Advertisement

அத்தியாயம் – 7
“உஷா, எல்லாம் சரியா எடுத்து வச்சுட்டியா…”
“வச்சுட்டேங்க…” பரபரப்பாய் இருந்த கணவரை நோக்கி சிரித்தவர், “எதுக்கு இப்படி வாசலுக்கும் உள்ளேயுமா ஓடிட்டு இருக்கீங்க…” என்றார்.
“அதென்னமோ… எல்லாம் சரியா நடக்கணுமேன்னு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு…” மனைவியிடம் சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த உறவினரை, “வாங்க மாமா…” என்று வரவேற்கவும் செய்தார்.
அப்போது ஐயர் உள்ளே வருவதைக் கண்டதும், “ஐயர் வந்துட்டார்… அம்மாவை வர சொல்லு…” சொல்லி கொண்டே அவரை வரவேற்றார். ஹாலில் அங்கங்கே பூந்தோரணங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்க ஹால் மத்தியில் தனித்தனி தாம்பூலத்தட்டில் மங்கள பொருட்கள் அழகாய் வைக்கப்பட்டிருந்தன. ஐயர் அதை சரிபார்த்து இல்லாத பொருட்களைக் கூற எடுத்து வருவதற்காய் சென்றார் உஷா.
ஸ்டைலு ஸ்டைலு தட்
திஸ் ஈஸ் சூப்பர் ஸ்டைலு தட்…
யுவர் ஸ்டைல் மாட்சிங் பீகாக் மீ தட்
ஓ டச்சு டச்சு டச்சு டச்சு யூ டச் மீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு யூ கிச்சு மீ
செவன் ஓ கிளாக் அபவ் மீ இன்ப லட்சுமி…
பாடிக் கொண்டே அணிந்திருந்த சுரிதாரை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்ட கோமளவல்லி லேசாய் கலைந்திருந்த பாப் முடியை ஒதுக்கிக் கொண்டு லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசும்போது கதவைத் திறந்து உள்ளே வந்தார் உஷா.
“அத்தை… ஐயர் வந்துட்டார்… அவர் உங்களை கூப்பிடறார்… நீங்க இன்னும் புறப்பட்டு முடியலையா…”
“ஐ ஆம் ரெடி உஷா… கமிங்…” சொல்லிக் கொண்டே துப்பட்டாவை ஸ்டைலாய் மடக்கி தோளில் போட்டுக் கொண்டவர், “உஷா, ஹவ் ஈஸ் மீ… லுக்கிங் பியூட்டி ஆர் பாட்டி…” என்றார் புன்னகையுடன்.
“யூ ஆர் ஆல்வேஸ் பியூட்டி அத்தை…” என்று புன்னகையுடன் பதில் சொல்லிய மருமகள் வெளியே செல்ல அவரும் ஹாலுக்கு சென்றார்.
ஹால் முழுதும் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க அதற்குப் பின்னில் இருந்த சோபாவில் சில முக்கிய உறவினர்கள் அமர்ந்து குடும்ப விஷயம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த கோமளவல்லியை வியப்புடன் நோக்கிக் கொண்டே நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“பேசிட்டு இருங்க… ஐஷூவைப் பார்த்திட்டு வந்திடறேன்…” என்றவர் பேத்தியின் அறைக்கு செல்ல அவள் பியூட்டிசியன் உதவியுடன் ரெடியாகிக் கொண்டிருந்தாள். சிவப்பு நிற லஹங்காவும் அதற்குப் பொருத்தமாய் அளவோடு  அணிந்திருந்த அணிகலன்களும் அவளுக்கு எடுப்பாய் இருக்க திருப்தியாய் புன்னகைத்தவர், “ஐஷூ பேபி… யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் மை டியர்…” என்று பேத்தியை மெல்ல அணைத்து நெற்றியில் இதழ் பதிக்க, “அச்சோ கோமு, லிப்ஸ்டிக்…” பதறினாள் அவள்.
“எஸ், ஐ பர்கட் இட்…” என்றவர் அவள் நெற்றியில் லேசாய் அடையாளம் பதித்திருந்த லிப்ஸ்டிக்கை தனது கைக்குட்டையால் துடைத்து விட்டார். அவர்கள் இருவரையும் அந்த பியூட்டிசியன் பெண்மணி வியப்புடன் நோக்கி நிற்க, “கவிதா, யூ ஹாவ் டன் வெல்…” என்று பாராட்டிக் கொண்டே, “ஓகே, ஐ ஆம் கோயிங் டு தி ஹால்… டேக் கேர் கவிதா…” என்று சொல்லிவிட்டு செல்ல கவிதா ஐஷுவிடம் கேட்டாள்.
“பாட்டி எப்பவும் இப்படிதானா… ரொம்ப வித்தியாசமான காரக்டரா இருக்காங்க…” என்றாள்.
“எஸ்… ஷீ ஈஸ் வெரி டிபரன்ட்…” என்றாள் ஐஷு பெருமையுடன்.
அன்னையைக் கண்ட கோபிநாத், “ஐஷூ ரெடியாகிட்டாளா அம்மா…” என்று கேட்க, “எஸ் ஷீ ஈஸ் ரெடி…” என்றவர் உறவினரிடம் பேச செல்ல, “மாப்பிள்ளை, பொண்ணோட குடும்ப விவரத்தைக் கொடுத்திட்டா நிச்சயதார்த்தப் பத்திரிகை ரெடி பண்ணி வச்சிருவேன்…” என்ற ஐயரிடம் வேண்டிய விவரங்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு சென்றார் கோபிநாத்.
“பக்கத்துல வந்துட்டோம்னு புருஷூ சொன்னானே… இன்னும் காணோம்…” என்றவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார் சத்தம் கேட்க புன்னகைத்தவர், “மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…” என்று உள்ளே நோக்கி குரல் கொடுக்க உஷாவும் மற்ற சிலரும் அவர்களை வரவேற்க வாசலுக்கு வந்தனர்.
யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்த கோமு, “ஓகே… ஐ வில் கால் யூ லேட்டர்…” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்து வரவேற்றார். புருஷூ இறங்குவதற்கு கோபிநாத் உதவி செய்ய மேனகா கார் கதவைப் பிடித்துக் கொண்டார்.
ரகுவின் குடும்பத்தில் முக்கியமான உறவினர்கள் சிலர் வந்திருக்க அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
“மாப்பிள்ளை வரலியா…” கேட்ட பெரியவர் ஒருவரிடம், “இல்ல, அவனுக்கு வர முடியல… ஒரு முக்கியமான வேலையை உடனே முடிக்கணும்னு சொல்லிட்டாங்க…” என்றார் மேனகா. வந்த அனைவருக்கும் கூல் டிரிங்க்ஸ் கொடுக்க எடுத்துக் கொண்டனர். 
உஷாவின் அருகில் வந்த மேனகா, “என்ன உஷா, என் மருமக ரெடியாகிட்டாளா…” என்று கேட்க,
“ம்ம்… அதெல்லாம் ரெடியாகிட்டா மேகி… மாப்பிள்ளை வரலன்னு அவகிட்ட இன்னும் சொல்லவே இல்லை…” என்றார் வருத்தமாய்.
“ம்ம்… பாவம், அவனும் என்ன பண்ணுவான்… உடனே முடிச்சாக வேண்டிய புரோஜக்ட், வர்றதுக்கு ரொம்ப டிரை பண்ணான்… முடியல போலருக்கு…” என்றார் மேனகா.
“பொண்ணு மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கோ… நல்லநேரம் முடியறதுக்குள்ளே நிச்சயதார்த்தப் பத்திரிகையை வாசிச்சுடலாம்…” என்றார் ஐயர். அவர் எழுதியதை வாங்கி கோபியும், புருஷூவும் சரி பார்த்துக் கொண்டிருக்க உஷா மகளை அழைக்க சென்றார்.
“அம்மா, நீங்களும் பார்த்திடுங்க…” என்று அன்னையிடம் நீட்ட கோமு வாங்கிக் கொண்டார். அதில் இன்னாரது பேத்தி என்ற இடத்தில் இருந்த கணவர் பெயரை எடுக்க சொல்லிவிட்டு அவர் பெயரை மட்டும் போடுமாறு கூற கோபிநாத்தும் அப்படியே செய்யுமாறு கூறினார்.
உஷா மகளை அழைத்துக் கொண்டு சபைக்கு வர எளிமையான அலங்காரத்திலும் பளிச்சென்று கண்ணை நிறைத்த ஐஸ்வர்யாவை நோக்கி புன்னகைத்த புருஷூ, “ரோஜாக்குட்டி… வாடா செல்லம்…” என்று அழைக்க, “இப்படி உக்காரு ஐஷூ…” என்று அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டார் மேனகா.
அவளது நெற்றிச் சுட்டியை சரியாக்கியவர், “அழகா இருக்கடா செல்லம்…” எனவும் புன்னகைத்தாள்.
“ராகு எங்கே… இங்க இருக்கற போலவே தோணலையே…” என யோசித்தவள் மெல்ல தலையை திருப்பி சுற்றுமுற்றும் பார்வையை வீச கண்களில் ஒரு ஏமாற்றம் படர்ந்தது.
“சாரிடா செல்லம்… ரகுவைத் தேடறியா… அவனுக்கு ஒரு முக்கியமான வேலையை உடனே முடிச்சாக வேண்டிய கட்டாயம்… அதான் வரமுடியலை…” மேனகா சொல்லவும் மனதுக்குள் ஒரு ஏமாற்றம் படர்வதை உணர்ந்தாள்.
“இந்த சொங்கி நிச்சயத்துக்கே வர முடியலையே… கல்யாணத்துக்கும் இப்படி வர முடியாமப் போயிட்டா ரொம்ப நல்லார்க்குமே…” என மனதைத் தேற்றிக் கொண்டாள்.
“பத்திரிகையை வாசிச்சுடலாமா…” ஐயர் கேட்க மற்றவர்கள் தலையாட்ட வாசிக்கத் தொடங்கினார். எல்லாரும் அதில் கவனமாக ஐஷுவின் மனம் ஏனோ பதியவே இல்லை.
வாசித்து முடித்ததும் அனைவரும் கைதட்டி வாழ்த்துத் தெரிவிக்க, அவன் இல்லையே என்று சந்தோஷிக்க முடியாமல் எதோ ஒன்று மனதை நெருடிக் கொண்டே இருப்பதன் காரணம் மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை.
“எங்க மருமகளுக்கு என்னோட சின்னப் பரிசு…” என்ற மேனகா ஒரு நகைப் பெட்டியைக் கொடுக்க, “நீயே போட்டு விடுமா…” என்றார் கோமளா.
அதைத் திறந்தவர் அழகாய் பளிச்சிட்ட ஆரத்தை எடுத்து மருமகள் கழுத்தில் அணிவிக்க அதற்காய் கழுத்தை தூக்கி நிமிர்ந்தவள் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ரகுவரனைக் கண்டதும் முதலில் வியந்து சட்டென்று அலட்சியமாய் முகத்தை வைத்துக் கொண்டாள். அவனை கவனித்துவிட்ட உஷா திகைப்புடன், “அடடே… மாப்பிள்ளை வந்துட்டாரே…” என்று கூற அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க புன்னகைத்தவன் சற்று கூச்சத்துடன் அன்னையின் அருகில் வந்தான்.
“வேலை முடிஞ்சதும் பிளைட் பிடிச்சு வந்துட்டேன்மா…” என்று கூற அவர் சிரித்தார்.
“அதானே… என் மருமகளைப் பார்க்கற சான்சை மிஸ் பண்ணுவியா… வா, வா… ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க… பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க…” என்றார்.
“ம்ம்… ஐஷூக்கு நான் ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன்…” கொடுத்திடறேன் மா…” என்றதும், “பார்ரா, குடு… குடு…” என்றார் அன்னை புன்னகையுடன்.
“ஆஹா, மாப்பிள்ள லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து கலக்கிட்டாரே…” என்ற கோமளவல்லியுடன் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.
அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்காமல் நின்றிருந்த ஐஷுவின் அருகில் வந்தவன், பாக்கெட்டில் இருந்த குட்டி நகைப் பெட்டியை எடுக்க அதில் ஒரு ஜோடி தங்க மோதிரங்கள் பளிச்சிட்டன. பெண்ணுக்குரிய மோதிரத்தை எடுத்துக் கொண்டு பெட்டியை அன்னையிடம் கொடுத்தவன் “ஐஷு, ஐ லவ் யூ…” எனவும், எல்லாரும் ஹேவென்று சிரிக்க அவள் திகைப்புடன் நிமிர, கண்களைக் கண்களோடு கலக்க விட்டுக் கொண்டே அவளது கையைப் பற்றியவன், மோதிர விரலில் மோதிரத்தைப் போட அப்போதும் அதிசயம் போல அவனையே நோக்கிக் கொண்டிருந்தவளை நோக்கி மின்னலாய் கண்ணடித்தவன், அதைவிட செகண்டில் உதட்டைக் குவித்து முத்தத்தைப் பறக்க விட நிலை குலைந்து அதிர்ச்சியும், வெட்கமுமாய் சிவந்து நின்றவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டே தன் கையை நீட்டினான்.
“ஐஷூ, மாப்பிள்ளைக்கு மோதிரத்தைப் போட்டுவிடு…” உஷா சொல்லவும், “இந்தா மா…” என்று மேனகா அவள் கையில் அவனுக்கான மோதிரத்தைக் கொடுக்க, தயக்கத்தோடு வாங்கிக் கொண்டவள் அவன் கையைப் பற்ற, பரவசமான புன்னகையுடன் அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க மோதிரத்தை அணிவித்தாள்.    
அனைவரும் கிளாப் செய்து பூக்களைத் தூவ புன்னகையோடு நின்றவன், “கிராண்ட்மா, எங்களை பிளஸ் பண்ணுங்க…” என்று ஐஷுவின் கையைப் பிடித்துக் கொண்டு கோமளாவின் காலில் விழ அவர் ஆசிர்வதித்தார்.
“காட் பிளஸ் யூ மை டியர்ஸ்… மேக் யுவர் பியூச்சர் பிரைட் அண்ட் பீஸ்புல்…” வாழ்த்தியவர் இருவரையும் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டார். அடுத்து பெற்றோர்கள், சில பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர்.
அதுவரை ஓரமாய் நின்று அனைத்தையும் காமிராவில் காட்சியாக்கிக் கொண்டிருந்த வீடியோகிராபர், “ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க, போட்டோ எடுக்கணும்…” என்றார். அவளுக்கு அருகில் தோளில் கை போட்டுக் கொண்டு நின்றவன் யாரும் அறியாமல் நகத்தால் மெல்ல முதுகில் சுரண்ட நெளிந்தவள் முறைத்தாள்.
“ஏய் பொண்டாட்டி, எதுக்கு இப்ப ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல முகத்தை வச்சிருக்க… கொஞ்சம் சிரிச்ச போல நின்னா குறைஞ்சா போயிடுவ…” அவன் கேட்கவும், கோபமாய் பல்லைக் கடித்தவள், “யாரு நான் மங்கியா… உனக்கு கண்ணாடி பாக்குற பழக்கம் இருக்கா… இருந்தா இப்படிக் கேட்க மாட்ட…” அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியம் பேச, அவன் சிரித்தான்.
“பொண்டாட்டி, என்னைக் குரங்குன்னு சொல்ல வர்றே… அப்படித்தான… அதென்னமோ உன்னைப் பார்த்தாலே மனசு குரங்கு போல பரபரக்குது… உன்னை அப்படியே தூக்கிட்டுப் போயி…” என்றவனின் பார்வை அவள் மேனியில் தாறுமாறாய் செல்ல கூசியவள் முறைத்தாள்.
“என்ன பேபி முறைக்குற… ஓ தப்பா மீன் பண்ணிட்டியா… இரு, சொல்லி முடிச்சுடறேன்…” என்றவன் உன்னை அப்படியே தூக்கிட்டுப் போயி யாருமில்லாத இடத்துல உக்காரவச்சு உன் மடில படுத்துக்கணும் போல மனசு பரபரக்குது…” என்றதும் அவள் பெருமூச்சு விட சிரித்தான்.
“இப்படி நில்லுங்க, அப்படி நில்லுங்க… கையை இங்கே வச்சுக்கோங்க…” என்ற போட்டோகிராபரின் கோரிக்கை அவனுக்கு கொண்டாட்டமாக, அவளுக்கு திண்டாட்டமாக இருந்தது. ரகுவோ இதுதான் சாக்கென்று கிடைத்த கேப்பில் எல்லாம் இடுப்பில் கை வைப்பது முதுகை சுரண்டுவது கூந்தலில் வாசம் பிடிப்பது என்று விளையாட மற்றவர்கள் முன்னில் எதுவும் சொல்ல முடியாமல் மூச்சு முட்டினாள்.
ஒருவழியாய் போட்டோ எடுத்து முடிய இருவரையும் உணவருந்த அழைத்தனர். அருகருகே அமர்ந்தவர்களின் அருகில் குடும்பத்தில் இருந்த இளசுகள் சிலர் அமர்ந்து கிண்டலும் கேலியுமாய் அந்த இடத்தில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.
“ரகு, அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டிவிடு…” என்று ஒருத்தன் கூற, அவன் ஸ்வீட்டை அவளுக்கு ஊட்ட செல்ல, “எனக்கு ஸ்வீட் பிடிக்காது… வேண்டாம்…” என்றாள் ஐஷூ.
“அதெல்லாம் முடியாது… கொஞ்சூண்டாவது சாப்பிட்டே ஆகணும்…” என்று அவர்களும் விடாமல் கூற வாயைத் திறந்தவளின் உதட்டில் ஸ்வீட்டை வைத்தான் ரகு.
“அடுத்து ஐஷூ ரகுவுக்கு ஊட்டி விடணும்…” என்று அவர்கள் ஆர்ப்பரிக்க, கடனே என்று ஸ்வீட்டை அவன் உதட்டை நோக்கிக் கொண்டு செல்ல அவன் அப்படியே அவள் விரலோடு ஸ்வீட்டைப் பற்றிக் கொள்ள, “ஆ…” என்றவள் முறைக்க அவன் சிரித்தான்.
அவர்களின் கொண்டாட்டத்தையும் கூச்சலையும் கேட்டு அங்கே வந்த கோமளா சிரித்தார்.
“லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்..
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கதிமி தா… என்ற தாளத்தில் வா…”
பாடத் தொடங்கியவருடன் இளையவர்களும் சேர்ந்து கொண்டு கோரஸாய் பாட, பொங்கி வந்த கடுப்பை மறைக்க ஐஷூ மிகவும் போராடிக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாய் எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப, “கல்யாணத்துல மீட் பண்ணுவோம் மருமகளே…” என புருஷூவும், மேனகாவும் மருமகளின் கை பிடித்து சந்தோஷமாய் சொல்லிவிட்டு வாசல் நோக்கி மற்றவர்களுடன் நடந்தனர்.
“ஒரு நிமிஷம் ஐஷூட்ட சொல்லிட்டு வந்திடறேன் மா…” என்று ரகு மட்டும் தனியே அவளிடம் வர முறைப்புடன் நின்று கொண்டிருந்த மகளிடம், “ஐஷூ, மாப்பிள்ளையை உள்ள அழைச்சிட்டுப் போய் பேசுமா…” என்ற உஷாவும் வாசலை நோக்கி நடந்தார்.
அவள் எரிச்சலுடன் உள்ளே செல்ல பின்தொடர்ந்தான் ரகு.
“என்ன பொண்டாட்டி, அத்தான் மேல செம கடுப்புல இருப்ப போலருக்கு…” கேட்டவனை முறைத்தவள், “இந்த அத்தான் பொத்தான்லாம் வேண்டாம்… என்ன பேசணுமோ பேசுங்க…” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு.
“ஐஷூ, உனக்குப் பிடிக்குதோ இல்லையோ என்னோட தான் வாழ்க்கைன்னு முடிவுக்கு வந்துட்டே… அப்புறம் எதுக்கு இந்த கோபமும், வெறுப்பும்… அத்தானுக்கு சந்தோஷமா பை சொல்லி, ஏதாச்சும் கிப்ட் கொடுத்து அனுப்பலாம்ல…” என்றவனை முறைத்தவள்,
“கிப்டா…” எனவும், “ஓ… என்ன கிப்ட் கொடுக்கிறதுன்னு குழப்பமா இருக்கா…. இதோ இந்த மாதிரி…” என்றவன், பட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட அதிர்ச்சியில் நின்றவளிடம், “இது வெறும் அச்சாரம் தான் பொண்டாட்டி… மத்ததெல்லாம் அப்புறம் சொல்லித் தரேன்… ஓகே… அத்தான் கிளம்பறேன்… பை…” என்று சொல்லி கிளம்ப, ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவள் காதில் அவன் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருக்க, “டேய் ரகு… என் பர்மிஷன் இல்லாமயே என்னைக் கிஸ் பண்ணறயா, உனக்கு இருக்கு…” என்று கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.
முத்தத்தின் யுத்தத்தில்
சத்தங்கள் குடை பிடிக்க
சல்லாபத் தேரில் உன்னோடு
நான் வடம் பிடிக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்…
யுத்தமானாலும் முத்தமானாலும்
வெல்வது நம் சத்தமாகட்டும்…

Advertisement