“ஹூம், இதன்னே நீ வந்த முதல்க்கு பரயனது… சரி டைம் ஆயி, ஞான் வராம் கேட்டோ…” என்றவள் நகர்ந்தாள். அவர்கள் அபார்ட்மென்டின் பின்பக்கமாய் ஐந்து நிமிடம் நடந்து ஒரு வளைவில் திரும்பினால் கம்பீரமாய் நிற்கும் ‘ஆரோக்கியா ஆயுர்வேத ஹாஸ்பிடல்’. அங்கே நிஷா நர்ஸ் என்றால் அதே கட்டிடத்தை ஒட்டியவாறு இருக்கும் ஆரோக்கியா யோகா சென்டரில் தான் நியதி யோகா டீச்சராய் வேலை செய்கிறாள்.

இவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட், அந்த ஆயுர்வேத ஹாஸ்பிடல், யோகா சென்டர் எல்லாமே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆயுர்வேத மருத்துவராய் வந்து அங்கே உள்ள மக்களும், காலநிலையும் பிடித்துப் போக, மனதையும் உடன் பணிபுரிந்த மலையாளியான ஷோபனா வாரியர் என்ற நர்ஸிடம் பறிகொடுத்து, பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி கல்யாணமும் செய்து கொண்ட ஆயுர்வேத டாக்டர் பாலமுருகன் என்பவரின் உழைப்பால் விரிந்த ஸ்தாபனங்கள்.

எத்தனை பணம், சொத்து சேர்த்தாலும் உடல் ஆரோக்கியமே மனிதனுக்கு பெரிய சொத்து என்பதில் நிறைந்த நம்பிக்கை கொண்டவர் பாலமுருகன். மனிதனின் உடல் நலத்தைக் காக்க ஆயுர்வேத ஹாஸ்பிடலைக் கட்டிய போதே அவர் மனதுள் மனநலத்தைக் காக்க ஒரு யோகா சென்டர் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து ஒட்டிக் கொண்டது. தனது உழைப்பாலும், கை ராசியாலும் சின்னதாய் தொடங்கிய ஆயுர்வேத ஹாஸ்பிடலைப் பெரிதாய் விரிவு படுத்துகையில் கூடவே யோகா செண்டரையும் தொடங்கி விட்டிருந்தார்.

‘ஆரோக்கியா ஆயுர்வேத ஹாஸ்பிடல், ஆரோக்கியா யோகா சென்டர்’ என்றால் எல்லாருக்கும் தெரியும் பிரபலமான ஹாஸ்பிடலாய் இருப்பதற்கு அவரது அயராத உழைப்பே காரணம். ஆரோக்கியமாய் இருந்த பாலமுருகன் நான்கு வருடங்கள் முன்பு இதயம் துடிப்பை நிறுத்தி அமரராகிப் போக, ஆயுர்வேத படிப்பை முடித்து தங்கள் ஹாஸ்பிடலில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரது மூத்த மகன் அபிநந்தன் வாரியர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

தந்தையின் பெருமைக்கு பங்கம் வராமல் அதே நிமிர்வுடன் இப்போதும் அந்த ஹாஸ்பிடலின் தரத்தையும், பெருமையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அபிநந்தனுக்குத் துணையாய் அவனுடன் ஆயுர்வேதம் படித்த ஆதிரா மேனன் வாழ்க்கையிலும் துணையாய் வர இல்லறமும், தொழிலும் சிறப்பாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல், யோகா சென்டரில் வேலை செய்யும் வெளியூர் பெண்களுக்கு அங்கிருந்த அபார்ட்மென்டின் ஒரு பாகத்தை தங்கிக் கொள்ள ஒதுக்கி இருந்தனர்.

அபிநந்தன், ஆதிரா தம்பதியருக்கு நவீன், நயனா என ஆணும், பெண்ணுமாய் இரட்டைக் குழந்தைகளை கடவுள் பரிசளிக்க இரண்டு வயதே ஆன குழந்தைகளின் குறும்பும், சுட்டித் தனமுமே கணவனின் பிரிவில் சற்று ஒடுங்கிப் போயிருந்த ஷோபனாவை மீட்டு வந்திருந்தது. ஆதிராவும் கணவனுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று விடுவதால் குழந்தைகளை தனது கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வார் ஷோபனா வாரியர்.

“அம்மே… ஞங்கள் அம்பலத்தில் போயி வராம்…” சந்தன நிற வேஷ்டி, பிரவுன் நிற சட்டையுடன் புறப்பட்டு வந்த அபிநந்தன் சொல்ல அவனுடன் ஆதிராவும் கேரளா சேலை உடுத்து குழந்தைகளை கைக்கு ஒன்றாய் பிடித்தபடி வந்தாள். இரு குழந்தைகளும் தளிர் ரோஜா நிறத்தில் பட்டுக் கன்னங்களும், நிறைந்த சிரிப்புமாய் மனதை நிறைத்தனர்.

குட்டிப் பையன் நவீனுக்கும் ஒரு குட்டி வேஷ்டியை இடுப்பில் கட்டியிருக்க, நயனா அழகான பட்டுப் பாவாடை பிளவுசில் ரோஜாவாய் சிரித்தது. அன்று அவர்களின் கல்யாண நாள் என்பதால் காலையில் எழுந்து குளித்து குடும்பமாய் கோவிலுக்குக் கிளம்பி இருந்தனர்.

“பகவதி அம்பலத்திலேக்கு அல்லே போனது, நோக்கிப் போயிட்டு வரின்… நின்டே அனியனு ஒரு ரக்த புஷ்பாஞ்சலி சீட்டாக்கனே… அவனு இப்ப குறச்சு சமயம் சரியில்லாந்து பணிக்கர் பரஞ்சிருந்து…” (பகவதி கோவில் தானே போறிங்க, தம்பிக்கு ரக்த புஷ்பாஞ்சலிக்கு அர்ச்சனை சீட்டு வாங்கிரு, அவனுக்கு கொஞ்சம் டைம் சரியில்லைன்னு ஜோசியர் சொல்லிருக்கார்…)

“சரி அம்மே…” என்றான் அபிநந்தன்.

“அச்சம்மைக்கு ரெண்டு பேரும் டாட்ட கொடுக்கு…” என்றவன் மகளைத் தூக்கிக் கொள்ள, “அத்தம்மே, தாத்தா…” என்றாள் நயனா மழலையில். நவீனும் சொல்ல இருவருக்கும் முத்தமிட்டு அனுப்பி வைத்தார் அச்சனின் அம்மா.

அவர்கள் சென்றதும் அடுக்களைக்கு வந்தவர், “வசந்தே… நல்ல சத்ய (விருந்து) ரெடியாக்கிக்கோ, மூத்தவன்டே கல்யாண திவசமல்லே… (கல்யாண நாள்) இளையவனும் உச்ச ஊணினு எத்துமெந்து பறஞ்சிருந்து… (சின்னவன் லஞ்சுக்கு வருவான்னு சொல்லிருந்தான் அவனுக்குப் பிடிச்ச அடைப் பாயாசமும் செய்திரு) அவனு இஷ்டமுள்ள அடைப் பிரதமனும் உண்டாக்கிக்கோ,

நினக்கு சகாயத்தினு சோமுவிண்டே கெட்டியோளையும் விளிச்சோ…” (உதவிக்கு சோமுவின் மனைவியை அழைத்துக் கொள்)

“சரி அம்மே, அங்கன தன்னே செய்யாம்…” என்ற வசந்தா விருந்து தயாரிக்க நகர்ந்தார். (சரிம்மா, அப்படியே செய்யறேன்)

கேரள பாரம்பர்யம் மாறாமல் இரண்டு நிலைகளாய் கம்பீரமாய் இருந்தது அந்த வீடு. ஆறு படுக்கை அறைகளும், பெரிய ஹால், பெரிய அடுக்களை, எட்டு பேர் அமரக் கூடிய உணவு மேஜை என வீடு முழுதும் இருந்த பொருட்களில் அங்கங்கே தேக்கு மரத்தின் கைங்கர்யம் தெரிந்தது. வேலைப்பாடு மிகுந்த மர மேஜை, சோபா, நாற்காலி என நேர்த்தியாக இருந்தது. மாடிக்கு செல்லும் படிக்கட்டின் பக்கவாட்டில் மெழுகாய் வழுக்கிய மர வேலைப்பாடுடன் ரசனையோடு பாலமுருகன் செய்வித்திருந்தார்.

முன்னில் சிட்டவுட்டில் பளிங்கும், மர வேலையுமாய் மின்னியது. ஒரு பெண்மணி எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டிருக்க, “விமலே குறே நேரமாயல்லோ, வேகம் ஆவட்டே…” (விமலா, ரொம்ப நேரமாச்சே, சீக்கிரம் பண்ணு…) என்றபடி தனது அறைக்கு சென்றார் ஷோபனா.

சிறிது நேரத்தில் கோவிலுக்கு சென்றவர்கள் நெற்றியில் நிறைந்த சந்தனத்துடன் திரும்பி வர, “பிரசாதம் எடுத்தோளு அம்மே…” என்று உள்ளங்கையில் சிறிய இலைக்கீற்றில் மணத்தோடு இருந்த அரைத்த சந்தனத்தை மருமகள் நீட்ட எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார்.

“அம்பலத்தில் திறக்குண்டாயிருந்தோ மோளே…?” (கூட்டம்)

“இல்லம்மே, வேகம் தொழான் பற்றி…” (கும்பிடுவது)

“நந்தாயி… செறியவனு ரக்த புஷ்பாஞ்சலி கழிச்சில்லே…”

“அதே… அதின்டே பிரசாதவும் உண்டல்லோ…” சொன்னவள் சிவப்பு சந்தனத்தை அவர் நெற்றியில் தொட்டாள்.

“சரி, குட்டிகள்க்கு விஷக்குனுண்டாவும்… (பசிக்கும்) வேகம் பட்சணம் கொடுக்காம்…” என்றவர் குழந்தைகளுக்கு நேந்திரப் பழம் வேக வைத்து அதை வட்ட வடிவமாய் நாணயம் போலக் கட் செய்து அதன் மீது நெய்யூற்றி போர்க் ஸ்பூனில் ஒவ்வொரு துண்டாய் குழந்தைகளுக்குக் கொடுக்க நவீன் ஆவலோடு சாப்பிட நயனா இரண்டு வாய்க்கு மேல் போதும் என்று அடம் பிடித்தாள்.

“அத்தம்மே, எனிக்கு புத்து வேணம்… பழம் நானா…”

“ஆனோ, என்ட சிஞ்சு வாவைக்கு புட்டு மதியோ…  அச்சம்ம தராட்டோ…” (என் சிஞ்சு குட்டிக்கு புட்டு போதுமா, பாட்டி தரேன்) என்றவர் சிறிய துண்டு புட்டுடன் சக்கரையை சேர்த்துப் பிசைந்து பேத்திக்கு ஊட்டினார்.

அதையும் இரண்டு வாய் சாப்பிட்ட குழந்தை, “மதி, நானா…” (போதும், வேண்டாம்) என்று மூன்றாவது வாய்க்கு உதடை இறுக மூடிப் பூட்டு போட்டுக் கொண்டாள்.

“அம்மே…! அவள் இங்கனே தன்னே, பட்சணம் கழிக்காதே நிங்களே களிப்பிக்கும்… தரின், ஞான் கொடுக்காம்…” (அம்மா, அவ இப்படிதான் சாப்பிடாம உங்ககிட்ட விளையாடுவா, தாங்க, நான் கொடுக்கிறேன்) மருமகள் ஆதிரா சொல்ல,

“அம்ம நானா, அத்தம்மா தா…” (அம்மா வேண்டாம், பாட்டி தந்தாப் போதும்) என்று வாயைத் திறந்தாள் குழந்தை.

“அங்கனே வழிக்கு வா…” (அப்படி வழிக்கு வா) என்ற ஆதிரா நவீனுக்கு பழத்தை ஊட்டியபடி அவளும் சாப்பிட்டாள்.

“அவளை ஞான் நோக்கிக் கொள்ளாம், அம்ம கழிக்கு…” என்று மாமியாரை சாப்பிட சொல்லி எழுந்தாள். அதற்குள் நயனாவும் சாப்பிட்டிருக்க அந்தப் பிளேட்டிலேயே புட்டுடன், கடலைக் கறியை எடுத்து சாப்பிட்டார் ஷோபனா.

சிறிது நேரத்தில் ஹாஸ்பிடல் செல்ல அபிநந்தன் தயாராகி வர, “எடா அபி, இன்னும் நினக்கு ஹாஸ்பிடல் போவனோ, ஒழிவாக்கிக் கூடே…” (டேய் அபி, இன்னைக்கும் உனக்கு ஹாஸ்பிடல் போகணுமா, வீட்டுல இருக்கலாம்ல…” என்றார் அன்னை சலிப்புடன்.

“குறச்சு பணியுண்டம்மே, வேகம் திரிச்சு வராம்…” (கொஞ்சம் வேலை இருக்கு மா, சீக்கிரம் வந்திடறேன்) சொன்னவன் கிளம்பி விட்டான். இரண்டு மொழியில் படிக்க கஷ்டம் என்பதால் தமிழ்ல தொடர்வோம்…

சிறிது நேரத்தில் விருந்துக்கான ஆயத்தத்தில் வீடே பலவித சுவைகளில் மணக்கத் தொடங்க ஆதிரா குழந்தைகளுடன் அவளது அறையில் இருந்தாள். அடுக்களையில் உப்பு, புளி, இனிப்பு உணவுகளின் சுவையை ருசி பார்த்து அதில் கூட்ட, குறைக்க சொல்லிக் கொண்டிருந்த ஷோபனா சட்டென்று பூமியிலிருந்து கால் உயர்ந்து மேலே செல்ல, அலறினார். நடப்பதைக் கண்டிருந்த வசந்தாவும், சோமுவின் மனைவி வேணியும் வாயைப் பொத்தி நாணத்துடன் சிரித்தனர்.

“அம்மே, ஞான் வந்து…” என்றபடி அன்னையை இரு கையால் மேலே தூக்கிக் கொண்டிருந்தான் ஆத்ரேயன் வாரியர்.

“ஆ…! எடோ, என்னத் தாழே விடு…!” (டேய், என்னை இறக்கி விடு…” என்றபடி அவன் தோளில் செல்லமாய் அடித்துக் கொண்டிருந்தார் அன்னை. அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டே கீழே இறக்கியவன் மூக்கை இழுத்துக் கொண்டு, “ம்ம்… வாசனை கம்பீரம் ஆனல்லோ…” (வாசனை சூப்பரா இருக்கே…) என்று ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தான்.

“எடா செக்கா, எத்தர பிராவஸ்யம் பரஞ்சாலும் நினக்கு களி தன்னே… என்டே நடு ஒடிஞ்சேனே…” (டேய் பையா, எவ்ளோ சொன்னாலும் உனக்கு விளையாட்டு தான்… என் இடுப்பு ஒடிஞ்சிருக்கும்…)

“மை ஸ்வீட் ஷோபி டார்லிங், வேர் ஈஸ் நவீன், நயனா…?” என்று அன்னையின் கன்னத்தைக் கிள்ளிக் கேட்க, அதற்குள் அவன் வரவை அறிந்து இரு குழந்தைகளும் அன்னையை இழுத்துக் கொண்டு படி இறங்கி வந்து கொண்டிருந்தனர்.

நாம் தேடும் ஒருவராலும்

நம்மைத் தேடும் ஒருவராலுமே

இனிமை சுமக்கிறது வாழ்க்கை…

பலவிதப் பயணங்கள்

கடினமான பாதையையும்

கடந்து வரத் தேவைப்படுவது

என்னவோ நமக்கான

தேடல்கள் மட்டுமே…