அவளின் உயிர் தோழியான கண்மணி இன்று பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ள அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தோன்றினாலும் ஒருபுறம் வருங்கால கணவனை நினைத்து தன்னையே மகிழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.
“கவி எப்போது மகிழ்ச்சியாய் இருந்தாலும் டைரி எழுதுவது வழக்கம்”
“அதேபோல் தான் அவளைப் பெண் பார்க்க வந்தபோதும் எழுதி வைத்திருந்தாள்“
அந்த வரிகள்,
உன்னுடையவளாய் நான் இருக்க
இன்னும் ஏன் தாமதிக்கிறாய்
உரிமையோடு கூட்டிச்செல்ல
“அவள் அதை மீண்டும் மீண்டும் தன் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கவும் அவளுக்கு மனம் அமைதியானது”
அனைவரும் வீட்டிற்கு கிளம்ப மேனேஜரான தினேஷ் தாரிகாவையும் கவியையும் காத்திருக்க சொன்னான்.
அவர்கள் என்னவென்று அவனிடம் வினவ,” அவன் ஆபிசை டெக்கரேட் செய்துவிடுங்கள்” என்று கூறி சென்றான்.
“இருவரும் வேகமாய் தங்களது டெக்கரேஷன் வேலைகளை தொடங்கினர்”
“அவர்களின் இரண்டு மணி நேர உழைப்பில் அலுவலகம் மிகவும் அழகாய் தெரிந்தது”
பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்
கவி ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று தன் தம்பிக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு சாலையை கடப்பதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்
“அப்போதுதான் அவசரமாய் வந்து கொண்டிருந்த லாரி அந்தப் பெண்ணின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது”
” கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தை யாரும் கவனிக்கவில்லை”
கவி அவசரமாய் சென்று அங்கு பார்க்க அவள் ரத்த காயங்களுடன் கிடந்தாள்.
ஆட்டோ ஒன்றை பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றாள்.
“அடிபட்ட பெண்ணை மருத்துவமனையில் தன்னுடைய தோழி என்று கூறி சேர்த்தாள்”
உள்ளே சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடக்க ,”இங்கு கவி அந்தப் பெண்ணுடைய பையில் ஏதாவது விபரம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தாள்“.
“அப்போது தான் அவளின் ஐடி கார்டை பார்த்தாள்“
அவள் பெயர் எழிலரசி என்றும் அவளும் தன்னைப் போலவே ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை செய்கிறாள் என்பதும் அவளுக்கு தெரிய வந்தது.
ஐடி கார்டின் பின்புறமிருந்து ஒரு விசிட்டிங் கார்டு விழ அதை எடுத்துப் பார்த்தவள் அந்த கார்டில் உள்ள போன் நம்பருக்கு போன் செய்தாள்
அவள் அமைதியாய் பார்த்திருக்க அடுத்த முனையில் இருந்து ,”ஹலோ என்ற கம்பீரமான குரல் கேட்டதும் அவள் அவனிடம் விவரங்களை கூற அவனும் கேட்டுக் கொண்டு இன்னும் இருபது நிமிடத்தில் மருத்துவனைக்கு வருவதாக தெரிவித்தான்“.
” அவன் கூறியது போலவே சரியாய் இருபது நிமிடத்தில் அவன் அங்கு வந்து சேர்ந்தான்”
“கவி அமைதியாய் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்ததால் கவியை அவன் அறியவில்லை”
அவன் அவளின் அருகில் சென்று,” எக்ஸ்க்யூஸ் மீ” என்று வினவவும்,” நிமிர்ந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி!”
“ஏனெனில் அங்கு வந்திருப்பது நம் ஹரியே தான்”
” அவளைவிட அவனுக்குத்தான் இன்னும் கஷ்டகாலம்”
“ஒருபுறம் தனக்கென நிச்சயிக்கப்பட்டவள் மறுபுறம் தன் காதலி”
இப்போது அவன் மனம் மதில் மேல் பூனையாய் நின்றது.
“ஒருபுறம் அதிர்ச்சி இன்னொருபுறம் வெட்கம் என கவி அவதியுற வெளியில் இருந்து வந்த நர்ஸ் ஒருத்தி பி பாசிட்டிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் மேடம் என்று கவியிடம் கூறினாள்”
“அவள் அவன் முகத்தை பார்க்க அதில் மிகவும் பிரியமானவர்களை இழக்கப் போகும் வலி தெரிய ஒரு நொடி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு டாக்டரைப் பார்க்கச் சென்றாள்“
“அவள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் திரும்பாததால் அவளை தேடி வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி”
“ஏனெனில் கவி இப்போது ரத்த தானம் செய்து கொண்டிருந்தாள்“
“இங்கு கவி தன் நினைவை இழந்து கொண்டிருக்க எழில் தன் நினைவை பெற்றுக் கொண்டிருந்தாள்”
“எழில் தன் முழு நினைவையும் பெற்றுவிட முதலில் அவள் பார்த்தது தன் அருகில் படுத்திருந்த கவியைத் தான்!”
“மாசு மருவற்ற முகம் பெண்ணுக்குரிய அழகுடன் அவள் விளங்கியதை அவளால் நன்றாக உணர முடிந்தது”
“அவளிடம் தெரிந்த அன்பின் பார்க்கப்பட்டாள் எழில்”
எழிலிடம் தெரிந்த அசைவினால் அவள் அருகில் வந்த ஹரி அவளிடம்,” இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்கவும் அவன் புறம் திரும்பியவள்
மகிழ்ச்சியுடனும் வருத்ததுடனும்( மகிழ்ச்சி கலந்த வருத்தம்) அவனிடம்,” நீங்கள் எப்படி சார் இங்க?” என்று கேட்டு நிறுத்தினாள்.
அவன் அமைதியாய் ,”சொல்கிறேன் ஆனால் இப்போது அல்ல”
“அப்புறம்” என்றாள்.
“அவளும் தலையசைத்துவிட்டு விழி மூடி உறங்க ஆரம்பித்து விட்டாள்“
” ஆனால் அவனின் மனப் போராட்டம்தான் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது”
அவன் தன் கண்களை மூடிக்கொண்டு ஜன்னலின் ஓரம் நின்றிருந்தான்.
திடீரென யாரோ முனகும் சத்தம் கேட்டு திரும்பியவன்,”அது கவியின் குரல் என்பதை அறிந்து அவள் அருகில் சென்றான்“.
“இப்போது அவள் உறங்கவில்லை சிரித்துக்கொண்டே உறங்கி விட்டாள்“
இரவு இருவருக்கும் உணவு வாங்கி வந்தவன் அவர்களை எழுப்பலாமா என்று யோசித்துக்கொண்டே நிற்கவும் அங்கு வந்த நர்ஸ் சில மாத்திரைகளை கொடுத்து விட்டு சாப்பிட்ட பின் அதை எழிலுக்கு தரச் சொன்னார்.
அவளை எழுப்ப எழுந்தவள் இன்னும் கவி கண்விழிக்காததை கண்டு அவன் சென்று கவியை எழுப்பினான்.