அத்தியாயம் 15

             நாட்கள் கடந்து போவது இமைக்கும் நொடிகளாக  இருவருக்கும் தோன்றத் தொடங்கி இருந்தது., ஏனெனில் அவனின் காதலை கண்கூடாக அவள் காண தொடங்கியிருந்தாலும், அவனது சந்தோஷம் அவனை மேலும் அழகாக காட்ட அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே இவளது வேலையாக இருந்தது., இன்னும் இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற சூழலில் தான் கவினிடம் இருந்து அழைப்பு வந்தது..

          கவினின் அழைப்பு வரும்போது இவள் வெளியே இருந்ததால் போனை எடுப்பதற்காக வந்தவன்., கவின் நம்பரை அவள் சேவ் பண்ணியிருந்த விதத்தில் அவனுக்கு யோசனை வந்தது. ‘கவின் ஐபிஎஸ் என்று இருந்ததால் ஐபிஎஸ் இடம் இருந்து போன்’ என்ற யோசனையோடு போனை அட்டென்ட் செய்தான். போன் அழைப்பை பார்த்த உடனேயே அவனுக்கு இவள் ஏதோ பெரிய ஆபிஸர் லெவலில் இருப்பது அவனால் உறுதி செய்து கொள்ள முடிந்தது. பேசும் போது எடுத்து ஹலோ என்று சொல்வதற்கு முன்னே கவின் அங்கே படபடக்க தொடங்கினான்.

         “அபூர்வா முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும், ஃப்ரீயா இருக்கியா” என்று கேட்டான்.

     “நான் நரேன் பேசுறேன் சொல்லுங்க., அவ வெளியே இருக்கிறா வந்தவுடன் கால் பண்ண சொல்லவா” என்று கேட்டான்.

     “ஓகே., ஓகே., என்றவன் நீங்க எப்படி இருக்கீங்க., உங்க ஹெல்த் எப்படி இருக்கு., நான் நேர்ல பார்க்க வரணும் நினைச்சேன் அபூர்வா தான் இப்ப வரக்கூடாது என்று சொல்லிவிட்டாள்” என்று சொன்னான்.

   “ஒன்னும் பிரச்சனை இல்ல., நான் நல்லா இருக்கேன்” என்று சொன்னதோடு., “வேறு ஏதாவது ரொம்ப முக்கியமா” என்று கேட்டான்.

    “இல்ல வந்த உடனே பேச சொல்லுங்க” என்று சொன்னான்.

      உடனே ஓகே என்று சொன்னபடி வைத்தானே ஒழிய ‘அவன் யாரென்றும்., எப்படி தெரியும் என்றோ., இவன் யோசிக்கவே இல்லை’ போனை வைத்த உடன் காண்டக்ட் லிஸ்ட் பார்க்கும் போதுதான் அதில் தோழமைகள் பெயரில் அவர்கள் என்ன கேர்டரில் பாஸ் செய்தார்கள் என்பதை பெயருக்கு பின்னால் அவர்களது பதவியின் அடையாளமாக இருக்க.., முதல் முதலாக நரேனுக்கு யோசனையாக இருந்தது. அவள் என்ன  கேர்டரில் இருப்பாள் என்று., ஓரளவுக்கு யூகித்து விட்டான் இவள் பெரிய பதவில் இருக்கிறாள் என்று…

            அவளோ வெளியே சென்று அவனுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு உள்ளே வரவும் நரேன் அவளைப் பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தான்., அவளையே கண் எடுக்காமல் பார்க்கவும்.,

  “ஹலோ என்ன அப்படி பார்க்கிறீங்க., புதுசா பாக்குற மாதிரி” என்று அவள் கேட்டாள்.

   “அபூர்வா என் ட்ட மறைக்காம ஒரு விஷயத்தைச் சொல்லு” என்று சொன்னான்.

  “என்ன” என்று சாதாரணமாகவே கேட்டாள்.

     “நீ என்ன கேர்டரில் பாஸ் பண்ணி இருக்க” என்று கேட்டான். அவள் திருதிரு என்று ஒரு முழியோடு அவனைத் திரும்பிப் பார்த்து “என்ன கேட்கிறீங்க” என்று கேட்டாள்..

             “இல்ல இப்போ உன் பிரண்ட் கவின் ஐ பி எஸ் போன் பண்ணி இருந்தாங்க., ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்” என்றவுடன் இவள் மேன்மேலும் திருதிருவென்று முழித்தாள் அத்தோடு ஒரு அசட்டு சிரிப்பு வேறு.,

       “அது மட்டும் இல்லாம, தப்பா எடுத்துக்காத உன் போன் காண்டாக்ட் லிஸ்ட் பார்க்கும் போது ஃபுல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் இப்படியா இருந்துச்சு., சோ நீ என்ன கேர்டர்” என்று கேட்டான்.

 சிரித்துக்கொண்டே ஏன் கவின் ட்ட நீங்க வேற எதுவும் பேசலையா”., என்று கேட்டாள்.

     “இல்ல அது நீதான் சொல்லணும்., எனக்கு வேற யார்ட்டையும் கேட்க தோணலை” என்று சொன்னான்.

 சிரித்துக்கொண்டே “ஐஏஎஸ்” என்றாள்.

                அவனுக்கு ஒரு நிமிடம் ஆனந்த அதிர்ச்சி தான் வந்தது. அத்தனை ‘பெரிய பதவியில் இருந்தும் தன்னை இப்படி கவனித்துக் கொண்டவள்., ஏன் தன் பதவியையோ வேறு எதையும் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்று முதன்முதலாக அவனுக்கு தோன்றியது’. அதன் பிறகு அவளிடம் அவனுடைய சந்தேகத்தை கேட்டான்.

    அவளோ சிரித்துக் கொண்டே “இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு., ஒன்னும் இல்ல என்ன மத்த எக்ஸாம்ஸ் விட இந்த எக்ஸாம் கொஞ்சம் கஷ்டம்., கொஞ்சம் ஹார்ட்டு வொர்க் பண்ணனும் அவ்வளவுதான்., எனக்கு புடிச்சிருந்துச்சு., நான் படிச்சு வேலைக்கு போனேன்., ஏற்கனவே நான் சொல்லி இருந்ததுதான் ஆஃப்டர் மேரேஜ் வேலையை ரிசைன் பண்ணி விடுவேன்., நான் தான் ஏற்கனவே சொன்னேன் இல்ல., உங்க கிட்ட கல்யாணத்துக்கப்புறம் வேலைய விட்டுருவேன் னு” என்று அவன் கேட்காதற்கும் சேர்த்து பதில் சொன்னாள்…

           நரேனும் அவளிடம் “அண்ணனுக்கு தெரியும் அப்படி தானே” என்று கேட்டான்.

      அவளும் சிரித்தபடி “ஆமா தெரியும்” என்று சொன்னாள்.

      “நினைச்சேன் அன்னைக்கு பார்க்கும் போதே  முகத்தில் ஒரு பிரைட்னஸ் ஓட., அப்படி உன்ன ஒரு பிரமிப்பா பார்த்துட்டு வந்தான்., அப்பவே தோணுச்சு” என்று சொன்னான்.

    சிரித்துக்கொண்டே “அதெல்லாம் ஒன்னும் இல்லை, கிண்டல் பண்ணாதீங்க” என்று சொன்னவள்., “சரி நான் கவின் ட்ட பேசிட்டு வரட்டா” என்று கேட்டாள்.

        “பேசு பேசு உன் பிரண்டு ஏதோ முக்கியமான விஷயம் ன்னு சொன்னார்களே” என்று சொன்னான்.  இவள் கவினுக்கு போன் செய்தாள்..

      “சொல்லுங்க கவின்” என்று சொன்னாள்.

    அவன் அந்தப்பக்கம் சொல்ல தொடங்கியவுடன்

    இவள் “ஏன் இப்ப என்ன அவசரம்” என்று கேட்டாள்.

    இல்ல கண்டிப்பா தெரிஞ்சுதான் ஆகணும் என்ற விதத்தில் சில விவரங்களை சொல்லிக்கொண்டிருந்தான் இவளும் “சரி” என்ற வார்த்தையோடு முடித்துக்கொண்டு போனை கட் செய்தாள்…

          “என்ன ஆச்சு மேடம்., டல்லாயிட்ட அதுக்குள்ள” என்று நரேன் கேட்டான்.

   “ஒன்னு இல்ல., ஒரு சின்ன யோசனை” என்று சொன்னாள். அவன் கையை நீட்டி அவன் அருகில் அழைக்க சென்று அவன் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்., தன்னோடு சேர்த்து அணைத்தவாறு “என்னடா ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்க., போன் பேசி முடிக்கவும் முகம் வாடிப்போச்சி., என்ன விஷயம்” என்று கேட்டான்.

        அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என் மேல  உங்களுக்கு கோபம் இல்லையே” என்று கேட்டாள்.

    “கோபம் எல்லாம் இல்ல, காதல் தான் தாருமாறா இருக்கு”., என்று சொன்னவன்.,

    “என்ன” என்று கேட்டாள். கண்ணை விரித்து., தன் காதலைப் பற்றி., தான் பார்த்த முதல் ஞாபகங்களை பற்றி அவளோடு பகிர்ந்து கொண்டான்., “என்னை உனக்கு ஞாபகம் இருக்கா” என்றும் கேட்டான்.

              அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது., அவன் தோளில் சாய்ந்து இருந்தவள் அவன் சொன்ன காதல் விஷயத்தைக் கேட்ட உடன் என்ன சொல்வதென்றே தெரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தவள்., கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்த்து அழுத்தமாக அவன் கேட்காமலேயே ஒரு இதழ் முத்தம் கொடுத்தாள்…

  “ சாரி சரியா நினைவு இல்ல., ஆனா  நீங்க எப்படி இத்தனை நாள் இந்த விஷயத்தை மனசுல வெச்சுட்டு எப்படி இருந்தீங்க”., என்று கேட்டாள்.

          “என்னோட காதல் ஜெயிச்சிருக்கு அப்படிங்கிற சந்தோஷம் தான்., வேற ஒன்னும் இல்ல., எனக்கு சரியான அப்புறம் தான் நான் உன் கிட்ட சொல்லனும் அப்படின்னு நினைச்சு இருந்தேன்., அதுவரைக்கும் ஒன்றும் சொல்லக்கூடாது ன்னு யோசிச்சு இருந்தேன்” என்றான்.

        “உங்களோட உண்மையான காதலுக்கு முன்னாடி என்னோட பதவியும்., நான் உங்களுக்கு செஞ்சதும் எதுவுமே இல்ல., உங்களுடைய உண்மையான அன்பும் உண்மையான காதலும் மட்டும்தான் என்னைய உங்ககிட்ட பிடிச்சி இழுத்துட்டு வந்து இருக்கு”., என்று சொன்னவள் அவனோடு நெருங்கி அமர்ந்து அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்..

               சந்தோஷமாக சிரித்தபடி அவள் உச்சந்தலையில் கன்னம் பதித்து சாய்ந்தவன் “தேங்க்ஸ் அம்மு” என்றான்.

          “அம்மு” என்று சொல்லிய படி நிமிர்ந்தவளை., அவன் அழுத்தமாக பிடித்து பழையபடி அதேபோல் தன்னோடு சேர்த்து சாய்த்துக் கொண்டு., “நான் உன் பெயர் தெரியாத போது., உன்ன பார்த்த நாளில் இருந்து என்னோட மனசுக்குள்ள என்னோட காதல உன்கிட்ட ஒவ்வொரு நிமிஷமும் உன்னோட நினைவுகளுடன் நான் பகிர்ந்துக்கும் போது உன்னை அம்மு ன்னு தான் கூப்பிடுவேன்., என் மனசுக்குள்ள உன்ன அம்மு அம்மு ன்னு சொல்லிட்டு தான் இருப்பேன்., எனக்கு உன் பேரு தெரியல., என்ன பெயர் என்று கேட்காமல் வந்துவிட்டேன்., நான் உனக்கு வெச்ச பேரு அம்மு தான்.., அந்த அம்மு  இப்ப வரைக்கும் என் மனசுல நிற்கிறது., அதனால தான் உன்னை அபூ ன்னு கூப்பிட்டேன்., இனி அம்மு ன்னு கூப்பிடலாம் இல்ல” என்று கேட்டான். சந்தோஷமாக தலையை ஆட்டியபடி அவன் தோளில் சாய்ந்திருந்த அவள் லேசாக தலை நிமிர்த்தி அவன் தாடையில் முத்தமிட்டாள்…

       “கேட்காமலேயே நிறைய கொடுக்கிற” என்று சொன்னான்.

        “சந்தோஷம் தான் வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.

      “சரி போன்ல என்ன விஷயம்., எதுவும் ப்ராப்ளமா., ஏன்  டக்குனு முகம் டல்லாச்சி” என்று கேட்டான். அதன் விபரங்களை சொல்லத் தொடங்கினாள்…