இருஅப்பாக்கள், அனுஎன்றுமிகப்பெரியசூழலில்சிக்கிகொண்டதுபோலதான்உணர்ந்தான். இந்த மனநிலையில் அவனுக்கு அனுவை சென்று பார்க்கவும் முடியவில்லை. அவள்தேடுவாளேஎன்றுசென்றுநின்றுவந்தான்.
குருமூர்த்தியும்மகனைபார்த்துபுருவம்சுருக்கினார். “என்னஆச்சுஇவனுக்கு..?” பெத்தமனம்அவரின்அகங்காரத்தை, திமிரைகொஞ்சம்மிதித்துதள்ள, தொழிலில்எதாவதுபிரச்சனையாஎன்றுவிசாரித்தார். எதுவும்இல்லைஎனவும், “வேறஎன்ன..? அந்தபொண்ணுக்கு கல்யாணம்ஏதாவது.. நல்லது, படட்டும்..” கருவிகொண்டவர் முன் ஒரு நாள் தனா சென்று நின்றுவிட்டான்.
அவனுக்கு வேறு வழி இல்லை. அனுவிற்காக.. தேற்றி கொண்டு செல்ல, அவனுக்கு முன் அங்கு வைதேகி நின்றிருந்தார். “மகனுக்காக புருஷன்கிட்ட வந்திருக்க அப்படி தானே..?” குருமூர்த்தி மனைவியை தீவிரமாக கேட்டு கொண்டிருந்தார்.
தனா வாசலை கடந்து வேகமாக உள்ளே செல்ல, “பார்றா.. என்னடா அதிசயமா இந்த கொடுமைக்கார போர்ஷனுக்கு அம்மாவும், மகனும், வந்திருக்கீங்க..?” பெரிதாக ஆச்சரியம் காட்டினார்.
வைதேகி பேச வர, “நானே சொல்றேன்ம்மா..” என்றவன், குருமூர்த்தியிடம் அவன் விஷயத்தை சொன்னான்.
குருமூர்த்தியின் கண்கள் ஒளிர, “என்கிட்ட தான் நீ பேசுனியா..? இத்தனை வருஷம் வீரப்பா திரிஞ்ச ஆம்பிளை திடீர்னு வந்து முன்ன நிக்கிற..? சரி சொல்லு என்ன சொன்ன..? எனக்கு கேட்கல..” என்றார்.
“நானா..? என்ன தைரியம் உனக்கு..? இதை தான் நீயும் மகனுக்காக செய்ங்கன்னு சொன்னியா..?” மனைவியிடம் கோவத்தில் கொதித்தவர், மகனை பார்த்து நிதானித்து, “சரி அது இருக்கட்டும்.. நான் ஏண்டா வரணும்..? நீ தான் இப்போ இந்த வீட்டுக்கு பெரியவன் ஆச்சே..? உன்னோட முடிவு தானே எல்லாம்..?” என்றார் நக்கலாக.
“அதானே பார்த்தேன், அந்த ஆள் கேட்கலைன்னா என்னைவிட்டு ஜே ஜேன்னு கல்யாணம் செஞ்சிருப்ப இல்லை..” குருமூர்த்தி மகனை தீர்க்கமாக பார்த்தார். அவனும் இதை நினைத்தவன் தானே..?
“கேட்டாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்..” தனா உண்மையை தான் சொன்னான்.
“ஆமா.. நான் ஒத்துக்க மாட்டேன் தான், அதுக்காக நீ என்கிட்ட கேட்காம இருப்பியா..? இப்போ பாரு உன் தலையெழுத்து என்கிட்ட வந்து நிக்கிற மாதிரி ஆகிடுச்சு இல்லை..” என்றார் எகத்தாளமாக.