அத்தியாயம்….11

காமாட்சிக்கு  எந்த பேச்சு வர கூடாது என்று அனைத்தும் திட்டம் போட்டு  நடத்திக்  கொண்டு இருந்தாரோ.. அந்த பேச்சே முன் வந்து  நின்றதில்..

தன் நிலை மறந்தார்.. தன் மகனும்  இங்கு தான் இருக்கிறான் என்பதையும் மறந்தார்.. கோடம்பாக்கம் முக்கியமான பகுதியில் தான் இருக்கிறவது இவர்கள் வீடு..

காமாட்சி திருமணம் செய்து இந்த வீட்டுக்கு வந்த போது.. வீடு இது போல் இல்லை… கணவன் கட்டியதோடு ஒடு வீடு தான்.. ஆனால் இரண்டரை கிரவுண்ட் அந்த காலத்திலேயே அதன் மதிப்பு அவ்வளவு இருந்தது…

வீடு சிறியது என்பதால் இடம் பெரியதாக தெரிய.. தன் வீட்டு ஆட்களுக்குள் இது தான் பேச்சாக இருந்தது.. அதுவும் காமாட்சியின் அம்மா வீடு வாடகை.. ஒன்டி  குடுத்தனம் என்பார்களே.. அது போலான வீட்டில் இருந்தவளுக்கு இந்த வீடு. 

வீடு மட்டும் அல்லாது அதை சுற்றி இருந்த இடம் பார்க்க பார்க்க அப்படி ஒரு பூரிப்பு அவருக்கு..

அந்த பூரிப்புக்கு இடையூறு செய்வது போல் பேச்சான .. “ ஒரு பெண் இருக்கு.. அது மூப்பாட்டன் சொத்து.. அந்த பெண்ணுக்கும் பங்கு கொடுக்கனும்.. ஆனாலும் பாதி என்பது  கூட  என்று பார்த்தாலும் பரவாயில்லை..” என்பது போலான பேச்சு காமாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

காமாட்சி முத்துகுமாரை திருமணம் செய்து வரும் போது…  சுலோச்சனாவுக்கு வயது  பதினொன்னு..  இவளுக்கும் இந்த வீட்டில் பங்கு இருக்கா..? என்று தான் சுலோச்சனா பார்க்கும் போது எல்லாம் காமாட்சியின் மனதில் எழும் .. அதுவே காமாட்சிக்கு சுலோச்சனாவை வெறுக்க ஒரு காரணம் என்றால்.

.

திருமணம் முடிந்த இரவில் அவள் கணவன்.. தன்னை பற்றியோ தங்கள்  எதிர் கால வாழ்க்கையை பற்றியோ பேசாது அந்த இரவு முழுவதும்…

“ என் தங்கை.. என் தங்கை..” என்ற பேச்சில்  இரண்டாம் திருமணம் செய்து வந்தால்,  மூத்ததாரத்தின்  குழந்தையை பற்றி பேசி பார்த்து கொள்.. பார்த்து கொள்.. என்று சொல்வது போலவே உணர்ந்தார் காமாட்சி..

அதன் விளைவு.. காமாட்சி சுலோச்சனாவை நாத்தனார் என்ற பார்வை தான்டி… சக்காலத்தியின் மகளாக தான் அவளை பார்த்தார்..

அதனால் கணவனிடம் கெடு பிடி கொண்டு வந்து. சுலோச்சனாவுக்கு  விரைந்து திருமணம்  முடித்து… இந்த வீட்டில் சுலோச்சனா பேச்சு எடுத்தாலே அன்று பெரிய பிரளயம் உருவாவது போல் ஆனதில், முக்கால் வாசி ஆண்மகனாக தான் முத்துக்குமார் மாறி போனார்..

நான்கு குழந்தைகள்   வந்து விட்டது.. இனி என்ன..? என்பது போல் அனைத்திற்க்கும் அனுசரித்து போகவே பழகி கொண்டார்.. 

தங்கையின் கணவன் சரி இல்லை என்று தெரிந்ததும், தன் வீட்டில் வைத்து பார்த்து கொள்ள முடியவில்லை என்றாலும், தங்கை வீட்டுக்கு சென்று ஒரு தொகை கொடுத்து கொண்டு தான் இருந்தார்..

 ஆனால் அது இன்று வரை என்ன அவர் போகும் வரை மனைவிக்கு தெரியாது தான்  பார்த்து கொண்டார்..

கணவன் போன பின் பிள்ளைகளுக்கு ஒரு அத்தை இருக்கிறது என்ற  நினைப்பே வர விடாது தான் காமாட்சி பார்த்து கொண்டார்..

ஆனால் அவர் பெற்ற பெண்ணே தன் வீட்டுக்கு மருமகளாக வந்து. எந்த பேச்சு வர கூடாது என்று நினைத்தாளோ அதே கேட்கவும்..

என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாது.. “ ஒ அதுக்கு தான் அன்னைக்கு உன் ஆத்தா ஒரு வயசு பைய்யன் இருக்கும் வீட்டுக்கு  வயசுக்கு வந்த  இரண்டு பெண்களை  கூட்டிட்டு இங்கு வந்தாளா…?

இரண்டுலே எது பிடித்தாலும் பரவாயில்ல என்று… இந்த பொழப்புக்கு..” என்று காமாட்சி பேசிக் கொண்டே போக அனைத்திற்க்கும் வாய் திறந்து பேசிய மலர் கொடி… இந்த பேச்சுக்கு வாய் திறக்கவில்லை..

அவள் பார்வை மொத்தமும் தன் கணவனிடம் மட்டும் தான் இருந்தது.. அன்றும்  இப்படி தான் இவங்க பேசினாங்க… வீட்டுக்கு வந்தவங்களை அத்தை என்ற உறவு வேண்டாம்..

ஒரு பெண்மணி… பெண்களை அம்மா இப்படி பேசுறாங்களே.. என்ன இது பேச்சு..? என்று கேட்காது கார் சாவீயை எடுத்துட்டு போயிட்டான்..  

அன்னைக்கு அத்த மகள் இன்னைக்கு மனைவி என்ன செய்யிறான் என்று  பார்க்கலாம் என்று  நினைத்து… தான் அத்தை  பேச பேச எதுவும் பதில் சொல்லாது  அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்…

மலர் எதிர் பார்த்த வீரம் சித்தார்த்துக்கு வந்து விட்டது போல.. “ இது என்ன பேச்சும்மா அசிங்கமா இருக்கு..?” என்று  மகன் அதட்டவும் தான் காமாட்சி  இருக்கும் சூழல் உணர்ந்து…  தன்னை கட்டுப்படுத்தியவராக..

“இல்ல சித்து நேற்று கல்யாணம் செய்து கொண்டு வந்தா. ஒரு அம்மாவுக்கு சொல்லாம.. கூட பிறந்தவங்களுக்கு சொல்லாம இப்படி தாலி கட்டிட்டு வந்து நிற்கிறோமே.. என்ற நினைப்பு இல்ல..

இப்படி யாருக்கும்  தெரியாம தாலி கட்டிட்டு வந்தவங்களே வீட்டிலே சேர்க்க மாட்டாங்க.. ஆனா நான்.. சரி நம்ம மகன் ஆசைப்பட்டுட்டான்.. என்று தான் விட்டேன்.. அதுக்கு இவ வீட்டில் இருப்பவங்க கிட்ட பார்த்து அனுசரித்து தானே  நடந்துக்கனும்.. ஆனா இவ சொத்தை பத்தி பேசுறா. அப்போ என்ன என்று நினைக்கிறது.. “ என்று காமாட்சி தன் மகனிடம் பேசினார்..

அதற்க்கு ஒத்து ஊதுவது போல மகி.. “ ஆமா சித்து எனக்கு என்னவோ எதுவும் சரியா படல. வந்த அன்னைக்கு வீட்டு பெண்கள் இங்கு இருப்பதில் கணக்கு பார்க்கிறா… அதோட மாமாவுக்கு  ஆபிசுக்கு நேரம் ஆகி விட்டது. தோசை சுடு என்றதுக்கு

 நீயே சுட்டுக்க என்பது போல உனக்கும் அவளுக்கும்  மட்டும் பார்ப்பது போல செய்யிறா. இது குடும்பம் நடத்தும் வீட்டுக்கு பொறுந்துமா  சித்து..” என்று மகி ஒரு பக்கம் நியாயம் பேச..

சித்தார்த்துக்கு ஒரே நியாயமாக.. “  கொடி தான் இந்த வீட்டு மருமகள் அம்மா.. அதனால் இது போல வேறு பெண்ணை அந்த மயக்குவது என்பது போல் எல்லாம் பேசாதிங்க..

 

அதோட அவள் சொத்து பத்தி பேசுனது என்ன பொறுத்தவரை சரி தான்.அவள்  நம்ம  சொத்து பத்தி பேசல..  அவள் அம்மாவுக்கு உரிமை இருக்கு. எப்படி நீங்களே எல்லாம் எடுத்து கொள்ளலாம்..? 

அவள்  கேட்டது சரி தான் மா.. எனக்கு புரியவே இல்ல.. நான் ஏன் இது யோசிக்கவே இல்ல.. இது அப்பாவுடையது கிடையாது. நாம  மட்டும் எடுத்துக் கொள்ள…

 மூதையார் சொத்து .  பெண்ணான அத்தைக்கும் இதில் பங்கு இருக்குமா…  “ என்று சொன்னவன்..

“ பரவாயில்லை வீடு உள்ள இழுத்து தான் கட்டி இருக்கேன். முன் பக்கம் கடை கட்ட உதவும் என்று.. பாகத்தில் முன் பக்கம் அத்தைக்கு கொடுத்து விடலாம் ..” என்று சித்தார்த் சொல்லி முடித்தது தான் தாமதம்..

காமாட்சிக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ… “ என்னது பங்கா. உன் அப்பா அவள் தங்கை தங்கை என்று எவ்வளவு செய்து இருக்கிறார் தெரியுமா..?  பெத்தவங்க சின்ன வயசிலேயே விட்டு விட்டு போயாச்சி. 

படிக்க வைத்து…  உடை கொடுத்து… உணவு கொடுத்து கல்யாணமும் செய்து கொடுத்தது யார்.. உன் அப்பா அது எல்லாம்  எந்த கணக்கில்  சேர்ப்பதாம்…?” என்று காமாட்சி பேச பேச மலர் கொடியின் மனது அவ்வளவு ஆவேசமாக கொதித்தது ..

கேட்டு விடுவாள்.. நன்றாக கேட்க அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கிறது.. ஆனால் இப்போது நான்  பேச கூடாது..

அவர் மகன் தான் பேச வேண்டும். அப்படி பேசினால் தான் ஒரு மகன் மகளுக்கு செய்யாது போனால் எந்த அளவுக்கு வேதனை கொடுக்கும் என்று அவருக்கு தெரிய வேண்டும் என்று நினைத்தாள்…

 மனதில் அவ்வளவு கொதித்தாலும் அதை முகத்தில்  கூட காட்டாது  முன் போலவே அதே கை கட்டிய பாவனையில் தான்  நின்று கொண்டு இருந்தாள்…

அம்மா பேச பேச சித்தார்த்தின் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு கோபம்.. இது என்ன பேச்சு என்பது போல..

அப்பா அம்மா இறந்து  விட்டால் அந்த  சின்ன பெண்ணை வளர்ந்த அண்ணன் காரன் தானே பார்த்து கொள்ள வேண்டும்..

அதை போய் அதுவும் சாப்பாட்டில் இருந்து…  கொஞ்ச நாட்களாகவே  அம்மா மகியின் செயல்களில்.. 

என்ன இப்படி ஒரு சுயநலம் என்று நினைத்து இருந்தான் தான்.. ஆனால் சுயநலத்துக்கும் மேல்  மனிதாபிமானமே இல்லாது இது என்ன பேச்சு என்றாகி  விட்டது சித்தார்த்துக்கு…

அதன் தாக்கமாக.. “ அப்போ அத்தைக்கு அப்பா போட்ட சாப்பாடு.. வாங்கி கொடுத்த ட்ரஸ்.. செய்து கொடுத்த கல்யாணம் இதை எல்லாம் பார்த்தா நாம அவங்களுக்கு ஒன்னும் கொடுக்க தேவை இல்லை. அப்படி தானே…?” என்று  தன் அம்மாவையே பார்த்த வண்ணம் அவன் பேச்சு ஒவ்வொன்றும் நிறுத்தி  நிதானமாகவே கேட்டான்…

அவன் பேச்சில் மகிக்கு ஏதோ புரிவது போல் ஆனதில் அவள் “ அம்மா..” என்று தடுக்கும் முன் காமாட்சி..

“ ஆமாம்.. இதுல உனக்கு  சந்தேகமா..?” என்று  சொல்லி  விட்டார்..

“ அப்போ இந்த வீடு மொத்தமும் எனக்கு தான்லே..?” என்ற சித்தார்த்தின் கேள்விக்கு மட்டும்..

“ அது எப்படி..? நான்கு பாகமா தானே  போட வேண்டும்..” என்று இப்போது மட்டும் தன் மகள்களுக்கு அம்மாவாக  பேசினார்..

“ அது எப்படிம்மா..? ஒரு பெண் அத்தைக்கே சாப்பாடு. ட்ரஸ் கல்யாணம் என்று கணக்கை கழித்து விட்டிங்க.. நான் இரண்டு..” என்று ஆரம்பித்தவன்..

“ இல்ல இல்ல மூன்று பெண்களுக்கு எல்லாம் பார்த்து செய்து.. அப்பா போல இல்லாம  இதோ இப்போதும் செய்து கொண்டு இருக்கிறேன் “

 என்று  அந்த கடைசி பேச்சு  பேசும் போது மட்டும் தன் சின்ன தங்கை தீபிகாவை பார்த்து… “ சாரிம்மா..” என்று வாயசைத்தான்..

அவன் பேச்சில் காமாட்சி நெஞ்சை பிடித்து அமர்ந்து விட்டாள்.. தன் மகனிடம் இருந்து இப்படியான ஒரு பேச்சை அவர் எதிர் பார்த்து இருக்கவில்லை..

அவர் நினைத்ததை மகி சொல்லி விட்டாள்… “ நீ இப்படி மாறி போவ என்று நான் எதிர்  பார்க்கவில்லையடா..?” என்று சொன்னவள் கூடவே..

மலர் கொடியை பார்த்த வாறு..  “ ஒரே  நையிட்டிலேயேவா..?”  என்ற அந்த வார்த்தைக்கு உண்டான அர்த்தத்தை தெரிந்து சொன்னாளோ.. தெரியாது சொன்னாளோ… ஆனால்  அதை கேட்ட சித்தார்த்தின் முகம்  அப்பட்டமாக அருவருப்பை காட்டியது..

இதற்க்கு மட்டும் மலர் கொடி. ஏதோ பேச வாய் திறக்கும் வேளயில். அவளை பேச  விடாது கை பிடித்து தங்கள் அறைக்கு அழைத்து வந்து விட்டான்…

அறைக்கு வந்ததும் மலர்.. “ எதுக்கு இப்போ என்னை இழுத்துட்டு வந்திங்க… என்ன மாதிரி அசிங்கமா பேசுறாங்க  உங்க அக்கா.. நல்லா நாளு வார்த்தை  கேட்காம என்னை இழுத்துட்டு வர்றிங்க..?” என்று சொல்லி மூக்கு நுனி சிவக்க  அவன் முகத்துக்கு தன் அருகில் கொண்டு சென்றவள்.

“ நான் என்ன செய்தேன்.. ஒரே ராத்திரி என்று எல்லாம் பேசுறாங்க..?” என்று அவள் கேட்ட விதமா இல்லை கேட்கும் போது அவள் முகம் தன் முகத்துக்கு அருகில் வந்ததால்.. அவள் உதட்டு துடிப்பு என்ன..? அதில்  இருந்த மெல்லிய ரேகை பார்த்ததாலோ.. கீழே  சிறிது நேரம் முன் தான்.. அப்படி வீட்டில் பிரச்சனை நடந்து இருந்தது..

அது இன்னும் ஒரு முடிவுக்கு கூட வரவில்லை.. தெரியும். இது நாளையும் தொடரும் என்று..

ஆனால் சித்தார்த்தின் மனதில் மட்டும் நேற்று இரவு  தங்களுக்குள் நடவாது போனது தான் அவன் நியாபகத்தில் வந்தன… அதன் விளைவு..

“ அது தான் ராத்திரி தான் மகி சொன்னது போல ஒன்னும் நடக்கலையே… அப்போ அதை பத்தி நான் என்ன சொல்ல முடியும்.. நடந்து முடிந்து இருந்தால்,, நான் அதுக்கு எல்லாம் பேசவில்லை..” என்று அவன் நியாயத்தை அவன்  பேசிய தினுசில்..

மலர் கொடி… இது வரை முகம் சிவக்க கோபமாக கத்திக் கொண்டு இருந்தவள் வாய் அடைத்து போய் அவனை பார்த்தாள்.. ஆம் வாய் அடைத்து போய் தான் அவனை பார்த்தாள்.. அவன் வாய்  கொண்டு அடைத்ததினால்…