“மகா என்ன பண்ற..? துருவ் மாமியார் வீடு கிளம்புறான் பாரு..” விஷ்ணு ரூமிற்க்கு வர

ச்சு.. இப்போதாங்க படுத்தேன்..” என்றாள் அசதியாய்

நீ தான் துருவ் கூட அவன் மாமியார் வீடு  போகணும் போல.. அம்மா சொன்னாங்க..” விஷ்ணு சொல்ல

நான் போகல.. வேற யாரையாவது அனுப்புங்க..” என்றாள்

மகா துருவ் உன்னை தான் எதிர்பார்க்கிறான்.. நீ வந்து சொல்லிட்டு வந்துடு..” விஷ்ணு அங்கேயே நிற்க, மகாவிற்கு எரிச்சல் தான்

நீங்க போங்க நான் வரேன்..” என்று ரெஸ்ட் ரூம் சென்று வர, கணவன் அங்கே தான் இருந்தான். பார்த்த மகாவிற்கு கடுப்பாக, “நான் எங்கேயும் ஓடிட மாட்டேன்.. ஏன் இப்படி படுத்துறீங்க.. ஒரு மனுஷியை கொஞ்சம் கூட தனியா விடாம..” சத்தம் போட, விஷ்ணு எதுவும் பேசாமல்  அவள் கை பிடித்து ஜுஸ் வைத்து கீழே சென்றுவிட்டான்

ம்ப்ச் மகா.. என்னடி பண்ற..” தன்னை தானே கடிந்து கொண்டு ஜுஸ் குடித்து கீழே சென்றாள்

மகா நீ ரெஸ்ட் எடு, நான் பல்லவி அக்காவோட போய்க்கிறேன்..” துருவ் சொல்ல, மகா திரும்பி கணவனை தான் பார்த்தாள். அவன் இவள் பக்கம் திரும்பாமல் ஈஷ்வரிடம் பேசிகொண்டிருக்க, துருவ் மாமியார் வீடு கிளம்பினான் ஈஷ்வர் பல்லவியுடன்

மகா நீ சாப்பிட்டு தூங்கு, இங்க நான் பார்த்துகிறேன்..” துர்கா  உணவு கொடுக்க, அவளும் மறுக்காமல் சாப்பிட்டு ரூமுக்கு தூங்க சென்றுவிட்டாள்

பார்க்கவே ரொம்ப அசதியா தான் இருக்கா நாள் தள்ளி போயிருக்கும் போல..” துர்கா மருமகளை கவனித்து கங்காவிடம் சொல்ல, அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி

உண்மையாவா அண்ணி.. கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆச்சேன்னு கவலைபட்டுட்டு இருந்தேன்..”  பேசி கொண்டிருக்க, அவர்களிடம் ஏதோ கேட்க வந்த விஷ்ணுவிற்கு எல்லாம் கேட்க  வந்த வழியே போய்விட்டான்

அவனுக்கு இது முதல்லே தெரிந்தது தான். மகா இன்னும் கவனிக்கவில்லை. கல்யாணம் முடித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்க, அம்மா, அத்தைக்கும் தெரிந்துவிட்டது

மகா எதுவும் தெரியாமல் மாலை வரை நன்றாக தூங்க, துருவ் மாமியார் வீட்டில் இருந்து அன்றே திரும்பி வந்தும்விட்டான். பல்லவி சென்று தான் அவளை எழுப்ப, மகா ரிப்ரெஷ் செய்து கீழே வந்தாள். கங்கா மகளுக்கு கையில் பூஸ்ட் கொடுக்க, மகா ஆச்சரியமாக பார்த்து வாங்கி கொண்டாள்

இரவு உணவு நேரம் வரவும் எல்லோரும் உணவிற்கு குடும்பமாக அமர்ந்தனர். ஈஷ்வர் மகன் ஹர்ஷத் எப்போதும் போல அவனின் தாத்தாவிடம் இருக்க, அவர் உணவு ஒரு வாய், IAS ஒரு வாய் என்று ஊட்டி கொண்டிருந்தார். சின்னுவை தான் IAS ஆக்க முடியவில்லை. பேரனை விட கூடாது என்று முடிவிற்கு வந்துவிட்டவர்

நீங்க பாருங்க.. கார்ல இருந்து நீங்க இறங்கினா உங்க அப்பா எல்லாம் உங்களுக்கு சல்யூட்அடிக்கணும்.. பார்க்க அப்படி இருக்கும்..” என்று சொல்லி கொண்டிருக்க, இரண்டு வயது ஹர்ஷத்தோ தலை ஆட்டி கொண்டிருந்தான்

பார்த்த எல்லோருக்கும் அப்படி ஒரு சிரிப்பு. ஆனால் சிரித்தால் நரசிம்மன் உண்மையான நரசிம்மன் ஆகிவிடுவார் என்று புரிய, வாய்க்குள் சிரிப்பை மென்றனர். “நல்ல வேளை மகா உன்னால நான் தப்பிச்சேன், நீ பேசல மாமா என்னை விட்டிருக்க மாட்டார்..” அவன் தப்பித்த நிம்மதி

அதோடு அவனுக்கு பிடித்த பிஸினஸும் செய்கின்றானே. காவ்யா, அவன் இருவரும் சேர்ந்து, கியர் சைக்கிள் தயாரிப்பதற்கான ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பித்திருக்கின்றனர். இப்படியே இரவு உணவு  முடியவும், துர்கா ஞாபகம் வந்தவராய் இளையவர்களை குடும்பமாய் நிற்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டார். அவர்களுக்கு அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் அவர்கள் நம்பிக்கைகாக நின்றனர்

அடுத்து அன்றைய இரவிற்காகn மகா, பல்லவி இருவரும் காவ்யாவை தயார் செய்தனர். “அக்கா..”  காவ்யா கிளம்பும் முன் மகாவை அணைத்து கொண்டாள். மகாவும் அவளை அணைத்துதுருவ் அறைக்கு அனுப்பி வைத்தனர்

அவள் உள்ளே வரவும் துருவ் அவளையே பார்த்து அமர்ந்திருந்தான். அவள் பால் வைத்து நிற்க, துருவ் எழுந்து சென்று அவளை கட்டி  கொண்டான். அவன் சரியாகி வரும் வரை இத்தனை வருடம் காத்திருந்து அவனை திருமணம் செய்திருக்கிறாளே..? 

அவனும் பலமுறை அவளிடம் கேட்டுவிட்டான் அப்படி என்ன என்று..? அவளுக்கும் இன்று வரை பதில் தெரியவில்லை தான். “நான் உங்கிட்ட ஸ்டிக் ஆகிட்டேன்.. விலக முடியல, விலகவும் விருப்பமில்லை, இன்னும் ஸ்டிக் ஆகத்தான் விருப்பம்..”  இதுவே அவள் பதிலாக இருக்க, துருவ் அவளிடம் கரைந்து தான் போனான்

என் லைப்ல எனக்கு கிடைச்ச நீங்க எல்லாம் தி பெஸ்ட்.. நானும் உங்களுக்கு அப்படி இருக்கனும் நினைக்கிறேன்..” அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்

இங்கு காவ்யாவை ரூமுக்கு அனுப்பி வைத்த பல்லவி அவர்கள் ரூமிற்கு செல்ல, ஈஷ்வர் மகனை  நெஞ்சின் மீது போட்டு படுத்திருக்க மகள் கங்காவிடம் இருந்தாள். பல்லவி கதவு மூடி வந்தவள்  தானும் கணவன் தோளின்  மீது படுத்து கொண்டாள்

இன்று சின்னு திருமணத்திற்கு அவளின் அம்மா வீட்டில் இருந்து வந்திருந்தனர். அவளின் பாட்டிக்கு முன்பு போல பல்லவியை பேச வாய் வரவில்லை. பல்லவி அவர்கள் நினைத்ததை விட நன்றாக மரியாதையுடன் வாழ, அவர்களும் அந்த மரியாதையை அவளுக்கு கொடுக்க வேண்டிய நிலை. கொடுக்க வைத்தான் ஈஷ்வர்

அண்ணி மகிளா உள்ளுக்குள் பொசுங்கினாலும் வெளியே சிரித்த முகமாக தான் இருப்பாள்அப்பா, அம்மா, அண்ணா மூவருக்கும் பல்லவி வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியே, ஒன்றை தவிர அது, பல்லவி அவர்கள் வீட்டில் தங்குவதில்லை, காலை வந்தால் மாலை கிளம்பிவிடுவாள். இது தான்.  

 

உனக்கு இஷ்டம்ன்னா தங்கு..” என்று ஈஷ்வர் சொல்லிவிட்டான் தான், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று பல்வியே சொல்லிவிடுவாள்

எல்லாம் நினைத்தபடி பல்லவி கணவன் மேல் படுத்திருக்க, ஈஷ்வர் மெல்ல மகனை  பெட்டில் படுக்க வைத்தவன், “என்ன என் லவிக்கு..?” கேட்டான்  அவளை அணைத்து

பல்லவி அவன் எட்டி அவன் டாலரில் முத்தம் வைக்க, ஈஷ்வருக்கு இப்போதும் அவள் முத்தம் சிலிர்த்தது. “என்னடி நீயா முத்தம் எல்லாம் கொடுக்கிற..? ஏற்கனவே இரண்டு இருக்கு, இன்னொன்னு வந்தா நீ தான் சலிச்சுக்குவ..” என்றான் அவள் உதடு தடவி

பல்லவிக்கு அவள் வாழ்க்கை நிறைவாக இருக்க, அதை கொடுத்த கணவன் மேல் இன்னும் இன்னும் காதல் பெருகியது. அவனுக்கோ எப்போதும் அவன் மனைவி லவி உயிர் தான். அதில் அவள் இன்னும் காதலை அள்ளி வழங்கினால்..? 

விஷ்ணு சொன்னது போல  எனக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் லவி பைத்தியம் பிடிக்க போகுது..” அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்

அப்போ உங்களுக்கு இப்போ என்மேல பைத்தியம் இல்லையா என்ன..?” பல்லவி செல்ல முறைப்புடன் கேட்க

என்னை பார்த்தா அப்படியா தெரியுது.. இது சரியில்லையே, உனக்கு இனி இப்படி சந்தேகம் வராத அளவு  புரிய வைக்கிறேன் இரு..” அவளை அவனுடன் ஒட்டி கொண்டான்.

 

மகா.. இந்த ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு போ..”  கங்கா அவள் ரூமுக்கு சென்ற மகளை நிறுத்தி வைத்து கொடுக்க

ம்மா.. என்ன இது கவனிப்பு ஓவரா இருக்கே..” மகா கேட்டபடி வாங்கி குடித்தாள்

பார்க்க அசதியா இருக்கேன்னு தான், கல்யாண வேலை, அண்ணியோட ஹாஸ்பிடல்லுக்கும் போற, நிக்காத ஓட்டம், கொஞ்சம் ரெஸ்ட் எடு மகா..” சொல்லி காலி டம்ளர் எடுத்து சென்றார்மகா தோளை குலுக்கி ரூமுக்கு வர, விஷ்ணு போனில் இருந்தான்

மகா படித்த ஹாஸ்பிடல் மேல் விஷ்ணு கொடுத்த கம்பளைண்ட் அவர்களுக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் வார்னிங்கை கொடுத்திருக்க, அந்த டீனும் வேறு வழி இல்லாமல் ஓரளவிற்கு நல்ல வைத்தியத்தை கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் மகா, விஷ்ணுவிற்கு திருப்தி தான்.

நாளைக்கு நேர்ல வாங்க பேசுவோம்..” போனை வைத்தான். விஷ்ணு இப்போது தனியாக பிராக்டிஸ் செய்கிறான்துர்கா ஹாஸ்பிடலுக்கு மகா அவளின் MS முடிக்கவும் செல்ல, விஷ்ணு அவனுக்காக தனியாகவே வீடு ஒன்று எடுத்து செய்து கொண்டிருக்கிறான்

மகா வரவும் ஒரு பார்வை பார்த்தவன், பெட்டிற்கு செல்ல, இவளுக்கு அவன் கோவம் சிரிப்பே. ரிப்ரெஷ் செய்து வந்தவள், கதவை மூடி, நேரே கணவன் மேல் ஏறி படுத்துவிட்டாள்

இறங்குடி  அகங்காரி..” விஷ்ணு உர்ரென்று சொல்ல

நீங்க என்னை தேடினா இப்படி படுக்கிறீங்க இல்லை. அப்பறம் என்ன..? பேசாம படுங்க..” என்று அதட்டல் இட்டவள் அவன் முகம் ஒட்டி தன் முகம் வைத்து படுத்தாள்

விஷ்ணு கண் மூடி கொள்ள, மகா அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள். அவன் அமைதியாகவே படுத்திருக்க, எட்டி அவன் மூக்கை கடித்து வைத்தாள்.  “ராங்கி.. எதுக்குடி கடிச்ச..?” விஷ்ணு மூக்கை தேய்க்க, மகா அவன் கையை தட்டிவிட்டு அவன் உதட்டில் முத்தம் வைத்தாள்

விஷ்ணுவிற்கு மனைவி செய்வது அவ்வளவு பிடித்திருக்க, வேண்டும் என்றே வீம்பாக படுத்திருந்தான். “உங்களுக்குள்ள ஹார்மோன் வேலை செய்யுதுன்னு தெரியுது மிஸ்டர் மகா.. ஓவரா நடிக்காதீங்க..” மனைவி அவன் காதில் முத்தம் வைத்து சிரிப்புடன் சொல்ல, விஷ்ணு சிங்காரி என்று உள்ளுக்குள் கொஞ்சி கொண்டான்

க்கும்.. ரொம்பத்தான், ரொம்ப நாளா கேட்கிறீங்களே இன்னைக்கு உங்க ஆசையை நான் நிறைவேத்தலாம்ன்னு பார்த்தேன், போங்க உங்களுக்கு தான் நஷ்டம்..” மகா அவன் மேலிருந்து கீழிறங்கதிரும்பி அவளை மெல்ல அணைத்தவன்

இப்போதான் உனக்கு நாள் கிடைச்சுதாடி சிங்காரி..” என்றான் ஏமாற்ற முறைப்புடன்

ஏன் இன்னைக்கு என்ன..?” மகா கேட்க

இன்னைக்கு மட்டும் இல்லை, இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு எதுவும்  கிடையாது..” என்றான்

ஏன்..? வெளியே எங்கேயும் போறீங்களா..?”

இல்லை.. மிஸஸ் விஷ்ணு.. மாஸ்டர் மகாவோ, ஏஞ்சல் விஷ்ணுவோ  நமக்கு வரப்போறாங்க..” என்றான் நெற்றில் அழுத்தமாக முத்தம் வைத்து

மகா புரிந்தவள் கணவன் நெஞ்சில் முகம் புதைத்துவிட்டாள். கண்ணீர் அவன் நெஞ்சை நினைக்க, அவள் உணர்வு புரிந்து ஆறுதலாக தட்டி கொடுத்தான். அவள் மிகவும் எதிர்பார்த்த வரம். படிப்பு, சின்னு வைத்தியம் என்று தள்ளி போக, இப்போது கிடைத்துவிட்டது.

“எனக்கு மாஸ்டர் மகா வேணும்..” விஷ்ணு அவளிடம் பேச்சு கொடுத்தான்

எனக்கு பாய்லர் ஏஞ்சல் தான் வேணும்.. எப்போ பாரு கொதிச்சிகிட்டு..” மகா அவன் நெஞ்சில் முகம் துடைத்து சொன்னாள்

என் பொண்ணு அப்படி இருக்க மாட்டா..” விஷ்ணு வேகமாக சொல்ல

அவங்க அப்பா இருக்கும் போது அவளும் அப்படி தான் இருப்பா..” மகா அப்பா சொல்லும் போது இருவருக்கும் உடல் சிலிர்த்தது.  

என்னை அப்படி கொதிக்க வைக்கிறதே நீதானடி  சிங்காரி..” விஷ்ணு உல்லாசத்துடன் அவள் கன்னத்தை  கடித்தான்

கொதிச்சாலும் கருகாம என்னை பார்த்துகிறீங்களே..” மகா கிண்டலாக சொல்ல

இப்போவும் அது தான் சொல்வியாடி..” என்றான் அவன் முகம் சுருக்கி

எப்போவும் நாம அப்படி தானே..? நம்ம மேக் மாத்த முடியாதே..”

அது சரிதான்.. நீ அகங்காரி, சிங்காரி, ராங்கி தாண்டி..”

நீங்க மட்டும் என்ன பாய்லர், ஹீட்டர், தந்தூரி அடுப்பு தான்..” என்றாள் அவள்

அப்படி இருந்தா தானே இந்த சிங்காரியை சமாளிக்க  முடியுது..”

ஏன் நான் என்ன பண்றேனாம்..?”

போதைக்காரிடி நீ பேச்சை பாரு.. நீ வந்ததுல இருந்து நான் பீர் கூட குடிக்கிறதில்லை. உன் சிங்காரி சரக்கே போதும் எனக்கு..?”

ச்சீ.. உங்களை எப்போ பாரு இப்படியே பேசிகிட்டு..”  மகா வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைக்க, விஷ்ணு நிறைவான சிரிப்புடன் அவளை தன்னுள் புதைத்து கொண்டான்

மறுநாள் காலை விஷ்ணு எப்போதும் போல நேரமே எழுந்து ரிப்ரெஷ் செய்து வர, ஈஷ்வர் அவனுக்காக ஹாலில் காத்திருந்தான். இருவரும் பைக்கை எடுக்க, பீச் சென்றனர். ஓட்டம் முடிய அலையில் நின்றனர்

இருவருக்கும் பேச்சு இல்லை. மனம் மட்டும் அமைதியாக இருக்க, திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து மென் புன்னகை. ஈஷ்வர் என்ன நினைத்தானோ விஷ்ணுவை அணைத்து கொள்ள, அவன் முதுகில் தட்டி கொடுத்த விஷ்ணு

டேய் போதும்டா.. எல்லாம் நம்மளை வேற மாதிரி பார்க்கிறாங்க..” என்றான் சிரிப்புடன்

நான் பொண்ணா பிறந்திருந்தா கதையே மாறியிருக்கும் இல்லை..” என்றான் ஈஷ்வர் விலகி அடக்கி வைத்த  சிரிப்புடன்.  

அப்போ கூட நான் மகாவை தான் கட்டியிருப்பேனோ என்னவோ..”  என்றான் விஷ்ணு உண்மையாக

அடப்பாவி.. ஒரு பேச்சுக்கு கூட என்னை சொல்லலை இல்லை  நீ..?” ஈஷ்வர் அவனை விரட்ட, விஷ்ணு சிரிப்புடன் ஓடினான்.

முற்றும்..