இத்தனைக்கும் இங்க வசதிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா எபப்வுமே பிறந்த வீட்டை மட்டுமே பெருமையா பேசுறது.”

இவ வாய்க்கு பயந்து உன் பாட்டி வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்திடுவாங்க. எனக்குச் சில நேரம் தோணும் அதுக்குத்தான் அப்படி ஆங்காரமா கத்துறாளோன்னு.”

நானும் இப்போ மாறுவா, அப்போ மாறுவான்னு எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவ்வளவு டார்ச்சர். இதுல அவங்க அப்பா, அண்ணன், தம்பி தொல்லை வேற… எதோ உலகத்தில இல்லாத பொண்ணு மாதிரியே பேசிட்டு இருப்பாங்க. எனக்கு எப்படிப் பைத்தியம் பிடிக்காம இருந்ததுன்னு தெரியலை.”

இரண்டாவது குழந்தை உண்டானதும், ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு அவங்க வீட்டுக்கு போனவ பிரசவம், முடிஞ்சு ஆறு மாசம் கழிச்சும் வரலை.”

நான் எங்க அப்பா அம்மான்னு மாத்தி மாத்தி போய்க் கூப்பிட்டு பார்த்தும் வரலை.”

இந்த ஊர் பிடிக்கலை… சென்னைக்குப் போயிடலாம்னு சொன்னா…”

எனக்குத் தொழில் எல்லாம் இங்க இருக்கு. நான் அங்க போய் எப்படி இருக்க முடியும். எனக்கு அங்க என்ன தெரியும். சொன்னா புரிஞ்சிக்கவே இல்லை. என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையே போச்சுன்னு சொன்னா…”

அப்புறம் ஒருநாள் இனிமே அங்க வந்து என்னால இருக்க முடியாதுன்னு சொல்லி, ரெண்டு பேரும் பஞ்சாயத்து கூட்டி ரத்து பண்ணிடலாம்னு சொன்னது அவதான்.”

அப்போ அவ எழுதி கொடுத்தது என்கிட்டே இருக்கு. நானும் விட்டா போதும்னு முடிவுக்கு வந்திட்டேன்.”

நான் வந்து கெஞ்சி கேட்பேன்னு நினைச்சாங்க போல… நானா அப்படி வரலைனதும், அவங்களுக்கு ஏமற்றம். வந்து பேசினா சேர்ந்துக்கலாம்னு சொல்லி தூது விட்டாங்க. அப்போ அவங்க அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி இருந்தது.”

ஐயோ திரும்ப மாட்டினா அவ்வளவு தான்னு தோணுச்சு. எனக்கு இன்னொரு கல்யாணம் ஆனா விட்டு விலகிடுவாங்கன்னு நினைச்சேன்.”

என் ப்ரண்ட் தான் சொன்னான். அவனுக்கு என் மேல எப்பவுமே ரொம்ப அக்கறை. நான் படுற பாட்டைக் கூட இருந்து பார்த்தவன், அவன்தான் இந்துஜாவை பார்த்துக் கொடுத்தான். அப்பா அம்மா இல்லை. அவங்க பெரியப்பா பெரியம்மா வீட்ல தான் இருக்காங்க. அவ்வளவு விருப்பம் இல்லாமத்தான் அவங்க வீட்ல வச்சிருந்தாங்க.”

இந்துஜாவுக்கு என்னோட நிலைமை புரிஞ்சது. எனக்கு வாழ்க்கையில நிம்மதி வேணும்னு தான் சொன்னேன்.”

ஒருவேளை உங்க மனைவி திருந்தி வந்தா… ரெண்டு குழந்தை வேற இருக்கேன்னு கேட்டா… ”

அதுக்கு வாய்ப்பே இல்லை. நாங்க சேர்ந்து இருந்தாலும் புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா எல்லாம் வாழ்ந்திட மாட்டோம். அதுக்கு நாம கல்யாணம் பண்ணிகிட்டா, அவளே விலகிடுவான்னு சொன்னேன்.”

ரொம்ப யோசிச்சா… காத்திருக்க அவகாசம் இல்லை. அவங்க வீட்லயும் கல்யாணத்துக்கு அவசரப்பட்டாங்க.”

பிறகு துணிஞ்சு கல்யாணம் பண்ணிகிட்டோம்.”

உனக்குத் தோணலாம், நான் முறையா விவாகரத்து வாங்கிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்கலாமேன்னு… அதுக்கு உன் அத்தை விட்டிருக்க மாட்டா… என்னோட சந்தோஷமும் நிம்மதியும் அவளுக்கு முக்கியமா இருந்திருந்தா… என்னோட தான் ஒழுங்கா குடும்பம் நடத்தி இருப்பாளே… அவளுக்கு நானும் நிம்மதியா இருக்கக் கூடாது. அதனால கண்டிப்பா விவாகரத்துக் கொடுத்திருக்க மாட்டா.”

கல்யாணம் ஆனது தெரிஞ்சதும் முதல்ல ரொம்பக் குதி குதின்னு அவங்க வீட்ல குதிச்சாங்க. என்னை வெட்டப் போறேன், குத்த போறேன், கொல்லப் போறேன்னு சொன்னாங்க. உன் பொண்ணோட வாழ்றதும் ஒன்னு,சாகிறதும் ஒன்னுதான் எதுனாலும் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டேன்.”

அப்புறமும் நிறைய மிரட்டினாங்க. அவங்க வீட்ல தான் இருந்தா…. அவங்க அப்பா ஒரு விபத்துல தவறிட்டார். அவளோட அண்ணிக்கு இவ அங்க இருந்தது பிடிக்கலை போல… அதனால அவங்க வீட்ல சண்டை வர…. அவங்க வீட்ல என்ன சொன்னாங்களோ… இங்க வந்து உட்கார்ந்திட்டா….”

நான் விவாகரத்து எல்லாம் கொடுக்க மாட்டேன், இங்கதான் இருப்பேன்னு சொன்னா….”

நான் அதுக்கு ஒத்துக்கலை…”

அப்புறம் இந்துஜா தான் சொன்னா… ரெண்டு குழந்தை வேற இருக்கு… அவங்க இருக்கனும்னுனா இருந்துகட்டும். நான் விலகியே இருந்துக்கிறேன். உங்களுக்கு என்ன நிம்மதி தான வேணும். நான் இருக்கேன் உங்களுக்கு. இனிமே அவங்க என்ன பேசினாலும் கண்டுக்காதீங்கன்னு சொன்னா….”

அவங்க வீட்ல என் குழந்தைகள் எப்படி வளருவாங்களோன்னு கவலை இருந்தது. இங்க அம்மா அப்பா இருக்காங்க. அதனால நானும் பேசாம விட்டுட்டேன். ஆனா அவ என்ன திட்டத்தோட இங்க இருக்கான்னு எனக்கு இப்போ வரை தெரியலை.”

அவ பாதி நாள் அம்மா வீட்ல தான் இருப்பா… என் அம்மாதான் பசங்களை வளர்த்தாங்க. பசங்ககிட்டையும் இவ ஆடின ஆட்டத்தைச் சொல்லாம, உங்க அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு சொல்லி…, என்னோட சேர விடாம பண்ணிட்டா….”

நானும் பசங்களும் அவங்க அம்மா மாதிரி ஆகிட கூடாதேன்னு… கொஞ்சம் கண்டிப்பா தான் இருந்தேன்.”

எனக்குச் சந்திரா கிட்ட கிடைக்காத அன்பு, அக்கறை, நிம்மதி எல்லாமே இந்துஜாகிட்ட கிடைச்சது. என் மனபாரத்தைக் கேட்கவும், அதை இறக்கி வைக்கவும் ஆள் இருக்கவும், நானும் சந்திரா என்ன பேசினாலும் கண்டுக்கிறது இல்லை.”

பசங்க ஒரு நல்ல நிலைக்கு வந்து செட்டில் ஆனா போதும். என்னோட மூன்னு பசங்களும் எனக்கு ஒரே மாதிரி தான்.”

ஆரியன் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான். வெளியே இருந்து பார்ப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம். பொண்டாட்டியை அடிக்கி வைக்கத் தெரியாதவர் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அந்த இடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். இப்போதும் சக்ரவர்த்திச் செய்தது சரி என்று அவனால் சொல்ல முடியாது. தான் அந்த இடத்தில் இருந்திருந்தால் எனன் செய்திருப்போம் என அவனுக்கும் தெரியவில்லை.

சக்ரவர்த்தியும் அதை உணர்ந்தாரோ என்னவோ….

கல்யாணத்துக்கு முன்னாடி கூட நான் அப்படி இப்படி இருந்தது இல்லை. எனக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. நான் அடுத்த ஜென்மத்துல என்னவா பிறப்பேன்னு கூடத் தெரியாது, இருக்கிற இந்த ஒரு வாழ்க்கையை நான் தகுதி இல்லாதவங்களுக்காக வீணாக்கணுமா? அது மட்டும் தான் நான் நினைச்சு பார்த்து இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டேன்.

ஒரு பொண்டாட்டிகிட்ட ஒன்னு ரெண்டு குறை இருந்தா…பொருத்துப் போகலாம். ஆனா நான் பிறந்ததே மத்தவங்களை ஆட்டி வைக்கிறதுக்குன்னு இருக்கிறவங்களை என்ன செய்ய முடியும்?

சக்ரவர்த்தியின் பேச்சில் இருந்த நியாயம் புரிய…. “நீங்க சொல்றது சரிதான் மாமா.” என்ற ஆரியன், “எனக்கும் அவங்களைப் பத்தி இப்போ புரியுது.”

எதுவும் செய்ய முடியாம இல்லை. ஆனா வேணாம்னு இருக்கோம்னு அவங்க அண்ணன் சொன்னார். எனக்கு அந்த வார்த்தை உறுத்திட்டே இருக்கு. அதுதான் உங்களை எச்சரிக்கை பண்ணலாம்னு நினைச்சேன்.”

நீங்க எதுனாலும் என்னைக் கேட்கலாம் மாமா.” என்றான்.

உன்னைக் கேட்காம யாரை கேட்கப் போறேன். ஸ்ரீநிதிக்கு தான் உன்னைக் கல்யாணம் பண்ண கொடுத்து வைக்கலை…. இன்னொரு வகையில் அதுவும் நல்லது தான். ஸ்ரீநிதி அவங்க அம்மா மாதிரி இல்லைனாலும், அவ குணம் எப்படின்னு என்னால உறுதியாவும் சொல்ல முடியாது.”

எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம் மாமா.”

ஆரியன் நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். ஸ்ரீகாந்த் நான் சொன்னா கேட்க மாட்டான். அவன்கிட்ட பேசி கொஞ்சம் அவனுக்குப் புரிய வை… இப்படி இருந்தா அவன் வாழ்க்கை என்ன ஆகும்?”

சரி மாமா, நான் பேசி பார்க்கிறேன்.” என்றவன்,

நேரம் ஆச்சு நான் கிளம்பனும்.” என்றதும், இருவரும் அங்கிருந்து செல்ல…

ஆரியன் கதவை பூட்ட…. சக்ரவர்த்தி முதலில் கீழே இறங்கி சென்று விட்டார். கீழே செல்லாமல் பக்கவாட்டில் இருந்த அறைக்குள் சென்றவன், அங்கே நின்ற சம்யுக்தாவை பார்த்து நல்லா ஒட்டு கேட்ட போல… என்றதும்,

எனக்கும் எதுவும் தெரியாது தான…. நீங்க கேட்கும் போதே கேட்டாத்தான் உண்டு.” என்றாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், “சரி நான் கிளம்புறேன்.” எனச் சொல்லிவிட்டு கீழே சென்றான்.

இந்துஜா ஆரியனுக்குப் பாலும், கணவருக்குப் பூண்டு பாலும் கொண்டு வந்து கொடுத்தார்.

எனக்குக் கொழுப்பு சத்து வந்திடக் கூடாதுன்னு. உங்க அத்தை வாரத்துல மூணு நாள் பூண்டு பால் கொடுத்திடுவா…” எனச் சக்ரவர்த்திச் சிரித்தார்.

சந்திரா போல அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து, தன் வாழ்க்கையையும் வீணாக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்தாலும் கணவர் பிள்ளைகளுக்காவது தன்னை விட்டு போக மாட்டார் என்று நினைத்திருக்கலாம்.

சக்ரவர்த்திச் செய்தது சுயலமாகக் கூட இருக்கலாம். கௌரவமாகப் பிரிந்து செல்லவும் சந்திரா விட்டிருக்க மாட்டார். ஆனால் அவரும் மனிதர் தானே… அவர் வாழ்க்கையை அவர் வாழ வேண்டும் தானே….

இந்தக் காலத்தில் அப்படித் தியாகம் செய்து வாழ வேண்டும் என்று அவசியமும் இல்லை. வாழ்க்கையை வாழாமல் நல்லவர் என்ற பெயரை மட்டும் வைத்து என்ன செய்ய…. வாழ்க்கை வாழத்தானே….

ஆரியன் சென்றதும், “அம்மாகிட்ட நானே பார்த்து சொல்லிக்கிறேன். வீணா அவ டென்ஷனாவா” என சக்ரவர்த்தி சொல்ல… தப்பித்தோம் என நினைத்தாள்.

போகாதே என்று தானே இந்துஜா சொன்னார். இவள் தானே கேட்காமல் சென்றாள். அம்மாவிடம் இருந்து வேறு திட்டு வாங்க வேண்டுமே என பயந்து போய் இருந்தாள். நல்லவேளை தந்தை காப்பாற்றினார். 

இனிமே யாராவது வேணும்னு நினைப்ப… நினைப்ப…. என அவளையே கேட்டுக் கொண்டவள், யாரும் வேண்டாம் டா சாமி என மனதிற்குள் பெரிய கும்பிடு போட்டாள்.

இவள் மட்டும் முடிவு எடுத்தால் போதுமா?