“பாருங்கப்பா.. உங்க அக்கா மக எவ்வளவு செல்வாக்கா இருக்காங்கன்னு.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் பூ மாதிரி தான் இருக்காங்க..”  என்றான் அப்பாவிடம் கூர் பார்வையாக. குருமூர்த்திக்கு மகன் சொல்வது புரிய, தனா விடாமல், 

“அப்புறம் அத்தை மாமா எங்க..?” கேட்டான். 

“அவர் கிடக்குகிறார் வீட்ல..”

“அவருக்கு சாப்பாடு..”

“ஒரு நாளைக்கு வெளியே வாங்கி திங்கட்டும்..”  என்றார் அலட்சியமாக. 

“அது சரி தான் அத்தை, ம்மா.. அப்பாக்கு சட்னி வைங்க..” என்றான். 

அவ்வளவு தான் குருமூர்த்தி எழுந்துவிட்டவர், “எனக்கு போதும்,  நீங்க சாப்பிடுங்க, எனக்கு வேலை இருக்கு..” ஓடியே விட்டார். 

சாரு, வெளியே இருந்த குகன் எல்லாம் சிரிப்பை வாய்க்குள் அடைக்க, வைதேகிக்கு எதுவும் தோன்றவில்லை. பாம்பு கொத்தாமல் இருந்தால் தான் ஆச்சரியம். சில நேரங்களில் அடக்கி வாசிக்குமே  தவிர அதன் சீறலை விடாது.  இத்தனை வருடங்களில் எவ்வளவு பட்டிருப்பார். 

பின்னாலே சென்ற தனா, “பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கேம்மா..” என்றான்

நீ என்ன இன்னைக்கு சீக்கிரமே கடைக்கு கிளம்பிட்ட..?” வைதேகி கேட்க

ஆக நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்ட..” என்றான் மகன்

சரி நீ சாப்பிட வா..” அவர் உணவு எடுக்க

நீ ஏன்மா இப்படி இருக்க..?”  தனாவிடம் அங்கலாய்ப்பே

டேய்.. நீ  வாய் அடிச்சிட்டு இருந்தா எனக்கு நேரம் ஆகுது, உங்க அத்தைக்கு மதியம் விருந்து சமைக்கணும்..” என்றார் கிட்சனுள் நடந்தபடி

ம்மா..” அவர் தோளை தொட்டு நிறுத்தியவன், “நீ எப்போ தான் என்கிட்ட மனசு விட்டு பேசுவம்மா..”  என்றான் வருத்தத்துடன்

தனா..”

ம்மா.. ப்ளீஸ், எனக்கு இதுக்கு மட்டுமாவது பதில் வேணும்உன்னை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கும்மா, உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலஎன்ன செஞ்சா நீங்க சாதாரணமா இருப்பிங்க, பேசாம நாம தனியா போயிடலாமா..?”  தனா கேட்க, அவன் கையிலே அடித்தார் வைதேகி

என்னடா பேச்சு இது..?”  என்றார் கண்டிப்புடன்

வேறென்ன செய்யட்டும் நான்..? என் அம்மா மனசு விட்டு சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே..”

இது சும்மா பேச்சு தனா, நான் சிரிக்கிறேன்..”

எது இந்த டிவி பார்த்தா, நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லம்மா, அப்பாவும், நீயும் சாதரணமா பேசி சிரிச்சு நான் பார்த்ததே இல்லை, எப்போவும் அவர் ரிங் மாஸ்டர் போலவும், நீ அந்த குரங்கு போல தான இருக்க..”   என்றான் சிரிப்பான ஆதங்கத்துடன்

டேய் உனக்கு உவமைக்கு வேற எதுவும் கிடைக்கலையா, அம்மாவை  குரங்கு சொல்லிட்ட..” என்றார் உர்ரென்ற முகத்துடன்.

“ம்மா.. குரங்கா இருந்தாலும் நீ அழகு குரங்கும்மா..”

டேய் அப்போ கூட அது சும்மான்னு சொல்ல மாட்டேங்கிற..”

ஏன் சொல்லணும்..?”  வைதேகி முகத்தில் இருந்த மென் சிரிப்பில் தனா வேண்டுமென்றே வம்பிழுத்து கொண்டிருக்க

என்ன இங்க அம்மாவும், மகனும் ஒரே சிரிப்பா இருக்கு..?”  என்று வந்தார் பேச்சி

இவங்களுக்கு மூக்குல வேர்த்திடுமே..?” தனா கடுப்பாகி போனான்

ம்ம்.. என் பசங்களும் முதல்ல என்கிட்ட இப்படி தான் இருந்தாங்க, என்ன சொல்லு  வைதேகி கல்யாணம் ஆனாலே இந்த பசங்க உடனே மாறிடுறாங்க..”  என்றார் பேச்சி மூச்சை ஏகத்துக்கும் இழுத்து விட்டு

ஆமாமா.. நானும் கண்டிப்பா மாறிடுவேன்த்தை, பொண்டாட்டி வந்தவுடன் அம்மா முந்தானை விட்டு  அவ முந்தானை புடிச்சுக்குவேன்..”  கேலியாக சொன்னவன்

அப்புறம் உங்களுக்கு வயசாகிடுச்சுத்தை, மூச்சை இப்படி பெருசா இழுக்காதீங்க, இழுத்திட போகுது..  ம்மா.. எனக்கு பசிக்குது, டிபன் வை..”   கையோடு இழுத்து கொண்டு வந்துவிட்டான்.

அவர் முகம் போன போக்கில் வைதேகிக்கு சிரிப்பு வர, மகனுடன் வெளியே வந்துவிட்டார். “குகன்..”  தனா குரல் கொடுக்க, அவனும் கை கழுவி வந்தான்

என்னப்பா ஜீவனம் எல்லாம் எப்படி போகுது..? முன்னைக்கு ஆள் ஜொலிக்கிறியே..?” குகனை கேட்டு பேச்சி வந்தார்

குகன்  முகம் கசங்கி போக, “அவன் ஜீவனத்துக்கு என்ன குறைத்தை, இருப்பத்தி நாலு மணி நேரமும் உழைக்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான், தெம்பா இருக்கான்..”  என்றான் தனா

நம்ம கடையில, மண்டில தானே தனா..”  அவர் உள்குத்தோடு பேசினார்

ம்ஹூம்.. எங்க கடை, மண்டிலத்தை..” தனா பட்டென்று சொன்னவன், “நீ ஏண்டா நிக்கிற..? உன் அத்தை வைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு கிளம்பு, நமக்கு வேலை இருக்கு..” என்றான் அதட்டலாக

குகன் முகம் தெளியாமல் அமர, வைதேகி புழுங்கிய மனதுடன் அவனுக்கு உணவு வைத்தார். ஏன் கண்கள் கூட கலங்கி  போனது. பார்த்த தனாவிற்கு எப்போதும் குகன் மீதான அம்மாவின் பாசம் ஆச்சரியம் தான்

அவரின் ஒன்று விட்ட அண்ணனின் மகன் தான்  குகன். அவர் இப்பொது இல்லை, அம்மா மட்டும் தான். இருவரும் பக்கத்து தெருவில் குடியிருக்கின்றனர். காலை இங்கு வேலைக்கு வந்துவிட்டால் இரவு தான் செல்வான், அங்கு குகனின் அம்மாவும் இன்று வரை கூலி வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார். யார் சொல்லியும் உழைப்பை விடாத பெண்மணி அவர்.

“கிளம்பலாமா..?” தனா வெளியே வர

அனுவை பார்க்க வேண்டாமா..?” என்றான் குகன்

ச்சு.. விடுடா..” என்றான் அடங்காத எரிச்சலில்.

தனா.. எனக்கு இதெல்லாம் பழகி போச்சு, நீ வா, நாம அரச மரத்துக்கிட்ட இருந்து பார்த்துட்டே போவோம், அனு வர நேரம் தான், அவளை பார்க்க தானே வந்த, வா..”  குகன் புல்லட் எடுக்க, தனா பின்னால் ஏறிக்கொண்டான்

அடுத்த சில நிமிடங்களில் அனு, அவளின் அம்மா சுஜாதாவுடன் வந்தாள். சற்று தூரத்திலே தனாவை பார்த்துவிட்ட அனுவின் முகம் மலர்ந்து போனது. தனாவும் அவளை பார்த்தான். ஆனால் அனுவிற்கு வித்தியாசம் தெரிந்தது

அவனின் மலர்ந்த, சிரித்த, ரசனை முகத்திற்கும், இதோ இப்போதுள்ள முகத்திற்கும் வித்தியாசம்  எப்படி பிடிபடாமல் போகும்..? புருவம் தூக்கி மெல்ல வர, அவளின் கேள்வி புரிந்தது

மேடம்க்கு என்னை இந்தளவு புரியுதா..?” தனாவின் எரிச்சல், கோவம் மறைந்து காதல் ஆக்கிரமித்து கொண்டது. அனு அவனை கடந்து சென்று விளக்கேற்றி திரும்ப வரும் வரை அங்கேயே இருந்தான்

இப்போதுள்ள அவன் அனுவை நிறைக்க, எப்போதும் போல பார்வையாலே காதல் பசியை ஆற்றி கொண்டனர் இருவரும்.  

“போலாமா..?” குகன் கேட்க, அனு சென்ற பாதையில் இருந்து கண்கள் அகற்றி, புல்லட்டில் ஏறினான் தனா. சிறிது தூரத்தில் அவன் போன் ஒலிக்க, பார்த்தால் குருமூர்த்தி. மகனை உடனே மண்டிக்கு வர சொன்னார்

அவர் குரலின் கோவத்தில், என்ன என்ற யோசனையுடன் மண்டி சென்றனர். அவரின் ஆபிஸ் அறையில் ஆட்கள் சிலர் இருக்க, “என்னப்பா..?” கேட்டான் தனா

தம்பி உங்க மேல இருக்கிற நம்பிக்கையில் தானே இங்க அரிசி, பருப்பு எல்லாம் எடுக்கிறோம், நீங்க இப்படி பண்ணலாமா..?” கேட்டனர் அங்கிருந்தவர்கள்

என்ன ஆச்சுண்ணா..?”   தனா புரியாமல் பார்த்தான்

எடை குறையுது, அரிசில கல்லு, அது போக கலப்பட அரிசி வேற.. இப்படி இருந்தா நாங்க எப்படி தொழில் பண்றது, நீங்க மட்டும் லாபம் பார்த்தா போதுமா, எங்களை போல கடைக்காரங்க நாமம் போட்டு போறதா..? நம்பிக்கையான ஆளுங்கன்னு தானே நீங்க கொடுக்கிற லோடை அப்படியே இறக்கிக்கிறோம், இப்படி ஏமாத்துறீங்களே, உங்களுக்கே இது அடுக்குமா..?”  ஆளாளுக்கு பேசினர்

முதல்ல எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க, ஆளாளுக்கு இப்படி பேசினா எல்லாம் நடந்திடுமா, முதல்ல தப்பு நடந்திருக்கான்னு பார்க்கணும், அப்படி நடந்திருந்தா நாங்க தானே சரி செய்ய போறோம்..”  தனா பேச

இந்தாங்க தம்பி..” என்று அவன் ஒரு மூட்டையை வைத்தனர். அதன் பிராண்ட் பேர் பார்த்தவன் அதிர்ந்து போனான். அது அன்பழகனின் அரிசி பிராண்ட்

பாருங்க.. இருபத்தஞ்சு கிலோக்கு இருப்பத்தி மூணு கிலோ தான் இருக்கு, அது போக இந்த அரிசியை பாருங்க..” கொஞ்சம் எடுத்து டேபிள் மேல் கொட்டினர்

போன மாசமே எங்களுக்கு இப்படி தான் சரக்கு வந்துச்சு, சரி ஏதோ ஒருமுறை இப்படி தவறி போறது  தான்னு விட்டுட்டோம், இந்த மாசமும்  அதுவேன்னா எப்படி தம்பி..?”  வந்தவர் பேச

இங்க பாருங்க நான் முதல்லே சொன்னது தான், இது அந்த அன்பழகன் அரிசி, நீங்க எது கேட்கிறதா இருந்தாலும் அவன்கிட்ட தான கேட்கணும், என்கிட்ட வந்து குத்துகிறதால ஒன்னும் ஆகிடாது..”   என்றார் குருமூர்த்தி

இப்படி சொன்னா எப்படிங்க, நாங்க உங்க மண்டில தான் எடுக்கிறோம், நாங்க உங்களை தான் கேட்போம், இல்லை கேட்க கூடாதுன்னா  நீங்க அவரை வர சொல்லுங்க, அவர்கிட்டே  கேட்போம்..”  என்றனர் வந்தவர்கள்

குருமூர்த்தி உடனே போன் எடுக்க, “இருங்கப்பா.. பொறுமையா பேசுவோம்..” என்றான் தனா அவசரமாக

இதுல பேச என்ன இருக்கு தம்பி, சரக்கு அவருது தானே, அவரே வரட்டும்..” என்றனர். குருமூர்த்தியும் அன்பழகன் மில்லுக்கு பேசிவிட்டார்

அன்பழகன் மேல் ஏற்கனவே குருமூர்த்திக்கு கோவம், அவனுக்கு அவன் அப்பாவை தெரிந்த வரை இந்த பிரச்சனையை வைத்து அன்பழகனை ஏடாகூடமாக பேச  தான் நினைப்பார். என்ன நடக்குமோ என்று தனாவிற்கு திகிலானது.