என்ன இருபத்தி ஆறா..?  சஞ்சய்க்கே இருபத்தி ஆறு  தான் ஆகுது..” என்றார் அவனின் அம்மா. “ஏங்க ஜாதகம் பார்த்தப்போ நீங்க இதை பார்க்கலயா..”  கணவரிடம் வேறு பாய்ந்தார்

அவர் என்ன சொல்வார், மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பதால் சீக்கிரமே ஜாதகம் எடுத்துவிட்டனர். முதல் சம்மந்தமே சித்ரா தான். தரகரும் இவர்கள் குடும்பத்தை பத்தி சொல்லியிருக்க, திருப்தியாக இருக்கவும் அதை விட்டுவிட்டார்

மனைவிக்கு அது பிடிக்கவில்லை என்பது இப்போது புரிய, சபையில் வைத்து என் சொல்வார். “நாம அப்பறம் பேசலாம்..”  என்றார் மனைவியிடம் மெல்ல

அப்பறம் என்ன பேசுறது..? ஒரே வயசுலயா கல்யாணம் செய்ய முடியும்..” அவர் முணுமுணுத்தது எல்லோருக்கும் கேட்க, சித்ராவின் முகத்தில் தேங்கியிருந்த மலர்வு மறைந்து இறுகி போனது.  

சரி நாங்க கிளம்புறோம்..” எழுந்துவிட்டார். சஞ்சய் கிளம்பும் முன் சித்ராவை பார்த்தே சென்றான். அந்த பார்வை அனுவிற்கு ஏதோ நம்பிக்கையை கொடுத்தது

ப்பா.. ப்ளீஸ், இனியும் என்னால இப்படி வந்து நிற்க முடியாது, என்னை விட்டுடுங்க..” சித்ரா கண்கள் கலங்க சொன்னவள், வேகமாக ரூம் சென்றுவிட்டாள்

அனு அக்காவோட போ..” அன்பழகன் சொல்ல, சரிப்பா.. என்று அவளும் அக்காவின் பின் சென்றாள்.  

அன்பழகன்.. சுஜாதா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். சித்ரா, ஆதர்ஷ், கடைக்குட்டி அனு. இதில் சித்ரா பி எட் முடித்துவிட்டு, தனியார் பள்ளியில் டீச்சராக இருக்க, ஆதர்ஷ் ME படித்து கொண்டிருக்கிறான். அன்பழகன்  அரிசி மில் ஒன்றை ரத்னகிரியில் நடத்தி கொண்டிருக்கிறார்.

மூத்த மகளின் திருமணம் அன்பழகனை மனதளவில் மிகவும் பாதித்தது. ஆசையாக பெற்று வளர்த்த மகளை அந்த வயதில் மகிழ்வுடன் திருமணம் செய்து கொடுக்க முடியவில்லையே.. அப்பாவாக தளர்ந்து போய் அமர்ந்தார்செவ்வாய் தோஷம் அவரை மிகவும் படுத்தி எடுத்தது

இந்த சம்மந்தமாவது முடிந்துவிடாதா என்ற ஆசையும், வேண்டுதலும் ஒவ்வொரு முறையும். இப்போது மகளின் வயதும்  பெரிதாக பட, இனி இது வேறா என்று ஓய்ந்து போனார்

நல்லதே நடக்கும்ங்க.. நீங்க முதல்ல தண்ணீர் குடிங்க..” சுஜாதா கணவரை தேற்ற, அங்கு அனு அக்காவை தேற்றி கொண்டிருந்தாள். எப்போதும் சித்ரா இப்படி கண்கள் கலங்கியதில்லை. இந்த முறை தான் எனும் போது அதற்கு காரணம் சஞ்சய் என புரிந்தது. அவளுக்கு மட்டுமில்லை எல்லோருக்குமே அவன் அணுகுமுறை, பேச்சு, தோற்றம் எல்லாம் பிடித்ததே.

அன்றைய இரவு ஒருவித கனத்துடன், அமைதியாக நகர, மறுநாள் எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க கிளம்பி சென்றனர். அனு பூமிகாவை கூப்பிட அவளின் வீட்டிற்கு போக,  “என்ன மேடம் மூஞ்சி டல்லடிக்குது..?” அவள் கேட்டபடி ஏறினாள்

ம்ப்ச்..” அனு அமைதியாக வர

அம்மா சொன்னாங்க, அக்காவை பொண்ணு பார்க்க வரதா, அதுவா..” பூமிகா கேட்டாள்

“ஆமா..” அனு தலையாட்ட

நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியா..?” என்றாள் பூமிகா தயக்கத்துடன். சொல்லுடி.. என

இல்லை நேத்து அம்மா சொல்லிட்டிருந்தாங்க, செவ்வாய், வெள்ளி போல, இல்லை தினமும் கூட இராகு காலத்துல துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைல விளக்கு ஏத்தினா சீக்கிரம் கல்யாணம் கூடி வருமாம்..” என்றாள்

உண்மையாவா..”  அனு கொஞ்சம் ஆவலாக கேட்டாள்

ஆமா அனு.. நம்ம கலாக்காக்கு இப்படி தான் செஞ்சாங்களாம், மூணு மாசத்துல கல்யாணமே முடிஞ்சிட்டு..” பூமிகா சொல்லி கொண்டு வர, அனு முகம் தீவிர சிந்தனையில்

அவங்களே செய்யணுமா..?” ஏனெனில் சித்ரா செய்வாள் என்ற நம்பிக்கை இல்லை

அவங்க செஞ்சா நல்லது, இல்லைனாலும் அவங்க பேர் சொல்லி வீட்ல  யார் வேணும்னாலும் செய்யலாம்..”  பூமிகா சொல்ல, அனு முகம் தெளிந்தது

அப்போ ஓகே, நானே செய்றேன், அம்மாக்கு கால் வலி, அவங்களால நம்ம அம்மன் கோவிலுக்கு தினமும்  நடந்து வர முடியாது..” என்றாள் உடனே முடிவெடுத்தவளாக

அனு.. அந்த நேரம் மாறும், நமக்கு காலேஜ் இருக்கு..” பூமிகா சொல்ல

அதான் இந்த மாசத்துல பைனல் எக்ஸாம் வருது இல்லை, முடிச்சிட்டு  செய்யலாம்..” என்றவள், அப்போது தான் டக்கென ஞாபகம் வந்தவளாக தலையை வேகமாக திருப்பினாள். தனா அவன் கடை வாசலில் நிற்பது லேசாக தெரிந்தது

என்ன அக்கா பேச்சுல   தனா அண்ணாவை பார்க்க மறந்துட்ட போல..”  பூமிகா கிண்டல் செய்ய, அனுவோ அடுத்த திருப்பத்தில் வண்டியை திருப்பிவிட்டாள்

அடியேய் என்னடி செய்ற..” பூமிகா கடிய, அனு தனா கடை பக்கமே மெல்ல செல்ல, தனா அங்கு தான் நின்றிருந்தான். அனுவை  கண்ணால் முறைத்தபடி

உன்னை  பார்க்க, நான் ஓடி வந்தா நீ  என்பக்கம் திரும்பாம கூட போற..”  அவன் கோவமுகம் காட்டி நின்றான். இவள் கண்களை சுருக்கி அவனை பார்த்து கொண்டே, வண்டி திருப்பி காலேஜ் சென்றாள்

எத்தனை நாளைக்கு இந்த கண்களாலே கைது செய்..” பூமிகா கேலியாக சொல்ல

அது உங்க அண்ணாவை தான் நீ கேட்கணும்..” என்றாள் அனு நொடிப்பாக

எனக்கு தெரிஞ்சு சாருலதாக்கு, உன் அக்காக்கு எல்லாம் கல்யாணம் முடியாம தனா அண்ணா உன்கிட்ட வந்து பேச வாய்ப்பு இல்லை..” என்றாள் பூமிகா

அதான் தெரியுமே, அவ்வளவு பொறுப்பின் பருப்பு அவர்..” அனு அவனிடம் பேச முடியாத ஏக்கத்தில் நொந்து கொண்டாள்.

அவள் காலேஜ் முதல் வருடம் படிக்கும் போது தனாவின் பார்வை அவள் மேல் விழுக, அனுவிற்கு முதலில் என்னடா இது என்று தான் இருந்தது. ஆனால் மாதங்கள் செல்ல, அவன் பார்வை இவளுக்கும் பிடித்து போக, மூன்று வருடமாக கண்களாலே தொடர்ந்து  கொண்டிருக்கின்றனர்

அனுவும் தன்னிடம் வந்து பேசுவான், காதல் சொல்வான் என்றெல்லாம் பல தருணங்களில் எதிர்பார்த்து ஏமாந்து இப்போது எதிர்பார்ப்பதையே விட்டுவிட்டாள். “உனக்கு எப்போ என்கிட்ட பேச தோணுதோ அப்போவாவே பேசு  ராசா..”  மனநிலைக்கு வந்துவிட்டாள்

அவனவன் எப்படி எப்படியோ  காதலிக்கிறான், எனக்கும் வந்து வாச்சிருக்கு பாரு..”  அடிக்கடி அனு வாயில் தனா இப்படி அறைப்படுவதும் உண்டு. சில நேரங்களில் அந்த கோவத்தை அனு வெளிப்படையாக காட்டியும் இருக்கிறாள் நேற்று கப் உடைத்தது போல. அப்போதெல்லாம் எதாவது பேசி அவளின் கோவத்தை நொடியில் இறங்கிவிடுவான்

பேச்சு மட்டும் சர்க்கரை மாதிரி இனிக்க இனிக்க தான்.. ஊர்ல இருக்க பொண்ணுக்கு எல்லாம் கீசெயின் தூக்கி கொடுக்க தெரியுது, எனக்கு ஒத்தை ரூபாய் சாக்லேட் இல்லை, மளிகை மைனருக்கு இருக்கு ஒரு நாளைக்கு..”  மனதில் அவனை  தாளித்தபடியே காலேஜ் சென்றாள்.

அடுத்து வந்த நாட்கள் வருட கடைசி எக்ஸாம் என்பதால், அனு, சாருலதா, பூமிகா, சித்ரா, என்று எல்லோரும் பிசியாகி போனர்

பார்த்து பதமா படிங்க.. அநியாயத்துக்கு படிக்கிறீங்க..” தனா தங்கையிடம் கடுப்படித்தான். அவனுக்கு அனுவை பார்க்க முடியாத ஏக்கம். எக்ஸாம் நாட்கள் மட்டும் தான் அவளை பார்க்க முடிகிறது, மற்ற நாட்கள் விடுமுறை என்பதால் பார்க்க முடிவதில்லை

அவளை பார்க்க வீட்டு பக்கமும் போக முடியாது. இருவரும் ஒரே என்றாலும் இவன் வீடு இந்த கடை கோடி என்றால் அனு வீடு அந்த கடை கோடி. அடிக்கடி சென்றால் ஏன் என்ற கேள்வி வரும். அப்படியே போனாலும் பார்க்க முடிந்தால் தான். அதனாலே ஏதாவது வேலையாக செல்வது மட்டும் தான்.

அவளை பார்த்து மூன்று நாட்கள் ஆகியிருக்க, “இப்போவாவே இப்படின்னா இன்னும் சம்மர் லீவ் எல்லாம் என்ன பண்ணுவ..?” குகன் அவனை கிண்டல் செய்யும் அளவு சுற்றி கொண்டிருந்தான்

ஒருவழியாக எக்ஸாமும் முடிய, கடைசி நாளில் அனு அவன் கடைக்கு சென்றாள். அடிக்கடி சென்றால் இக்கட்டு என்பதால் வாரத்தில் ஒன்றிரண்டு  நாட்கள் மட்டுமே அவன் கடைக்கு செல்வாள்

மேடம்க்கு இப்போதான் வழி தெரிஞ்சது போல..”  தனா அவள் உள்ளே வரும் போதே முணுமுணுத்தான்

என்னை மட்டும் சொல்ற ஆளை பாரு, என்னமோ எனக்காக அலைஞ்சு திரிஞ்சது போல..” அனு உதட்டை சுழித்து உள்ளே சென்றாள்

இதுக்கு மேலையும் பொறுக்க முடியாதுடா தனா அவள் பின்னே கடை சுற்றி வருவது போல செல்ல, பூமிகாவும், அனுவும் அவர்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டிருந்தனர். இவன் அவர்கள் இருக்கும் இடம் வரவும், பார்த்த  அனுவிற்கு ஆச்சரியம் தான். இப்படி எல்லாம் வரமாட்டாரே..? 

அருகில் வந்த அவனின் பெர்பியூம் வாசத்தை உள்ளிழுத்தவாறே, நகர்ந்து வழி விட, தனாவோ அவளையே பார்த்தபடி வந்தவன், வேண்டும் என்றே அவளை தோளோடு தோள் உரசி  சென்றான்

அவனின் திடீர் ஸ்பரிசத்தில் அனுவிற்கு படபடவென இதயம் அடித்து கொள்ள, திணறி போனவள், திரும்பி அவனை முறைத்தாள். அவனோ பின்னால் விரல் நீட்டினான். அனு திரும்பி பார்க்க, அங்கிருந்த கண்ணாடியில் அவள் சிவந்த முகம். தனா கண்ணாடி வழியே உதட்டை மடித்து பார்க்க, அனு முகம் திருப்பி கொண்டாள்

என்னடி நடக்குது இங்க..?”  பூமிகா இருவரையும் பார்த்து வாய் பிளக்க, தனா தலை கோதி கொண்டு சென்றுவிட்டான்

இப்போதான் உன் நொண்ணன் கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன் போல..” அனு சூடாகும் உள்ளங்கையை தேய்த்து விட்டு சொன்னாள்

இவ்வளவு தெரிய வேண்டாம், ஒரு சின்ன புள்ள மனசை பஞ்சராகிட்டீங்களே..”  பூமிகா அவளை ஓட்டியபடி இருக்க, அனு எடுத்த பொருட்களுடன் பில் போட சென்றாள்

மதிய நேரம் என்பதால் ஆட்கள் பெரிதாக இல்லை. தனா டேபிளில் சாய்ந்து  இவர்களை பார்த்தபடி இருக்க, குகன் பில் போட்டு கொடுத்தவன்,  எல்லாம் கவரில் போட்டு கொடுக்க, தனா அதில் குட்டி கிப்ட் பாக்ஸை வைத்தான். 

அனு பார்த்து கண்கள் விரிக்க, தனா சட்டென்று ஒற்றை கண் அடித்துவிட்டான். அனு வாய் மெலிதாக திறக்க, தனாவிற்கோ நிலைகொள்ளவில்லை. அப்படியே திறந்த வையை மூடிட்டா என்ன..? தீவிர பார்வை பார்த்தான். 

“ஆத்தி இது வேற பார்வையால்ல இருக்கு..” அனு வேகமாக பையை வாங்கி கொண்டு ஓடிவிட்டாள். தனாவிற்கு அவளை நெருங்க முடியாத ஏமாற்றம் இருந்தாலும், அவள் ஓட்டத்தில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டான். 

“ஒரு நாள் இல்லை ஒரு நாள் மூட தான் போறேன் போடி..” ஸ்கூட்டி எடுத்து கிளம்பியவளை  குறும்பாக பார்த்து வழியனுப்பி வைத்தான்.