” எனக்கு டபுள் ஓகே வச்சுக்கோ” என்று சொல்லிக்கொண்டிருந்தான்…
அதுபோல அன்றுமாலை வீட்டில் வைத்து திருமணத்திற்கு முதல்நாள் செய்வதுபோல குடும்பத்தில் சாமி கும்பிடுவதை செய்து அவளுக்கு வீட்டு பெரியவர்களாக., அப்பா வழி சொந்தம், அம்மா வழி சொந்தம், என அனைவரும் ஆசீர்வாதம் செய்து பூஜை முடித்தனர். காலையில் நேராக நரேனின் வீட்டிற்கு தான் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்., என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்திருந்ததால் அவர்களும் டிஸ்ஜார்ச் செய்து கொண்டு .. வீட்டிற்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்வதாக சொல்லி இருந்தனர்..
மறுநாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் அழகாய் விடிந்தது. நரேன் வீட்டில் எடுத்திருந்த திருமண புடவைக்கு ஏற்றார் போல எப்பொழுதும் சேலை கட்டினால் போடும் பிளவுஸ் போலவே அத்தை அளவு கொடுத்து தைத்து வைத்திருந்தார்.. மற்ற எல்லாவற்றையும் அத்தையே ரெடி செய்து வைத்திருந்ததால் எல்லாம் போட்டு தயாரானாலும்.., திருமண பெண்ணிற்கான எந்த அதிகமான அலங்காரமும் இல்லாமல் எளிமையான தேவதையாக தயாராகி இருந்தாள்..
அதுபோலவே அங்கு நரேனை டிஸ்ஜார்ச் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு.., அவனும் தயாராகி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டின் ஹாலிலேயே சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவனுக்கென்று பிரத்தியோகமாக வெளிநாட்டிலிருந்து வர வைக்கப்பட்ட வீல்சேர் தயாராகவே இருந்தது. ஆனால் அதை வருபவர்கள் முன்னிலையில் வைக்க வேண்டாம் என்று தள்ளி வைத்திருந்தனர். ஆனால் அவன் அதில் தான் வந்தான்., மனம் ஒரு புறம் வருந்தினாலும்., மறுபுறம் அவளிடம் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்றே மனம் விரும்பியது..
அதுபோல அபூர்வா வீட்டினர் முக்கியமான சொந்தங்கள் மட்டும்.., ஒரு வேனும் இரண்டு காரும் என நரேன் வீட்டிற்கு வந்து சேர.., முறைப்படி ஆரத்தி எடுத்து வலது காலை வைத்து வீட்டிற்குள் வந்தாள் அபூர்வா…
அபூர்வா வை அழைத்து சென்று வீட்டில் விளக்கேற்ற சொன்னார் லலிதா.
அதன்பின்பே திருமணத்திற்கான மற்ற பூஜை சடங்குகள் செய்யப்பட்டது. வலது கை இன்னும் முழுதும் சரியாகாத நிலையில் தாலி கயிறை தாலி செயினில் சுற்றி அதை அவன் தனியே முடிச்சிட்டு அதன் பிறகு அவள் கழுத்தில் போட்டுவிடும் படி செய்ய சொன்னார்கள்…
அதன்படியே தாலிகட்டி அவள் நரேனின் மனைவியானாள். அவனுக்கு நேராக வந்து நின்று குனிந்து அவனிடம் குங்குமத்தை நெற்றியில் பெற்றுக் கொண்டாள். மற்ற சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லியிருந்ததால் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் இருந்து போடவேண்டிய மெட்டியும் அவள் கையிலேயே அத்தை கொடுத்துவிட்டார். கை சரியான பிறகு நரேன் கையால் போட்டுக்கொள் என்று சொல்லியிருந்தனர்.
அதன் பிறகு முறைப்படி ரெஜிஸ்டர் முன்னிலையில் பதிவு திருமணம் நடந்தது. அபூர்வா ராமநாதனாக இருந்தவள்., அன்றிலிருந்து அபூர்வா நரேனாக மாறி போனாள்.
மதியம் வரை உறவினர்கள் இருக்க அபூர்வா கீழ் அறையிலேயே இருந்தனர். ஆனாலும் அபூர்வா நரேனை அதிக நேரம் அமர சம்மதிக்கவில்லை., கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி.., அவனுடைய பெற்றோரின் அறையில் சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்தாள். அதற்குள் அவனுடைய அறையை தயார் செய்து வைத்திருந்தார்கள்..
அரசியல் செல்வாக்கு பெற்ற ஒருவரின் இல்லம் என்பது எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான் அப்படிப்பட்ட ராஜசேகரின் வீட்டில் ஏற்கனவே பிள்ளைகளுக்காகவும்., கட்சி அலுவலக வசதி என்று தனித்தனியாக தேவை இருந்ததால்.., கீழ்தளத்தில் பொதுவாக பிள்ளைகளின் அறைக் கிடையாது. மேல்தளத்தில் தான் கல்யாண் அறையும் அவன் பிள்ளைகள் விளையாட்டு அறை என்று தனியாக இருந்தது..
ஒரு பாதி கல்யாண் அவன் குழந்தைகளுக்கென இருந்தாலும்.., ஒருபாதி வீட்டின் மகளான வினோதா வந்தால் தங்குவதற்கான இடமாகவும்., அவள் பிள்ளைகளுக்கான இடமாகவும் இருந்தது.
கீழே ராஜசேகர் லலிதா தங்கும் அறையும் மற்றபடி அரசியல்வாதிகள் வந்தால் போனால் பேசுவதற்கான அறை மட்டுமே இருந்தது.
ஹால்., பூஜையறை., கிச்சன்., கட்சி அலுவலக அறை., என கீழ்த்தளம் முழுவதும் பிஸியாக இருக்கும். அதனால் ராஜசேகர் லலிதா அறையும் வீட்டின் பின் பகுதியில் தள்ளியே இருந்தது..,
நரேனின் அறை அதற்கும் மேல்தளத்தில் இருந்ததால்., அங்கு லிப்ட் உதவியோடு அவனை கல்யாண் தான் அழைத்துக்கொண்டு சென்றான்., கல்யாண் இருந்த தளத்திற்கு மேல் தளத்தில் நரேன் அறை சகல வசதிகளோடு பாதி இடத்தில் இருந்தது.மீதி பாதி மொட்டைமாடி தோட்டம்., நீச்சல் குளம் என அனைத்து வசதிகளோடு இருந்ததால் அனைவரும் உபயோகிக்க அந்த வீட்டில் லிப்ட் வசதியும் இருந்தது.
அங்கு அழைத்து சென்ற பிறகு தோட்டத்தை பார்த்தார் போல இருந்த அவனது அறை மிகவும் அழகாக இருந்தது. அறையின் முன்பகுதியில் வராண்டா போன்ற அமைப்போடு., அதில் முழுவதும் கண்ணாடி கதவுகளோடு இயற்கையை ரசிக்கும் பொருட்டு அமைத்திருந்தனர்.
அதைத்தவிர பால்கனி புறமாக இருந்து பார்த்தாள் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள தோட்டம் மரம் செடி என தெரியும்., அளவிற்கு அனைத்தும் அழகாக இருந்தது..
தன் அறையில் வந்து கல்யாண் விட்ட பிறகுதான் நரேனுக்கு நிம்மதியாக இருப்பதாக சொன்னான்..
கல்யாண் சென்றபிறகு அவனை ரெஸ்ட் எடுக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தாள் அபூர்வா…
அவளுடைய பொருட்களை அதற்குரிய இடத்தில் எடுத்துவைத்து கொண்டிருக்கும் போதே.., இவன் பார்ப்பதை உணர்ந்து “என்ன நரேன் அப்படி பாக்குறீங்க” என்று கேட்டாள்.
“என்னால உன் வாழ்க்கை வீணாகி போயிட்டே ன்னு இருக்கு” என்று சொன்னான்..
“நீங்க ஏன் இப்படி சொல்றீங்கன்னு நான் சொல்லட்டுமா” என்று சிரித்தபடியே அவள் கேட்டாள்.
அவனும் அவளைக் கூர்ந்து பார்த்தபடி “ஏதோ சொல்ல போறேன் னு தெரியுது சொல்லு” என்று சொன்னான்…
“சீக்கிரம் குணம் ஆயிரும் அப்படின்னு தெரியும்., அப்படி குணம் ஆயிடுச்சின்னா.., ஒரு சப்பை பிகரை கல்யாணம் பண்ணி இருக்கோம் ன்னு உங்க மனசு வருத்தப்படும்.., இதே இது சரியான அப்புறம் சூப்பர் ஃபிகரா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம் னு தோணுது இல்லை” என்று கேட்டாள்….
அவன் சிரித்துக்கொண்டே “அப்படி எல்லாம் இல்ல.., நான் வேற ஒன்னு சொல்லுவ ன்னு நினைச்சேன்.., நீ வேற ஒன்னு மாத்திட்ட சரி.., நான் உனக்கு கொஞ்ச நாள் கழிச்சு ஒரு விஷயம் சொல்றேன்”.., என்று சொன்னான்.
” என்ன சொல்லுங்க” என்று கேட்டாள்.
“நீயே தலையை பிச்சுக்கோ.., நான் சொல்ல மாட்டேன்” என்றான்.
பின்பு இவளும் அவர்களுடைய பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு பட்டுப்புடவை மாற்றிவிட்டு., வேறு புடவை கட்டிக் கொண்டு வந்து அவன் அருகில் உட்கார்ந்து அவனை தூங்குமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்.., தூக்கம் வரவில்லை என்று சொல்லி இவளோடு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தான் அப்போது..
“அபூ நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டியே”.. என்றான்.
“அதெல்லாம் நினைக்க மாட்டேன் சொல்லுங்க” என்று கேட்டாள்.
அப்போது அவன் “இல்ல இந்த ரூம்ல எக்ஸ்ட்ரா பெட்டுப் போட சொல்லி சொன்னியாமே” என்று கேட்டான்.
” அவளோ ஆமா சொன்னேன்” என்று சொன்னாள்.
“அப்போ என்னைய வேண்டா வெறுப்பா தான்., கல்யாணம் பண்ணிக்கிட்டேயா”., என்று கேட்டான்.
அவளோ அவனை அடிக்கப் போவது போல கையை உயர்த்தி மிரட்டிவிட்டு “பிச்சு., பிச்சு., உங்க கையில இன்னும் கட்டு பிரிக்கல., கொஞ்சம் சரியாகனும்., உங்களுக்கு லேசா மேல கை பட்டால் கூட பெயின் இருக்கும்., அதுக்காக தான் நான் எக்ஸ்ட்ரா பெட் கேட்டேன்.., நீங்க உடனே கற்பனையை பறக்க விடாதீங்க”.., என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் “நெஜமாதான் சொல்றியா”., என்று கேட்டவன் “பரவால்ல நீ என் பக்கத்திலேயே இரு” என்று சொன்னான். சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னாள்.
“அப்ப அண்ணன் கிட்ட நான் சொல்லவா போன் பண்ணி” என்று கேட்டாள்.
அதன் பிறகு கழித்த நிமிடங்கள் யாவும் அவனோடு மட்டுமே…, அவன் பேசப்பேச இவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் பள்ளி கல்லூரி நாட்களையும்.., முதன் முதலாக தொழில் தொடங்கியதையும் பற்றி பேசி.., இவளிடமும் அவளுடைய பள்ளி கல்லூரி வாழ்க்கை களைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.
அவள் வேலையை பற்றி கேட்கும்போது மட்டும் சிரித்துக்கொண்டே சொன்னாள்., “இப்போதைக்கு நரேன் வொய்ப் ஆ வேலை பார்த்திட்டு இருக்கேன்”.., என்று சொன்னாள்
“ஏன் சொல்ல மாட்டேங்குற.., என்கிட்ட” என்று அவன் கேட்டான்.
சிரித்தபடி அவன் தலையை கோதி விட்டவள் “உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன்”என்று சொல்லிவிட்டு “நான் தான் வேலை விடலாம்னு இருக்கேன் இல்ல.., அப்புறம் எதுக்கு அந்த வேலையை பத்தி பேசணும்.., வேண்டாமே” என்று சொன்னவள் அவனிடம் மற்ற சாதாரண விஷயங்களைப் பேச தொடங்கினாள்..
இவன் மாடியிலிருந்து கீழே செல்வதற்கு வசதியாக லிஃப்ட் இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.., அன்றைய இரவு உணவை மாடிக்கு கொண்டு வந்து வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கொடுத்துவிட்டு சென்றார்கள். அவனுக்கு உணவு கொடுத்து விட்டு., அவளும் சாப்பிட்டு விட்டு அவனுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பார்க்கத் தொடங்கினாள்…
கீழ் உள்ள அறையில் தங்கி கொள்ளும்படி நர்ஸ் அழைத்து வரப்பட்டிருந்தனர்., பகலில் பார்ப்பதற்கு பெண் நர்ஸ் ஒருவரும்., இரவில் ஆண் நர்ஸ் ஒருவரும் இருந்தார்கள்., உதவி என்று கூப்பிட்டால் மட்டும் வரும்படி சொல்லி இருந்தாள் அபூர்வா., மற்றபடி அவளே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக சொல்லி இருந்தாள்…
சில விஷயங்களுக்கு மட்டுமே அவனுக்கு நர்சின் உதவி தேவைப்பட்டது., மற்றபடி அனைத்தும் அபூர்வா ஏற்கனவே மருத்துவமனையில் செய்திருந்ததால் இங்கேயும் அவளே தான் செய்தாள்..
இரவு உணவு மருந்து மாத்திரை என்று கொடுத்த பின்பு அவன் அருகில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தவள்., அவனுக்கு இடது பக்கமாக அவனை திருப்பி படுக்க வைத்தாள்., வலதுகையில் எதுவும் பட்டுவிடக் கூடாது என்று ஒரு தலையணையை வைத்து கொடுத்துவிட்டு.., அவன் அருகில் அமர்ந்து பிசினஸ் சம்பந்தமான விஷயங்களும்., வீட்டிலுள்ள கல்யாண் னின் குழந்தைகள் பற்றியும்., வினோதாவின் குழந்தைகள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தாள்..
அவன் தலையணையில் படுத்திருக்க இவள் அவன் தலைக்கு அருகே சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள்., அவன் தலையை மெதுவாக கோதிக் கொடுக்க சற்று நேரத்திற்கெல்லாம் பேசிக் கொண்டிருந்தவன் உறங்கிவிட்டான்., ஏனெனில் அன்று பகல் முழுவதும் தூங்கவில்லை., அதன் காரணமாகவே தூங்கி போனவனை பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களில் அவளறியாமல் அன்று தான் கண்ணீர் வடிந்தது…
அவனை அதிலிருந்து மீட்டு அவனை மீண்டும் நடக்க வைக்க வேண்டும்., என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாலும்., விபத்திற்கு மறுநாள் அம்மாவின் பேச்சுகளை பற்றி மாமா சொன்ன பின்பு இவள் தற்செயலாக அறிந்த விஷயங்கள் இவளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது..
அதன்பிறகு தீர விசாரிக்க தொடங்கியிருந்தாள்.., அவளுடைய நினைவுகள் அந்த நாளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது…
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.”
குறள் விளக்கம்:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.