Advertisement

அத்தியாயம் – 5
“கம் ஆன் ஐஷூ… எதுக்கு இப்ப ஆங்ரி பேர்ட் மாதிரி முகத்தை வச்சிருக்கே… தட் ஈஸ் நாட் சூட் பார் யூ…” என்ற பாட்டியை சந்திரமுகியாய் கண்ணை உருட்டியவள், “அவன் கூட தான் எனக்கு சூட் ஆகல, விட மாட்டிங்கறிங்களே…” என்று முறைக்க டெரர் ஆன பாட்டிக்கே பயத்தில் டர்ரானது.
பெரிய பெரிய மூச்சுகளை விட்டுக் கொண்டு கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் அறையை அளந்தவளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று கோமளவல்லி யோசித்துக் கொண்டிருக்க அளப்பதை நிறுத்தி வாயைத் திறந்தாள்.
“எல்லாம் உன்னால வந்தது கோமு… நீ கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு நம்பி தான் அவங்க என்னைப் பார்க்க வர ஒத்துகிட்டேன்… அந்த கொத்தவரங்கா என்ன பேச்சுப் பேசுது… குழந்தையா இருக்கும்போது தோணுற பப்பி லவ்வை இப்பவும் கண்டின்யூ பண்ணிட்டு விட்டுத் தர முடியாது, தியாகி ஆக முடியாதுன்னு டயலாக் வேற…”
பொருமிக் கொண்டே சொன்னவளை அமைதியாய் பார்த்த கோமளவல்லியின் மனதில், “சபாஷ்… பையன் பார்க்க சுண்டக்கா போல இருந்தாலும் ஆக்டிவிட்டில சரியான சுள்ளானா இருப்பான் போலருக்கே… இவளுக்கு ஏத்த ஆளுதான்…” என நினைத்துக் கொண்டார்.
“எல்லாம் உன்னை சொல்லணும் கோமு… வேண்டவே வேண்டாம்னு சொன்னவளை அவங்க வந்து பார்க்கட்டும், பையன் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம்னு ஐடியா கொடுத்துட்டு இப்ப கவுண்டமணி கிட்ட மாட்டின செந்தில் போல மூஞ்ச வச்சிட்டு இருக்க… அந்த ராகு எனக்கு கல்யாணத்துல சம்மதம்னு கூசாம பொய் சொல்லறான்… அதை நம்பி அவங்க கல்யாணம் பேசினா, இந்த அப்பாவாச்சும் வாயை அடைக்குறாரா… அந்த புருஷூ அங்கிள் சொல்லறதுக்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிட்டு இருக்கார்… என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவே இல்ல… என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்… நான் என்ன நீங்க வளர்த்துன பலியாடா…”
அவளது சத்தம் அறையைத் தாண்டி ஹாலுக்கும் கேட்க உஷாவும் கோபிநாத்தும் திகிலுடன் அமர்ந்திருந்தனர்.
புருஷோத்தமன் ஐஸ்வர்யாவுடன் பேசிவிட்டு வந்த மகனிடம், “என்னடா ரகு, என் மருமக என்ன சொல்லுறா… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு ஓகே தானே…” ஆசையாய் கேட்க, “உங்களுக்கு மருமகளா வர எந்தப் பொண்ணுக்குப்பா கசக்கும்… அதும் உங்க ரோஜாக்குட்டி மாட்டேன்னு சொல்லிடுவாளா… அவளுக்கு ஓகே தான்ப்பா…” என்று அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த ஐஷூ அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட, மேனகா வேகமாய் வந்து அவளைப் பிடித்துக் கொண்டார்.
“ரொம்ப சந்தோஷம்டி செல்லமே, எங்க ஒருவேள ரகுவைப் பிடிக்கலன்னு நீ சொல்லிடுவியோ, அந்த அதிர்ச்சியை உன் மாமாவால தாங்கிக்க முடியுமான்னு பயந்துட்டே இருந்தேன்… நல்லவேள, நீயும் ஓகே சொல்லி அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்திட்ட… நீன்னா எங்களுக்கு உசுருடா… உன்னை எங்க கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்போம்…” கண் கலங்க நெகிழ்ச்சியுடன் கூறியவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் அவள் திகைத்து நிற்க அடிக்கண்ணால் பார்த்த ரகுவரனை முறைத்தாள் அவள். 
“ரோஜாக்குட்டி… வாடா, வாடா செல்லம்… பெண் குழந்தை இல்லைங்கற உன் அத்தையோட கவலைய தீர்க்க வந்த தேவதைடா நீ… அங்கிள்க்கு இப்ப இருக்கற ஒரே ஆசை உங்க கல்யாணத்தை கண்ணாறப் பார்க்கணும்… அவ்ளோ தான்…” சொல்லிக் கொண்டே அவளை தன் அருகில் அமர்த்தி தலையைத் தடவிக் கொடுத்த புருஷோத்தமனின் அன்பில் ஊமையாகிப் போனாள்.
விருந்து முடிந்து அவர்கள் கிளம்புகையில் “சீக்கிரமே நிச்சயத்துக்கு நாள் பார்த்திடு கோபி…” என்ற நண்பனின்      வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்ல முடியாமல் கோபிநாத் அமைதியாய் தலையாட்ட அப்போதுதான் விழித்துக் கொண்ட ஐஸ்வர்யா தந்தையை நோக்கி மறுப்பாய் தலையாட்ட கண்டு கொள்ளாமல் திரும்பிக் கொண்டார். தாயும், பாட்டியும் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.
அனைவரிடமும் விடை பெற்ற ரகு அவளிடம் கண் சிமிட்டி, “அத்தான் போயிட்டு வரட்டுமா பொண்டாட்டி…” என்று மெதுவாய் கேட்க அவனை முறைத்தவளுக்கு யாரும் காணாமல் உதட்டைக் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு நடந்தவனை அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள்.
அவர்கள் சென்றதும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டவளை சமாதானப்படுத்துமாறு அன்னையிடம் கூறி அனுப்பி வைத்தார் கோபிநாத். அதன் பின் வந்த உரையாடல்களே மேலே கேட்டவை.
“ஐஷூ… டேக் டைவர்சன் டு யுவர் டென்ஷன் பேபி… ஐ திங்க் திஸ் பாய் ஈஸ் பெஸ்ட் சாய்ஸ் பார் யுவர் பியூச்சர் லைப்… வாட் ஐ டோல்ட் ஹாவ் அ ரீசன்…” என்றவரை அவள் முறைக்க, “டோன்ட் ஸ்டேரிங்…” என்றவர் தொடர்ந்தார்.
“ரீசன் நம்பர் ஒன், ஹீ ஈஸ் அ பெஸ்ட் குக்… ரீசன் நம்பர் டூ, ஹீ ஈஸ் அ குட் ஹவுஸ் கீப்பர்… ரீசன் நம்பர் த்ரீ, ஹீ ஈஸ் வெரி காரிங், அண்ட் ஹம்பிள்… ரீசன் நம்பர் போர், ஹீ ஹாஸ் அ குட் ஜாப் அண்ட் சாலரி… அண்ட் தி ரீசன் நம்பர் பைவ், ஹீ லவ்ஸ் யூ…” என்றவர் புன்னகையுடன் பேத்தியை நோக்க அவள் யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதை கவனித்த பாட்டி, “ஹூம்… இந்த லூசு பேபி இன்னுமா என்னை நம்புது…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே தொடர்ந்தார்.
“சோ, வாட் கான் ஐ சே, ஒய் யூ சுட் மாரி ஹிம்…” என்றவரை அவள் எரிச்சலுடன் பார்க்க, கோபிநாத்தும் உஷாவும் அறைக்குள் நுழைந்தனர்.
அவர்களைக் கண்டதும் அவள் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள கோபிநாத் அவள் அருகில் வந்து அமர உஷா மறுபக்கம் கட்டிலில் அமர்ந்தார்.
“ஐஷூ… ஒரு நிமிஷம் அப்பாவைப் பாருடா…” என்றவர் மகளின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினார்.
“இப்ப நான் உனக்கு முன்னாடி உயிரோட உக்கார்ந்திருக்க யார் காரணம்னு நினைக்கறே… எப்பவோ பீஸ் பீஸா சிதறி மண்ணுக்குள்ள போயிருக்க வேண்டிய உன் அப்பாவை இப்பவும் உன்னால பார்க்க முடியுது, கோவிச்சுக்க முடியுதுன்னா அதுக்கு யார் காரணம்… ஒருவேளை, புருஷூ மட்டும் அன்னைக்கு அந்த வெடிகுண்டைத் தன் காலால எட்டி உதைக்காம இருந்திருந்தா அவனுக்கு கால் போயிருக்காது… வேலை போயிருக்காது… ஆனா, என் உயிர் போயிருக்கும்…” என்றார் கலக்கத்துடன்.
அதைக் கேட்டதும் பதறியவள், “அப்பா…” என்று அவர் கையைப் பற்றிக் கொள்ள, “அன்னைக்கு அவன் மட்டும் அதை செய்யலேன்னா இன்னைக்கு உனக்கு அப்பா இல்லை மா… அது மட்டுமில்லை… மேனகாக்கும் அவனுக்கும் பெண் குழந்தைங்கன்னா உசுரு… உன்னைத்தான் அவங்க சொந்த மகளாட்டம் நினைக்குறாங்க… என் உசுரையும் இந்தக் குடும்பத்தோட சந்தோசத்தையும் திருப்பித் தந்தவனுக்கு மகளா, மருமகளா என் மகளைக் கொடுக்கணும்னு நினைக்குறது தப்பா… நீ பிறந்ததில் இருந்தே உன்னை அவங்க வீட்டுப் பெண்ணாதான் நினைக்கறாங்க… ரோஜாக்குட்டினு எப்படி கொண்டாடுறாங்க பார்த்தியா… ரகுவும் அந்த சின்ன வயசுல இருந்து உன்னையே பொண்டாட்டியா மனசுக்குள்ள நினைச்சிட்டு இருக்கான்… இப்படி ஒரு குடும்பத்தை இந்த உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்குமா… ஒருவேளை நாம இந்தக் கல்யாணத்துக்கு மறுத்து அது அவன் உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிட்டா… அதை என்னால தாங்கிக்கவே முடியாது… என்னால அவன் கால் போயிருச்சு… என் பொண்ணால அவன் உசுரும் போயிட்டா அதுக்குப் பிறகு என் உசுரு இந்த உடம்புல இருக்காதும்மா…” நெகிழ்ச்சியுடன் சொல்லிய  தந்தையைக் கலக்கமாய் பார்த்தாள் மகள்.
“அப்பா, ஏன் இப்படி எல்லாம் சொல்லறீங்க…” என்றவளை, “இதுதான் நடக்கும்னு சொன்னேன் மா… எனக்கு உயிர் கொடுத்தவனோட உயிர் போக நீ காரணமா இருக்கலாமா… தயவு செய்து உன் மனசை மாத்திக்க… ரகுவை உன் மனசார ஏத்துக்க… அவனைப் போல அன்பான, பண்பான பிள்ளையை எங்கே தேடினாலும் கிடைக்காது… ஆம்பளைக்கு அழகு வேண்டாம், தன்னை நம்பி வந்தவளை கலங்காம, அக்கறையா பார்த்துகிட்டாப் போதும்… ரகு உன்னைக் கண்ணுக்குள்ள மணியா பத்திரமாப் பார்த்துப்பான்… ப்ளீஸ், ஓகே சொல்லு மா…” என்றார் அவள் கையைப் பிடித்துக் கொண்டு. உஷாவின் கண்களும் கலங்கியிருக்க, “அப்பா இவ்ளோ சொல்லறான்… ஓகே சொல்லு ஐஷூ…” என்றார் கோமளவல்லி. அனைவரையும் அமைதியாய் பார்த்தவள், “ஓகே… அப்பா… உங்களுக்காக இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கறேன்…” என்றாள். “என் செல்லம்… தேங்க்ஸ்டா…” என்றவர் மகளின் நெற்றியில் சந்தோஷத்துடன் முத்தமிட, உஷா மகளைக் கட்டிக் கொண்டார்.
பாட்டி, “வாவ்… திஸ் சோ கிரேட் டியர்…” என்று அவள் கையைப் பிடித்து குலுக்க, அவள் மனதுக்குள் வேறு ஓடிக் கொண்டிருந்தது.
“டேய் ரகு… உனக்கு ராகு காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு…”
தண்ணி குடித்துக் கொண்டிருந்த ரகுவுக்கு சட்டென்று புரையேற கண்ணில் நீர் வர இருமிக் கொண்டிருந்தவனின் தலையில் தட்டினார் மேனகா.
“மெதுவா குடிக்கக் கூடாதா ரகு…” என்ற அன்னையிடம், “யாரோ என்னைத் திட்டுறாங்க போலருக்கு மா…” என்றான் கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே.
“உன்னை யாருடா திட்டப் போறாங்க… ஒருவேளை என் மருமக தான் உன்னை நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ…” என்றதும் சிரித்துக் கொண்டான்.
“அவதான் என்னைத் திட்டிட்டு இருப்பான்னு நானும் சொன்னேன் மா…” மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
“மேகி, ஐஷூக்கு இன்னும் ரெண்டு மாசம் தானே கிளாஸ் இருக்கு… அப்ப நிச்சயத்தை அடுத்த மாசம் வச்சிட்டு கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் கழிச்சு நாள் குறிச்சுக்கலாமா…” என்றார் புருஷோத்தமன்.
“அவங்க கலந்து பேசிட்டு சொல்லட்டும்ங்க… கல்யாணத்துக்கு முந்தினநாள் நிச்சயம் வச்சுகிட்டாலும் நமக்கு ஓகே தான்…” என்றார் மேனகா.
“அதுவும் சரிதான்… அவங்களுக்கு எல்லாம் தோதுப்படறது தான் முக்கியம்… நம்ம மருமக எவ்ளோ அழகாருக்கால்ல…”
“ஆமாப்பா… உலக அழகி போட்டிக்கு போயிருந்தா அவளுக்கு தான் முதல் பிரைஸ் கொடுத்திருப்போம்னு BBC நியூஸ்ல கூட சொன்னாங்க…” கிண்டலாய் சொன்னவனின் தலையில் செல்லமாய் குட்டியவர், “இவ்ளோநாள் அவ எங்கிருக்காளோ, எப்படி இருக்காளோன்னு தவிச்சிட்டு இப்ப அவளைப் பார்த்ததும் உனக்கு கேலி பேசத் தோணுதா… இருடா, என் ரோஜாக்குட்டிகிட்ட சொல்லிக் கொடுக்கிறேன்…” என்ற கணவரை நோக்கி, “அப்படி சொல்லுங்க… அம்மா, அவளுக்கு என்னைப் பிடிக்குமா, கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவாளான்னு அவ்ளோ பதறிட்டு இப்ப பேச்சைப் பாரு…” என்று மேனகாவும் சொல்ல சிரித்தான் ரகுவரன். அவர்கள் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருப்பது புரிந்தது.
“பிள்ளையாரப்பா, அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லியும் பாட்டி பேச்சைக் கேட்டு ஒரு குருட்டு தைரியத்துல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்னு சொல்லிட்டேன்… நான் சொன்னது பொய்னு இவங்களுக்குத் தெரிஞ்சா என்ன பண்ணப் போறாங்களோ… யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம நீதான் எல்லாம் நல்லபடியா முடிச்சுத் தரணும் கடவுளே…” வேண்டிக் கொண்டான் ரகுவரன்.
மனதுக்குள் பொருமிக் கொண்டே குட்டி கணபதி சிலை முன்பு நின்றிருந்தாள் ஐஸ்வர்யா.
“யோவ் ஜி, உன்கிட்ட அவ்ளோ சொல்லியும் லாஸ்ட்ல அப்பாவை சென்டியா பேச வச்சு என்னையே ஓகே சொல்ல வைக்குற அளவுக்கு பிரச்சனையைப் பெருசாக்கி விட்டுட்ட… என்ன இருந்தாலும் உன் ஆம்பளைப் புத்தியக் காட்டிட்டியே… உன் இனத்துக்கு சப்போர்ட் பண்ணி எனைக் காலை வாரி விட்டதுக்கு நல்லா அனுபவிப்ப… எங்கிட்ட இருந்து அந்த ரகுவரனைக் காப்பாத்தி விட்டிடுவேன்னு பார்த்தா இப்படி அநியாயமா மாட்டி விட்டுட்டியே… அவன் என்கிட்டயே சவால் விட்டிட்டுப் போறான்… அவன் வீட்டு ரோஜா முள் குத்தினா வலிக்காதாம்ல… பார்க்கலாம்… வலிக்குதா ரத்தம் வழியுதான்னு… ஏண்டா இவளைப் பகைச்சுகிட்டோம்னு உங்க ரெண்டு பேரையும் கதற விடறேன்…” வீராவேசமாய் பேசிக் கொண்டிருந்தவளை அலைபேசி சிணுங்கி அழைத்தது.
“இந்நேரத்துல யாராருக்கும்… புது நம்பரா இருக்கு…” யோசித்துக் கொண்டே எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ… யார் பேசறீங்க…”
“நீ ஹலோ சொன்னா கூட ஹலவ்… லவ்வுன்னே காதுல விழுது பொண்டாட்டி…” தெளிவான குரலில் கிறக்கம் கலந்து ஒலித்த ரகுவரனின் கணீர் குரலில் திகைத்தவள் சுதாரித்து, “ஹலோ, இப்ப எதுக்கு கால் பண்ணே…” என்றாள் பட்டென்று.
“பாருடா, நான் யாருன்னு சொல்லாமலே புரிஞ்சுகிட்ட… ஐ லைக் இட்… சாப்டியா செல்லம்… என் மாமனார் மாமியார் பாட்டி எல்லாம் எப்படி இருக்காங்க…”
“ஏன், நல்லா இல்லேன்னா டாக்டரைக் கூட்டிட்டு வரப் போறியா… எனக்கு உன்னைப் பிடிக்கலன்னு சொல்லியும் நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னதா பொய்யா சொல்லற… இரு, வச்சுக்கிறேன்…”
“என்ன பொண்டாட்டி, புருஷனைப் போயி வச்சுக்கறேன்னு சொல்லற… தப்பு பேபி… இப்ப சொல்லறியே, உனக்குப் பிடிக்கலன்னு அப்பவே எல்லார் கிட்டயும் சொல்லிருக்க வேண்டியது தான… மாமா கால் பண்ணி உனக்கு சம்மதம், நிச்சயத்துக்கு நாள் குறிக்கப் போறேன்னு சொன்னார்… நீ இப்படி சொல்லிட்டு இருக்கே…” என்றான் அவன்.
“எல்லாருமா சேர்ந்து சென்டிமென்டலா என்னை அட்டாக் பண்ணி சம்மதம் வாங்கிட்டு இப்படி சொல்லறியா… உனக்கு ஆப்பு ரெடி பண்ணறேன் மாப்பு…” என்றாள் அவள்.
“ஆப்பு, மாப்பு ஓகே பாப்பு…” சிரித்தவன், “ஐ ஆம் வெயிட்டிங் பேபி…” எனவும், “நான் மத்தவங்களுக்கு தான் பேபி, ஆனா உன்னைப் பொறுத்தவரைக்கும் ரவுடி பேபி…” என்றாள் ஐஷூ.
அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வர, “எனக்கு ரவுடி பேபிய தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்… அப்புறம் அந்த கிப்ட் நீ எப்படியும் ஓபன் பண்ணிப் பார்த்திருக்க மாட்ட… அதை அப்படியே எனக்குத் திருப்பி அனுப்பிடேன்… நான் வேற யாருக்காச்சும் கிப்ட் பண்ணிடறேன்… என் சென்னை அட்ரஸ் மெசேஜ் பண்ணறேன்…” என்றதும் அவளுக்கு கடுப்பு அதிகமானது.
“ஹலோ… நாங்க ஒண்ணும் இங்க கொரியர் சர்வீஸ் நடத்தல, எனக்கு கிடைச்ச கிப்ட் நான் திறந்து பார்ப்பேன்… இல்ல குப்பத் தொட்டில போடுவேன்… அது என் இஷ்டம்… நீ வேற யாருக்கும் கொடுக்கணும்னா வேற கிப்ட் வாங்கி குடு… நான் வச்சிடறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டிக்க அவன் சிரித்துக் கொண்டான்.
“அச்சோ… பேபி, பேபி… சின்னக் குழந்தைல உன்னோட விளையாடின போலவே ஜாலியா இருக்கே… இப்படி தான் உன்னை வம்பிழுத்து காரியம் சாதிப்பேன்… நீ இப்பவும் அப்படியே இருக்கியே பொண்டாட்டி…” என்றவன் சிரித்தான்.
“கிப்டாம் கிப்ட்… என்னமோ ஊரு உலகத்துல யாரும் கொடுக்காத கிப்டைக் கொடுத்த போல பில்டப்பு…” உதட்டைச் சுளித்தவள், “அப்படி என்ன கிப்ட் கொடுத்திருப்பான்… பார்த்திடுவோம்…” என எழுந்து அதை எடுத்தாள்.
கட்டிலில் அமர்ந்து அழகாய் பாக் செய்யப்பட்ட கலர் பேப்பரை அகற்றி உள்ளுக்குள் நீள் செவ்வக வடிவத்தில் இருந்த அட்டைப் பெட்டியின் இடது பக்கத்தில் இதய வடிவ பாக்ஸில் அவளுக்குப் பிடித்த சாக்கலேட் இருக்க, “அட நமக்குப் பிடிச்ச சாக்கலேட்…” என கண்ணை விரித்தவள் அதை எடுத்துக் கொண்டு அட்டைப் பெட்டியின் வலது பக்கம் இருந்த இன்னொரு பெட்டியையும் எடுத்துத் திறந்தாள். திறந்தவள் கண்கள் பிரமிப்பில் விரிந்தன.
ஒரு அழகான மாஜிக் போட்டோ பிரேமின் ஓரங்கள் வைரத் துணுக்குகளைப் பதித்தது போல் கண்ணாடித் துணுக்குகளால் செதுக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. உள்ளங்கை அளவே இருந்ததை ஒரு பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அவளது குழந்தைப் பருவப் படமும் அதை சற்றுத் திருப்பினால் இப்போதைய படமும் மாறி மாறித் தெரிந்தது. அந்த பிரேம் கொள்ளை அழகாய் மனத்தைக் கொள்ளை கொள்ள உள்ளே அவளது போட்டோ அவளை நோக்கி அழகாய் சிரித்தது. வியப்புடன் தனது புகைப்படத்தை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் இனம் புரியா சந்தோஷம் நிறைய, அலைபேசி ஒலித்தது.
ரகுவின் எண்ணோ என்று பார்க்க வேறு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்க யோசித்துக் கொண்டே எடுத்தாள்.
“ஹலோ பொண்டாட்டி, கிப்ட் பிடிச்சிருக்கா…” என்றான் ரகுவரன். அதே எண்ணில் அழைத்தால் எடுக்க மாட்டாளோ என்று வேறு எண்ணிலிருந்து அழைத்திருந்தான். முதலில் திகைத்தவள் சமாளித்துக் கொண்டாள்.
“கிப்ட் பிடிச்சிருக்கு… உன்னைத்தான் பிடிக்கல…”
“என்னை மாதிரி பசங்களை எல்லாம் பார்த்ததும் பிடிக்காது பொண்டாட்டி… பழகப் பழகத்தான் பிடிக்கும்…”
“ஹூக்கும்… டயலாகுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்றவள் அழைப்பைத் துண்டித்தாலும் அவனது குரல் காதுக்குள்ளேயே நின்று “பழகப் பழகப் பிடிக்கும்…” என்றது.
திட்டிக் கொண்டே நீ
என்னை நினைப்பது கூட
தித்திக்கிறது…
நீ இல்லாத வாழ்க்கை
என்பது மட்டுமே கசக்கிறது…
எனக்குள் இனி எல்லாமே
அவளதிகாரம் என்கிறது…
இதய சிறகை விரித்து
காதல் வானில் பறந்திட
உன் இதயத்தை இரவல்
தருவாயா கண்மணியே..
  
  

Advertisement