தண்ணீ கொடு, தேர்க்கு போகணும்..” மனைவியிடம்  குருமூர்த்தி கேட்டவர், தொட்டிலில் இருந்த பேத்தியிடம் சென்றார். அவள் பளிச்சென்று சிரித்து காலை ஆட்ட, அவரின் முகமும் தானாகவே சிரிக்க, விரல்கள் பேத்தியை வருடியது

பார்க்காதது போல பெண்கள் பார்த்து கொண்டவர்கள், அவர் கிளம்பவும், ஆசுவாசமாக அமர்ந்தனர். இருவர் மனதிலும் குருமூர்த்தி தான். “மாமா நான் பயந்ததை  விட பரவாயில்லத்தை..” என்றாள் அனு

அப்படியா..?” வைதேகி மெல்ல சிரிக்க

என்னத்தை..” என்றாள் அனு அவர் பாவனையில்

அவர் எப்போவும் ஒரே மாதிரி தான் அனு, இந்த மாற்றம் கூட அவருக்காக தான்..” என்றார் வைதேகி. அனு புரியாமல் பார்க்க

சுயநல மாற்றம் அனு இது, வயசு இருந்தப்போ நிறைய ஆடிட்டார், இப்போ வயசாகவும் பயம் வந்திடுச்சு, நாங்களும் ஒரு மூணு வருஷம் இவரை விட்டு தனியா தானே இருந்தோம்..”

ஆனா நீங்க அப்போவும் அவருக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கிட்டீங்க தானேத்தை..”

சாப்பாடு கொடுத்தேன் தான் அனு, ஆனா அவர் குரலுக்கு ஓடி வர அடிமையா நான் பக்கத்துல இல்லையே, அவர் தோரணையா இருக்க மகன் கூட இல்லையே, தனிமை தானேஎதாவது ஒரு அவசரம், உடம்பு முடியலைன்னா கூட அவரே தான் பார்த்துக்கணும்..”

தனா டாக்டர் கூட்டி வருவான் தான், ஆனாலும் நாம கூடவே இருந்து  இப்போ பார்த்துகிறோமே அப்படி வராது தானே..” என்றவர் பெருமூச்சுடன்,  “அவருக்கு அப்போ நான் சாப்பாடு கொடுத்தது கூட என் அத்தைக்காக தான் அனு, உனக்கு தெரியும் இல்லை இந்த வீட்டை அவங்க எனக்காக கொடுத்திட்டு போனாங்கன்னு.”

எதுக்கு தெரியுமா அவங்க மகனை  நான் விட்டுட கூடாதுன்னு தான், அவங்களுக்கு பயம் எங்க நான் இவரை விட்டு பிரிஞ்சிடுவேனோன்னு, நானும் அதுக்கு முயற்சி பண்ணேன், இவரை பத்தி தெரியவும், இவரோட நான் வாழ மாட்டேன்னு  என் பிள்ளைகளை கூட்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டேன்..”

அப்போ என் அண்ணாக்கு கல்யாணம் ஆகியிருந்துச்சு, என்னை  அந்த வீட்டு விருந்தாளி போல தான் நடத்தினாங்க, அங்க எனக்கு உரிமை இல்லன்னு சின்ன சின்ன விஷயத்துல கூட காமிச்சாங்கஎன் அம்மா,   இதெல்லாம் சாதாரணம், நீ தான் அவரை முந்தானையில முடிஞ்சுக்கணும்னு எனக்கு புத்தி, அப்பாக்கு பயம் எங்க நான் அவருக்கு பாரமாகிடுவேனான்னு..”

எனக்கும் சொல்லிக்கிற அளவு படிப்பு இல்லை, தனியே உலகத்தை சமாளிக்க தைரியம் இல்லை, கையில பணம், சொத்து எதுவும் இல்லை, பிள்ளைங்க வேற, எங்கேயாவது கூலி வேலைக்கு போய் பொழைச்சுக்கலாம்ன்னு குகன் அப்பா, என் அண்ணா கிட்ட தான் போனேன்..”

ஆனா எங்க வீட்டு ஆளுங்க, இவங்க எல்லாம் விடல, பேசி, மிரட்டி, அதட்டி கூட்டிட்டு வந்துட்டாங்க, அதுல இவருக்கு இன்னும் கூடி போச்சு, எங்க போனாலும் கடைசில என்கிட்ட தான் வரணும்ன்னு சிரிச்சார் மனுஷன்..”

பேருக்கு குடும்பம், புருஷன்னு வாழ்ந்தேன், என் மகன்  தனா தலையெடுத்து தான் சில விஷயங்களை தட்டி கேட்டான். இவரும் கொஞ்சம் அடங்கியிருக்கார்..”  வைதேகி கண்களை துடைத்து முடிக்க, அனுவிற்கு புரிந்தது

ஒருவர் வாழ்க்கையை  விமர்சனம் செய்வதற்கும், அவ்வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று. ஊரில் இவர்கள் தனியே இருந்தபோது, என்னென்ன பேசினார்கள் என்று அனுவிற்கு தெரியுமே.

“நான் இதை எல்லாம் என் பசங்ககிட்ட சொன்னதில்லை அனு, சொன்னா என்ன நினைப்பாங்கன்னு யோசனை,  உன்கிட்ட சொல்லணும் போல இருந்துச்சு..”  என்று பழைய நினைவுகளை அசைபோட,  அனு அவருக்கான நேரம் கொடுத்து அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் அப்படியே இருந்தனர். வைதேகி தானே எப்போதும் போல தெளிந்து எழுந்தவர்,  “நேரம் ஆச்சு, தேர் முடியற நேரம், நைட்டுக்கு எதாவது செய்யலாம்..” என, அனுவும்  கிட்சன் சென்றாள்

இங்கு தேர் கோவிலில் அடங்க, எல்லாம் சரிபார்த்து, பாதுகாப்பாக வைத்து, காப்பை கழட்டினர்தனா நேரே அன்பழகனை பார்க்க மில்லுக்கு சென்றான். சஞ்சய், குகனும் வர, அங்கு அன்பழகன் மட்டும் தனியே இருந்தார்

மூவருக்கும் அவர் டீ வர வைத்து கொடுக்க, சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு கிளம்பினர். சஞ்சய் மாமனாருடன் வீட்டுக்கு செல்ல, தனா, குகன் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

கணவன் இங்கு தான் வருவான் என்று சாருவும் வந்துவிட, எல்லோரும் அமர்ந்து உணவை முடித்தனர். அனு கணவன் இருந்த பக்கமே திரும்பவில்லை. “கோவமா இருக்காளாம்..” தனா உள்ளுக்குள் சிரித்து கொண்டவன், குகனுடன் பேசி கொண்டிருந்தான்

குருமூர்த்தி வந்தவர், “கணக்கு பார்க்கணும், நாளைக்கு கூட்டம் இருக்கு..” என்றார். தனா முகம் வாடி  போக

ba“நான் பார்க்கிறேன் மாமா, தனா நீ தூங்க போ, வேலை அதிகம்..” என்றான் குகன் புரிந்து. இங்கு சாரு கணவனை முறைக்க, “ப்ளீஸ்டி.. அவன் பாவம்..” என்றான் உதட்டசைவில். அண்ணன் என்பதால் சாரு அமைதியாகிவிட, தனா விட்டால் போதும் என்று ரூம் ஏறிவிட்டான்

அனுவும் ரூம் செல்ல பால் எடுக்க, பின்னாலே வந்த சாரு, “அப்புறம் அண்ணி.. ஜூன் தான் ஸ்கூல் ஆரம்பிக்குதா..?” வம்புக்காக  பேச்சு கொடுத்தாள்

ஆமா.. ஆமா சாரு..” அனு பால் பிளாஸ்க்குடன் சொன்னாள்

பாப்பா தான் நீங்க ஸ்கூல் போயிட்டா மிஸ் பண்ணுவா இல்லை..” சாரு சொல்ல

பக்கத்துல தானே, லஞ்சுக்கு வீட்டுக்கு வந்து போலாம் சாரு..” என்றாள் அனு

எனக்கும் தம்பி பிறந்தப்போ இப்படி தான் கஷ்டமா இருந்துச்சு, இவர்கிட்ட சண்டை போட்டு கடைக்கு போகாம இருந்துகிட்டேன், உங்களுக்கு அப்படி செய்ய முடியாது..” என்று மேலும் பேச, அனு நாத்தியை பாவமாக பார்த்து நின்றாள்

பிரசவத்திற்கு சென்ற அனு, இப்போது தான் வந்திருக்கிறாள். கணவனிடம் செல்ல கால்கள் பரபரத்தது. “என்ன அண்ணி சரி தானே..” சாரு கண்ணோர சிரிப்புடன் கேட்க

ஆஹ்.. எது சாரு..?” என்றாள் அனு விழித்து

இல்லை நாம எல்லாம் நைட் கீழே படுக்கலாம்னு சொன்னேன், அது..” என

என்னது..”  அனு நொந்து போனாள்

ஹாஹா.. விட்டா அழுத்துடுவீங்க போலயே..” சாரு சிரிக்க, அவளின் விளையாட்டு புரிந்து

சேட்டை.. எப்படி தான் என் அண்ணா உன்னை சமாளிக்கிறாரோ..” அனுவும் சிரித்து பாப்பாவை தூக்கி கொண்டு கிளம்பிவிட்டாள்

தனா குளித்து கொண்டிருக்க, அனு பாப்பாவிற்கு பால் கொடுத்து, உடை மாற்றி தொட்டிலில் படுக்க வைத்தாள். தனா வரவும், அனு நைட்டி எடுத்து கொண்டு மாற்ற செல்ல, தனா கதவடைத்து நின்றான். அனு அவனை முறைக்க, சிரித்தவன், அவளை அப்படியே கை கொடுத்து தூக்கி கட்டி கொண்டான்

ஒன்னும் வேணாம்..” அனு திமிர, தனா அவளின் கழுத்தில் முகம் புதைத்து வாசம் இழுத்தான்.

 “ரொம்பதான் தேடுன மாதிரி நடிப்பு, பத்து நாளைக்கு முன்னாடியே நான் வர வேண்டியது, நீங்க தானே வேணாம் சொன்னீங்க..” அவனின் அணைப்பில் இருந்து வெளியே வந்தவள் கோவமாக கேட்டாள்

திருவிழாக்கு கையில காப்பு கட்டியிருந்தேன்டி, அதான்..” தனா அவளின் இடையில் கை கொடுத்து  அருகில் இழுத்தான்

காப்பு கட்டியிருந்தா என்ன..? உங்களுக்கு அது ஒரு சாக்கு..” அனு உதடு சுழித்தாள்

இப்படி இருக்க முடியாதே என் பொண்டாட்டிகிட்ட, எனக்கு அந்தளவு கட்டுப்பாடும் வராது, ரொம்ப காஞ்சு போயிருக்கேன்டி..” என்றான் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து

அதுக்கு தான் பொண்டாட்டி கேட்டான்னு கடைக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்கி குவிச்சிட்டீங்க பாரு..” அனு நொடிக்க

நீ இதை விடவே மாட்டியாடி, எவ்வளவு  சமாதானம் சொல்லியும் அடங்கிறியா பாரு..”  முத்தம் கொடுத்த கன்னத்தை லேசாக கடித்து வைத்தான். ஸ்ஸ்.. அவன் முகம் தள்ளியவள்

ஏன் விடணும்..? அப்போ எல்லாம் எவ்வளவு கோவம் வரும் தெரியுமா..? இப்படி உங்க தலை முடி பிடிச்சு ஆட்டி, வாங்கி கொடுப்பியாவாங்கி கொடுப்பியான்னு பிராண்ட கை பரபரக்கும்..”  என்றவள், உண்மைக்கும்  அதை எல்லாம்  இப்போது செய்து தான் கொண்டிருந்தாள்

ஆஹ்.. போதும்டி, நான் வாங்கி கொடுத்தது வருஷத்துக்கு ஒரு முறை தான், நீ வருஷம் பூரா என்னை அடிச்சிட்டு இருக்க..” என்றான் அவள் இழுத்து ஆட்டிய முடிய கோதி

அனு விட்டேனா என்று மீண்டும் அவன் முடிய இழுக்க, “இந்தா வச்சுக்கோ..” என்றவன், விவரமாய் அவளின் நெஞ்சில் முகம் புதைத்தான்

ஆஹாஹா.. அம்புட்டு ஏமாந்தவங்க நாங்க..”  அனு சுதாரித்து அவனை தள்ளிவிட,   தனா அவளை கட்டி கொண்டு கட்டிலில் விழுந்தான்

ஏண்டி தொட்ட மாசத்துல பாப்பா வந்துட்டா, உனக்கு வாந்தி, டயர்ட், சரியாகும் போது ஏழு மாசம்னு பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு ஓடியாச்சு, திரும்ப இப்போ தான் வந்திருக்க, அதுல முறுக்கல் வேற.. இப்போ தான் புரியுது அவனவன் ஏன் தள்ளி போடுறாங்கன்னு, ரொம்ப மோசம்டி..”  என்றவன் அவளின் பூவை வாசம் பிடித்து கழுத்தோரம் முத்தம் வைத்தான்

அதுக்கென்ன செய்ய..? நீங்க முதல்ல என்னை ஏன் கடைக்கு கூட்டிட்டு போகலன்னு சொல்லுங்க..”  அனு அவனை வேண்டுமென்றே சீண்ட

அடிங்க.. நானே  பத்து வருஷம் பார்த்து, போராடி கல்யாணம் முடிச்சு, ஒரு மாசம் தான்  புது மாப்பிள்ளையா இருந்திருக்கேன்னு நொந்து போய் இருக்கேன், உனக்கு பேச்சு வேண்டி கிடக்கு, இனி எதாவது பேசின வாய் இருக்காது..” என்றான் மிரட்டலாக

ஓஹ்.. என்னை மிரட்டுறீங்க..? வாய் இருக்காதா..?” அனு எகிற

ஆமா இருக்காதுடி..”  என்றவன்,  அவளின் உதடுகளை கவ்வி கொள்ள, அனு அடுத்து பேச முடியாமல் சிக்கி திணறி தான் போனாள்

முரடு முரடு இப்படியா..?” உதடுகள் சிவந்திருக்க, அனு அவனின் நெஞ்சில் அடித்தாள்.

இப்படியாவது இருக்கேனு சந்தோஷ பட்டுக்கோ, மிச்சம் பேசின..”  என்றவன் குரல் மிரட்டலாக வர, முகமோ கண்களுக்கு மிக அருகில் தெரிந்த மனைவி முகத்தை காதலாக, ரசித்து பார்த்து கொண்டிருந்தது

என்ன..?”  அனு குரல்  கோவமாக வராமல் சிணுங்கலாக வர, ஒன்னுமில்லை.. என்று தலை ஆட்டியவன், காதல் மிகுதியில் எதுவும் செய்ய முடியாமல், அப்படியே அவள் நெஞ்சில் புதைந்து கொண்டான்

இன்னும் இன்னும் அவளின் வாசம், நெருக்கம், அருகாமைக்கு மனம் ஏங்கியதுஅனு எவ்வளவு அருகில் இருந்தாலும் தனாவிற்கு போதவில்லை. அனுவிற்கும் கணவனை புரிய, அவன் நெற்றியில் இதழ் பதித்து இறுக்கி கொண்டாள்

இவர்களின் மிகுதி காதல் இருவரையும் அள்ளி அணைத்து தான் கொள்கிறது. இப்படி ஒரு காதல் இருந்ததால் தானோ இருவரும் அவ்வளவு உறுதியாக நின்றோமோ..? இருவரும் நினைத்து மற்றவரை பார்த்தனர்

தனா, அனுவை பொறுத்தவரை ஒருவர் மீது இன்னொருவர் கொண்ட இவர்களின் காதலே இராஜ பவனி போல தான். அவரவரவர் மனங்களின் காதல் இறுதி வரை பவனி சென்று கொண்டு தான் இருக்கும்

பவனியின் பாதை எப்படி இருந்தாலும் அது அடைய வேண்டிய இடத்தை அடைந்தே தான தீரும்

இங்கும் இராஜ பவனி சேரும் இடத்தை சேர்ந்து தான் விட்டது.