மருத்துவர் வந்து பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவனிடம் ” ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் ” எடுக்க சொல்லுங்க என சொல்லி சில “டேப்லெட் அண்ட் ஆயின்ட்மெண்ட்” கொடுத்துவிட்டுச் சென்றார்.
அவன் ,”அன்றைய தினம் முழுவதும் அவளுடனே போக்கினான்”.
அவளுக்கு,” உணவு பரிமாறுவதில் இருந்து மருந்து கொடுப்பது உறங்க வைப்பது என அனைத்தையும் அவனே கவனித்துக் கொண்டான்”.
அவள் உள்மனம் நிகழ்ந்தாலும்,” வெளியில் எதையும் காட்டாமல் உங்களுக்கு ஏன் சிரமம் !என்றாள்”.
அதற்கு அவன்,” உன்னை என்னை நம்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்றான்.
“அவள் பதிலேதும் பேசவில்லை”.
அவனுக்குத் தெரியும், அவளை எப்படி மடக்க வேண்டும் என்று!.
அடுத்த நாள் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய நேரத்தில் தான்,”சுஜா அங்கு வந்தாள்”.
அங்கு அவளை எதிர்பார்க்காததால் சந்தியா ஆனந்தத்துடன் சுஜாவை பார்க்க, அதை அப்படியே பிரதிபலிப்பது போல் சுஜாவும் நின்றிருந்தாள்.
ஆனந்த்,” அவளை அறிமுகப்படுத்த முயல, சுஜா முந்திக்கொண்டு தெரியும்” என்றாள்.
சுஜாதாவிடம் ,”இவர்தான் அவர்” என்று கூற அவள், ஆனந்திடம் “கங்கிராட்ஸ்” என்றாள்.
நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த ரஞ்சித் “ஆல் தி பெஸ்ட் சுஜா” என்றான்.
அதுவரை அவனை கவனிக்காதவள், அவனிடம் திரும்பி “ஹாய் மேன்” என்றாள்.
அவன் சிரித்துக் கொண்டே,” இப்போதாவது உங்கள் கண்ணுக்கு நான் தெரிகிறேனா?” என்று கேட்க அவள் முகம் சிவந்துவிட்டது.
பின்பு ஆனந்த் அவர்களிடம் ,”அடுத்த வாரம் எங்களோட மேரேஜ் கண்டிப்பா ரெண்டு பேரும் மறக்காம வந்துடுங்க! என்றான்.
“கண்டிப்பாக வரேன்” என்று கூறிவிட்டு ரஞ்சித் சந்தியாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அவர்களின் வருகையை அர்ஜுனிடம் கூற,
அவன் தன் நண்பனிடம்,” உனக்கு இங்கு நிறைய இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றான்.
சரிடா.
” சீக்கிரமாக வந்து விடுகிறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
இருவரும் சரியாக மாலை 6 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர்.
அவர்கள் செல்ல வேண்டிய ட்ரெயின் ஏதோ சிறு பிரச்சினையால் 8 மணிக்கு தாமதமாக வரும் என்ற அறிவிப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அவர்கள்,” அங்கிருந்த வெயிட்டிங் ஹால் நோக்கி நடக்கும்போது யாரோ ஒரு இளம்பெண் சந்தியாவை தள்ளி விட்டு ஓட அவளைப் 10 பேர் துரத்தி கொண்டிருந்தனர்”.
சந்தியாவை கை கொடுத்து தூக்கி விட்டவன்,” அவளை உள்ளே போக சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து ஓடினான்”.
அந்த பெண் ஓர் இடத்தில் மறைய உள்ளே நுழையவும்,” அவசரமாய் அவள் வாய் பொத்தி அதற்கு எதிர்திசையில் இழுத்தான் ரஞ்சித்”.
இருட்டில் அவன் முகம் தெரியவில்லை.
ஆனால் அவள் முதலில் நுழைந்த இடத்தில்தான் அந்த ரவுடிகள் இப்போது தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போ இவன் என்னை காப்பாற்றியவனா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.
அவர்கள் சரியாய் போய் சேரவும் ட்ரெயின் வரவும் சரியாய் இருந்தது.
முதலில் அவளை டிரெயினில் ஏற்றிவிட்டு சந்தியாவை அழைத்து சென்றான் ரஞ்சித்.
அவன் சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை.
அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க ட்ரெயின் கிளம்பாமல் அப்படியே நின்றது.
என்னவென்று பார்க்க அவன் எழுந்து கொண்டபோது தான், அந்த ரவுடிகள் ட்ரெய்னில் அவளைத் தேடுவது தெரிந்தது.
அவன் வேகமாய் சந்தியாவை அழைத்துக் கொண்டு அவளைத் தேட ஆரம்பித்தான். சந்தியாவிற்கு தான் ஒன்றுமே புரியவில்லை.
அவர்கள் ஓரிடத்தில் நிற்க ,”அந்த பெண் ஒரு காரில் இருந்து கை அசைத்தபடியே அவர்களின் அருகில் காரை நிறுத்தி ஏறிக் கொள்ளுமாறு கூறினாள்”.
அவர்களும் ஏற கார் வேகமாக கிளம்பியது. எவ்வளவு தூரம் வந்தார்கள் என்பது தெரியாது.
மூவரும் சுற்றிலும் பார்க்க அது ஒரு காடு போல் இருந்தது.
அவள் அவர்களை இறங்குமாறு சொல்லிவிட்டு,” அந்த காரை மறைவாக நிறுத்திவிட்டு காட்டின் உள்ளே ஓடினாள்”.
இடையிடையே அவர்களையும் பார்த்துக் கொண்டு,” தன்னை பின் தொடருமாறு சைகை செய்தாள்”.
அவர்கள் ஓடிச்சென்று ஒரு ஊரின் தெருமுனையை அடைந்தனர்.
இரவிலும் அங்கு ஏற்கனவே நிறைய பேர் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அவர்களில் முதியவள் ஒருத்தி வந்தவர்களைப் பார்த்து விட்டு,” என்ன ஆச்சு? என்று கேட்க திருடர்கள் துரத்துகிறார்கள்” என்று அவள் கூறினாள்.
அந்த முதியவள் அவரின் பேரக்குழந்தையிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனை பின் தொடருமாறு கூறினாள்.
அவர்களும் அந்த குழந்தையை பின்தொடர,” அந்த குழந்தை ஒரு மாடி வீட்டின் உள்ளே சென்றது“.
அந்த வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்து,” என்ன ஆச்சும்மா யார் நீங்க என்று கேட்க,அவள் தன் வாயில் வந்ததையெல்லாம் தொடர்ச்சியாய் கூறினாள்“.
அப்பா, “அண்ணா அண்ணி கூட டூர் வந்த இடத்துல எங்கிட்ட வம்பு பண்றாங்க” என்றவளின் பேச்சில்,
அவர் தன் மனைவியான விசாலாட்சியை அழைத்து,” அவளிடம் உள்ளே அவர்களை அழைத்துச் சென்று தங்க வை “என்றார்.
அவளும் முகம் நிறைய சந்தோஷத்துடன் சரிங்க என்று கூறி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
அவர்களுக்கு மாடி அறையை காட்டிவிட்டு அவள் கீழே இறங்கி வந்ததும் அந்த புதிய பெண் தன் பேச்சைத் தொடங்கினார்.
“அறையின் வெளிச்சத்தில் அழகு தேவதையாய் அவள் மிளிர” அவளை ரஞ்சித்தும் சந்தியாவும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு ,”என்னை மன்னிக்கவும்”.
” என்னால் தான் உங்களுக்கு இவ்வளவு சிரமம்” என்று கூறி கண் கலங்கினாள்.
பின்பு சிரித்துக்கொண்டே,” அதுதான் என் விதியும் கூட” என்று சற்று நிறுத்திவிட்டு என் பெயர் வேதிகா. தாய் தந்தை இப்போது இல்லை.
ஆனால் அளவுக்கு அதிகமான பணம் உண்டு .அதை அடைய தான் என் மாமா என்னை தன் மகனுக்கு கட்டி வைக்க நினைக்கிறார்.
ஆனால் இருவருக்குமே அதில் விருப்பமில்லை.
இருப்பினும் என் மாமன் மகனால் செய்யக் கூடியது எதுவுமில்லை.
அதனால்தான்,”நான் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தேன்”. அதன் விளைவுதான் இது.
“உங்களையும் அண்ணியையும் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என் பொறுப்பு” அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என்றாள்.
அவளைப்பார்க்க அவர்களுக்கு புதியவள் போலவே தோன்றாமல் தங்கள் வீட்டுப் பெண் என்று தோன்ற சந்தியா அவளைக் கட்டிக் கொண்டு எங்களுடன் வந்து விடுகிறாயா? என்று கேட்கவும் அழுதுகொண்டே,” எந்த உண்மையான அன்பும் எனக்கு நீடித்து இருக்காது அண்ணி!”.
“என்னால் அனைவருக்கும் துன்பம் மட்டுமே மிஞ்சும்” என்றாள்.
ரஞ்சித் ,”அவள் முடி கோதி விட்டு உன் வாழ்வில் நாளைய விடியலில் இருந்து இனி இன்பம் தான் வேதிகா”.
“நீயும் என்னுடைய தங்கை தான்” .
உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்றவனின் கை பிடித்து “தேங்க்ஸ் அண்ணா” என்று மனநிறைவுடன் பேசியவளை பார்த்து புன்னகைத்தான் ரஞ்சித்.
இப்போது கதவு தட்டும் ஓசை கேட்க ஓடிச்சென்று கதவை திறந்தாள் வேதிகா
கையில் கையில் காபி மற்றும் மாற்று உடைகள் உடன் நின்றிருந்தனர் விசாலாட்சியும் பாண்டுரங்கனும்.
அவர்கள் அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு கீழே வந்து விட,” சந்தியா வேதிகாவை குளிக்க அனுப்பிவிட்டு சோர்வாய் அமர்ந்தாள்”
“ஓடி வந்ததில் மிகவும் களைத்துப் போய் கலைந்து முடியுடன் அவள் அழகாய் தெரிவது அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை”
” எதேச்சையாய் கவனம் வேறு புறமாய் பார்ப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான்”.
வேதிகா,” குளித்து முடித்து தன் உடைகளுடன் வெளியில் வரவும் சந்தியா உள்ளே புகுந்தார்”.
சரியாய் சந்தியா உள்ளே சென்று ஐந்து நிமிடத்தில் விசாலாட்சி அழைத்ததால் வேதிகா கீழே சென்றுவிட்டாள்.
சந்தியா,” வேதிகாவிடம் கூறுவது போல் நான் வெளியே வரப் போகிறேன் வேதிகா என்றாள்”.
ரஞ்சித்துக்கு தெரியும், “அது தனக்கான சைகையே” என்பது” அவன் வெளியில் சென்று விட்டான்.
உள்ளே வந்ததும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தலையை துடைத்தாள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு வருகிறேன் என்று சொல்லி கதவை தானாய் திறந்துகொண்டு ரஞ்சித் வந்தான்.
அவனை பார்த்ததும் தலை கவிழ்ந்தவளின் அருகே வந்தவன்,” வேதிகா கீழே இறங்கிச் சென்று விட்டாள் என்று கூறிவிட்டு அவனும் குளிக்கச் சென்று விட்டான்”.
ஏனோ,” சந்தியாவிற்கு தான் மனம் படபடத்துக் கொண்டிருந்தது”.
தனக்கு பிடித்தவன் தான் இருந்தாலும்,” அவனுக்கு நான் என்ன உறவு என்று கேட்கும்போது, என்னவென்று நான் சொல்வேன் கடவுளே!” என்று வேண்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
அவன் குளித்து முடித்து வெளியே வந்ததும்,” வா கீழே போகலாம்” என்றழைத்தான்.
அவனை,” ஒரு உணர்ச்சிப்பூர்வமான பார்வை” ஒன்றை பார்த்து விட்டு அவள் கீழே இறங்கி செல்ல அவளின் பின்னால் சென்றான்.
இரவு உணவை சரியாக பதினோரு மணிக்கு பரிமாறிக்கொண்டே விசாலாட்சி பேச்சுக் கொடுத்தார்.
ஏன் கண்ணுங்களா!
“என்ன விஷயமா இந்த பக்கம் வந்தீங்க?”
” உங்கள பார்த்தா பெரிய வீட்டுப் பிள்ளைகள் போல தெரியரீங்க!”
இங்க கொஞ்சம் வசதி குறைவுதான் என்று சொல்லும்போது,” ரஞ்சித் அவர்களிடம் அப்படி ஒன்றும் இல்லை அம்மா” என்று கூறினான்.
சந்தியா சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க,” இருமா உன்னோட வீட்டுக்காரரும் சாப்பிட்டு முடிக்கட்டுமே” என்று அவர் கூறியதும் ,”ஏதோ சொல்ல வாயை திறந்தவளை தன் கண்களாலேயே அடக்கினான்”.
சந்தியாவிற்கு திடீரென கழுத்தில் வலி ஏற்பட ,” விசாலம் ஓடி வந்து அவள் கழுத்தை பார்க்க, அவள் காட்டிய இடத்தில் பூச்சுக்கடியின் வீக்கம் இருந்தது”.
அவள்,” அவசரமாய் தன் கணவனிடம் கூற அவர் ஏதோ இலையை அரைத்துக் கொண்டு வந்தார்”.
அதை பூசி விடும் போது தான்,’ எங்கம்மா தாலி?” என்று கேட்க வேதிகாவுக்கு தூக்கி வாரிபோட்டது.
அவள் ,”அவசரமாய் இல்லை ஆண்ட்டி. ஓடிவந்ததில் விழுந்திருக்கும்”.
“நாங்க எதையும் பார்க்கல, எங்களோட பையை கூட எடுக்காமல் வந்துட்டோம்” என்றாள்.
ஆனால், விசாலமோ ,”அது சரிம்மா காலைல வீட்டுக்கு வர்றவங்க ஏதாவது கேட்டா என்ன பண்றதாம்!” என்று கவலையுடன் கேட்கும்போதே பாண்டு,” அவளிடம் அவர்களை பூஜை அறைக்குச் அழைத்து வா” என்றார்.
அங்கு விளக்கை ஏற்றிவிட்டு சாமி படத்தின் மீது இருந்த தாலியை எடுத்து ரஞ்சித்திடம் கொடுத்தார் பாண்டு.
அவன் தயங்க,” வேதிகா அவனிடம் என்ன அண்ணா பழைய ஞாபகமா ? நம்ம அண்ணி தான கட்டுங்க” என்று சொல்லவும் “கட்டுப்பா என்று பாண்டுவும் விசாலமும் கூற மறுக்க முடியாமல் அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்”.
அவர்கள் அவர்களை வாழ்த்த குங்குமமும் இட்டு விட்டான் அவள் நெற்றியில்.