திருமணமாகி ஐந்து மாதங்கள் கழிந்து விட்டது.., இதோ முகிலன் உடன் மதி வாழத் தொடங்கி இரண்டு மாதங்கள் முழுதாக முடிந்துவிட்ட சூழ்நிலையில் அவர்களுக்கான முதல் தீபாவளி வந்தது..
அவர்கள் மதுரைக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை., இருவருக்குமிடையில் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் சில சமயங்களில் மதி மனம் வருத்தப்படும் படி சில விஷயங்கள் இருக்கத்தான் செய்தன..
ஆனால் கீதாவின் அறிவுரையின்படி இது எல்லா வீட்டிலும் கணவன் மனைவிக்கு இடையிலான சிறுசிறு பிரச்சினைகள் தான். ஆனாலும் இருவரும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு ஓடிக்கொண்டு இருந்ததால் அங்கு பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது…
அவனுக்கு நான்கு நாள் மட்டுமே விடுமுறை கிடைக்க.., தீபாவளிக்கு இரு நாள்கள் முன்னரே வந்து இறங்கினர். தீபாவளிக்கு முதல் நாள் தான் மதியின் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றும்., அதுவரை முகிலன் வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து இருந்ததால் வந்த அன்று எங்கும் செல்லவில்லை…
வீட்டில் கலையோடும் அம்முவோடும் நேரத்தை போக்கி விட்டு மதிவீட்டிற்கு மட்டும் சென்று வீட்டில் அம்மா என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு வந்தால் மதி….
முகிலன் வீட்டில் இருந்த சமயங்களில் தாத்தாவோடும் பேசிக்கொண்டிருந்தாள். இருவருக்கான புரிதலும்., இருவருக்கான அன்பையும்., தாத்தா பார்த்துக்கொண்டார்.. மதி கலையோடு பேசியபடி கிச்சனில் சமையலுக்கு உதவி செய்ய.., பாலன் சூர்யா முகிலன் என எல்லோரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்…
தீபாவளிக்கான வேலைகள் ஏற்கனவே ஓரளவு முடிந்திருந்தது.., அது மட்டுமல்லாமல் தீபாவளி அன்று மதியின் வீட்டில்தான் அனைவருக்கும் உணவு என்று சொல்லியிருந்ததால்… அங்கு ஏதும் உதவி செய்ய வேண்டுமா என்று கேட்டு விட்டு வந்து சூர்யா அமர்ந்திருந்தான்…
அப்போது தாத்தா தான் சொல்லிக் கொண்டிருந்தார்.. “நல்ல தங்கமான பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வந்திருக்கா… அன்னைக்கு கல்யாணம் பேசும் போது கோயில்ல வச்சு பேசினான் அந்த என்று உறவு முறையை சொல்லி (பொண்ணு வீட்டுக்காரன்) அவனைப் பார்த்தா நான் சொன்னேன்னு சொல்லி… நன்றி சொல்லிருடா பாலா… ஏன்னா இப்படி பொண்ணு கிடைக்கிறது க்கு நாம தான் கொடுத்து வச்சிருக்கணும்.., இப்ப தான் முகிலன் முகத்திலையும் ஒரு வெளிச்சம் தெரியுது”… என்று தாத்தா சொல்லவும்…
முகிலன் “தாத்தா நீங்க ரொம்ப கிண்டல் பண்றீங்க என்னைய”… என்று சொல்லவும்..
” இல்லடா இப்பதான் நீ பாக்குறதுக்கே நல்லா இருக்க ஆளு” என்று சொல்லிக்கொண்டிருந்தார்….
“அப்ப இவ்வளவு நாளு நான் பார்க்க நல்லா இல்ல அப்படி தானே”… என்றான்
மதியின் வீட்டில் ஸ்ரீராம் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தான். அக்காவின் முதல் தீபாவளி., அவன் மூன்றாவது வருடம் மருத்துவ படிப்பில் இருக்கிறான்… அக்காவின் முகத்தில் இருந்த சந்தோஷம் அவனை அவ்வளவு சந்தோஷமாக எல்லா வேலைகளிலும் ஈடுபட வைத்தது…
தீபாவளிக்கு முதல் நாள் காலையில் முகிலன் மதிய அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்… மதியின் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீராம் கலகலப்பாக முகிலனோடு நன்கு பேசினான்… வீட்டிலும் அவர்களுக்கு உபசரிப்பு பயங்கரமாக இருந்தது.. அவன் தான் அத்தை நான் எப்பவும் வர்ற வீடு தானே… இப்ப என்ன புதுசாவா வர்றேன்… என்ன இது சும்மா இருங்க.., இப்படிலாம் பண்ணாதீங்க என்று சொல்லிக் கொண்டிருந்தான்…
இருவரும் இரு வீடுகளும் சிறு வயதிலிருந்து சென்று வந்து கொண்டிருந்த வீடு என்பதால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை…
அதே நேரத்தில் முகிலனுக்கு இனியா விடமிருந்து போன் வர இப்ப தான் வந்தேன் வீட்டுக்கு… அதுக்குள்ள போன் பண்றா என்ற யோசனையோடு போனை எடுத்து காதில் வைத்தான்..
சொல்லு என்ற உடனே மதிக்கு புரிந்து விட்டது… இது இனியாவின் போன் என்று பார்க்காமலே தெரிந்து கொண்டாள்.
அவளோ “என்ன நீ இந்த தடவை எனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்து தரல”… என்று ஆரம்பிக்கவும்…
சரி இவ ஏதோ பிரச்சினைக்கு அடிப் போடுறா என்று நினைத்துக் கொண்டு “நான் இப்ப கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வருவேன்., நீ வீட்ல இருக்கியா.. உன் வீட்ல இருக்கியா”… என்று கேட்டான்..,
“இப்ப நான் நம்ம வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்”…, என்று சொல்லவும்
“வா வா நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்…
பிறகு மதியை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று…, மதி பேக்கில் வைத்திருந்த அவனுடைய பர்ஸை மட்டும் வாங்கிக் கொண்டு “வீட்டுக்கு போயிட்டு இப்ப வந்துடறேன்”., என்று சொல்லவும்
” ஒன்னும் பிரச்சனை இல்ல போயிட்டு நிதானமா வாங்க”… என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
ஏனென்றால் அவளுக்கு தெரியும் இனியா வந்தால் இப்போதைக்கு அவனை விட மாட்டாள்.., பேசி பேசியே அருகில் இருக்குமாறு செய்வாள்.., மதியோடு இருக்கும் நேரங்களை குறைக்க வேண்டும் என்பதே இனியாவின் நோக்கம் என்பதை அறிந்ததால்… இவளும் எதுவும் கண்டு கொள்ளவில்லை…
“வீட்ல ஏதாவது சொல்லிக்கோ என்றுலஞ்சுக்கு கரெக்டா வந்து விடுவேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
அங்கு முகிலன் வீட்டிற்கு சென்றால் அவள் வீட்டின் ரணகலமாக்கி கொண்டிருந்தாள்… “எனக்கு டிரஸ் எடுத்து கொடுக்கனும்.., தோணாது.,
கலையோ “உனக்கு யார் எடுத்து குடுக்கல ன்னு சொல்லு”… இந்த தடவை நீ கடைக்கு கூப்பிடும் போது வரல அதனால எடுக்க முடியல…. இப்ப என்ன உனக்கு கைல பணமா வாங்கிக்கோ.., உனக்கு பிடிச்சதா போய் எடுத்துக்கோ” என்று சொல்லவும்…
“எனக்கு எங்க அண்ணன் கூட கடைக்கு போகனும்… என்னைக்கு நீங்க எல்லாம் கல்யாணம் முடிச்சு வந்தீங்க ளோ…, அப்புறம் எங்க அண்ணன் வெளியே கூட்டிட்டு போறது இல்லை”., என்று சொல்லி கட்டவும்
“போகலாம்… நீ தேவையில்லாத பிரச்சனை பண்ணாத” இனியா… என்றான் சூர்யா…
“இப்ப என்ன உனக்கு டிரஸ் தானே வேணும்… அவங்க எதுக்கு வா அப்பா கூட்டிட்டு போய் வாங்கி தரேன்” என்று பாலன் சொல்லவும்.. ..
அப்போ எல்லாரும் சேர்ந்து கடைக்குப் போகலாம் என்று திட்டம் போட தொடங்கினாள்..
அதேநேரம் முகிலன் வீட்டிற்கு வரவும்.., சூர்யா “நீ எங்கடா இந்த நேரத்துல இங்க வந்த” என்று கேட்டான்..
இனியா போன் பண்ணியிருந்தா தீபாவளிக்கு டிரஸ் எடுத்து தரலை ன்னு… அது தான் வந்தேன்… எவ்வளவு வேணும் சொல்லு.., உனக்கு எப்ப டைம் கிடைக்குதோ போய் எடுத்துக்கோ.. என்று சொல்லவும்… இப்ப தான் தீபாவளிக்கும் மாப்பிளை எடுத்துக் தந்திருப்பார் இல்ல”.. என்று சொல்லவும்…
“உன் பொண்டாட்டி சொல்லி அனுப்பினாளா. ரூபாய் கொடுக்க சொல்லி”.., என்று அவள் பிரச்சினை கிளப்ப தொடங்கவும்…
முகிலனுக்கு புரிந்துவிட்டது இவள் வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்ப திட்டம் போட்டு இருக்கிறாள் என்று எனவே வேறு எதுவும் சொல்லாமல் இப்போ உனக்கு என்ன செய்யணும் என்று கேட்டான்…
“என்னை கடைக்கு கூட்டிட்டு போய் தான் டிரஸ் எடுத்து தரணும்” என்று சொல்லவும்…,
“சரி வா போகலாம்”… என்று சொல்லவும்.,
“இப்ப வேண்டாம் மத்தியானத்துக்கு மேல போவோம்” என்று சொன்னாள்….
“மத்தியானத்துக்கு மேல போயிட்டு வர டைம் ஆகிரும்”….
“நாம சாப்பிட்டுட்டு அதுக்கப்புறமா போகலாம்…, ஒரு மூணு மணிக்கு மேல போகலாம்” என்று சொல்லவும்…
சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் நினைச்சேன்… லீவில் வந்து இருக்கும் போது ரெஸ்ட் எடுக்க முடியும்.., உனக்கு அது பொறுக்களையே போகலாம் என்று அவன் சொல்ல…,
மீண்டும் இனியா பேச்சை தொடங்கு முன் கலை குறுக்கிட்டால்.., சரி போகலாம் பேச்சை விடுங்க….
அப்போது “எல்லோரும் கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு வசந்தி முகிலனிடம் “மதிக்கும் போன் பண்ணி சொல்லிரு எல்லாருமா சேர்ந்து கடைக்கு போயிட்டு வரலாம்” என்று சொல்ல…
இனியா “அவ ஒன்னும் வரக்கூடாது நம்ம மட்டும் தான் போகணும்” என்றவுடன்
உடனே கலை “அப்ப நானும் வரக்கூடாது அப்படித்தானே” என்று கேட்கவும்…
” உங்களை ஒன்னு நான் சொல்லல” என்று சொன்னாள்…
பிறகு வேறு வழியில்லாமல் அதை மதி இடம் எப்படி தெரிவிப்பது என்று யோசனையோடு முகிலன் கலையை பார்க்க “கலை நான் பேசிக் கொள்கிறேன்” என்று நிறுத்திவிட்டாள்.
கலையும் மெதுவாக மதிக்க போன் செய்து அங்குள்ள பிரச்சினைகளை சொல்லவும்..
“ஐயோ அக்கா நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன்… போயிட்டு வாங்க நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்”… என்று சொல்லி விட்டாள்…
ஏற்கனவே அவளுக்கு சற்று உடல் நலம் சரியில்லாத போலவே தோன்றியது.., தீபாவளி நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால் அனைவரின் சந்தோஷமும் கெடுமே என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்..
“உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே மதி”…
“ஒரு வருத்தமும் இல்லை… ரொம்ப நல்லதா போச்சு அக்கா. நான் வந்து கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்… நீங்க எல்லாம் போயிட்டு வாங்க”… என்று சொல்லிக்கொண்டிருந்தாள்…
கலையோ “உனக்கு உண்மை யிலே இதில் வருத்தம் இல்லையா மதி” என்று கேட்டதற்கு..
“அக்கா கல்யாணம் பேசும் போதே தெரியும்…. என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னு… நோ ப்ராப்ளம் போயிட்டு வரட்டும்…. எனக்கு அதைப்பற்றி எல்லாம் வருத்தம் கிடையாது” என்று சொன்னாள்…
அதைப்பற்றி இனியாவை தவிர அனைவருமே பேசிக்கொண்டனர்…
முகிலனுக்கு தான் சற்று வருத்தமாக இருந்தது.. திருமணமான இத்தனை நாட்களில் அவளோடு வெளியே என்று வேறு எங்கும் சென்றதில்லை…. ராமேஸ்வரத்தில் ஒரு முறை கோயிலுக்கும்.., ஒரு முறை தனுஷ்கோடிக்கும்… மட்டும் கூட்டி சென்று வந்தான்… மற்றபடி வேறு எங்கும் அவ்வளவாக கூட்டிப் போகவில்லை… அதுவே அவனுக்கு வருத்தத்தை கொடுத்தது… இருந்தாலும் சரி என்று கண்டுகொள்ளாமல் இருந்து விட்டான்…
மதியம் மதியின் வீட்டில் போய் உணவு முடித்துவிட்டு…. மதியிடம் சொல்லிக் கொண்டே வந்தான்…
மதி “ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்… நீங்க போயிட்டு வாங்க”. .. என்று சொல்லி அனுப்பி வைத்தாள்….