ம்மா.. நான் சாருகிட்ட பேசிட்டேன், அவளுக்கு ஓகே தான், குகன் பத்தி எனக்கு தெரியும், அவனும் தானா வந்து சம்மதம் சொல்வான் பாருங்க..” என்றான் தனா நிச்சயமாக. சாருவிடம் குகன் உரிமை எடுத்து பேசுவதிலே தனா கண்டுகொண்டான்

என்னடி இது..? இப்போத்தானே அப்படி எதுவும் இல்லை சொன்ன..” வைதேகி மகளிடம் கேட்டார்

நீங்களே கட்டி வச்சா ஏன் வேண்டாம் சொல்லணும், இப்படி  கைக்கு அடக்கமா ஒரு அடிமை கிடைக்கும் போது யாராவது விடுவாங்களாம்மா..?” என்றாள் அவள்

அண்ணி.. அவங்களுக்கு விருப்பம் இருக்கணும் இல்லை தனாஅவங்களை வற்புறுத்தி செய்ய முடியுமா சொல்லு..” மகன் மனதை மாற்ற தான் பார்த்தார்

ம்மா.. அவங்களுக்கு சாரு மருமகளா வரது கண்டிப்பா இஷ்டமா தான் இருக்கும், அவரை நினைச்சு தான் வேண்டாம் சொல்வாங்க, அதை நான் பார்த்துகிறேன்..  அத்தைகிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு..”  என்றான் அவன்

சரி.. இப்போ எதுவும் பேச வேண்டாம், திருவிழா முடியட்டும்.. நானே அண்ணிகிட்ட பேசுறேன்..”  என்றுவிட்டார் வைதேகி

தனாவிற்கும் குகன் இன்னும் வாய் திறந்து சம்மதம் சொல்ல வேண்டும் என்றிருக்க, அமைதி காத்தான். ஒரு வாரம் என்பது வேகமாக ஓடி மறைய, திருவிழா நாளும் வந்தது

அதுவரை இயல்பாய் இருப்பதாய் நடித்து கொண்டிருந்த தனாவின் நடிப்பும் கரைய  தொடங்கியது. இத்தனை மாதங்களாய்  மறைத்து, அடைத்து வைத்திருந்த அவனின்  தவிப்பு, தேடல் அவனின் கட்டுப்பாடை உடைக்க ஆரம்பித்தது. அனுவை பார்க்க அவனின் ஒவ்வொரு அணுவும் அவனை பாடாக படுத்தியது

ஒரு வருஷம் அவளை பார்க்கலை தானே, இப்போ ஒரு முறை மட்டும் பார்ப்போம் என்று அடம் செய்தது. முதலிலே இப்படி செஞ்சு தான் இவ்வளவு பிரச்சனையும், வேண்டாம்டா தள்ளியே இருப்போம்.. அறிவு எச்சரித்தது

வைதேகி, குருமூர்த்தி கேட்ட வார்த்தைகள் கண் முன் வந்து அவனை சித்தரவதை செய்ய ஆரம்பித்தது. நீ என்ன தனியாவா பார்க்க போற..? கோவில்ல வச்சு தூரம் இருந்து தானே பார்க்க போற, அவளும் உன்னை தேடுவா தானே.. காதல் மனம் ஆசை  காட்டியது

வெளியே சிரித்த முகமாய் உள்ளுக்குள் அவ்வளவு தவித்தான். துடித்தான். அவளை பார்க்க முடியா அவனின் நிமிடங்கள், நொடிகள் நரகத்தை காட்ட ஆரம்பித்தது. எப்படியும் இன்னைக்கு கோவில் வருவா, நாமும் போவோம்.. எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் இருந்திட்டு பார்த்துட்டு வந்திடுவோம்..  மெல்ல மெல்ல நினைக்க ஆரம்பித்து, உறுதியானது

அங்கு அனுவும் அவ்வளவு ஆசையுடன், எதிர்பார்ப்புடன், தேடலுடன் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தாள். என்ன மறைக்க முயன்றும் முகம் மின்னுவதை தடுக்க முடியவில்லை. தேடி தேடி உடை உடுத்தினாள். பூ வைத்தாள். அவளின் பொக்கிஷ பெட்டியை திறந்து, அந்த பாக்ஸை எடுத்தாள்

அது தனா அன்று கடையில் வைத்து கொடுத்த கிப்ட். உள்ளே சில்வர் பெரிய ஜிமிக்கி. காதலுடன் தடவி, அணிந்து கொண்டாள். “அவர் என்னை பார்க்கும் போது இதுவும் தெரியும் தானே, பார்த்தும் எவ்வளவு சந்தோஷ படுவார்..?” கற்பனையே இனித்தது

க்கா.. நான் ரெடி..”  நடையில் மறைத்தாலும் துள்ளல் நன்றாக தெரிந்தது. சித்ரா வேகமாக திரும்பி அப்பா, அம்மா எங்கே என்று  பார்த்தவள்

அனு.. உன்னை இப்படி பார்க்க பக்குன்னு இருக்குடி..” என்றாள். சஞ்சய்க்கும் அனுவை இப்படி பார்க்க பயம் தொற்றி கொள்ள

யம்மா மச்சினி என்ன பிளான்ல இருக்க நீ..?” அவளிடம் திகிலாக கேட்டான். “நான் வேற ஜம்பமா உங்க அப்பாக்கு வாக்கு கொடுத்திருக்கேன், ஏதாவது ஆனா என் பொண்டாட்டியை பிடுங்கிக்குவார் உங்க அப்பா..” என்றான் கவலையாக

அனுவோ  காதல் வானில் சிறகடித்து கொண்டிருக்க, சஞ்சய்யின் வார்த்தை சிரிப்பை தான் கொடுத்தது. “சிரிக்காதடி..” சித்ரா தங்கையை அதட்டினாள்

என்னக்கா..” அனு முகம் டாலடிக்க கேட்டாள்

ம்ஹூம்.. இது வேலைக்கு ஆகாது, அப்பா வரதுக்குள்ள உன்னை காருக்கு கூட்டிகிட்டு போயிடனும்.. ஏங்க கதவை திறங்க..” என்று தங்கையுடன் காருக்கு செல்லஅங்கு அவர்களுக்கு முன் காரில் ஏறி இருந்தான் சஞ்சய்

அழகான மச்சினின்னு பார்த்தா பொண்டாட்டி இல்லாம போய்டுவா போல.. எல்லாதுக்கும்  என் வாய்  தான் காரணம், பேசுவியா, வாக்கு கொடுப்பியா..” வாய் மேல் அடிக்க, அனுவிற்கு இன்னும் சிரிப்பு

இத்தனை மாதங்களுக்கும் சேர்த்து இப்போது சிரித்து கொண்டிருக்கும் தங்கையை பார்க்க சித்ராவிற்கு மகிழ்ச்சி என்றாலும், பெற்றவர்களை நினைத்து பயம் வராமல் இல்லை

என்ன சீக்கிரம் காருக்கு வந்துட்டீங்க..” பூஜை பொருட்களுடன் காருக்கு வந்த சுஜாதா, அன்பழகனுடன் காரில் ஏறிக்கொள்ள, கார் கோவிலுக்கு சென்றது

கூட்டமா இருக்கு, உஷாரா இருக்கணும் சித்ரா, அனு அக்காவை ஒழுங்கா கவனிச்சுக்கோ, கண் இங்க அங்க மேய கூடாது..” அன்பழகன், சுஜாதா மகளை கொட்டவே செய்தனர். அதில் அனு முகம் ஒரு நொடி சுருங்கி போனாலும், அவள் கண்கள் ரகசியமாக தனாவை தேட தான் செய்தது

தனா சந்நிதிக்கு பக்கத்தில் நின்று கூட்டத்தை ஓரமாக அனுப்பி கொண்டிருந்தான். குருமூர்த்தி மகனை பார்த்து முறைத்து சென்றாலும்என் ஊர், என் அம்மன், நான் செய்வேன் என்றே செய்தான் தனா. அவர்களின் ஊர் திருவிழா கமிட்டி ஆட்களும், இளசுகளும் தனாவை விடவில்லை.  

குருமூர்த்தி மனைவி, மகளை கூப்பிட்டு, “முன்ன திருவிழால இல்லை அவன் என் மானத்தை வாங்கினது, இந்த வருஷம் அப்படி எதாவது பண்ணா நடக்கிறதே வேற, அவனை முதல்ல இங்கிருந்து கிளம்ப சொல்லு, போய் சொல்லு போ..”  என்று மகளை விரட்டவே செய்தார் மனிதர்.   

சாரு வந்தவள் அண்ணனிடம் அதை சொல்லாமல், “ண்ணா.. எனக்கு அவங்களை பார்க்கணும்அவங்க வந்தா எனக்கு சொல்லேன், நான் இங்கேயே இருக்கேன், முன்ன ஊர்ல ஒரு பொண்ணுன்னு விட்டுட்டேன், நல்லா பார்க்கணும்..” என்றாள் ஆசையாக

பக்கத்தில் நின்ற குகன் அவளை முறைக்க, சாரு அவன் பக்கம் திரும்பினாள் தானே. “உங்க அப்பா அங்க நின்னு இங்கேயே தான் பார்த்திட்டு இருக்கார்..” என்றான் குகன் நக்கலாக

அதுக்கென்ன..? அவர் கண்ணு அவர் பார்க்கிறார், எங்க கண்ணு நாங்க பார்க்க போறோம், இவருக்கு என்னவாம்..” என்றாள் கேலியாக சாரு

இவளுக்கு லொள்ளை பாரு..” தனாவிடம் அவளை  பற்றி காய்ந்தான் குகன். ம்ஹூம்.. தனாவின் கண்களோ நொடியும் தப்பாமல், ஆட்கள் வரும் பாதையை தான் பார்த்து கொண்டிருக்க, குருமூர்த்தி பக்கத்தில் நின்ற மனைவியை ஒரு பார்வை பார்த்தார்

அந்த பார்வையில் வைதேகி நடுங்கி போனவர், வேகமாக மகனிடம் ஓடி, கிளம்ப சொன்னார். தனா மறுப்பாக பார்க்க, “உன்னை கெஞ்சி கேட்கிறேன் தனா, அவர் இங்கேயே உன்னை பேசினாலும் பேசுவார், போடா.. கோவில்ல வச்சு பேச்சு வேண்டாம், போ தனா..” கண்கள் கலங்க சொல்ல, அதற்கு மேல் மகன் மறுக்கவில்லை

முகம் கசங்கி போக, கூட்டத்தை விட்டு வெளியே வர, அனு உள்ளே வந்தாள். பார்த்துவிட்டான். அவனின் அனுவை பார்த்துவிட்டான். ஒரு வருடம் பார்க்காமல் இருந்த அவனின் அவளை பார்த்துவிட்டான். கண்கள் கலங்கும் போல் இருந்தது. இமை சிமிட்டி நின்ற இடத்தில் அவளை பார்த்தான். கால்கள் அசையவில்லை. எப்படி நகரும்..? 

அவளையே பார்க்க, அவளும் அவனை பார்த்துவிட்டாள். சித்ரா கை பிடித்து கண்கள் ரகசியமாக சுழல உள்ளே வந்தவள், தனாவை பார்த்துவிட்டாள். கண்கள் கலங்கி வைரமாக ஜொலித்தது. அவளின் கால்கள் சித்ராவால் இழுக்கப்பட்டு தனாவை நோக்கி வர, அவளின் பக்கத்தில் இருந்த அன்பழகன் பார்வை அவனை பொசுக்கியது

“சாரு.. சாதாரணமா பார்க்கிறது போல பாருடி, அந்த பச்சை சூடிஅவங்க தான்..” சாருவிற்கு அனுவை காட்டி கொடுத்தான் குகன். அதில் வைதேகியும் அனுவை பார்க்க, அவ்வளவு திருப்தி. கூட பயமும். திரும்பி கணவனை பார்க்க, அவரின் பார்வை மகன் மேல்

சாருவோ, அனுவை நன்றாக பார்த்து,  “என் அண்ணா செலக்ஷன் சோடை போகுமா..?” பெருமிதம் கொண்டாள்

அப்போ நானும் அப்படி தானே..?” குகன் குறும்பாக கேட்க, ஒரு நொடி புரியாத முழித்த அனுவிற்கு அவனை தான் சொல்கிறான் என்று புரிய

எக்ஸப்ஷனுலும் உண்டு..” என்றாள் நக்கலாக. வேணாம்ன்னு சொல்லிட்டு கேட்ட இல்லை வாங்கிக்கோ பாவனை. குகன் பல்லை கடித்து திரும்ப, குருமூர்த்தியின் அனல் பார்வை

போச்சு.. இன்னைக்கும் நைட் கச்சேரி தான் போல..” முணுமுணுத்து கொண்ட கொண்டவன், தனாவிடம் சென்று எச்சரிக்கை செய்தான். 

தனாவிற்கோ கண்கள் திரும்ப அவள் மேலே போக, கட்டுப்படுத்தி வேறு பக்கம் பார்க்க, திடுக்கிட்டான். அவனை பல கண்கள் மொய்த்து கொண்டிருந்தது. அவனை பார்த்து, அனுவை பார்த்தனர். பெரியவர்கள் ஆராய்ச்சியாய், அலசலாய், இளசுகள் பார்வை காதல் கொண்டாட்டத்தில்

நெருங்கி வந்த அன்பழகன் அவனை கடுமையாக பார்க்க, குருமூர்த்தின் பார்வையும் இவன் மேலே இருக்க, சுஜாதா அனுவிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. அதில் அனு கண்ணீர் கீழே விழுக, அதிர்ந்து அம்மாவை பார்த்தாள்.

அவள் திரும்பியதில் தனா கண்களுக்கு  ஜிமிக்கி பளிச்சென  பட்டது. அப்படியொரு இதம். காதல் பொங்கியது

அனுவிற்கோ அதுவரை இருந்த ஜொலிப்பு காணாமல் போய், கண்கள் அழுகையில் துடிக்க சித்ராவுடன்  வந்து கொண்டிருந்தாள். பார்த்த தனாவிற்கு தாளவே முடியவில்லை

அப்படி என்ன செஞ்சுட்டோம், பார்த்ததுக்கே இப்படியா..?” அப்படியொரு கோவம், அழுத்தம். சுற்றயுள்ள யாரின் பார்வையும் அவனை இப்போது தொந்தரவு செய்யவில்லை

குகன் அவனை போக சொல்ல, அவனின் கால்கள் அசையவில்லை. தன்னருகே வரும் அனுவை தான் பார்த்து நின்றான். அவள் இவனை பார்க்காமல் நடை தளர வந்து கொண்டிருந்தாள்

ஒரு நொடியில் அவளை என்ன செய்துவிட்டனர்..? அப்படியென்ன செஞ்சுட்டோம்..?” குருமூர்த்தியின் பார்வையும் அலட்சியம் செய்தான். அவளை பார்க்காதவரை தான் அவனின் கட்டுப்பாடு. பார்த்து அவளை கடக்க முடியாது அவனால்.

அனு அவனின் அருகில் வந்தாள். தன்னை உணர்ந்து போல அவளுடலில் ஒரு நடுக்கம். அவனை பார்க்காமல் கடக்க முயன்றாள். முடியவில்லை. அவனை பார்த்துவிட்டாள்

கண்கள் கலங்க, உதடு துடிக்க அவனை பார்த்தவளை, இவன் திடமாக பார்த்தான். அவனின் பார்வையில் தெரிந்த உறுதிஉரிமை அனுவிற்கு இன்னும் அழுகையை, காதலை கொடுக்க, பெரியவர்களுக்கும் இது  புரிந்தது

இரு வீட்டு பெற்றவர்களும், பெரியவர்களும் கோவத்துடன், கலக்கத்துடன் இவர்களை பார்க்க, எதுவும் தனாவை அசைக்கவில்லை. அவன் திடமாக நின்றான். அனுவிற்கு பார்வையிலே தைரியம் சொன்னான். அவளின் வலது கைவிரலை தன் விரலால் பிடித்து அழுத்தம் கொடுத்து விடுவித்தான்

கூட்டத்தில் கைகள் இணைந்தது தெரியவில்லை. ஆனாலும் அவன் பார்வையே போதுமான பதிலாக இருந்தது. சுஜாதா மகளை இழுத்து கொண்டு செல்ல, தனா நின்ற இடத்திலே அனுவை பார்த்து, மற்றவர்களையும் பார்த்தான்.  

எதுவும் முடியவில்லை. முடியாது என்ற பார்வை தான் அவனிடம்