நிச்சயதார்த்தம் சாரு வீட்டின் சார்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது., வந்தவர்கள் பாராட்டும் வண்ணம் உணவு வகைகளும்., மேடை அலங்காரமும் இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தனர்., ஒரே பெண்ணின் திருமணம் அவர்கள் எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை எல்லாம் செய்தனர்.,
மித்ரன் வீட்டினர் அசந்துபோகும் அளவில் தான் இருந்தது., அவர்களின் நண்பர்களின் குடும்பத்தினரும் அதை வாய்விட்டு சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர். இதில் பிடிக்காத ஒரே ஆள்., இது எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து சென்றவர்., என்றால் அது மித்ரன் அம்மா மட்டும் தான்., இதனை கண்டு கொண்ட கந்தசாமியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.., இதற்காக எல்லாம் பார்க்க முடியாது என்ற நினைப்பில் தான் இருந்தார்கள்.,
இவர்கள் எடுத்து வந்திருந்த நிச்சயதார்த்தத்த புடவையில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்., தடபுடலாக விசேஷ விருந்து முடிந்து அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப தொடங்கினர்.,
அப்போது மித்திரன் வந்து “சாரு வா., ஒரே ஒரு செல்ஃபி எடுக்கலாமா” என்று கேட்டுவிட்டு.., அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து போட்டோ எடுத்துக் கொண்டான்., அது அத்தனை அழகாக இருந்தது., இருவரும் செல்பி எடுக்கும் போது போனில் தெரியும் அவர்களின் துணையின் உருவத்தை பார்த்தார்களே ஒழிய., அங்கு உள்ள கேமராவை பார்க்கவில்லை., அதை அழகாக பதிவு செய்தது மித்திரனின் செல்போன்., “உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லி அவள் தோளில் தன் விரல்களால் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான்.
அவர்கள் திரும்பி வீட்டிற்கு செல்லும் வழியில் மித்ரனின் தாய்தான் வேண்டுமென்றே மித்ரனிடம் “கல்யாணத்துக்கு முன்னாடி தோளில் கைப்போட்டு போட்டோ எடுத்துவிட்டு இருக்கியே.., பாக்கறவங்க என்ன நினைப்பாங்க மித்ரா”., என்று கேட்டார்.
மித்ரன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்., மித்ரனின் அக்கா “அம்மா தேவையில்லாமல் பேசாதீர்கள்., இப்போதெல்லாம் என்னவெல்லாம் பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியுமா., இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.., கல்யாணத்துக்கு ஜஸ்ட் ஒரு போட்டோ தான எடுத்தான்.., அதில் என்ன தப்பு இருக்கு, இத்தனை நாள் ல எனக்கு தெரிஞ்சி இவங்க ரெண்டு பேரும் போன்ல கூட ஒழுங்கா பேசல.., கல்யாணம் பேசி இருபது நாளைக்கு மேல ஆகுது., அவனுக்கு இருந்த அப்பாயின்ட்மெண்ட்ஸ் எல்லாம் மாத்தி.., ஆபரேஷன் டேட்ஸ் எல்லாம் மாத்தி.., ன்னு அதுல பிசியா இருந்தான். அந்த பொண்ணு ஒர்க்கு ரொம்ப பிசியா இருந்துச்சு.., எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் போன் கூட ஒழுங்கா பேசிக்கொண்டது இல்லை.., ஏன் இப்படிலாம் பேசுறீங்க”., என்று சத்தம் போட்டு பேசினாள்.
கந்தசாமியும் அவர் மனைவியிடம் “வரவர நீ சரியில்ல பாத்துக்கோ., இப்படிலாம் பேசாத., இது என்ன பழக்கம்” என்று சொன்னார்.
மித்ரன் தான் “விடுங்கப்பா” என்று சொல்லி அத்தோடு பேச்சை நிறுத்தினான்..
அங்கு அவர்களும் மண்டபத்தில் இருந்து கிளம்ப துவங்கினர்., ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தவர்கள்., தொழில் முறையில் அறிந்தவர், தெரிந்தவர் என எல்லாரும் புகழும் படியாக தான் நிச்சயதார்த்தம் இருந்தது., சாருவின் தாய் வழி., தந்தை வழி., சொந்தங்கள் நண்பர்கள் என்று அனைவருமே மனதார வாழ்த்தி விட்டு சென்றனர்.
நல்ல பெரிய மண்டபமாக எடுத்திருந்தார் சிவசங்கர். நிச்சயதார்த்தம் மிகவும் தடபுடலாக நடந்தது என்று அனைவருமே சொன்னார்கள். சாருவின் தம்பியை தான் கையில் பிடிக்க முடியவில்லை., அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்தான்., சாருவிடம் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும்.., இன்று அவள் இன்னொரு வீட்டிற்கு போக போகிறாள்., அதுமட்டுமல்லாமல், அவள் இந்த திருமணத்திற்கு சம்மதித்ததும் ஒரு காரணம்..,
டாக்டர் என்றாலே வெறுத்தவள் இன்று டாக்டர் மணமகனுக்கு சம்மதித்தது எல்லோருக்கும் சந்தோஷமாகவே உணர்ந்தனர்., அதே சந்தோஷத்தோட நிச்சயதார்த்தமும் மிக சிறப்பாக நடைபெற்றது.,
வீட்டிற்கு வந்தவுடன் உடை மாற்றிவிட்டு செல்போனில் அவன் அனுப்பிய புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்., நிச்சயதார்த்தத்தின் போதும் நலங்கு வைக்கும் போதும்., அதன் பிறகு அவன் அருகில் இருக்கும் போதும் எடுத்த சில புகைப்படங்களும்., கிளம்பும் போது அவன் அவளைத் தோளோடு சேர்த்து வைத்து எடுத்த புகைப்படமும் அவளுக்கு அனுப்பியிருந்தான்.
பார்த்தவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தாள். ஏற்கனவே நிச்சயதார்த்தத்தின் போதே அவள் உணர்ந்து கொண்டது மித்ரனின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் அப்படி ஒன்றும் இஷ்டம் இல்லை என்பதே..
பெங்களூரில் இருந்த இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருக்கும் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை., அவ்வப்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதோடு சரி., ஒரே ஒருநாள் மட்டும் மித்திரன் போனில் அழைத்திருந்தான்., இரவு பத்து மணிக்கு மேலே அப்போது தான் “ஏய் எப்படி இருக்க” என்றான்.
“நல்லா இருக்கேன்., நீங்க” என்றாள்.
“நல்லா இருக்கேன் டா.., டைட் வொர்க் அதனால தான் கூப்பிடல., தப்பா எடுத்துக்காத”.., என்று சொன்னவன் “டக்குனு மேரேஜ் உடனே முடிவானதால இதுவரைக்கு டேட் பிக்ஸ் பண்ணி இருந்த அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் மாத்த வேண்டியது ஆகிருச்சு., அதுமட்டுமில்லாம பிக்ஸ் பண்ணி இருந்த ஆபரேஷன்ஸ் எல்லாத்தையும் டேட் மாற்ற வேண்டியதாகிருச்சு., நிச்சயத்திற்கு ஃப்ரீ பண்ணிக்கணும்., மேரேஜ் அப்புறம் ஒரு ரெண்டு நாள்., முன்னால் ஒரு ஃப்ரீ பண்ணிக்கணும்.., அதுக்காக தான் அப்பாயின்ட்மெண்ட்ஸ் எல்லாம் மாத்தி போட்டு சரி பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு “சில கேள்வி கேட்கணும்., கேட்கட்டுமா”., என்று கேட்டான்.
இவளும் ஏதோ கேட்க போகிறான் என்ற நினைப்போடு “கேளுங்க” என்று சொன்னாள்.,
அவன் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.., அவள் ஒருவேளை லைனில் இல்லையோ என்று போன் கட்டாகி விட்டதா என்று ஒரு முறைக்கு இருமுறை எடுத்து பார்த்துக் கொண்டவன். “சாரு என்னாச்சு” என்றான்.,
அவள் “இல்ல நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க” என்றாள்.
“ஏய்., நான் வேற எதுவும் கேட்கலையே சொல்லு” என்று கேட்டான்.
அவள் “ஐயோ நீங்க கைனக்காலஜிஸ்ட் மாதிரி கேட்குறீங்க” என்றாள்.
அவன் சிரித்தபடி “ஜஸ்ட் ரெகுளர் ஆ இல்லையா அத மட்டும் சொல்லு., அப்புறம் டேட் சொல்லு”., என்று கேட்டான்.
அவள் திணறி திணறி அவன் கேட்டவைகளுக்கு பதில் சொன்னாள்., அவன் சிரித்தபடி “இதெல்லாம் என்கிட்ட சொல்லுறது தப்பு ஒன்னும் இல்ல.., நான் இத கேட்டது வந்து ரெண்டே ரெண்டு விஷயத்துக்காக மட்டும் தான்.., ஒன்னு ஹனிமூனுக்கு டிக்கெட் போடணும்.., டேட் தெரிஞ்சாதான் டிக்கெட் போட முடியும்.., இரண்டாவது எனக்கு நம்மளோட பஸ்ட் வெட்டிங் டே க்கு.., என் கையில பேபி வேணும் அதுக்கு தான்”.., என்று சொன்னான்.
இங்கு இவள் முகம் சிவந்தது., அவன் பார்க்க முடியவில்லை.., அவள் அமைதியாக ம்ம்ம் ம்ம்ம் என்று சத்தம் மட்டும் எழுப்பினாள்.
அவன் அவள் வெட்கப்படுவதை அறிந்து “இங்க பாரு இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.., மெடிக்கல் பில்ட் இருக்கிறவங்க எல்லா விஷயத்தையும் பேசுவாங்க.., எல்லா விஷயமும் தெரியும்.., அது மட்டுமில்லாம நீயும் சின்ன பொண்ணு கிடையாது 25 ஆகுது., இது எல்லாம் நார்மல் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான்.., நான் இப்போ உன்கிட்ட கேட்டதுகே., நீ இப்படி வெட்கப்பட்டா எப்படி”., என்று சொல்லிவிட்டு “சரி டிக்கெட் போடலாம் இல்ல” என்று கேட்டான். அவளும் “சரி”என்று சொன்னாள்.
“நீ தப்பா எடுத்துக்காத.., ஆக்சுவலா எனக்கு தேர்டி இயர்ஸ் தான்டிருச்சி சரியா., இதுக்கப்புறம் பேபிய இன்னும் தள்ளிப்போட்டோம் அப்படின்னா நல்லா இருக்காது.., சோ தள்ளிப்போட வேண்டாம்., உடனே பெத்துக்கலாம்”., என்று சொன்னான்.
“அதுதான் சரின்னு சொல்லிட்டனே” என்று இவள் வெட்கப்பட்டு அழுத்தமாக சொன்னாள்.
“அச்சச்சோ..,நீ இதுக்கு போயி இவ்வளவு வெட்கப்படுற., கொஞ்சம் கஷ்டம் தான் போலயே”.., என்று சொல்லி பின்பு சாதாரணமாக பேசி அவளை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து விட்டு போனை வைத்தான்., அதை இப்போது நினைத்துக்கொண்டவளுக்கு இந்த போட்டோவை பார்க்கும் போது வெட்கம் பிடுங்கி தின்றது..,
அவன் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைக்கும் போது தன் உடல் நடுங்குவதை உணர்ந்தவன்., “எதுக்கு இப்படி நடுங்குற., நான் தானே தோளில் கை வைத்தேன்” என்று சொன்னான்., அப்போது தான் வெட்கத்தோடு தான் அவன் முகத்தை பார்த்து இருந்தாள்., அந்த போட்டோவில் அது அழகாக பதிந்திருக்க அவளுக்கு அந்த போட்டோவை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது….
இடைப்பட்ட நாட்களிலும் அவனது வேலை காரணமாக இருவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை., திருமணத்திற்கு முதல் நாள் தான் போனில் அழைத்தவன் அவளுடைய அலுவலக நிலவரங்களை ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் உறுதியான முடிவுகளை கேட்டு தெரிந்து கொண்டான்.,
அவள் அலுவலகத்தில் பேசி சில நாள்களுக்கு அனுமதி வாங்கி விட்டதால் அவனுக்கு அது ஒருபுறம் நிம்மதியாக இருந்தது., அவள் கல்லூரி கால நட்புகள் யாரெல்லாம் வருவார்கள்.., அவளுடன் வேலை பார்ப்பார்கள் யாரெல்லாம் வருவார்கள் என்று கேட்டுக்கொண்டான். சற்றுநேரம் அவளோடு பேசிவிட்டு இனி மாலை மண்டபத்தில் பார்ப்போம் என்று பேசியபடி போனை வைத்தான்..