வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 11

அடுத்த நாள் காலை யாருக்கு சாதகமாக இருந்தோ இல்லையோ, ஆனால் நேத்ராவிற்க்கு, அன்று காலை உடற்பயிற்சி முடிந்து, காலை செய்திதாளை பார்த்தவள் அதில் இருந்த செய்தியை நம்பமுடியாமல் பார்வையை அதில் பதித்து இருந்தால்.

அதில் இருந்த தலைப்பு செய்தி – பிரபல தொழில் அதிபர் தயாளன் அவரின் மகள் நேத்ரா  பிரபல கோச்சிங் சென்டர் மேல் தெடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

தன் மகள் தைரியத்தையும், நேர்மையும் தான் துனை நிற்பதில் தான் பெருமை கொள்கிறேன், என்று அவரின் பேட்டியுடன் பிரசுரமாகி இருந்து.

அந்த செய்தியை தான் நேத்ரா வாசித்துக்கொண்ட இருந்தாள், அவளை பெறுத்தவரை இது அவள் வாழ்க்கையில் நம்பமுடியாத அதிசயம்.

அதே நேரம் அந்த செய்தியை பார்த்துக்கொண்டு இருந்த டி ஜி பி இதன் பின்னனி என்னவாக இருக்கும் என்று சிந்தித்து கொண்டு இருந்தார்.

அவருக்கு தயாளனை 20 வருடமாக தெரியும், அவருக்கான ஆதாயம் இல்லாமல் அவர் எந்த விஷயத்தையும் செய்யமாட்டார்.

அதன் பின் தொலை பேசியில் ஒர் இரு அழைப்பு எடுத்தவர், இளமாறனை அழைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து முடித்தார்.

அவர் பேசி முடித்தும், இளா அவர் இடம் ஸார் நான்  ஒரு கேள்வி கேக்கலாமா?

ம்ம் கேளு இளா

இந்த கேஸ்ல ஆரபத்துல இருந்தே நீங்க ரெம்ப கவல படரமாதிரி இருக்கு, குற்றவாளிகள் பத்தி நிறைய ஆதாரம் இருக்கு. அதுவும் அவங்கள நேரடிய குற்றவாளியா நிருபிக்கறமாதிரி.

இன்னிக்கு காலை பேபர்ல நேத்ரா ஒட அப்பா அவளுக்கு இப்படி வெளிபடையா தன்னோட ஆதரவ தெரிவிச்சு இருக்கார்.

இது சம்பந்த பட்ட பசங்க பெரிய இடம் அப்படினாலும், இன்னிக்கு இருக்க சூழ்நிலையில் கண்டிப்பா அவங்களால எதும் செய்யமுடியாது.

எல்லாமே அவங்களுக்கு எதிரா இருக்கு, நம்ம குற்றவாளிகள நீதிமன்றத்துல    ஆஜர் பன்ன உடனே இருக்க சாட்சியே போதும் அவங்களுக்கு தன்டனை வாங்கி தரதுக்கு.

அப்படி இருக்கப ஏன் இவ்வளவு டென்ஷன். இதுல என்ன வேற இங்க வரவச்சு இருக்கிங்க.

நீ சென்ன எல்லாம் சரிதான் இளா!!

ஆனா இது எல்லாம் இந்த சூழ்நிலை நமக்கு சாதகமா இருக்க வரைக்கும் தான்.

இன்னும் இந்த வழக்குல நேரடியா பாதிக்கபட்டவங்க யாரும் புகார் கொடுக்கல.

மேல்லோட்டமா பாத்த இதுல நீ சென்னது எல்லாம் சரிதான்.

ஆனா நேத்ரா விஷயத்துல நம்ம நிச்சயமா ரிஸ் எடுக்கமுடியாது, ஏன்னா நேத்ரா யார் தெரியுமா?

என்று அவர்களுக்குள் உரையாடல் நின்டது,……………….

பின் இப்போது புரியுதா நான் ஏன் இவ்வளவு இதுல வேகமா இருக்குறேன்னு.

எவ்வளவு சீக்கரம் இந்த கேஸ் முடியுதே அவ்வளவு நல்லது, என்ன ஆனாலும் நேத்ராவ மட்டும் விட்டுராத இளா என்றார்.

ஒகே ஸார் இன்னிக்கு ஆபிஸ்சில் பார்கலாம், என்றவன் இனைப்பை துண்டிதான்.

………………………..

அதே நேரம் இதே கேள்வியை தயாளன் மனைவி அவரிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள், இது எல்லாம் நமக்கு தேவையா தயா….

இந்த பெண்ணு பன்னி வச்சு இருக்கற வேலைக்கு, என்னால லேடிஸ் கிளப்புல பதில் சொல்ல முடியல, இதுல நீங்க வேற இப்படி ஒரு ஸ்டேட்மன்டு கொடுத்து இருக்கிங்க.

இதுனால என்ன நடக்கும் தெரியும்மா??

மனைவி பேசியதை கேட்டவர் மென் நகையுடன், என்ன நடக்கும்?

……………………….

செய்திதாள் வாசித்துக்கொண்டு இருந்த ராகவன் அப்பா நாராயணன், அதை தூக்கி எரிந்தார்.

அவரின் கோபம் கண்டு அனைவரும் அருகில் செல்ல அச்சப்பட……

தன் கைவிரல்களை மடக்கி தன்னை நிலை படுத்த முயன்றார். இத்தனை வருடமாக எது நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதுவே இப்போது நடந்துக்கொண்டு இருந்து.

கடந்த 15 வருடமாக அவர் வகித்துவரும் பதவி, தொழிற்சங்க தலைவர் பதவி. இந்த பதவி இதற்கு முன்னால் தாயாளனின் தந்தை வசம் இருந்து.

அதனால் தொழிலில் அவர்கள் ஆதிக்கம் அதிகம், அவர்களுக்கு எதிராக யாரும் எதையும் செய்ய முடியாது. ஒவ்வொரு  முறையும் தேர்தல் நடந்தாலும், நாராயணானல்  அந்த பதவியை அடைய முடியவில்லை.

இந்த நிலையில் தீடீர் என்று அவர்கள் குடுபத்தில் ஏற்பட்ட சொத்துதகராறு மற்றும் தயாளன் தந்தை மரணத்தால் எல்லோரும் குடும்ப பிரச்சனையில் இருந்த நேரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டவர், அந்த பதவியை கைபற்றினார்.

தயாளன் அதில் இருந்து மீண்டு வருவதற்க்குள், எல்லாம் நாராயணன் வசம் சென்று இருந்து.

ஆனால் அதன் பின் இன்று வரை 15 வருடமாக அதை அவரால் கைபற்ற முடியவில்லை.

ஆனால் என்று ராகவ் பிரச்சனை வெளிவந்தோ, அன்றே அதை தனக்கு சாதகமாக பயபடுத்திக்கொண்டார் தயாளன். அதுவும் அதில் நேத்ரா தெடர்பு இருப்பது அவருக்கு சாதகமாக போயிற்று.

மீண்டும் அவர் வசம் தலைவர் பதவி அதை நினைத்த படி மனைவியிடம் மென்நகையுடன் அனைத்தையும் விளக்கினார்.

ஆனால் விஷயம் கேள்வி பட்டதில் இருந்து நாராயணன் கொதித்து இருந்தார்.

……………………….

எல்லார் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்க இங்கே இளா மூவரையும் கைது செய்ய தேவையான வேளையில் இறங்கி இருந்தான்.

கமிஷ்னர் அலுவலகம் வந்தவன் கைதுக்கான உத்தரவை வாங்கியவன், அடுத்து செயல் பட்டது எல்லாம் மின்னல் வேகம் தான்.

மாலைக்குள் மூவரையும் கைது செய்தவன், அவர்களுக்கு எதிர்ரான ஆதாரத்துடன் மறுநாள் நீதிமன்றம் செல்ல தாயார் ஆனான்.

பத்திரிகைள் மற்றும் டிவி சேனல்கள் அனைத்தும் இதை பற்றிய செய்தியே பிரதானமாக இருந்து.

கைது ஆனவர்கள் மேல் நிறைய அச்சுருத்தல்கள் இருந்தால் அவருகளும் அவர்களின் குடும்பங்களும் போலிஸ் கட்டுபாட்டில் இருந்து.

இங்கு நடக்கும் எதையும் அறியாத அதியன் அங்கு தன் வேலையில் முழுகியிருந்தான்.

அடுத்தநாள் காலை அனைத்துக்குற்றவாளிகளும், கோர்ட்டில் ஒப்படைக்க பட்டனார், அங்கு அவர்களுக்கு ஜாமீன் மறுக்கபட்டது. மீண்டும் சிறை சொன்றனர்.

இவரகள் மூவர் மட்டும் அல்லாது இன்னும் இதில் சம்ந்தபட்ட எல்லோரையும் கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதனால் ராகவ் மற்றும் ரவியின் தரப்பினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

யாரை அனுகினாலும் எங்கே இதில் தன்னை சம்பந்த படுத்திவிடுவார்களே என்று அனைவரும் ஒதுங்கினர்.

அது மட்டும் அல்லாது இளா அதியன் பற்றியும் இந்த வழக்கு சம்பத்தமாக விசாரித்தான்.

அவன் விசாரித்தவரை, இதுவரை கிடைத்த சாட்சியங்களின் படியும் அவன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று தெளிவாக தெரிந்த பின் தான் அவனை சந்தேக வளையத்தில் இருந்து விடுவித்தான்.

அதனால் தான் அவன் ஊரில் இல்லை என்றாலும் விரைவில் தாய்நாடு திரும்பி விடுவான் என்பதால், அவனை தெடர்புக்கொள்ள முயற்சிக்கவில்லை.

காவல் துறையில் எதாவது செய்யலாம், என்று நினைத்தால் இளாவை மீறி ஏதும் முடியவில்லை.      எல்லாம் அவன் நேரடி கட்டுபாட்டில் இருந்து.

கேஸ் அடுத்து அடுத்து கட்டத்தை நேக்கி வேகமாக முன்னேறியது. நிறைய பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள், பிஸ்னஸ் மேன்கள், பிரமுகர்கள் என நிறைய பேர் இதில் சம்பந்த பட்டு இருபதாக தகவல் வெளியான வண்ணம் இருந்து.

நேத்ராவிற்கு மருத்துவ கவுன்சில் முடிந்து மதுரை மருத்தவ கல்லூரியில் இடம் கிடைத்து.

அவளும் கல்லூரி சேர்க்கை மற்றும் அதற்கான ஏற்பாடுகள் என அதில் கவனம் செலுத்தினால். அடிக்கடி இளா மற்றும் சந்திர சேகர் அவள் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துக்கொண்டனர்.

அதியனும் மூன்று வாரங்களுக்கு மேலாக தன்னை கசக்கி பிழிந்த வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்க்கு தொடர்பு கொள்ளமுயன்றான் முடியவில்லை.

இங்கு வந்த இரண்டு மாத்தில் அவன் பேசிய 2 முறையே என்பதால் இன்னும்1 வாரத்தில் ஊருக்கு செல்ல இருக்கும் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டி இருந்து.

அதனால் அவன் அதை பெரிது படுத்தவில்லை.

தன் வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு, ஊருக்கு சொல்வதற்க்கு ஷாப்பிங் செய்ய கிளம்பி இருந்தான்.

தன் மேற்க்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் தன் வீட்டின்ற்க்கு எல்லாம் பார்த்து பார்த்து நிறை பொருட்கள் வாங்கி இருந்தான்.

நாளை இரவு அவனுக்கு விமானம், என்பதால் தன் பேக்கீங் வேலைகளை முடித்துவிட்டு, அங்கு அருகில் இருந்த இடங்களை சுற்றி பார்க்க ஆரம்பித்து இருந்தான்.

…………………..

இங்கு வழக்கு சூடுபிடித்த அதே நேரம் எதை செய்து மகனை காபாற்றுவது என்று விழி பிதுங்கினர் ரவி மற்றும் ராகவ் வீட்டினர்.

எதையும் அவர்களால் நேரடியாகவோ மறை முகமாகவே செய்யமுடியவில்லை. அவ்வளவு ஏன் அவர்கள் சார்பாக அவர்களுக்கு வக்கீல் ஏற்பாடு செய்வதே பெரும் வேலையாக இருந்து.

பல முன்னனி வழக்குரைஞர்கள்  இவர்கள் சார்பாக வாதிட முன்வரவில்லை. அப்படி வந்தவர்கள் சிலரும் இந்த வழக்கில் தன்டனை நிச்சயம். வேண்டுமானால் அதை குறைக்கலாம் என்றனர்.

எல்லாம் சரியாக சென்றுக்கொண்டு இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கத திருப்பங்களும் ஏற்படதான் செய்த்து.

அந்த திருப்பங்கள் பலரின் வாழ்க்கையை திசை மாற்றியது மட்டும் அல்லாமல்.

குற்றவாளிகள் தப்பிக்கும் வழியாகவும் அமைந்து தான் காலத்தின் கொடுமை.

……………………..

அதியன் தன் பயனத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்த போது, அவனை வந்து அடைந்த இரு செய்திகளும் அவனை நிலை குலைய செய்த்து.

அந்த செய்தி அறிந்து அவன் எடுத்த முடிவு்கள் அதன் பின் எல்லாவற்றையும் மாற்றிவிட்டன.

அந்த செய்தி, அவன் அண்ணன் வளவன் சிறைசாலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து தற்கொலை, அதை கேள்விப்பட்ட அவன் தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடம்.!!!!!!

ஆம் அன்றைய தினசரியின் தலைப்பு செய்தி, வளவன் தற்கொலை செய்துக்கொண்டதும், அதற்க்கு முன் அவன் அளித்த வாக்குமூலமும் தான்!!!!

பிரபல கோச்சிங் சென்டர் உரிமையாளர்  மின்சாரம் ஓயரில் கைவைத்து சிறையில் தற்கொலை.

 தந்தை மற்றும் தாய் ஆபத்தான கட்டத்தில் மருத்துவ மனையில் அனுமதி. குடும்பத்துடன் தற்க்கொலை முயற்ச்சியா?? என்ற ரிதியில் அந்த செய்தி இருந்து.

அந்த செய்தியை பார்த்த அதியன் அடுத்து என்ன என்று ஸந்தம்பித்து இருந்தான்…………………………..

இந்த செய்தியை படித்துக்கொண்டு இருந்த மற்றோருவரும் அதே நிலையில் தான் இருந்தாள்…………………………….

     நிலவு தேயும்…………