திகம்பரனின் திகம்பரி அவள் 10 2 15648 “நான் நினைச்சா கூட என்னால இதுல இருந்து வெளியே வர முடியல, எங்க அப்பாக்கு அடுத்து நான் தான்னு அரசியலுக்கு வந்துட்டேன், அப்போ அது எனக்கு கெத்தாவும் தெரிஞ்சது, ஆனா இப்போ.. ஏன் இதுல விழுந்தோம்ன்னு இருக்கு.. சலிப்பா, வெறுப்பா இருக்கு..” “என்ன செய்ய..? இந்த அரசியலுக்கு நான் அடிமை ஆயிட்டேன், நானே முயற்சி எடுத்தா கூட என்னால விடமுடியல, எப்போவும் வாசல்ல ஆளுங்க, கூட பத்து, பனிரெண்டு பேர், ரெண்டு மூணு கார், பார்க்கிறவன் எல்லாம் பயத்தோட கொடுக்கிற மரியாதை, பெரிய பெரிய பிஸ்னஸ்மேன், IAS, IPS எல்லாம் நமக்கு மரியாதை கொடுத்து சலியூட் அடிக்கும் போது, அதுக்கு நாம அடிமை ஆகிடுறோம்.. என்ன பண்ண..? இதை விடவும் முடியாம, சரியா செய்யவும் முடியாம..” “ம்ப்ச்.. இது எல்லாம் என்னோட போகட்டும்ன்னு தான் சொல்றேன், நீங்க நல்லா படிங்க, UPSC எக்ஸாம்க்கு ப்ரீபெர் பண்ணுங்க, மகாவும் அவ அத்தை மாதிரி டாக்டர் படிக்கிறேன்னு சொல்றா, நீங்களும் ஒரு நல்ல வேலை வாங்கிட்டா.. இதை விட எனக்கு வேறென்ன வேணும்..?” “ உங்களால படிக்க முடியல, படிப்புல கொஞ்சம் குறைவு தான்னா கூட விட்டுறலாம், நல்லா படிக்கிற புள்ளை, படிச்சு பேர் எடுங்கன்னா தேவை இல்லாத வேலை பார்த்துகிட்டு, அதுக்கான வயசா இது..? உங்களுக்கு எல்லாம் எல்லாத்திலும் அவசரம்..” அவரின் கனவு கோட்டை தகர்ந்திடுமோ என்ற பயத்தில் மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார். கதவு தட்டி டீ வர, நரசிம்மன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு உள்ளே வர சொன்னார். வேலை செய்யும் ஆள் டீ வைத்து வெளியே சென்றுவிட, “எடுத்துக்கோங்க..” மகனுக்கு கொடுத்தார். மறுக்காமல் குடித்தான். நரசிம்மனும் குடித்து முடித்தவர் மகனை பார்த்தார். அவன் டீ கப்பை வைத்து நிமிர்ந்து அமர்ந்தவன், ஒரு முடிவோடு, உறுதியாக பேசினான். “ப்பா.. நீங்க சொல்றது சரி, நான் பண்ணது தப்புன்னு எனக்கே புரிஞ்சிடுச்சு, இனி இப்படி நடக்காது.. ஒழுங்கா காலேஜ் போறேன்.. படிக்கிறேன்..” என, நரசிம்மன் மகனை ஆழ்ந்து பார்த்தார். “பல்லவி.. அவ தான் எனக்கு எப்போவும், அதுல மாற்றம் இல்லை, ஆனா படிச்சு முடிக்கிற வரை அவகிட்ட இருந்து விலகியிருக்கலாம் முடிவெடுத்து இருக்கேன், இந்த முடிவும் அவளுக்காக தான், “உங்களை நம்புறேன்.. ஆனா இந்த காதலை நம்ப முடியாது..” “ப்பா.. உங்ககிட்ட நான் எப்போவும் பொய் சொன்னது இல்லை..” “ஆனா சொல்லாம மறைச்சிடுவீங்க..” “ இனி அதுவும் செய்ய மாட்டேன், வெளியே நீங்க எப்படிப்பட்ட அரசியல்வாதின்னு எனக்கு தெரியாது, என்னை நீங்க உள்ள விட்டது இல்லை, நானும் வர விரும்பல, ஆனா எங்களுக்கு நீங்க ஒரு பெஸ்ட் அப்பா, உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி செய்ய மாட்டேன்.. என்னை நம்பலாம்..” “உங்களை நம்பி தான் நானும் படிக்க கேட்கிறேன்..” “கண்டிப்பா நீங்க எங்க மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்..” “இது போதும் தம்பி எனக்கு..” நரசிம்மன் மகன் வார்த்தையில் நிம்மதி கொண்டார். ஈஷ்வர் எழுந்து வாசல் வரை வந்தவன், “பல்லவி விஷயத்துல எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு, ஆனா என்னை உளவு பார்க்குற உங்க ஆளுங்க மேல நம்பிக்கை இல்லை..” என, “நான் பார்த்துகிறேன்..” என்றார். “தேங்க்ஸ்ப்பா..” ரூம் சென்றான். ரிப்ரெஷ் செய்து வந்தவன் மொபைல் எடுக்க, “இன்னும் என் மேல கோவம் போகலையா..?” பல்லவி கேட்டிருந்தாள். “உன்கிட்ட பேசணும்..” மெசேஜ் அனுப்ப, அவளே அடுத்த நொடி கால் செய்தாள். அதிலே அவளின் தவிப்பு புரிந்தது. இவன் எடுத்தவுடன், “சாரி..” என்று தான் சொன்னாள் பல்லவி. “நீ இல்லை.. நான் தான் சாரி சொல்லணும்..” ஈஷ்வர் சொல்ல, அவனுக்கு தன் மேல் உள்ள கோவம் போகல என்றே நினைத்தாள் பல்லவி. “ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க, உங்க கோவம் புரியுது, நான் வேணும்ன்னு..” “பல்லவி.. நான் உன் மேல கோவத்துல பேசல, நான் சொல்றதை கேளு..” ஈஷ்வர் இடையிட்டு சொன்னான். “சொல்லுங்க..” “ம்ம்.. பர்ஸ்ட் இன்னிக்கு உன் மேல எந்த தப்பும் இல்லை, நான் தான் உன்னை பார்க்கணும்ன்னு எப்படி எப்படியோ நடந்துக்கிட்டேன்.. சாரி..” “இல்லை.. நீங்க என்மேல கோவமா தான் சொல்றீங்க..?” அவன் அவள் பார்க்கும் போதே எதுவும் பேசாமல் விருட்டென்று கிளம்பி போனதை வைத்து பல்லவி கேட்டாள். “உன்மேல கோவம் இருந்துச்சு உண்மை தான், ஆனால் யோசிக்க யோசிக்க எனக்கே என் தப்பு புரிஞ்சது.. நான் தான் தேவையே இல்லாமல் ரொம்ப அதிகமா நடந்துகிட்டேன்..” என, இங்கு பல்லவிக்கு அவனின் பேச்சு வருத்தத்தை கொடுத்தது. யாரோ போல பேசுறார்.. பல்லவி சொல்றார், லவி இல்லை.. சுணங்கி கொண்டாள். அங்கு ஈஷ்வரோ பால்கனியில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தான். இன்று மழை மேகம் இல்லை. மூச்சை இழுத்துவிட்டவன், அவளிடம் சொல்ல வேண்டியதை சொல்ல ஆரம்பித்தான். “பல்லவி.. இது.. இப்போ.. வேண்டாம் நினைக்கிறேன்.. நாம கொஞ்ச நாள்.. அதாவது படிச்சு முடிக்கிற வரை விலகியிருக்கலாம் தோணுது..” சொல்லியேவிட்டான். கேட்ட பல்லவிக்கு தான் முதல் சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு மனதில் இன்னும் உறுதி கோவத்தில் தான் பேசுகிறான் என்று. “நான் என்ன பண்ணா உங்க கோவம் போகும்..?” “ஸ்ஸ்.. பல்லவி நான் தான் சொல்றேன் இல்லை எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்லைன்னு.. இது வேற.. உனக்கு புரியலையா..? இது ரொம்ப சீக்கிரம், நம்ம வயசு.. இது சரி இல்லை..” “நம்ம வயசுக்கு இது சரி இல்லைன்னு இப்போ தான் உங்களுக்கு தெரிஞ்சுதா..?” பல்லவி இடையிட்டு கொஞ்சம் கோவத்துடனே கேட்டாள். “நீ கேட்கிறது புரியுது, நான் தான் தப்பு, அப்போ எனக்கு எதுவும் யோசிக்க முடியல, உன்கிட்டேயும் பேசி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்.. நீ இன்னிக்கு பேசுனது.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் நிஜமா உனக்குள்ள இவ்வளவு பிரஷர் இருக்கும்ன்னு நினைக்கல, உன்னை இப்படி அழ வைக்கிறேன்னு எனக்கே என்மேல கோவமா இருக்கு.. வேண்டாம், இப்போதைக்கு நீ நீயா இரு, நான் நானா இருக்கேன், படிச்சு முடிச்சு பார்க்கலாம்..” “ஏன் உங்களுக்கு ஹீனா லவ் சொல்லிட்டாங்களா..?” “லவி.. என்ன பேசுற..?” ஈஷ்வர் ஒரு அதட்டல் இட்டான். “ஏன் எனக்கு தோணுச்சு கேட்கிறேன்..” பல்லவி பேச, “எங்க இருக்க..?” கேட்டான். “என் ரூம்ல.. படிக்கணும் சொல்லி இங்க இருக்கேன்..” சொல்ல, ஈஷ்வர் போன் கட் செய்துவிட்டான். அப்போ அது உண்மை தான் போல.. பல்லவி பொருமி கொண்டு அமர்ந்திருக்க, அவனிடம் இருந்து வீடியோ கால் வந்தது. முகம் துடைத்து எடுத்தாள். “நான் எவ்வளவு சீரியஸா சொல்லும் போது நீ என்ன பேசிட்டு இருக்க..?” முகம் பார்த்து சீறினான். அவளின் சிவந்த கண்கள், விடைத்த மூக்கு.. அப்போதும் ஈஷ்வரை பார்க்க வைத்தது. “இப்போ மட்டும் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..?” பல்லவி கேட்க, “ஏன்னா எனக்கே நான் செய்றது தப்புன்னு புரியுது..” “எது என்னை காதலிக்கிறதா..?” நினைத்த பல்லவியின் மூக்கு இன்னும் விடைத்து அவளின் பொங்கி வரும் அழுகையை சொன்னது. “ஸ்ஸ்.. பல்லவி புரிஞ்சுக்கோ, நான் நமக்காக ரொம்ப யோசிச்சு தான் இதை சொல்றேன், உனக்கு மனசுல பல குழப்பம் இருக்கு, இந்த கேப் உனக்கும் ஒரு தெளிவு கொடுக்கும், மெச்சூரிட்டியும் வளரும், இப்போ நமக்கு படிப்பு தான் பார்க்கணும், நீயும் நல்லா படிக்கிறவ, உனக்கும் உன் லைப்ல அடுத்து என்னன்னு ஒரு கனவு இருக்கும், முதல்ல அந்த பாதையில நாம போவோம், அப்பறம் நம்மை பத்தி யோசிப்போம்..” “என்ன யோசிக்க நான் உங்களுக்கு வேணுமா..? இல்லை வேணாமான்னா..?” “லவி.. என்னை கடுப்பேத்ததாத..” அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் பேச, பல்லவிக்கோ குளிர்ந்து போனது. அவன் உரிமை அவளை கொஞ்சம் நிதானத்துக்கு கொண்டு வந்தது. “சரி.. நான் இப்போ என் லவ் சொன்னா உடனே அக்சப்ட் பண்ணிப்பியா..?” ஈஷ்வர் தீர்க்கமாக கேட்க, பல்லவி அமைதியானாள். “தெரியுது இல்லை, இதுக்கு தான் சொல்றேன், உனக்கான நேரம் எடுத்துக்கோ, நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கேன், இந்த அழுத்தம், கஷ்டம், அழுகை இல்லாம நிம்மதியா இரு.. என்னை விட்டா நான் உன்னை இன்னிக்கு பண்ணது மாதிரி தான் பண்ணுவேன், உன் விஷயத்துல என்னாலே என்னை கண்ட்ரோல் பண்ண முடியல, ரொம்ப கஷ்டப்படுத்திடுவேன், இந்த டார்ச்சர் உனக்கு வேண்டாம்..” அவன் உண்மையாக தான் சொல்கிறான் என்று புரிந்தது. “நான் ரொம்ப யோசிச்சு என்னை நானே சமாதானம் செஞ்சு தான் இந்த முடிவு எடுத்தேன்.., இதுக்கு நீ ஒத்துப்பன்னு தான் நான் நினச்சேன்.. ஆனா..?” அவன் இழுக்க, பல்லவி அவன் முகம் பார்க்க முடியாமல் எங்கேயோ பார்த்தாள். “உண்மை தானே..?” ஈஷ்வரின் உதடுகளும் மகிழ்ச்சியில் விரிந்தது. இதை விட எப்படி அவளை புரிந்து கொள்ள முடியும்..? அதுவரை கடினமாக இருந்த தன் முடிவு இப்போது உண்மைக்கும் மகிழ்ச்சியை தான் கொடுத்தது. “நீ நிம்மதியா படி, சந்தோஷமா இரு..” என்றான் உள்ளார்ந்து. “அதுக்காக இப்படி ஒரேடியா விலகி இருக்கணுமா..?” மனம் சுணங்கியது. “லவி.. நான்.. உனக்கு எப்படி சொல்ல, நான் உன்னை ரொம்ப படுத்துவேன், என்னால உன்கிட்ட லிமிட் மெயின்டன் பண்ண முடியாது, எதாவது செஞ்சிகிட்டே இருப்பேன், அது உனக்கு கஷ்டத்தை தான் கொடுக்கும்.. இன்னிக்கு அழுத மாதிரி அழுவ, இது வேண்டாம்.. நாம படிச்சு முடிக்கலாம்.. நம்ம வீட்லயும் நம்மளை ரொம்ப நம்புறாங்க, அவங்களையும் எதுக்கு வருத்தபட வைக்கணும்..? புரியுது தானே..?” “ம்ம்..” பல்லவி தலை ஆட்டினாள். “நான் உன் நம்பரை எடுத்துடுவேன், இருந்தா மெசேஜ் பண்ணிடுவேன்..” ஈஷ்வர் சொல்ல, பல்லவி என்ன சொல்வாள்..? “இப்படி இருக்காத, என்னை பாரு ப்ளீஸ்.. ம்ப்ச்.. லவி.. அப்படின்னாலும் கஷ்டப்படுற, இப்படினாலும் கஷ்டப்படுற, நான் என்ன தான் செய்யட்டும்..?” “நீங்க தான் என்னை இப்படி மாத்திட்டிங்க..?” “அதுக்கு தான் இப்போ பீல் பண்ணிட்டு இருக்கேன்டி..” என்றுவிட்டான். அவனின் சட்டென வந்துவிட்ட “டி..” இருவரையும் சலனப்படுத்தியது. சில நொடி அமைதி. நாம இப்போ எடுத்துகிற முடிவு தான் நல்லது. ஈஷ்வர் தெளிந்துவிட்டான். “ஓகே.. பை, நல்லா படி, சந்தோசமா இரு, நைட்ல நல்லா தூங்கு, எப்படியும் உன் தூக்கத்தை கெடுக்க நான் மூணு வருஷம் கழிச்சு நான் வருவேன், அதுவரைக்கும் பல்லவியா நீ ஹாப்பியா இரு..” ஈஷ்வர் பிரியும் வலியுடன் பேச, பல்லவிக்கு தொண்டை அடைத்தது. “லவி.. உனக்கு என் மேல கோவம் இல்லையே..?” “ ம்ஹூம்..” தலை மட்டும் ஆட்டினாள். அவன் சொல்வது அவள் எதிர்பார்த்தது தானே. அவள் வேண்டும் என்று நினைத்தது தானே. அவளுக்கான நேரம். “லவி.. எதாவது சொல்லு..” “என்ன சொல்லட்டும்..? பை யா..?” “அதுவும் சொல்ல தான் வேணும், அதுக்கு முன்னாடி என் பேர் சொல்லு..” சொல்ல முடியாது என்று முகம் திருப்பினாள். “ப்ளீஸ்.. லவி..” “ம்ஹூம்..” “லவி.. ப்ளீஸ்.. இன்னும் மூணு வருஷம் வரைக்கும் இது தான் எனக்கு.. கூப்பிடு..” பல்லவிக்கும் கூப்பிட வேண்டும் போல இருந்தது. அவளுக்காக யோசித்திருக்கிறான். அதுவே அவன் காதலை சொன்னது. அவன் சொன்ன போது இருந்த கோவம், வருத்தம் இல்லை. பிரியும் வேதனை உண்டு தான். “ஈஷ்வர்..” மிகவும் உள்ளார்ந்து, காதலாக கூப்பிட, ஈஷ்வர்க்கு சிலிர்த்து போனதோ. மொபைலை அவன் உதட்டருகே கொண்டு சென்றுவிட்டவன், உணர்ந்து தள்ளி பிடித்தான். “பை..” என்றான். “பை.. தேங்க் யூ..” அவளுக்காக யோசித்து தானே இந்த முடிவு. “தோணுச்சுன்னா உன்னை பார்க்க வருவேன், ஆனால் முன்னால வரமாட்டேன்.. பை லவி.. பி ஹாப்பி..” வைத்தே விட்டான்.