறது உறுதி மாமே. இதை வெளிய சொன்னா, நம்மல கிறுக்கன்னு இவன் சொல்லுவான். எதுக்கு வம்பு இவனுக்கு தெரியறப்ப தெரியட்டும். வரட்டா மாமே…….. டுர்……’ என்று போய் விட,
இவன் எதுக்கு இப்போ நம்ம இப்படி பார்த்துட்டு போறான் என்று மனசாட்சி போனதைபற்றி யோசித்து கொண்டிருந்தவன் முன் தங்க வளையல் அணிந்த மெல்லிய கரம் காபி கப்புடன் நீண்டது.
அதில் தன்னிலை அடைந்தவன் “தேங்க் யூ….. பொண்டாட்டி….” என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தான்.
பொண்டாட்டி….. பொண்டாட்டி என்று சொல்லி அவன் மனதில் பதிய வைக்கிறானா இல்லை அவள் மனதில் பதிய வைக்கிறானோ யாருக்கு தெரியும்.
பொண்டாட்டி என்றவுடன் பல்லை கடித்தவள் ’பெரிய மன்மதன்னு நினைப்பு’. கண்ணை நோண்டி எடுக்கணும்’ என்று முணு முணுத்தவாறு அங்கிருந்து செல்ல, ஹர்ஷா காதில் அவள் சொன்னது விழுந்தாலும் சிரித்து கொண்டே காபியை குடித்தான்.
அவன் எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்து அவனையே யோசனையாக பார்த்து கொண்டிருந்தார் தேவகி பாட்டி,
“என்ன டார்லிங்…. ஏன் என்னை இப்படி பார்க்குற. நான் உன்னோட பேரனேதான் வேற யாரும் இல்ல. ஒருவேளை இன்னைக்கு நான் ரொம்ப அழகா இருக்கேனா….. அதான் இப்படி பார்க்குறியா” ,
‘ம்கூம்….. அழகுதான் இவன் வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்று மனதில் நினைத்தவர் வெளியில் “ஹிஹிஹி….. ஒன்னும் இல்ல அர்சா….. ஹிஹிஹி…. ஒன்னுமே இல்ல” என்றவர் மனதில் ’என்ன அடி வாங்குன தடம் எதுவுமே இல்ல. ஆசி சொன்னதை பார்த்தா…..ஒருவேலை ஊம குத்தா குத்தியிருப்பாளோ, பாவம் என் பேரன் ஒரே ஒரு லவ்வ பண்ணிட்டு அவஸ்தை படுறான்.
ஆசிகிட்ட இவன் காதல் விஷயத்தை சொல்லாம இருந்திருக்கலாம். எங்க….. இந்த வாய் கண்ட்ரோல்ல இருக்க மாட்டாடிக்கிதே டப டபன்னு எதாவது ஒளறி வச்சிடுது.
ஆமா…. இப்போ இவன் காதல் விஷயம் ஆசிக்கு தெரியும்னு இவனுக்கு தெரியுமா தெரியாதா. இவனே நைட்டு சொன்னானா இல்லையா ஹைய்யோ மண்டை வலிக்குதே எல்லா கேள்விக்கும் பதில் இவன்கிட்ட கேட்டா தெரியும். ஆனா….. வேண்டாம் நாம ஆசிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
ஒருவேளை இவன் ஆசிகிட்ட சொல்லாமவிட்டு நான்தான் அவகிட்ட சொன்னேன்னு தெரிஞ்சுது என்னை அப்படியே போட்டோல என் புருஷனுக்கு சோடியா தொங்க விட்ருவான்’ என்று மனதில் நினைத்து கொண்டிருக்க, அவரை கவனித்த ஹர்ஷா,
“என்ன பாட்டி உன் பார்வையே சரியில்லையே ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்த மாதிரி இருக்கு. என்ன பண்ணுன? ஒழுங்கா நீயே சொல்லிடு” என்க,
‘ஆத்தி முழிய வச்சே கண்டுபிடிக்கறானே. ம்கூம்…. இனி இங்க இருந்தா இவன்கிட்டயே உளறிடுவோம் பேசாம எழுந்து போயிடுவோம்’ என்று நினைத்தவர் “ஹிஹிஹி….. ஒன்னும் இல்ல அர்சா. நான் போய் என் மககிட்ட பேசிட்டு வரேன்” என்றவர் எழுந்து நிற்க,
அவர் அருகில் வேகமாக வந்த ஹாசி “பாட்டி அம்மா வீட்டுல எத்தனை நாள் இருந்துட்டு வரணும்” என்று நல்லப்பிள்ளை போல் கேட்டாள்.
‘ஹைய்யோ இந்த பேச்சுதான் கிச்சன்ல ஓடுச்சா. இதை எதுக்கு என்கிட்ட வந்து கேட்கறான்னு தெரியலியே. தெரியாதனமா அட்வைஸ் பண்ண போய் இப்படி மாட்டிகிட்டனே. மக்களே என் நிலைமை உங்க யாருக்கும் வர கூடாதுன்னா ஒன்னே ஒன்னு சொல்றேன். அதை மட்டும் செய்ங்க.
வயசான காலத்துல சீரியல் பார்த்தாமோ சமைச்சு போட்டதை சாப்பிட்டாம்மான்னு இருந்துக்கணும். அதைவிட்டு தேவையில்லாம வேலை பண்ணி எப்படி சிக்கி இருக்கேன் பாருங்க’ என்று தனக்குள் அவர் புலம்பி கொண்டு இருக்க,
ஹாசி அவர் இடையில். இடித்து சொல்லு என்பது போல் கண்களால் அரட்ட,
அவரோ ’ஹயோ…..’ ஸ்க்ரிப்ட் குடுத்து பேசுன்னு சொன்னாலே. தடுமாருவேன். இவ வேற ஆன் டைம் பர்ப்பாமன்ஸ் கேட்குறாளே’ என்று விழித்தவர் “அது….. அ…. அது…… வந்து இப்போ நான் சொல்றது….” என்று தடுமாறியவரை அவள் முறைக்க,
பத்மாவோ “இதை எதுக்கு அவங்ககிட்ட கேட்குற ஹாசிம்மா. உனக்கு எவ்வளவு நாள் விருப்பமோ அவ்வளவு நாள் இருந்துட்டு வா. இதையெல்லாம் கேட்கணுமா என்ன? ஏங்க சொல்லுங்க”. என்று கிருஷ்ணனை பார்த்து சொல்ல,
அவரும் அதை ஆமோதிப்பது போல் “என்ன ஹாசி நீ முன்ன இருந்தமாறியே இருடா. கல்யாணத்துனால எதுவும் மாறது. ப்ரியா இரு. எதுக்கு புதுசா இதெல்லாம் கேட்டுட்டு இருக்க “ என்க,
அவர்களிடம் சமாளிப்பாக சிரித்து வைத்தவள் பாட்டியை பார்த்து கண்களை உருட்ட, அவளை கண்டு எச்சில் கூட்டி விழுங்கியவாறு பார்த்தார்.
உடனே அவள் கைகளால் ஒரு விரலை மட்டும் நீட்ட,
அவரோ புரிந்து கொண்டேன் என்பது போல் தலையசைத்து இப்போ பாரு என் பார்பாமன்ஸ என்று அவளை கெத்தாக பார்த்தவர் மருமகள் புறம் திரும்பி “அது என்ன பத்து அப்படி சொல்லிட்ட. கல்யாணத்துக்கு அப்புறமும் அவங்க வீட்லயே இருந்தா. நம்ம குடும்பத்தோட எப்படி ஒட்டுவா. அதுமட்டும் இல்லாம அர்ஷா வேலைக்கு போறது இல்லையா.
இங்க பாரு ஆசி காலைல போனோமா பொழுது எறங்குன உடனே கிளம்புனமான்னு இங்க வந்துடனும் புரிஞ்சுதா” என்று சொல்ல, அவள் அப்பாவியாக தலையை ஆட்டினாள்.
கிருஷ்ணனோ, “ம்மா….. என்னம்மா”
“சூ……. இதுவே என் கட்டளை…. என் கட்டளையே என் சாசனம்” என்று புடவை முந்தானையை உதறி தோளில் போட்டவர் தன் அறை நோக்கி ஓடிவிட,
பத்மாவோ “அவங்க கிடைக்கறாங்க. நீ போய் உன் விருப்பம் போல இருந்துட்டு வாம்மா. இந்த வீடு என்ன உனக்கு புதுசா என்ன பழக” என்று கணவனை முறைத்தவாறு சொல்ல,
அவளோ பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு “பரவால்ல அத்த. பாட்டி சொல்ற மாதிரி நான் நைட்டு வந்துடறேன். வந்த முதல் நாளே வீட்டு பெரியவங்க அவங்க பேச்சை மீறுன மாதிரி பண்ணிட கூடாதுல்ல. நான் தப்பா எதுவும் சொல்லலியே. உங்களுக்கு…..”
பத்மா, “எங்களுக்கு என்னம்மா வர போகுது. இந்த மாமியா கிழவி இப்படிதான் அந்த காலம் மாதிரியே பேசும் நீ எதுவும் நினைச்சுக்காதம்மா”,
அப்பாவியாக தலையாட்டி கொண்ட ஹாசியை பார்த்த பத்மாவிற்கு மாமியாரின் மேல் கோபமாக வந்தது. அதை அவரிடம் காட்ட முடியாதவர் வழக்கம் போல் கணவரை முறைக்க,
அவரோ ’பார்க்க ஆரம்பிச்சுட்டா. இனி நம்ம தலைதான் உருளும்’ என்று மனதில் புலம்ப துவங்கிவிட்டார்.
பத்மா, “ஹாசி நீ போய் ரெடி ஆகி வாம்மா. உங்க வீட்டுக்கு போயிட்டு வருவீங்க. ஹர்ஷா நீயும்தான் போய் கிளம்பி வா” என்க,
சம்மதமாக தலையசைத்தவனுக்கு பாட்டியின் திருட்டு முழியும், ஹாசியின் அரட்டல் விழியும் வந்து வந்து போக,’ரெண்டும் ஏதோ பண்ணுதுங்க என்னனு தெரியலையே. சீக்கிரமே கண்டுபிடிக்கறேன் என்று நினைத்தவன் யோசனையுடனேயே கிளம்ப சென்றான்.
ஹாசி கிளம்பி கீழே வர, அவள் தலை நிறைய மல்லி பூவை வைத்துவிட்ட பத்மா “அழகா இருக்கடா” என்று சொல்லி நெட்டி முறிக்க,
இருவரின் ஒற்றுமையை பார்த்தவன் மனதில் அர்ச்சனா இந்த இடத்தில் இருந்தா இவங்க இப்படி சந்தோசமா இருப்பாங்களா. அம்மாகூட அவ ஒட்டுவாளா. ம்கூம்….. பூ இவ்ளோ வேண்டாம் தலைவலிக்கும்னு சொல்லுவா.
ரெண்டாவது நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்கறது. எங்க அப்பா சொல்றதைதான் கேட்பேன்னு நிப்பா, ஆனா….. ஹாசி எல்லாரோடவும் செட் ஆகறா, நமக்கும் புதுசு இல்ல. நாம தப்பான முடிவு எடுக்கல.
அவ சம்திங் டிபரண்ட்……அவ மட்டும்தான் இனி வாழ்க்கை தேவையில்லாம வேற எதையும் இனி யோசிக்க கூடாது.’ என்று நினைத்தவள் அவளையே பார்த்து கொண்டிருக்க,
அவன் அருகில் வந்தவள் “ஹர்ஷா போலாமா” என்று கேட்க, அவனும் அவளை பார்த்து வசீகரமாக சிரித்தவன் “ம்ம்ம்……” என்று தலையசைத்தவாறு முன்னால் செல்ல,
அவனது அந்த சிரிப்பில் மயங்கி போனவள் அப்படியே நின்றிருக்க, கார் ஹாரன் சத்தம் கேட்டு தன்னிலை அடைந்தவள் ‘பூ….. ச்சி….. என்னடி ஹாசி ஒரு சிரிப்புக்கே இப்படி மயங்கி நிக்கிற, போற போக்கை பார்த்தா நீ அவனை பலி வாங்கற மாதிரி எல்லாம் தெரியல. சீக்கிரமே அவன்கிட்ட விழுந்துடுவன்னுதான் நினைக்கிறேன்’ என்ற மனசாட்சியை கோபமாக பார்த்தவள்,
‘அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. இன்னொருத்தி பின்னாடி போனதுக்கு என்னோட கல்ச்சர பத்தி பேசுனதுக்குன்னு எல்லாம் அவனுக்கு வரிசையா இருக்கு. என்ன சின்ன வயசுல இருந்து இருக்க லவ் அதை எப்படி என்னால விரட்ட முடியும். அதான் அவன் அப்படி சிரிக்கவும் எட்டி பார்த்துருச்சு. இப்போ அது தலைல தட்டி உட்கார வச்சிட்டேன்.
இனிமே பாரு என் பர்பாமன்ஸ. அவனை ஓட…. ஓட…. அடிக்கறேன்’ என்று சபதம் போட்டவள் வேகமாக சென்று காரில் அமர்ந்தாள்.
இருவரும் மறுவீட்டு விருந்திற்கு கிளம்பி ரஞ்சன் இல்லம் நோக்கி சென்றனர்.
அவர்கள் செல்லும் வரை வெளியில் வராத பாட்டி ‘என் மருமகளை கூட சமாளிச்சுட்டேன். இவளை என்னால சமாளிக்க முடியலையே’ என்று புலம்பி கொண்டிருக்க,
“ஆமா எல்லாரும் என்ன மாதிரி அப்பாவியா இருப்பாங்களா” என்றவாறு உள்ளே வந்தார் பத்மா.
அவரை முறைத்த பாட்டி “என்ன? நீ அப்பாவியா? ஏன்டி உன்கூட கிட்ட தட்ட அம்பது வருஷமா ட்ராவெல் பண்றேன் நீ பெரிய தில்லாலங்கடின்னு எனக்கு தெரியாமய்யா இருக்கும். தேவையில்லாம என் வாயை புடுங்காத சொல்லிட்டேன்.
ஏற்கனவே ஒருத்திகிட்ட பேசிதான் இப்போ மாட்டிகிட்டு முழிச்சுட்டு இருக்கேன். இப்போ மறுபடியும் என் வாயை கிளறாத ஆமா சொல்லிப்புட்டேன்”.
“ஆமா. உங்க வாயி பிரியாணி அண்டா. அதை நான் கிண்டி பீஸ் தேடுறேன். அது என்ன என்னை மட்டும் தில்லாலங்கடின்னு சொல்லறீங்க. அது மட்டும் இல்லாம அம்பது வருஷம்னு சொல்லறீங்க.
எனக்கு ஒன்னும் அம்பது வயசு ஆகல. ஜஸ்ட் நாற்பத்து ஒன்பதுதான் ஆகுது” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொன்னவரை கேவலமாக பார்த்த பாட்டி “ஏன்டி இப்போ அதுவா முக்கியம். சரி எதுக்கு இப்போ இங்க வந்த அதை சொல்லு”
அவர் அப்படி சொன்னவுடன் விழித்தவர் பின் “அதுவும் முக்கியம்தான் மாமியா கிழவி” என்று அவர் கன்னத்தை பிடிக்க போக,
“ஏய் எதா இருந்தாலும் தூர இருந்தே பேசு. இல்ல நடக்கறதே வேற. நேரம் காலம் தெரியாம கொஞ்சிட்டு இருப்பா” என்று சொல்லும்போதே கிருஷ்ணன் தாயிடம் பேச வந்தவர் இருவரும் பேசி கொண்டிருப்பதை கண்டு சிரித்து கொண்டார்.
வெளியில் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கறது உள்ள யாருக்கும் தெரியாம கொஞ்சிக்கறது இதுங்க இந்த ட்ராமாவ எப்போதான் நிறுத்துங்களோ தெரியல. இதுல இடைல என்னையும் போட்டு உருட்டறது’ என்று புலம்பி கொண்டவர் அவர்களை கவனிக்க துவங்கினார்.
“பார்றா…. ரொம்பதான். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி இருக்கீங்க”
“அதை ஏன்டி கேட்குற. நைட்டு வீட்டு பெரியவளா என் பேரன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சில பல அட்வைஸ் ஆசிகிட்ட சொன்னேன். அதுல அர்ஷா காதலையும் சொல்லிட்டேன்” என்க,
கிருஷ்ணன், “என்னது ஹர்ஷா லவ் பண்ணுன விஷயம் ஹாசிகிட்ட சொல்லிட்டீங்களா” என்று அதிர்ச்சியாக கேட்டு கொண்டே உள்ள வர,
மகன் குரலை கேட்டு திகைத்து போனவர் “நீ எப்போடா வந்த?” என்க,
அவரோ “ ரொம்ப முக்கியம். ஆமா நீங்க ஏன் ஹாசிகிட்ட சொன்னீங்க?”
“அதான் சொன்னனேடா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு….. ஆனாலும் ஹாசி ரொம்ப கோவமா உங்க பேரனை பழிவாங்ககுவேன்னு சொல்லிட்டு போயிட்டா. இதுல வேற அவன் காதல் விஷயத்தை நான்தான் சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடுவேன்னு என்னை பிளாக்மெயில் பண்றா”என்று சோகம் போல சொல்ல,
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அதை கவனித்த பாட்டி “எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பார்த்துக்கறீங்க” என்க,
அவரோ “எங்ககிட்ட ஹர்ஷா லவ் விஷயத்தை சொன்னதே ஹாசிதான்” என்று கூற,
பாட்டியும் “காலைலதானே சொல்லியிருப்பா…. சொல்லியிருப்பா……” என்று கழுத்தை நொடித்தவாறு சொல்ல, இருவரும் ஒரு சேர இல்லை என்று தலையசைத்தனர்.
“இல்லையா அப்படினா……. “ என்று புரியாமல் பார்த்தவரை பாவமாக பார்த்த இருவரும் “கல்யாணத்துக்கு முன்னாடியே எங்களை தனியா கூப்பிட்டு பேசுனா அப்போ சொன்னா……”
பாட்டி, “எதே……”
கிருஷ்ணன், “ம்ம்……அதுமட்டும் இல்ல……”
“இன்னும் என்னடா வச்சிருக்கீங்க” என்று பயந்து போய் கேட்டவர் அவர்கள் சொன்ன பதிலில் நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார்.
அப்படி என்னவா இருக்கும்……அடுத்த எபியில் பார்க்கலாம்.