இராஜ பவனி 8

“இப்பவே  வீட்டுக்கு போகணுமா..? டேய் மணி ஏழு தாண்டா ஆகுது..” கடையை விட்டு வீட்டுக்கு  போக வேண்டும் என்ற தனாவிடம் கேட்டான் குகன். 

“அம்மா வர சொன்னாங்கடா, ஏதோ முக்கியமான   விஷயம் பேசணுமாம்..”  தனா சொல்லி வெளியே செல்ல, குகனும் அவனுடன் கிளம்பினான். 

அங்கு குகனின் அம்மா பரிமளம் இருக்க, குகனுக்கு ஆச்சரியம் தான். அவர் எங்கும் அதிகம் செல்லாத ஆள்.  தோட்டத்து  வேலை, விட்டால் வீடு. அவ்வளவு தான். இன்று இங்கு, அதுவும் குருமூர்த்தி வீட்டில்வைதேகி எவ்வளவு கெஞ்சி கூப்பிட்டாலும் வராத ஆள். வருடங்களே சில இருக்கும் அவர் இங்கு வந்து. இன்று அதிசயமா வந்திருக்க, ஏதோ பெரிய விஷயம் என்று புரிந்தது

அதற்கேற்றார் போல், வைதேகி முகம் மிகவும் வாடியிருந்தது. தனாவை பார்த்த அவர் பார்வையிலும் ஆதங்கம், வருத்தம், ஏன் கோவம் கூட தெரிந்தது. தனா அவரை கவனித்தவன், முதலில் பரிமளத்திடம் சென்று வரவேற்று நலம் விசாரித்தான்

என்னத்தை காத்து இந்த பக்கம் உங்களை தள்ளிட்டு வந்துடுச்சா..?”  அவர் தோளோடு அணைத்து பாசத்துடன்  கேட்டான்

தனா பையன் தான் என்னை வர வச்சுட்டான்..” என்றார் அவர்

தனா அம்மாவை பார்க்க, “சாருவை கேட்டிருந்தாங்க இல்லை, அவங்க ஏதோ பேசணுமாம்..” என்றார் வைதேகி

தனாவிற்கு அந்த வரன் பேச்சே பிடிக்கவில்லை. வைதேகி கேட்டால் தானே. முதலிலே மகள் திருமணத்திற்கு தயாராக இருந்தவர், அவள் இப்போது வீட்டில் வேறு இருக்க விடுவாரா..? 

தனா வேண்டாம் என்று மறுத்த போதும், “வீட்ல தானேடா இருக்கா, நல்ல வரன், ஏன் விடணும்..?” என்று கணவரிடம் விஷயத்தை கொண்டு சென்றார். குருமூர்த்தியின் ஒன்று விட்ட  பெரியப்பா தான் அவர்கள் வீட்டில் பெரியவர். அவரை கணவரிடம் பேச வர வைத்தார் வைதேகி

அவரும் வீட்டிற்கு  வந்தவர்,   குணசேகர் வீட்ல  நம்ம பொண்ணை  ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க இல்லை, முடிச்சிடலாமா மூர்த்தி..?” கேட்க

குருமூர்த்தியோ, “வேறென்ன பண்ண பெரியப்பா..? என் தலையெழுத்து இப்படி ஒரு மகனை பெத்துக்கு அப்புறம் பொண்ணை சீக்கிரம் கட்டி கொடுக்கிறது தானே நல்லது, இல்லை அவன் எப்போ எவளை இழுத்து வருவான்னு பார்த்திட்டு இருக்க முடியாதே..?” என்றார் ரூமில் இருக்கும் மகனுக்கும் கேட்கும் வகையில் சத்தமாக

குளித்து ஷர்ட் பட்டன் போட்டு  கொண்டிருந்த  தனா விரல்கள்   ஒரு நொடி நின்று மீதமிருந்த பட்டனை போட்டது

இப்போ எதுக்கு அந்த பேச்சு விடுப்பா, நாம சாருவை பார்ப்போம்..” என்றார் அவர் மூத்தவராக

குருமூர்த்தியா விடுவார்..?   “அட நீங்க வேற பெரியப்பா, எப்போ எந்த கருமம் நடக்கும் தெரியாம இல்லை இந்த வீட்ல என் பொழப்பு போகுது, காலம் முழுசுக்கும் நான் உழைச்சு இவங்களை சொகுசா வச்சிருந்ததுக்கு என் தலையிலே இல்லை கல்லை தூக்கி போடுறாங்க..”

குருமூர்த்தி அதை விட்டுட்டு நீ மக கல்யாணத்தை பாருப்பா..”

எனக்கு முதல்லே லேசா தோணுச்சு பெரியப்பா, என்னடா இவன் படிச்சு முடிச்சுட்டு பட்டணத்துக்கு வேலைக்கு போகாம இங்கேயே தொழில் பண்றானேன்னுநான் ஒரு மடையன், அப்போவவே நோண்டியிருந்தா இது இன்னைக்கு இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது..”

குருமூர்த்தி இதை விட சொன்னா விடமாட்டியா நீ..?”

உங்களுக்கு தெரியாது பெரியப்பா, நான் இவன் கடை ஆரம்பிக்க போறேன்னு வந்து நின்னப்போ, ஏதோ பையன் பொறுப்பா கடை வைக்கிறான், முன்னேறுவான்னு நம்பி தான் பணம் தூக்கி கொடுத்தேன், ஆனா இவன்  கடையிலே உட்கார்ந்து  ஜோடி இல்லை சேர ஆளை பார்த்திருக்கான்.. விசாரிச்சா தான் தெரியுது அந்த பொண்ணு அடிக்கடி கடைக்கு வந்து போனது, தொழில் நடக்கிற இடத்துல இவர் கண்ட கருமத்தை இல்லை நடத்திட்டு இருந்திருக்கார்..”

பளீர்..”  என்று சத்தம்

தனா..”  வைதேகி மகனின் ரூம்  ஓட, அவன் முன் இருந்த கண்ணாடி உடைந்து சில்லு சில்லாகி இருந்தது. “என்னடா பண்ணிட்ட..?” வைதேகி மகன் கை பிடித்து பதற, சாரு ஓடி சென்று அண்ணனுக்கு கட்டு போட துணி எடுத்து வந்தாள்

என்னம்மா ஆச்சு..? அட என்னப்பா நீ..? வெளியே வா  முதல்ல.. யம்மா மருமகளே துணி வாங்கி கட்டு போடும்மா..”  பெரியவர் அவன் கை பிடித்து சொல்ல, கையை உதறி கொண்டான் தனா

குருமூர்த்தி மகனை அதிர்ந்து பார்த்து நின்றார். அவன் முகம், கண்கள் எல்லாம்   சிவந்து, கழுத்தோர நரம்புகள் துடித்து கொண்டிருந்தது

தனா.. பொறுப்பா..”  பெரியவர் அவனை ஆசுவாசப்படுத்த, அவனின் மூச்சு வேகம், சூடு கொஞ்சமும் குறையவில்லை

இப்போ நான் என்ன இல்லாததையா..”  குருமூர்த்தி அடங்காமல் ஆரம்பிக்க

போதும்..  நிறுத்த சொல்லுங்க அவரை..” என்றான் குரல் உயர்த்து

தனா..”   வைதேகி மகன் அருகில் வர, அவனோ, அடங்க முடியா கோவத்தில் நின்றிருந்தவன்

இவர் என்னை பத்தியோ, என் கடைய பத்தியோ ஒரு வார்த்தை பேச கூடாதுஅவர் எனக்கு கொடுத்த பணத்தை  ஒத்தை ரூபாய் பாக்கி இல்லாம நான் எப்போவவோ  திருப்பி கொடுத்துட்டேன்..” என்றான் மகன் அழுத்தமாக.  

பணம் கொடுத்துட்டா நான் பேச கூடாதா..?” குருமூர்த்தி விடாமல் பேச

மூர்த்தி.. நீ வாயை மூடு..”  அவரின் பெரியப்பா பெரிய அதட்டலாக போட்டார்

என்ன பெரியப்பா நீங்க அவன் என்னை பேச கூடாதுன்னு சொல்றான், அதுவும் அவனை பத்தி நான் பேச கூடாதாமே.. அவனுக்கு அப்பன் நான்அவனுக்கு  உயிர் கொடுத்து, இவ்வளவு பெரிய ஆம்பிளையா வளர்த்து விட்டது நான், நான் பேசுவேன், என்னை நிறுத்த அவனுக்கு அதிகாரம் இல்லை..” என்றார்

தனா விரக்தியாக சிரித்தவன், “எனக்கு ஒன்னும் இவர் கொடுத்த இந்த உயிர்ல வாழனும்ன்னு ஆசை இல்லை, என்ன பண்ண என்னை நம்பி மூணு பொம்பிளைங்க இருக்காங்களே, இல்லை இப்போவவே இந்த உயிரை பிடுங்கி போட்டுடுவேன்..” என்றுவிட்டான்

தனா.. என்னடா பேசுற..? பேசுவியா, பேசுவியா, இந்த வார்த்தை உன் வாயில வருமா..?” வைதேகி தாங்க முடியாமல் மகனை அடித்து அழுதார்

குருமூர்த்தி மகனின் வார்த்தையில் அதிர்ந்து அமைதியாகிவிட்டாலும், மகன் சொன்ன அந்த மூன்று பெண்கள்  என்ற வார்த்தையில் உள்ளம் கொதித்தது அவருக்கு

“இப்போ சந்தோசமாடா உனக்கு, பேசாதன்னு சொன்னா கேட்கிறதில்லை, அப்படி என்னடா உனக்கு அகங்காரம்..? ஒரு வயசு பையனை இப்படியா நினைக்க வைப்ப..? என்னடா அப்பன் நீ..? என் தம்பி உன்னை குழந்தையிலே நல்லா கொடுத்து வளர்ந்திருக்கணும், விட்டுட்டு அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான், இவங்க தான் உங்கிட்ட மாட்டிகிட்டு படாத பாடுபடுறாங்க..” பெரியப்பா அவரை விளாசிவிட்டார்

ஏய்யா அவன் தான் கூறு இல்லாம பேசுறான்னா நீயும் இப்படி பேசுவியா..? அவனுக்கு என்ன தெரியும் தங்கத்தோட அருமை..” தனாவை ஆறுதல் படுத்த, அப்போது தான்  வந்த  குகன், தனா கை காயத்தில் பதறி போனான்.  

என்னடா ஆச்சு..?”அவன் கை பிடிக்க

விட்றா..” தனா கையை இழுத்து கொண்டு வெளியே செல்ல

அவனை ஹாஸ்பத்திரி கூட்டிட்டு போப்பா, ஓடு..” என, குகனும் திமிறிய தனாவை இழுத்து கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்

இப்படி தான் சாரு திருமண பேச்சு அன்று ஆரம்பித்தது.  குருமூர்த்தி மகனின் கோவத்தில் அப்போதைக்கு கொஞ்சம் அடக்கி வசித்தாலும் அவரின் இயல்பு குணம் என்று ஒன்று உள்ளதே, ஐம்பது வருடங்களுக்கு  மேல் ரத்தத்திலே ஊறி, உறைந்த ஒன்று அல்லவா..? அவ்வளவு சீக்கிரம் மாறுமா என்ன..? 

அவர் மாற வேண்டும் என்று வீட்டினரும் எதிர்பார்த்தது போல தெரியவில்லை. மாறமாட்டார் என்ற உறுதி கூட காரணமாக இருக்கலாம்

அவரை பார்த்தால் என் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகும்..?” வைதேகி தான் விடாமல் சாரு திருமண பேச்சை எடுத்து சென்று கொண்டிருக்கிறார். இப்போது அதிலும் தடங்கல். அதை பேச தான் குகன் அம்மா வந்ததும்.

“அவங்களுக்கு என்ன பேசணுமாம்..?” தனா கேட்க,  

நீங்களே சொல்லுங்க அண்ணி..”  என்றார் வைதேகி

பரிமளம் சில நொடிகள் அமைதியாக இருந்தவர், “அவங்க உன்னை பத்தி கேட்கிறாங்க தனா..”  என, அவனுக்கு ஏதோ புரிவதாய்

ம்மா.. என்னன்னு கிளியரா சொல்லுங்க.. தனா பத்தி என்ன கேட்கிறாங்க..?” குகன் கேட்க

அது.. அது தாண்டா அவன் கல்யாணம் எப்படி, எந்த பொண்ணுன்னு..” பரிமளம் நிறுத்த, புரிந்தது

தன்னை கொண்டு தங்கை வாழ்வில்  இது போல பிரச்சனைகள் வந்துவிட கூடாது என்று தானே அவனும் அனுவிடம் இருந்து தள்ளி இருந்தான். என்ன செய்ய அன்று நிதானம் இழந்துவிட்டான். இப்பொழுது அதுவே தங்கை வாழ்க்கையில்  கேள்வியாக வந்து நின்றால்  என்ன பதில் சொல்ல..? 

உண்மையை சொல்ல போனால் அவனுக்கு பதில் சொல்லவும் பிடிக்கவில்லை. தனாவிற்கு தங்கையை குகனுக்கு கொடுக்க தானே இஷ்டம், வைதேகி தான் விட மாட்டேன் என்கிறாரே. அம்மாவை பார்க்க, அவரும் அவனை தான் பார்த்தார்

இது என்னம்மா புதுசா..? தனா பத்தி அவங்களுக்கு என்ன..?” குகன் தான் கோவப்பட்டான்

அப்படி ஒரேடியா சொல்ல முடியாது குகன், தனா சாருவோட அண்ணன், அவங்க  நாலையும் பார்க்க தான் செய்வாங்க..” என்றார் பரிமளம்

என்னத்தை நாலோ, நாற்பதோ, தனா யாரை கல்யாணம் பண்ணா அவங்களுக்கு  என்ன..?”