ஊற்றிய பிறகு தான் சம்யுக்தாவுக்கு, என்ன இப்படிச் செய்து விட்டோம் என இருக்க… அடித்து விடுவானோ எனப் பயந்து போனாள். ஆனால் ஆரியன் ஒன்றும் அப்படிச் செய்யவில்லை.

இப்போ சந்தோஷமா? இன்னும் ஊத்தணும்னா கூட ஊத்து.” என்றதும், அவன் அருகில் தரையில் உட்கார்ந்தவள், “எல்லாம் உங்களால தான். நீங்க தான் என்னை டென்ஷன் பண்ணிட்டே இருந்தீங்க. நான் என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிப் பண்ணீட்டேன்.” என அவள் அழ ஆரம்பிக்க… ஆரியன் பதறி விட்டான்.

இணைக்குதான் முதல் நாள் நம்ம வீட்டுக்கு வந்திருக்கோம். இன்னைக்குப் போய் அழுவாங்களா? நான் உன்னை எதுவும் சொல்லலையே…. எதுக்கு இப்போ அழுகிற.” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்து விட….

நிஜமா கோபம் இல்லையா?” என சம்யுக்தா அவனைப் பார்க்க… “இல்லை…” என்றவன், “நீ என்கிட்டே தானே இப்படி விளையாட முடியும்.” என்றான்.

சரளா கைப்பேசியில் அழைத்து, அவர்கள் ஊருக்கு சென்று சேர்ந்து விட்டதாகச் சொல்ல… “நீயும் உங்க அம்மாவுக்குக் கூப்பிட்டு நாம சாப்பிட்டோம்னு சொல்லிடு.” என்றான். அவன் சொன்னபடி சம்யுக்தா பெற்றோருக்கு அழைத்துப் பேசிவிட்டு வைக்க… அதற்குள் ஆரியன் குளித்துவிட்டு வந்திருந்தான்.

அவன் டி ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து வாசனையாக வர… சம்யுக்தா கட்டிலில் படுத்திருந்தாள்.

சின்ன விளக்கை போட்டு விட்டு பெரிய விளக்கை அணைத்தவன், அவள் அருகில் கட்டிலில் படுத்து, “நீ டிரஸ் மாத்தலையா?” என்றதற்கு,

உங்களுக்குத் தெரியுமா, நைட்டி போட கூடாதுன்னு சொல்லி, எங்க அம்மா எனக்கு நைட்டியே வாங்கித் தரலை.” என்றாள் சோகமாக.

அப்போ நைட் என்ன போட்டுட்டு தூங்குவ?”

சுடிதார் தான்.”

ஆமாம் அவன் பார்த்தவரையில், உறங்கும் போதும் அவள் சுடிதாரில் தான் இருந்திருக்கிறாள்.

கவலைப்படாத… இப்போ நைட் ட்ரெஸ் வேற மாதிரி எல்லாம் வருது. நான் உனக்கு வாங்கித் தரேன். நீ நாம மட்டும் இருக்கும் போது போட்டுக்கோ.” என்றதும், சந்தோஷமாகச் சரி என்றாள்.

நைட் தூங்கும் போது டைட்டா டிரஸ் போட்டுட்டு தூங்க கூடாது. இன்னைக்கு என்னோடது போட்டுக்கோ.” என்றவன், அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழட்டி கொடுத்து அவளை அணிந்து கொள்ளச் சொல்ல… அவள் மறுக்க… அவளைத் தன் பக்கம் இழுத்து அனைத்து, மனைவியிடம் காதில் ரகசியம் பேசினான்.

சம்யு, சத்தியமா முடியலை டி. ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது. மனசு முழுக்க நீதான் இருக்க…. என்னால ஆபீஸ் வேலைக் கூடப் பார்க்க முடியலை தெரியுமா?”

நான் என்ன பண்ணேன்?”

நீ ஒன்னும் பண்ணலை…. ஆனா இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ணாம இருக்க முடியாது. நீ காலேஜ் முடிக்கிற வரை குழந்தை வராம பார்த்துக்கலாம்.” என்றதும், சம்யுக்தா ம்ம் என்று மட்டும் சொல்ல…. அதற்காகவே காத்திருந்தது போல அவளை ஆவலாகத் தழுவி முத்தமிட்டான்.

சின்னப் பெண் அவனைப் பயப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணமும் இருந்ததால்… அவளை அவன் மென்மையாகவே கையாள… சம்யுக்தா கணவனின் காதலில் கரைந்து தான் போனாள். கடைசியில் அவனின் டி ஷர்ட்டில் தான் உறங்கினாள்.

காலையில் அவள் தாமதமாக எழுந்து பார்க்கும் போது, ஆரியன் பக்கத்தில் இல்லை. குளித்து விட்டு ஹாலில் சென்று பார்க்க… அவனும் குளித்துவிட்டு உட்கார்ந்து மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும், “நீ ஒகே தானே சம்யு.” என்று அவன் கேட்க… ஆமாம் எனத் தலையசைத்தாள்.

ஒரு சின்ன வேலை இருக்கு, அதை முடிச்சிட்டா… அப்புறம் இன்னைக்கு நான் ப்ரீ தான். உனக்கு வெளிய போகணும்னா கூடப் போகலாம்.” என்றவன் வேலையில் கவனமாக…

காலை டிபன் கூட அவன் இருக்கும் இடத்தில் சென்று கொடுத்து விட்டு வந்தாள். அவனும் உண்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தான். மதிய சமையலை முடித்து விட்டு, சம்யுக்தா அறையில் படுத்து ஓய்வெடுக்க…. ஆரியனும் அவன் வேலையை முடித்து விட்டு வந்து விட்டான்.

மனைவியை மென்மையாக அணைத்தவன், “உனக்கு ஒன்னும் என் மேல கோபம் இல்லை தான…” என்றதும், அவன் தலைக்கோதி விளையாடியவள், இல்லை எனத் தலையசைக்க… அவள் இதழில் முத்தமிட்டவன், “நாம அடுத்த வாரம் கொடைக்காணல் போவோமா.” என்றதும்,

அவள் பத்து விரலையும் காட்ட, அவளை அவன் புரியாமல் பார்க்க… “நான் பத்து தடவைக்கு மேலேயே கொடைக்காணல் போயிட்டு வந்துட்டேன்.” என்றதும், அவளைப் பார்த்து சிரித்தவன், “ஓ… அப்போ உனக்குக் கொடைக்கானலை சுத்தி காட்ட தேவை இல்லை. அதனால நாம ரூம்குள்ள மட்டும் இருந்தா போதும்.” என்றான் கிண்டலாக.

அப்போதைக்கு அப்படிச் சொன்னாலும், மனைவியை அவள் இதுவரையில் செல்லாத இடமான ஆலப்புழாவில் இருக்கும் படகு வீட்டிற்கு இரண்டு நாட்கள் அழைத்துச் சென்று வந்தான். அதோடு கேரளாவில் மேலும் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வந்தனர்.

சம்யுக்தாவுக்கு விடுமுறை என்பதால்… நிறைய நேரம் வீட்டில் இருந்து தான் வேலைப் பார்த்தான். அப்படி அலுவலகம் செல்லும் வேளையிலும், மனைவியை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு செல்பவன், திரும்ப அவன் வரும் போது அழைத்து வருவான்.

கல்லூரி திறக்க சில நாட்களே இருக்க… ஊரில் பெற்றோரிடமும் சென்று தங்கினர். வார இறுதியில் அவினாஷும் வந்திருக்க… வீடு களைகட்டியது.

சனிக்கிழமை இரவு உணவு முடித்ததும் சீட்டு விளையாட உட்கார… மனைவியின் அருகே சென்ற ஆரியன், “எனக்குத் தெரியாது, நீ பத்து மணிக்கு ரூமுக்கு வந்திடனும்.” என்றான்.

கணவன் சொன்ன நேரம் நெருங்க… சம்யுக்தா பதட்டமாக நேரத்தையும் கணவனையும் மாறி மாறி பார்க்க… அவனும் அவளையே பார்த்தபடி இருந்தான். அதன் பிறகு சம்யுக்தாவுக்கு விளையாட்டில் கவனம் இருக்குமா என்ன? 

“என்ன இவ்வளவு கேவலமா விளையாடுற நீ.” என அவினாஷ் கேட்க…

எனக்குத் தூக்கம் வருது டா.” என்றாள்.

சீட்டை எடுத்து வைத்தபடி, “இனிமே வந்து விளையாடலாம்னு கூப்பிட்ட அவ்வளவு தான்.” என அவினாஷ் அவளைத் திட்ட….

டேய் அவளுக்குத் தூக்கம் வருதுன்னு தானே சொல்றா.” என்றான் ஆரியன் மனைவிக்குப் பரிந்து கொண்டு. சரளாவும் எல்லோரும் போய்ப் படுங்க என்றார்.

சம்யுக்தா விட்டால் போதும் என்று அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துகொள்ள… ஆரியன் மெதுவாகத்தான் வந்தான்.

மனைவியின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்து விட… “ஹே நான் சும்மா தான் டி சொன்னேன். அதுக்குள்ள நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆன.” என்றதும், சம்யுக்தா எழுந்து உட்கார்ந்தவள், “எனக்குச் சும்மா தான் சொன்னீங்கன்னு தெரியுமா?” என்றாள்.

அப்படியே நீ நான் சொல்றது எல்லாம் கேட்டுடுவ.”

நீங்க சொல்லி கேட்கலையா?”

இப்போ கேட்கிற தான், ஆனா பின்னாடி எப்படி இருப்பேன்னு தெரியலையே….”

பின்னாடி வேணா திரும்பி காட்டவா..” என சம்யுக்தா குறும்பாகக் கேட்டு வைக்க… அவளின் அருகே உட்கார்ந்தவன், “அப்படியா மேடம், இதுக்கு நான் பதில் சொல்லட்டுமா…” என்றவன், மேலும் எதோ சொல்ல வர… சம்யுக்தா அவனின் வாயை அவசரமாக மூடினாள்.

அப்படியும் அவன், “எனக்குத் தெரியாதது என்ன டி இருக்கு உன்கிட்ட.” என பார்வையால் அவளை வருட… 

ஐயோ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க.” என்றவள், கணவனோடு ஒன்றிக் கொண்டாள்.

உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. நீ கண்ணை மூடு அப்போத்தான் தருவேன்.” என்றான்.

சம்யுக்தா கண்ணை மூடிக்கொள்ள… அவளுக்குத் தெரியாமல் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அவர்களின் திருமணப் புகைப்பட ஆல்பத்தை எடுத்து, அவள் மடி மீது வைத்தான்.

கண் திறந்து பார்த்தவள், “ஹே வந்திடுச்சா…” என ஆர்வமாக.

முன்னாடியே ரெடியா தான் இருந்தது. நான்தான் அப்புறம் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன். முதல்ல நீதான் பார்க்கணும்னு இன்னைக்கு வாங்கிட்டு வந்தேன்.” என்றவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

கணவனின் தோளில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சம்யுக்தா ஆல்பத்தை ஓவ்வொரு பக்கமாகப் புரட்ட… ஒவ்வொன்றையும் பார்க்கும் போது, இருவருக்கும் மீண்டும் அவர்களின் திருமணம் நடந்த தருணத்தை நினைவூட்ட… இருவரின் மனதிலும் இனிமை பொங்கி வழிந்தது.

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்போம்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை. நீங்க சொல்லும் போது கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா இப்போ எல்லாம் கனவு போல இருக்கு.” என்ற மனைவியைத் தோளோடு அனைத்துக் கொண்டான்.

அடி அழகா சிரிச்ச முகமே…..

நான் நினைச்சா தோணும் இடமே….

அடி அழகா சிரிச்ச முகமே

நினைச்சா தோணும் இடமே….

நான் பிறந்த தினமே… கிடைச்ச வரமே….

ஓ… ஓ…. ஓ…

நான் பிழை

நீ மழழை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை.

நீ இலை

நான் பருவ மழை

சிறு சிறு துளியாய்

விழும் தருணம் இல்லை.”