மருத்துவ உபகரணங்ளோடு உள்ளே மருத்துவர்கள் போராட்டத்தோடு அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே துவண்டு போய் விட்டான் முகிலன்.., அவனது நிலையை பார்த்த அவனது அவன் உடன் வேலை பார்க்கும் உயரதிகாரிகளும் சரி.., அவனுக்கு கீழே பார்க்கும் மற்றவர்களும் சரி.., அவனது மனைவி மேல் கொண்ட நேசத்தை நினைத்து அவர்களுக்கும் மனம் கலங்கியது.., எத்தனை அன்பு இருந்தால் ஒரு மனிதன் ஒரு சில மணி நேரங்களிலேயே உடைந்துபோய் இப்படி இருப்பான் என்று நினைத்துக் கொண்டனர்..,
ஏனெனில் அவளுக்கு விபத்து நடந்து கிட்டத்தட்ட 3 மணி நேரங்களே ஆன நிலையில் அதற்குள் முகம் வாடி.., உயிரை கையில் பிடித்தவனாக அவன் இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தான்., கண்கள் அதன் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க மேலதிகாரிகள் டிரைவரை விசாரிக்கும்படி மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கொண்டிருந்தனர்..,
அவனுக்கோ எந்த நினைப்பும் இல்லை குழந்தைகளைப் பற்றிய நினைவு கூட இல்லாமல் இருப்பதை பார்த்த அவனது ஜீப் ஓட்டும் டிரைவர் மிகவும் வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.., என்ன செய்வதென்று தெரியவில்லை அதற்குள் தகவலறிந்த மதியின் வீட்டினரும்., முகிலனின் வீட்டினரும் வந்து சேர்ந்தனர்…,
இப்போது இவர்கள் விருதுநகரில் இருப்பதால் மதுரையில் இருந்து அங்கு வருவது பெரிய விஷயமாக தெரியவில்லை., எனவே அனைவரும் வந்து விட்டனர்..,
ஐ சி யூ விற்கு எதிராக இருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்து இருந்தவனை பார்த்த சூர்யா வேகமாக சென்று அவனை தோளில் தட்டி எழுப்ப.., அவன் கண்கள் ஏற்கனவே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.., சூர்யாவை பார்த்தவுடன் அப்படியே இருக்கையில் இருந்த வண்ணம் சூர்யாவின் இடுப்பை கட்டிகொண்டு அவன் மேல் முகம் புதைத்து சத்தம் போட்டு அழ தொடங்கிவிட்டான்.., முகிலனின் அழுகையை பார்த்த வுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்க தொடங்கினர்..,
வீட்டினர் ஏற்கனவே அழுத வண்ணம் இருக்க., அலுவலக ஊழியர்களும் சரி பார்த்தவர்களும் சரி எவ்வளவு கம்பீரமான ஒரு மனிதன்.., வாழ்க்கை துணை என்பதுஅவன் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அருகில் இல்லாமல் போய் விடுவார்களோ என்று நினைக்கும் அந்தத் தருணம் தான் உணர வைக்கிறது.., அப்படி தான் கதறிக் கொண்டிருந்தான் முகிலன்..,
அவனை அணைத்து கொண்டே சூர்யா அவனுக்கு ஆறுதல் சொன்னாலும்., சூர்யாவும் சேர்ந்து அழுதுகொண்டிருந்தான்.., அவனுக்கு எட்டு வருடம் மனைவி என்றால்.., சூர்யாவிற்கு அவள் விபரம் தெரிந்து., அவளை அண்ணா என்று அழைக்க தொடங்கிய நாள் முதல் அவனுடைய குட்டித்தங்கை..,
காலையில் கூட தன்னிடம் போனில் பேசியவள்.., இப்பொழுது மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு உள்ளே இருப்பதை பார்த்த உடன் அவனுக்கும் உயிர் போகும் வேதனை தான் வந்தது.., ஆனால் அதைவிட அங்கு ஒருவன் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்கு இன்னும் வலித்தது.., உள்ளே இருப்பவள் உடன்பிறவா தங்கையே என்றால்.., வெளியே அவளுக்காக துடித்துக் கொண்டு இருப்பவன் உடன் பிறந்தவன்.., கலை பிடித்து கொண்டு அம்மு அழ என்று அங்கு குடும்பமே அவளுக்காக அழுது கொண்டிருந்தது…,
சூர்யாவிற்கு தான் முகிலனை தேற்றுவது பெரும்பாடாக போய்விட்டது.., அப்போது தான் அவனை நிமிர்த்தி பார்க்கும்போது அவன் முகம் உடை என ரத்தமாக இருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.., அப்போது தான் சூர்யாவிடம் முகிலன் புலம்பத் தொடங்கினான்.., “சூர்யா அவள் இல்லாமல் நான் இருக்க மாட்டேன்…, அவளுக்கு எதுவும் ஆச்சு னா அடுத்த நிமிஷம் நான் இருக்கமாட்டேன்” …, என்று அழுதுகொண்டே சொல்ல
சூர்யாவும் கலையும் தான்.., “அவளுக்கு ஒன்னும் ஆகாது நல்லபடியா வந்துருவா…, நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினர்…,
மதியின் அப்பாவும் அம்மாவும் இவனுக்கு சமாதானம் சொல்லும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டான் முகிலன்.., அதேநேரம் ஸ்ரீராம் க்கு தெரியப்படுத்தி இருந்ததால் அவனும் சென்னையிலிருந்து கிளம்பி இருந்தான்.,
இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக சூர்யாவிற்கு போன் வந்தது.., எந்த மருத்துவமனை என்ன என விசாரித்துக் கொண்டு., அவன் மதுரையில் வந்து இறங்கி விட்டதாகவும் அங்கிருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக தகவல் சொன்னான்..,
அப்போது கலை தான் பிள்ளைகளைப் பற்றிய பேச்சை எடுத்தால்., “பிள்ளைங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருக்காங்களே., யாராவது போய் கூப்பிடனும்” என்று சொல்லவும் தான் முகிலனுக்கு பிள்ளைகள் நினைவே வந்தது..,
மீண்டும் தலையில் கையை தாங்கி கொண்டு புலம்ப தொடங்கிவிட்டான்.., ஏனெனில் “பிள்ளைகள் இருவரும் எவ்வளவு தான் என்னிடம் பாசமாக இருந்தாலும் இருவருக்கும் அவள் எப்போதும் தேவை”..,
வீட்டில் இருக்கும் நேரங்களில் அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்கும் பிள்ளைகள்.., முகிலன் கூட எப்ப பார்த்தாலும் உன் பின்னாலே சுத்துற மாதிரி பழக்காத என்று சொல்லி சத்தம் போட்டிருக்கிறான்..,
பின்பு முகிலனை சற்று சமாதானப்படுத்தி விட்டு., மருத்துவர்களிடம் பேச மருத்துவர்கள் “இன்னும் அப்சர்வேஷன் ல தான் வச்சிருக்கோம்.., அவங்க மூச்சுவிட சிரமப்பட்டு இருக்காங்க.., அதனால தான் இப்பவும் மூச்சு விடுவதில் தான் அவங்களுக்கு கொஞ்சம் பிரச்சனையா இருக்கு..,நார்மல் க்கு வரணும் அது மட்டுமில்லாம காது பக்கம் அடிபட்டு இருக்குற தால.., அவங்க கான்ஸன்ட்ரெஸன் வந்தால் தான்.., நாங்க எதுவும் சொல்ல முடியும்., பார்ப்போம்.., என்று சொல்லிவிட்டு போர் ஹவர் தான ஆகுது…, இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..,
சூர்யா “மதுரைக்கு கொண்டு போய் விடலாமா” என்று கேட்கவும்
டாக்டர் “கொஞ்சம் பொறுங்க பாத்துக்கோங்க”.., என்று சொன்னார்..,
கலை பிள்ளைகளை கூப்பிட போக வேண்டும் என்று சொல்லவும்.., சூர்யாவும் கலையும் முகிலனின் டிரைவரோடு பள்ளிக்கு சென்றனர்., அதற்குள் இங்கிருந்து போன் செய்து முகிலன் சொல்லியிருந்தான் வருபவர்கள் அழைத்துக் கொண்டு வர.., அம்முவும் அவர்களுடன் பள்ளிக்குச் சென்று விட்டாள்…
பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வந்தவுடன்.., பிள்ளைகளிடம் அவன் எதுவும் பேசவில்லை., அதன்பிறகு முகிலன் சற்று இறுக்கமாகவே காணப்பட்டான்., அவனது இறுக்கமும் மற்றவர்களுக்கு அவனுடைய வேதனையை வெளிக் காட்டியது.., எதையோ யோசித்துக் கொண்டு இருப்பவன் போல அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான்..,
குழந்தைகளை சற்று நேரம் பார்ப்பான்., பின்பு அமைதியாக யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.., ஆனால் கண்ணில் மட்டும் கண்ணீர் நிற்பதும் பின்பு வடிவதுமாகவே இருந்தது..,
அதேநேரம் ஊரிலிருந்து தாமதமாக வந்த கீதா அவனது நிலையை கண்டு கலங்கிப் போனாள்.., ‘இவர்தான் முன்னாடி அவகிட்ட எப்ப பார்த்தாலும் சண்டை போட்டார்., என்று சொன்னால் யாராவது நம்புவார்களா, இந்த மனுஷன் இப்படி இருக்காறே’., அவள் மீது பாசம்., இருவருக்குமான வாழ்க்கை என கீதாவிற்கு ஓரளவுக்கு எல்லாம் தெரியும் என்பதால் அவர்களைப் பற்றியே நினைத்துக்கொண்டு அவள் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.,
ஒரு முறை மட்டும் ஐசியூ கதவு வழியே அவளை பார்க்கும் போது.., கீதாவை பார்த்தவுடன் கொஞ்சம் அழுது விட்டு.., அவனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு.., “உள்ள போய் பார்த்தீர்களா” என்று கீதா கேட்டதற்கு…,
“போகல எனக்கு பயமா இருக்கு” என்று அவன் சொல்ல
“என்ன அண்ணா நீங்க போய் பேசுங்க…, உங்க வாய்ஸ் க்கு கரெக்டா ரெஸ்பான்ஸ் இருக்கும்., எனக்கு தெரியும்…, உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ எனக்கு தெரியாது…, ஆனா அதைவிட அதிகமா எனக்கு தெரியும்…, அவ என்ட பேசறது ல்ல பாதி நேரம் உங்களை பத்தின பேச்சாத் தான் இருக்கும்…, அவளோட நினைப்பு பேச்சு எல்லாமே நீங்க மட்டும் தான் போங்க…, அவ கிட்ட பேசுங்க”., என்று சொல்லவும்…,
அவன் மேலும் கண்ணீர் விட…, “பேசுங்க ப்ளீஸ் உங்க வாய்ஸ் கேட்டா கண்டிப்பா ரெஸ்பான்ஸ் இருக்கும்” என்று சொல்லி அவனை பேச சொல்லிக் கொண்டிருந்தாள்…,
அவனோ “எனக்கு பயமா இருக்கும்மா”.. என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஸ்ரீராம் வந்து சேர்ந்தான்..,
ஸ்ரீராமின் மனைவிக்கு நல்ல சகோதரியாகவும்., ஒரு தோழியாகவும் இருந்த பெண் இப்படி கிடைக்கிறாள் என்று அவள் ஒரு புறம் கலங்க.., ஸ்ரீராம் தான் தான் மருத்துவன் என்பதையும் மறந்து கண் கலங்க.., அப்போது சூர்யா தான் சத்தம் போட்டான்…,
“நீ போய் டாக்டர் ட்ட கேட்டு பாரு., என்னன்னு பாரு போ”., என்று சொன்னதற்கு அவன் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டான்…, பயத்தில் அவன் போக மாட்டேன் என்று சொன்னதை அனைவரும் உணர்ந்து கொண்டாலும்., யாரும் எதுவும் சொல்லவில்லை…, அவனும் சற்று நேரத்தில் சரிந்து அவன் அம்மாவின் மடியில் படுத்து விட்டான்., ஒரு அக்கா என்பவள் அக்காவாக இல்லாமல் தோழியாக.., இன்னொரு தாயாக., இருக்கும்போது இருக்கும் உணர்வு தான் அது….