Advertisement

அத்தியாயம் –14

 

 

சுஜய் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். “இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுறீங்க

 

 

“தவம் பண்ணிட்டு இருக்கேன்

 

 

“எதுக்கு தவம்

 

 

“சாமியாரா போகறதுக்கு தான் தவம்

 

 

“அதுக்கென்ன இப்ப அவசியம்

 

 

“அவசியம் தான் புரியாதவங்களோட என்ன பண்ண முடியும். அதான் அப்படி ஒரு யோசனை

 

 

“போதும் போதும் இப்போ என்ன புரியாம போயிடுச்சாம் எங்களுக்கு. இப்படி குளிச்சுட்டு வந்து தலையை கூட துவட்டாம கல்லு மேல உட்கார்ந்திட்டு யோசனை வேற, இதுல கேள்வி கேட்டா இடக்கா ஒரு பதில் வேற சொல்றது என்றவள் துண்டை எடுத்து அவன் தலையை துவட்டினாள்.

 

‘ஆனா மீனா இடக்கா பதில் சொல்றது அவரா இல்லை நீயா என்று அவள் மனசாட்சி வேறு அவளை கேள்வி கேட்க மீனாவின் கோபம் இப்போது மனசாட்சியின் மீது திரும்பியது.

 

 

‘தேவையில்லாம நீ வேற எதுக்கு வந்து என் உயிரை வாங்குறபோ என்று விரட்டினாள்.

 

 

“மீனு என்னதிது நானே துவட்டிக்கறேன், விடு எல்லாரும் பார்க்கறாங்க

 

 

“பார்த்தா என்ன, நான் என் புருஷனுக்கு தானே தலை துவட்டுறேன், அதுல என்ன தப்பு. யாராச்சும் வந்து என்னை கேள்வி கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கறேன்

 

 

“என்ன ரொமான்ஸ் நடக்குது இங்க, இப்படி எல்லார் முன்னாடியும் ரெண்டு பேரும் சீன் காட்டிட்டு இருக்கீங்க என்று வந்தாள் தேனு.

 

 

‘எங்க இருந்து தான் வருவாங்களோ தெரியலை, இப்போ தான் இவளே தலையை துவட்ட ஆரம்பிச்சா, அது பொறுக்காம தங்கச்சிக்காரி எப்பவும் போல வந்திட்டா. கதிர் உன் பாடு கொஞ்சம் கஷ்டம் தான் என்று நினைத்துக் கொண்டான் சுஜய்.

 

 

“ஹேய் தேனு இங்க நின்னுட்டு என்ன பண்ணுறா

 

 

“அதுவா மாமா இந்த மீனாக்காவும் மாமாவும் ஷோ காமிக்கிறாங்க, பயங்கர ரொமான்ஸ் போங்க

 

 

“அவங்க புருஷன் பொண்டாட்டி தனியா இருக்கும் போது நீ இப்படி தான் கரடி மாதிரி நுழைஞ்சு குட்டையை குழப்புவியா. போ போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு

 

 

“என்ன என்னை சும்மா விரட்டுறீங்க, இப்போ என்ன சொல்லிட்டேன். புருஷன் பொண்டாட்டி தனியா போய் கொஞ்ச வேண்டியது தான், இங்கேயே வா என்று நொடித்தாள் அவள். மீனாவுக்கு தங்கச்சியாயிற்றே வேறே எப்படி பேசுவாள்.

 

 

“சரி வா நாமளும் பதிலுக்கு ஒரு ஷோ காட்டிருவோம் என்றவன் சட்டென்று அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொள்ள தேனு விதிர்விதிர்த்து போனாள்.

‘இவன் தான் இவளுக்கு சரியான ஜோடி, சபாஷ்டா கதிர் என்று நினைத்துக் கொண்டான் சுஜய்.

 

 

“என்ன மாமா பண்ணுறீங்க, சீய். எங்கப்பன் பார்த்துச்சு என்னை கொன்னே போடும். விடுங்க என்னை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்று நகர்ந்தாள்.

 

 

“சாரிண்ணே, இவ ஒரு லூசு அவ பேசுறதை தப்பா எடுத்துக்காதீங்கண்ணே என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.

 

 

“இதுக்கு தான் மீனு சொன்னேன், விடு

 

 

“எனக்கு எதை பத்தியும் கவலையில்லை

 

 

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது, உன்னால ஏட்டிக்கு போட்டியா பேசாம இருக்கவே முடியாதா மீனு. உனக்கு தன்மையாவே பேச வராது போல என்று தோள்களை குலுக்கினான்.

 

 

“இப்ப என்ன ஏட்டிக்கு போட்டியா பேசிட்டேன் நானு என்று முறைத்தாள். ‘என்கிட்ட பேசுற மாதிரி அவர்கிட்ட ஏட்டிக்கு போட்டியா பேசாதேன்னு அவள் அன்னை சொன்னது நினைவில் ஆடியது. நான் தான் இவர்கிட்ட இப்படி பேசுறனா

 

 

‘அப்படி பேசக்கூடாதுன்னு நினைச்சாலும் என் வாய் சும்மாவே இருக்க மாட்டேங்குதே, என்ன செய்ய என்று யோசிக்க “என்ன மீனு என்ன யோசனை

 

 

“பேசாம இருந்தா என்னன்னு தான் யோசனை

 

 

“ரொம்ப கஷ்டம்

 

 

“யாருக்கு

 

 

“எனக்கு தான்

 

 

“எப்படி

 

 

“எப்படின்னு கேட்டா எப்படி சொல்ல முடியும்

“சொல்லி தான் ஆகணும் எப்படின்னு சொல்லுங்க

 

 

“சரி கரண்ட் போனா எப்படியிருக்கும்

 

 

“ஒரே இருட்டாயிருக்கும்

 

 

‘அய்யோ அய்யோ என்று நினைத்தவன் “நல்லா தூங்கிட்டு இருக்கோம், அப்போ எப்படியிருக்கும்

 

 

“தூக்கம் கலைஞ்சு போகும்

 

 

அவன் தலையில் அடித்துக் கொள்ளாத குறை, “தூக்கம் எதனால கெட்டு போகும்

 

 

“காற்று இருக்காது ஒரே புழுக்கமா இருக்கும், அதுனால தூக்கம் கெடும்

 

 

“அதே தான் நீ பேசாம இருந்தா எனக்கும் புழுக்கமாயிருக்கும் என்றுவிட்டு அவள் கையில் வைத்திருந்த மாற்றுடையை வாங்கிக் கொண்டு மறைவிற்கு சென்றான் அவன்.

 

 

அவன் திரும்பி வரும் வரை அதே இடத்தில் அவள் நிற்க “என்ன இன்னும் யோசனை மீனு

 

 

“உங்ககிட்ட ஒரு விஷயத்தை நான் ஒத்துக்கறேன். இதுவரைக்கும் எங்க ஊர்ல கூட நான் யார்க்கிட்டயும் ஒத்துக்கிட்டது இல்லை என்று சொல்லி நிறுத்தினாள்.

 

 

“என்ன ஒத்துக்கிட்டது இல்லை

 

 

“எனக்கு நீங்க சொல்ல வந்தது புரியலை, நான் கொஞ்சம் மக்கு தான். ஏதோ நீங்க என்னைவிட கொஞ்சம் கூட படிச்சதால இதை உங்ககிட்ட ஒத்துக்கறேன். எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்க

 

 

சுஜய்யால் அவள் கொடுத்த பில்டப்பை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மனம் விட்டு சிரித்தான்.

 

 

“சிரிக்காம பதில் சொல்லுங்க, பேசாம இருந்தா புழுக்கமாயிருக்குமா. இல்லை பேசினாலா சரியா சொல்லுங்க என்று அவனை முறைத்தாள்.

 

 

“ரொம்ப நேரம் கரண்ட் இல்லாம அப்புறம் அது வந்தா எப்படியிருக்கும்

 

 

“சுகமா இருக்கும் நல்லா தூக்கம் வரும்

 

 

“நீ பேசாம இருக்கறது என் மனசுக்கு புழுக்கமாவும், நீ பேசிட்டே இருக்கறது சுகமாவும் இருக்கும். அதை தான் அப்படி சொன்னேன்

 

 

“இதுக்கு முன்னாடி நீங்க என் பேச்சை கேட்டிருக்கவே மாட்டீங்களே அப்போ எப்படியிருந்தீங்க

 

 

“நீ ஐஸ் கேக் சாப்பிட்டிருக்கியா

 

 

“ஹ்ம்ம் சாப்பிட்டிருக்கேன், எங்க ஊர்ல ஐஸ் அடிக்கடி கிடைக்கும். நல்ல கேக் வாங்கணும்ன்னா தேனி வரைக்கும் வந்து வாங்கி சாப்பிட்டிருக்கோம்

 

 

“நான் சொன்னது ஐஸ் தனியா, கேக் தனியா இல்லை. இதுல கேக்கே ஐஸ் மாதிரி தான் இருக்கும்

 

 

“அப்படியா நான் அதை சாப்பிட்டது இல்லை, ஆமா நான் ஒரு கேள்வி கேட்டா நீங்க எதுக்கு இவ்வளவு உதாரணம் சொல்றீங்க. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்ல மாட்டீங்களா, கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவீங்களே

 

 

“இனி உன்கிட்ட இவ்வளவு உதாரணம் எல்லாம் சொல்ல மாட்டேன், இதே கடைசி, உனக்கு புரியற மாதிரி சொல்லணுமே அதான் இப்படி விளக்க வேண்டி இருக்கு

 

 

“நீ சாப்பிட்டே பார்க்காத ஒண்ணை பத்தி நான் கேட்டா உன்னால பதில் சொல்ல முடியாது. அதுவே நீ சாப்பிட்டு பார்த்த பிறகு கேட்டா இது இப்படியிருக்கு அப்படியிருக்குன்னு சொல்லுவ தானே.

 

 

“அது போல தான், இப்படி யாரும் என்கிட்ட பேசினதே இல்லை, உன்னை தவிர. உன் பேச்சை கேட்காத வரை எனக்கு எதுவும் தோணினதே இல்லை. நானே அதிகம் பேசினது இல்லை, எனக்கு இது ரொம்ப புதுசு.

“ஆனா இப்போ இந்த ஒரு மாசமா நான் உன்னை பார்த்திட்டு தான் இருக்கேன், நான் என்ன பேசினாலும் பதிலுக்கு பதில் பேசுற. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால தான் அப்படி சொன்னேன்

 

 

“இதுக்கு மேல என்னை கேள்வி கேட்காதே தாயே, என்னால ரொம்ப யோசிக்க முடியலை, போதும் என்று சொல்லி இரு கைகளையும் மேலே உயர்த்தினான்.

 

 

அவளிடம் பேசிவிட்டு அவன் அங்கிருந்து நகர யாரோ ஒருவர் பேசுவது அவள் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

 

 

“நம்ம மீனா ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணவ, அந்த ரெண்டு பயலுகளுக்கும் தான் இவளை கட்டிக்க கொடுத்து வைக்கல போல. இவளுக்கு இப்படி ஒரு மகராசன் வந்து புருஷனா அமையணும்ன்னு இருக்கு

 

 

“பார்க்க நல்லா லட்சணமா பணம் காசோட எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஒருத்தன் இந்த காலத்துல எங்க கிடைக்குறான். இதுக்கு தான் அவளுக்கு எந்த வரனும் அமையலை போல

 

 

அந்த ஊர்க்காரர்கள் அதுவரை அவளை ராசியில்லாதவள் என்று பேசியிருக்க, இன்றோ அதிர்ஷடமானவள் என்று பேசுகின்றனர். எல்லாவற்றிக்கும் காரணம் அவனே என்று அவள் மனதில் தோன்ற சற்றே ஒரு கர்வம் அவளுள் வந்தது.

 

 

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் மீனாவின் அன்னை இருவரையும் ஒரு அறையில் உட்கார வைத்து உப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் வைத்து சுற்றி போட்டார். “அம்மா என்னம்மா இதெல்லாம்

 

 

“சுத்தி போடுறேன்டி, இந்த ஊர்க்காரங்க கண்ணு பூரா உங்க ரெண்டு பேரு மேல தான் இருக்கு

 

 

“அந்த மூக்காத்தா கிழவி அன்னைக்கு உன் கல்யாணம் நின்னப்ப என்ன பேச்சு பேசினா, இன்னைக்கு நீ அதிர்ஷ்டக்காரி, யோகக்காரின்னு பேசுறா. மருமகனை பார்த்து கண்ணு வைக்கிறா

 

 

“அதான் உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போட்டேன்

 

 

“போம்மா உனக்கும் வேலையில்லை அந்தா மூக்காத்தாவுக்கும் வேலையில்லை. அந்த கிழவி நான் இல்லைன்னதும் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகுதா சொல்லி வைம்மா அதுகிட்ட

‘சுஜய்க்கு ஒன்று நன்றாக புரிந்தது, மீனா மட்டுமல்ல அவள் அன்னையும் அதிகம் பேசுவார் என்று. மீனுவிற்கு அவள் அன்னையிடம் இருந்து தான் இப்படி பேசும் பழக்கம் வந்திருக்கிறது என்றும் புரிந்தது.

 

 

ஒரு கெட்ட காரியம் நடந்த வீட்டில் நல்ல விஷயம் பேசவேண்டும் என்று சொல்ல சுஜய் சட்டென்று “நம்ம கதிர் கல்யாணத்தை பத்தி பேசுவோமே என்றான்.

 

 

முருகேசன் அவனை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்தார். “கதிர் கல்யாணமா என்று இழுத்தார் ராஜேந்திரன்.

 

 

“ஏன்பா கதிருக்கு கல்யாணம் பண்ண வேண்டாமா, சொந்ததுலயே பொண்ணிருக்கு. பேசி வைச்சுக்கலாமே– சுஜய்

 

 

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதை உள்ளிருந்து காமாட்சி பார்த்துக் கொண்டிருந்தார். தன் கணவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்தார்.

 

 

“யாருன்னு யோசிக்கறீங்களாப்பா, நம்ம தேனுவை கேட்கலாமே

 

 

“என்ன ராசேந்திரா யோசிக்கிற, தம்பி சரியா தானே சொல்லியிருக்கு. நம்ம தேனுவுக்கும் கதிருக்கும் கட்டிக்கற முறை தானே. ஆனா ஒண்ணு எதுவானாலும் அவங்களை கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்டுட்டு மேற்கொண்டு பேசுங்க

 

 

“என்னப்பா இன்னும் யோசனை

 

 

“நானும் அய்யா சொன்னது தான் யோசிச்சேன். நாம பேசி வைப்போம் அப்புறம் அவங்க பிடிக்கலைன்னு சொன்னா நமக்கு தானே கஷ்டம். ஒரு வார்த்தை அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு கேட்டுக்கலாம்

 

 

“நான் போய் முதல்ல கதிரை கூட்டிட்டு வர்றேன் என்று எழுந்தான் சுஜய்.

 

 

வீட்டு பெண்களிடம் கூறி தேனுவின் சம்மதத்தை கேட்டறிந்தனர். கதிர் அவர்களின் முன் வந்து நிற்க “கதிரேசா உனக்கு தேனுவை கட்டி வைக்கலாம்ன்னு ஒரு யோசனை, உன் விருப்பம் என்ன

 

 

“உங்களுக்கு சரின்னு பட்டதை செய்ங்கப்பா என்றான் ரொம்பவும் நல்ல பிள்ளையாக. சுஜய் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான். ‘இவ்வளவு நல்லவனா நீ என்பது போல் இருந்தது.

 

 

“அப்போ தேனுக்கு சம்மதமான்னு கேட்டுட்டு சீக்கிரமே கல்யாணத்தை வைச்சுடலாம், என்ன சொல்றீங்க மச்சான் என்றார் ராஜேந்திரன் முருகேசனை பார்த்து.

 

 

“எனக்கும் அது தான் சரின்னு படுத்து மாமா, கல்யாணத்தை சீக்கிரமே வைச்சுடுவோம் என்று தன் சம்மதத்தை உடனே தெரிவித்தார் அவர்.

 

 

கதிர் சுஜய்யிடம் தனியே “ரொம்ப நன்றிண்ணே எப்படி வீட்டில இந்த பேச்சு ஆரம்பிக்க போகுதுன்னு யோசனையாவே இருந்துச்சு. நீங்க தொடங்கி வைச்சுட்டீங்க

 

 

“எனக்கு எதுக்கு கதிர் நன்றி எல்லாம், தேனுவை நீ நல்லா பார்த்துக்கோ அது போதும். சென்னை வேலை என்னாச்சு, எதுவும் தகவல் வந்துச்சா

 

 

“அண்ணே அது வந்து என்று தலையை சொரிந்தான் அவன்.

 

 

“அவங்ககிட்ட இருந்து எதுவும் தகவல் வந்திச்சா

 

 

“பேசினாங்கண்ணே, நான் தான் இன்னும் சம்மதம் சொல்லவே இல்லை

 

 

“நீங்க சொன்னதை பத்தி யோசிச்சேன். சொந்தமா செய்யலாம்ன்னு நினைக்கிறேன், சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்றேண்ணே

 

 

“எதுவா இருந்தாலும் சென்னைல செய் கதிர். நானும் இங்க தானே இருக்கேன், என்னால முடிஞ்சது நான் செய்யறேன்

 

 

“நமக்குள்ள ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலண்ணே. எனக்கு ஒண்ணுன்னா நீங்க தான் முதல்ல நிற்கறீங்க. ரொம்ப சந்தோசம்ண்ணே

 

 

சுஜய் லேசாக சிரித்துக் கொண்டான், வெளியே சிரித்தாலும் அவன் மனம் யோசனையை உள்ளடக்கி இருந்தது.

மறுநாள் சுஜய் ஊருக்கு கிளம்புவதாக கூறிவிட மீனா கவலையில் ஆழ்ந்தாள். வெகு நாளைக்கு பிறகு ஊருக்கு வந்திருக்கிறாள், தாத்தாவுக்கு காரியம் முடிந்த கையேடு உடனே கிளம்ப வேண்டுமா என்று இருந்தது அவளுக்கு.

 

 

சுஜய்யிடம் கேட்டால் முறைப்பான், வேறு வழியில்லை என்று உணர்ந்தவள் துணிகளை அடுக்கலானாள். இருந்தும் சுஜய்யிடம் “என்னங்க நாம இன்னும் ஒரு இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே

 

 

“என்ன மீனு புரியாம பேசுற, எனக்கு நெறைய வேலை இருக்கும்மா. உனக்கும் காலேஜ் திறந்திடும் உன்னை இங்க விட்டுட்டு போயிட்டு என்னால வந்து கூட்டிட்டு போக முடியாது. உன்னிஷ்டம் நீய முடிவு பண்ணிக்கோ என்றான் ஒரு மாதிரியான குரலில்.

 

 

‘இப்படி சொன்னா என்ன பண்ணுறது, மேலும் இரண்டு நாட்கள் இருக்க முடியாது என்பதை எவ்வளவு சூசகமாக சொல்லுகிறார். சொட்டைமண்டை என்று வழக்கம் போல் அவனை மனதிற்கு வைதாள்.

 

 

சுஜய் மதுரையில் இருந்து ரயிலில் கிளம்புவதற்கு பதிவு செய்திருக்க மறுநாள் அவர்கள் வாடகை கார் பிடித்து மதுரைக்கு சென்றனர். முதல் வகுப்பு பெட்டியில் அவர்கள் ஏறி அமர அவர்களை வழியனுப்பி வைத்தனர் உடன் வந்தவர்கள்.

 

 

சென்னைக்கு வந்து சேர்ந்ததும் மீனாவுக்கு புத்தகங்கள் வாங்குவது, உடை வாங்குவது என்று அவளை கூட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தான்.

 

 

ஒரு நாள் திடிரென்று அவளுக்கு பகலில் போன் செய்தான். அப்போது தான் சாப்பிட்டுவிட்டு கிளம்பி சென்றிருந்தவன் போன் செய்ததும் என்னவோ ஏதோவென்று பதறியவாறே கைபேசியை எடுத்து பேசினாள்.

 

 

“ஹலோ மீனு, என்ன இவ்வளவு நேரமா போன் எடுக்க

 

 

“என்னங்க இப்போ தானே கிளம்பி போனீங்க, அதுக்குள்ள போன் வந்ததும் நான் பயந்துட்டேன்

 

 

“என்ன பயம்

 

 

“ஒண்ணுமில்லை, நீங்க சொல்லுங்க என்ன அவசரமா எனக்கு போன் பண்ணியிருக்கீங்க

“உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும் சொல்லு

 

 

“இதுக்கு தான் போன் பண்ணீங்களா

 

 

“ஆமாம் சீக்கிரம் சொல்லு

 

 

“லட்டு, ஜாங்கிரி, பால்கோவா… என்று அவள் இழுத்துக் கொண்டிருக்க “இத்தனை ஸ்வீட் பிடிக்குமா என்றான் அவன் இடையிட்டு.

 

 

“இன்னும் இருக்கு, இப்போதைக்கு இது போதுங்க, ஆனா என்ன விஷயம் என்று அவள் கேட்க அதற்குள் போன் வைக்கப்பட்டிருந்தது.

 

 

‘என்னாச்சு இவருக்கு போன் பண்ணார், என்ன ஸ்வீட் பிடிக்கும்ன்னு கேட்டார். போனை வைச்சுட்டார். சரியான லூசா இருப்பார் போல என்ன விஷயம்ன்னு சொல்லாமலே வைச்சுட்டார் என்று தனக்குள் புலம்பிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

அரைமணி நேரம் கழிந்திருந்த வேளையில் மீனா அவர்கள் அறையில் அமர்ந்து துவைத்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

 

 

வீட்டிற்குள் வேகமாக நுழைந்த சுஜய் மீனாவை தேட அவர்கள் அறைக்கு விரைந்து வந்தவன் கட்டில் அமர்ந்திருந்தவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

 

 

“என்னாச்சு… எதுக்கு இப்படி வேகமா வந்து என்னை பிடிக்கிறீங்க

 

 

“நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மீனு என்றவன் “ப்ளீஸ் மீனு என்று அவள் முகம் பார்த்தான்.

 

 

“என்ன சந்தோசமான விஷயம் எதுக்கு ப்ளீஸ் சொல்றீங்க

 

 

“சந்தோசமான விஷயத்தை அப்புறம் சொல்றேன், ப்ளீஸ் எதுக்குன்னா என்றவனின் இதழ்கள் அவள் இதழ்களை பேசவிடாமல் மூடியது.

 

 

சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன் “சொல்லு மீனு என்றான். “நான் சொல்ல என்ன இருக்கு என்றவள் அவனிடம் இருந்து விடுபட்டு நகர முற்பட “மீனு ப்ளீஸ் என்றான்.

“என்னது மறுபடியுமா

 

 

“ஹேய் இது அந்த ப்ளீஸ் இல்லை, இப்படியே என் கைக்குள்ளேயே இரேன்

 

 

“என்ன விஷயம் நீங்க இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க, அதை சொல்லவே இல்லையே

 

 

“முதல்ல இந்த ஸ்வீட் சாப்பிடு என்றவன் அவள் கேட்ட இனிப்பு வகைகளை அள்ளி வந்திருந்தான்.

 

 

“என்னது இது, நான் ஸ்வீட் பிடிக்கும்ன்னு தானே சொன்னேன். அதுக்காக நீங்க ஸ்வீட் கடையே வாங்கிட்டு வந்திருக்கீங்க

 

 

“உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடு மீனு

 

 

“இன்னும் விஷயத்தை சொல்லலை நீங்க என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் வாயில் லட்டை திணித்தான்.

 

 

“இன்னைக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்கு, ரொம்ப பெரிய ஆர்டர் அது. இது தான் முதல் முறையா நான் தனியா இருந்து இப்படி ஒரு முயற்சி எடுத்து அதுல வெற்றி அடைஞ்சு இருக்கேன்

 

 

“அதெப்படி இதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்படி எதுவும் கிடைச்சது இல்லையா

 

 

“ஹ்ம்ம் இருந்துச்சு. ஆனா நீ ஒண்ணை மறந்திட்டே, இது அப்பா ஆரம்பிச்ச கம்பெனி. அவர் பார்த்து வளர்த்துவிட்டது தானே. அதுல புதுசா ஒரு ஆர்டர் வந்தாலும் அது முன்னாடி நாம செஞ்சிட்டு இருக்கறது பார்த்து தானே வரும்

 

 

“ஆனா இங்க அப்படியில்லை, இது எனக்காவே அப்பா உருவாக்கினது. என்ன என்னால அப்போலாம் இங்க வரவே முடியலை. இங்க பெரிசா ஒண்ணும் நாங்க செய்யலை

 

 

“நான் இங்க வந்த பிறகு தான் முழுமூச்சா இதோட வேலைகளை பார்த்தேன். அதோட பலன் தான் இது, இது என்னோட தனிப்பட்ட முயற்சியா நான் நினைக்கிறேன். அதான் இவ்வளவு சந்தோசம்

 

 

“மீனு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், நாம எங்கயாச்சும் வெளிய போயிட்டு வரலாமா

 

 

“ஹ்ம்ம் போகலாம்

 

 

“சரி வா என்று அவள் சொல்ல “இப்படியேவா

 

 

“ஏன் என்னாச்சு

 

 

“வேற புடவை மாத்திட்டு வர்றேங்க

 

 

“வேணாம் இதுவே நல்லா தான் இருக்கு வா

 

 

“ப்ளீஸ் மாமா

 

 

“சரி மாத்திக்கோ

 

 

“சரி நீங்க வெளியே போங்க நான் மாத்திட்டு வந்திடறேன்

 

 

“நான் எதுக்கு வெளிய போகணும் மீனு

 

 

“என்ன மாமா விளையாடுறீங்களா

 

 

“நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலை மீனு. எதுக்கு அப்படி கேட்குற

 

 

“அய்யோ போங்க நீங்க நான் கிளம்பணும் வெளியே போங்க

 

 

“எதுக்குன்னு சொல்லு

 

 

“நான் புடவை மாத்தணும் கொஞ்சம் வெளிய இருங்க

 

 

“ஓ சாரி, ஆனா நான் ஏன் வெளிய போகணும் என்று கேட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

 

அவன் சென்றதும் அவன் கேட்டது அவள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ‘எனக்காக பார்த்து பார்த்து செய்யறார், ஆனா நான் என்ன எதிர்பார்க்கிறேன். எதுக்காக இப்படி இருக்கேன் என்று யோசிக்க தலை வலித்தது அவளுக்கு.

 

 

விரைந்து புடவையை மாத்திக் கொண்டு வெளியில் வந்தாள். “போகலாம் மாமா

 

 

அவன் அமைதியாகவே வந்தான், காரில் செல்லும் போதும் அவனிடம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘கோவிச்சுகிட்டு இருப்பாரோ

 

 

“மாமா… மாமா…ஏன் அமைதியா வர்றீங்க. என் மேலே எதுவும் கோபமா

 

 

“இல்லை என்றான் ஒற்றை சொல்லாக.

 

 

“அப்போ ஏன் இப்படி உம்முன்னு வர்றீங்க, எதாச்சும் பேசிட்டு வாங்க

 

 

“என்ன பேச உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை, ஒரு நேரம் மாமா, மாமான்னு பேசுற. ஒரு நேரம் நான் யாரோங்கற மாதிரி நீ நடந்துக்கறநீ இன்னும் என்னை உன்னோட கணவனா நினைக்கவே இல்லைன்னு தோணுது.நீ என்னை வெளிய போக சொன்னதுக்காக நான் இதை சொல்லலை

 

 

“உங்களுக்கு இது தான் கவலையா

 

 

“கவலைன்னு சொல்ல முடியாது ஒரு சின்ன வருத்தம்

 

 

“இங்க பாருங்க மாமா, நம்ம கல்யாணம் திடீர்ன்னு நடந்துச்சு. என்னால எதையுமே யோசிக்க முடியலை. முதல்ல எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்க அவர் தான் எனக்கு கணவராக போறார்ன்னு நினைச்சேன்

 

 

“ஆனா அவன் இறந்து போய் அந்த சூழ்நிலை மாறிபோச்சு. அதுக்காக அவன் மேல நான் காதலா இருந்தேன்னு சொல்ல மாட்டேன், இவங்க தான் நமக்கானவங்க அப்படின்னு ஒரு நினைப்பு அது

 

 

“திரும்பவும் ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்க, அப்பவும் நான் எதுவும் நினைக்கக் கூடாதுன்னு தான் இருந்தேன். இந்த மாப்பிள்ளை யாரையும் விரும்பலை, நாங்க மாப்பிள்ளையை கேட்டுட்டோம்ன்னு சொன்னாங்க

“சரி இவர் தான் எனக்கு வாய்க்க போறவர்ன்னு மனசு நினைக்க ஆரம்பிச்ச வேளை அந்த மாப்பிள்ளையும் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனார். அப்புறம் கதிருக்கு பேசினாங்க

 

 

“அந்த கதை உங்களுக்கே தெரியும், எனக்கு கதிர் மேல அப்படி ஒரு நினைப்பே இல்லை. கதிர் எனக்கு உடன்பிறப்பா தான் தெரிஞ்சான். திடுத்திப்புன்னு நீங்க தான் மாப்பிள்ளைன்னு சொன்னாங்க

 

 

“எதையும் யோசிக்கக் கூட அவகாசம் இல்லை, நம்ம கல்யாணம் நடந்து முடிஞ்சு போச்சு. என்னால இன்னுமே நம்ம கல்யாணம் அவசரமா நடந்ததை முழுசா உணரவே முடியலை

 

 

“எப்படியிருந்தாலும் நீங்க தான் என்னோட கணவர், இதுக்காக தான் அதெல்லாம் தட்டி போயிருக்குன்னு நான் இப்போ தான் நினைக்க ஆரம்பிச்சு இருக்கேன்

 

 

“உங்களை அன்னைக்கு பிடிக்கலைன்னு சொன்னது தப்பு தான். அது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்கும் புரியுது. எனக்கும் இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க, என் மனசு முழுசா உங்களை ஏத்துக்கிட்டு நாம நல்ல கணவன் மனைவியா வாழணும்னு நினைக்கிறேன்

 

 

“கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தாலும் மாமாவும் அத்தையும் அவ்வளவு அன்னியோன்யமா வாழ்ந்ததா நீங்க ஒரு முறை சொல்லியிருக்கீங்க, ராமு அண்ணாவும் சொல்லி இருக்காங்க

 

 

“நாமளும் அது போல ஒரு புரிதலோட ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழணும்னு நினைக்கிறேன். என்னோட உணர்வுகளை இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் பகிர்ந்துகிட்டது இல்லை

 

 

“இப்போ தான் முதல் முறையா உங்ககிட்ட சொல்லியிருக்கேன். நீங்க இனி இப்படி சொன்னா என்னால தாங்க முடியாது மாமா. எனக்கு இனி எல்லாமே நீங்க தான். அதை நீங்க புரிஞ்சுக்கணும் என்றாள் நீண்டதொரு விளக்கமாக.

 

 

சுஜய்க்கு புரிந்தது மீனு யாரிடமும் இவ்வளவு அமைதியாகவோ தன்மையாகவோ பேசியதில்லை என்று. தன்னுடைய முகச்சுளிப்பு அவளுக்கு வருத்தத்தை கொடுக்கிறது என்பதை உணர்ந்தான். அவளுடைய மனநிலையும் நன்றாகவே புரிந்தது.

 

 

“மீனு என்னோட மனநிலையிலே இருந்து பார்த்ததுல உன்னை என்னால புரிஞ்சுக்க முடியாம இருந்துட்டேன். இப்போ உன்னோட மனநிலை எனக்கு புரியுது மீனு. நான் எதுவும் உன்னை கஷ்டப்படுத்தி இருந்தா சாரிம்மா

 

 

“நீ எப்பவும் விளையாட்டா இருக்கற மாதிரி தான் எல்லாருக்குமே தெரியும். ஆனா நீ விளையாட்டான பெண்ணில்லைன்னு உன்னை ஊர்ல வைச்சு பார்க்கும் போதே நான் புரிஞ்சுகிட்டேன்

 

 

“உன்னோட கோபம் எல்லாம் உனக்கு நீயே போட்டுகிட்ட ஒரு வளையமோன்னு தோணுது. அது ஏன்னு எனக்கு தெரியலை. அதான் உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் அப்படி கேட்டேன்

 

 

“இனி நான் இப்படி என்னைக்குமே நடந்துக்க மாட்டேன் போதுமா. நான் பேசலைங்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா

 

 

“பின்ன கஷ்டமா இருக்காதா, ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நான் அப்படியிருக்கேன் அப்போ தெரியும் உங்களுக்குஎன்று அவள் விளையாட்டாக கூறினாள் அது உண்மையிலேயே விரைவிலேயே நடக்கும் என்பதை அறியாமல்.

 

 

“வேணாம் மீனு அப்படி மட்டும் செஞ்சிடாதே நீ பேசாம இருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் என்றான் அவனும் பதிலுக்கு.

 

 

 

  • காற்று வீசும்

Advertisement