அவன் அமைதியாக படுத்திருக்க, விஷ்ணு மகாவுடன் தம்பி கை பிடித்து பக்கம் அமர்ந்தான். சில நொடி கனமான மௌனம். மகா, விஷ்ணு இருவர் பார்வையும் சின்னு முகத்திலே நிலைத்திருக்க, மகிழ்ச்சி, துக்கம், எதிர்பார்ப்பு, வேண்டுதல் என்று உள்ளுக்குள் கலவையான உணர்வுகள். 


விஷ்ணு  தொண்டையை செறுமியவன், “சின்னு.. நான் பேசினதை நீ  கேட்டுட்டு தானே இருந்த.. நான் சொல்லியிருந்தேன் இல்லை, நீ ரொம்ப ஆசைப்பட்டபடி மகா உன் அண்ணியா வந்துட்டா.. காலையில தான் எங்க கல்யாணம் முடிஞ்சது, உன் அண்ணியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு  வந்துட்டேன்..”

ம்ம்.. நீ எப்போ மகாவை வெல்கம் பண்ணுவ..? எங்களை விஷ் பண்ணுவ..? ரொம்ப எதிர்பார்த்திட்டு இருக்கோம்  உன்னை.. சீக்கிரம் வாடா..” என்றான் உற்சாகமான  குரலில். மகா அமைதியாக சின்னு முகம் பார்த்திருக்க, அப்படியே அமர்ந்திருந்தனர்

துர்கா உள்ளே வந்து கூப்பிட வெளியே சென்றனர். ருக்கு வாழ்த்தியவர், இருவருக்கும் கேரட் அல்வா  செய்து கொடுக்க, விஷ்ணு அவரை வறுத்த விரும்பாமல் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து கொண்டு மகாவிடம்  கொடுத்துவிட்டான்

விஷ்ணு.. மகா வீட்டுக்கு கிளம்பனும்..” துர்கா சொல்ல, விஷ்ணு புருவம் சுருக்கி பார்த்தான்

இல்லை.. அது சடங்கு.. அதான்..” என, மகாவிற்கு புரிந்தது

என்ன சடங்கு..? அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே..” என்றான் விஷ்ணு

ம்ப்ச் இவன் வேற..?” துர்கா ஈஷ்வரை பார்க்க, அவன், “வா விஷ்ணு தோட்டத்துக்கு போலாம்..” என்று கூட்டிச்சென்று முதல் இரவு சடங்கை சொன்னான்

ஈஷ்வர் வேண்டாம் சொல்லிடு, நாங்க எங்கேயும் வரமாட்டோம்..” விஷ்ணு உறுதியாக சொல்ல

இல்லைடா.. இங்க இருந்தா நீங்க டிஸ்டர்ப்பா பீல் பண்ணுவீங்கன்னு..” ஈஷ்வர் தயங்கினான். சின்னுவை தான் சொல்கின்றனர் என்று புரிந்து கொண்ட விஷ்ணு, கண்டிப்பா முடியாது.. என்றுவிட்டான்

விஷ்ணு பெரியவங்க மனசையும் நீ புரிஞ்சுக்கோ, சின்னு இங்க இப்படி இருக்க நீங்க ப்ரீயா இருக்க மாட்டிங்கன்னு தான் அவங்க இந்த ஏற்பாட்டை  பண்ணியிருக்காங்க..” ஈஷ்வர் புரிய வைக்க முயல

ஈஷ்வர்.. சொல்லிடுன்னு சொல்லிடு அவ்வளவு தான்..” ரூமிற்க்கு சென்றுவிட்டான். அவன் முகம் பார்த்த மகாவிற்கு லேசான சிரிப்பே

இப்போ என்னண்ணி பண்றது..?” துர்கா கவலைப்பட

அத்தை.. விடுங்க.. ஏன் எல்லாத்துக்கும் அவரை டென்சன் பண்ணனும்..” மகா சொல்லிவிட, அம்மாவும், அத்தையும் என்ன சொல்ல..? 

சரி மகா.. பார்த்துக்கோங்க..” என்றவர்கள், இரவு உணவை வெளியே சொல்ல, பல்லவி, அனுவுடன் மகா நேரம் சென்றது. ஈஷ்வர் தானும் விஷ்ணு ரூம் செல்ல, இரவு உணவிற்கு தான் கீழே வந்தனர்

“பல்லவி பார்த்துக்கோம்மா..” உணவு முடியவும் மகாவை கண் காட்டி பெரியவர்கள் ரூமிற்க்கு சென்றுவிட, பல்லவி மகாவை தயார் செய்து  விஷ்ணு ரூமிற்கு கூட்டி சென்றாள்

அண்ணி.. நான் சின்னுவை பார்த்துட்டு போய்க்கிறேன்..”  மகா சொல்ல, பல்லவி சில நொடி தயங்கி  சென்றுவிட்டாள். மகா சின்னு ரூம் செல்ல, கணேஷ் வெளியே வந்துவிட்டார்

மகா அவன் பக்கத்தில் அமர்ந்தவள், “ஓய் முறைப்பையா.. எப்படி இருக்க..?” கை பிடித்து கேட்டாள்

அப்பறம்.. உங்க அண்ணா சொன்னார் இல்லை, நான் உனக்கு அண்ணியா வந்துட்டேன்னு, ம்ம்..  எனக்கு தான்  அண்ணியா வந்தும் உன்னை படுத்த முடியல..? இப்படி தூங்கிட்டே இருக்க..?  எப்போ முழிச்சு வர போற..? இப்படி தூங்கிட்டே இருக்க போரடிக்கலையாடா..?”  சிரிப்புடன் கேட்டாள்

எனக்கு கொடுத்த ப்ராமிஸ் பத்தி மறந்துட்ட போல.. இன்னும் ரெஸ்ட்லே இருக்க மேன் நீ..? சீக்கிரம் எழுந்து வா.. உன் அண்ணனுக்காக வரேன்னு சொல்லிட்டு இப்படி ஜம்முன்னு இருக்க..? அவர் உன்னை ரொம்ப தேடுறார், அது உனக்கே தெரியும் தானே, இன்னும் ஏன் அவரை தேட வைக்கிற..? கொஞ்சூண்டு அவர் பாவம் தானே..?”

இங்க பாரு  உனக்காக தான் நான் உன் அண்ணாக்கு போனா போகுதுன்னு வாழ்க்கை கொடுத்திருக்கேன், இல்லை அந்த அபிதாவையே கட்டி வச்சிருப்பேன், ஏதோ நீ கெஞ்சி கேட்டுகிட்டன்னு அந்த முறைக்கிற பையாவை  கல்யாணம் பண்ணா நீ என்னை வெல்கம் பண்ண கூட இல்லை.. டூ பேட் முறை பையா..”  விஷ்ணுவும் தம்பிய பார்க்க வந்தவன், மகா பேச்சை கேட்டு உர்ரென்று நின்றான்.  

மகாவோ அவனை கவனிக்காமல் சின்னுவையே பார்த்து கொண்டிருந்தவள், “பாரு இதுக்கே எனக்கு இந்த சென்னை மெயின்ல சிலை வைக்கணும், யார் செய்வா இவ்வளவு பெரிய தியாகத்தை, நான் செஞ்சிருக்கேன், உன் அண்ணா அந்த பாய்லருக்கு வாக்க பட்டுடிருக்கேன், என்னை பாராட்ட கூட ஆள் இல்லை..”

நீயும் என் அண்ணாக்கு என்னன்னு முறுக்கிட்டு திரிவ..? உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் அந்த ஹீட்டர் பத்தி.. சரியான தந்தூரி அடுப்பு..”  மகா பேசவிஷ்ணு பல்லை கடித்தவன்

அடியே அகங்காரி..” என்றான் அருகில் நெருங்கி. மகா நிமிர்ந்து பார்த்தவள், கேட்டுட்டீங்களா..இப்போ என்ன..? என்ற ரியாக்ஷனையே கொடுக்க, இன்னும் காண்டான புது மாப்பிள்ளை

உன்னை கட்டி மேய்க்கிறதுக்கு எனக்கு தான்டி சிலை வைக்கணும்.. இதில தியாகமாம்..? திமிர் பிடிச்சவ..” நறநறத்தான்.

“பார்த்தியா சின்னு இதை தான் சொல்றேன் பாய்லர்ன்னுபாரு எப்படி கொதிக்குதுன்னு..”  மகா கிண்டலாக சொல்ல, அவள் காதை பிடித்தவன்

பேச்சை குறைடி ராங்கி..” என்றான்

ஏன் நீங்க பேச போறீங்களா..? நானும் சின்னுவும் பாவம் இல்லையா..? இதுக்கு தாண்டா சொல்றேன் நீ சீக்கிரம் எழுந்தா நாம  எந்திரிச்சு ஓடிடலாம்ன்னு..”  சிரிப்புடன் ஓட்ட, அங்கு சின்னுவின் கண்மணி லேசாக அசைந்து நின்றது

விஷ்ணு, மகா பார்க்கும் நொடிக்குள் நின்றுவிட, அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. “இதுவே நீ என் தம்பிக்கு சரியானதுக்கு அப்பறம் பேசி பாரு, அவன் உன்னை என்ன பண்றான்னு..” விஷ்ணு மிரட்ட, 

“அடேங்கப்பா.. அப்படியாடா.. நீ என்னை பேசுவியா..? பேசி பாரேன்..”  என்று இவள் சின்னுவை மிரட்ட, வெகு மாதங்களுக்கு பிறகு அவ்வீட்டில் சின்னு எதிர்பார்த்த நிமிடங்கள். 

“தம்பி.. நேரம் ஆயிடுச்சு..” கணேஷ், ருக்குவுடன் வர, அதன் பிறகே இருவரும்  ரூம் ஏறினர். 

“என்னடி சும்மா வர, கையில பால் எதுவும் இல்லையா..?” விஷ்ணு கதவடைத்து கிண்டலாக கேட்க, 

“அச்சோ மறந்துட்டேன்.. கிச்சன்ல  அண்ணி  பிளாஸ்க்  வச்சாங்க..”  என்றாள் தலையில் கை வைத்து. 

“ஆமா இது என்ன உன் மூணு  அடி முடில பூ எல்லாம், எப்படி அதுல வச்சாங்க..?” கேலியாக கேட்டு பெட்டில் அமர, மகா கண் சுருக்கி முறைத்தாள். 

“சரி ஆரம்பி.. பார்த்தது போதும்..” விஷ்ணு குறும்புடன் சொல்ல, 

“என்ன ஆரம்பிக்கட்டும்..?” மகா சந்தேகமாக கேட்டாள். 

“அதான்.. அது..” விஷ்ணு அடக்கி வைத்த சிரிப்புடன் கேட்க, எதை கேட்கிறார் இவர்..? அன்னைக்கு நான் தான் எல்லாம் பண்ணனுமா சொன்னதையா..? கொஞ்சம் அரண்டு தான் போனாள். 

“என்னடி வீட்ல சொல்லி கொடுக்கலையா..? ரூமுக்கு போனவுடன் என்ன செய்யணும்ன்னு.. இந்தா..”  என்று அமர்ந்தபடி காலை மட்டும் நீட்டி சிரிக்க, மகா கோவத்துடன்  சிரித்தாள். 

“நீ என்ன நினைச்ச..? அதையா..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..” மேலும் சீண்டினான். 

“உங்களை.. போங்க.. போங்க.. நான் தூங்க  போறேன்..” வேகமாக பெட்டிற்கு செல்ல, எட்டி கை பிடித்து முன்னால் நிற்க வைத்தவன், 

“எங்க போற..? அன்னைக்கு என்ன கேட்ட நான் தான் எல்லாம் பண்ணனுமா கேட்ட இல்லை..? அந்த எல்லாம் என்னன்னு எனக்கு சொல்லு..” என்றான் வம்பாக.

நான் அது சும்மா சொன்னேன்னு உங்களுக்கு தெரிய தான் செய்யும், சும்மா என்னை வம்பிழுக்காதீங்க..” கை இழுத்து

அதென்ன சும்மா சொல்றது, உனக்கு அப்படியென்ன தெரியும்ன்னு எனக்கு தெரிய வேண்டாமா..?”

ஏன் உங்களுக்கு எதுவும் தெரியாதா..?”

எனக்கு தெரியாதே, நீ சொல்லேன் கேட்கிறேன்..”

போதும் விடுங்க.. நான் தூங்கணும்..”

முடியாது, சொல்லு விடுறேன்..” விஷ்ணு விடாமல் அலம்பல் செய்ய, கடுப்பான மகா

இப்போ என்ன உங்களுக்கு சொல்லணும் அதானே, சொல்றேன்.. முதல்ல நீங்க என்னை கட்டி பிடிக்கணும், அப்பறம் இங்க இங்க எல்லாம் முத்தம் கொடுக்கணும், உங்க ஷர்ட் கழட்டனும், என் முந்தானை..”

ஹேய்.. போதும் விடுடி..”

இல்லை சொல்லுவேன், அப்பறம் என் புடவை..”

அடியே.. வாயை மூடி தொலை..” விஷ்ணு பாய்ந்து  அவள் வாய் மூடினான்

சிங்காரி சொல்லியே என்னை வெட்க பட வச்சுட்டாளே..”