ஓஹ்.. அப்படி  உனக்கு ரொம்ப முடியலன்னா இன்னிக்கு காலேஜ் லீவ் போட்டுடு.. வீட்லே ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவ..”  பரணி சாப்பிட செய்ய, பல்லவிக்கு மெசேஜ் வந்த சத்தம்

பார்த்தால் ஈஷ்வர் தான். அவள் காலேஜ் பஸ் நிற்கும் ஸ்டாப்பில் காத்திருப்பதாக மெசேஜ் அனுப்பியிருந்தான்

ஐயோ.. இன்னிக்கு அவரை பார்த்தா கண்டிப்பா என்னை நானே காமிச்சு கொடுத்திடுவேன்..” அவன் புறம் மிகவும் வீக்காக உணர்ந்தாள்

இன்னிக்கு அவரை பார்க்கவே வேண்டாம்.. சட்டென முடிவெடுத்து விட்டவள், “நான் இன்னிக்கு காலேஜ் போலம்மா..”  என்றுவிட்டாள்.  

“என்ன காலேஜ் போலயா..? வீட்ல தனியா இருக்க போறியா..?” ஹாலில் இருந்து திரும்ப வந்தார் கோமதி

ஆமா பல்லவி நானும் பாட்டியும் இன்னிக்கு உங்க அத்தையை  பார்க்க போறோம் சொன்னோமே மறந்துட்டியா..?” ரத்னா கேட்டார்

போனா என்ன பல்லவியையும் உங்களோட கூட்டிட்டு போங்க, தங்கச்சி வீட்ல பல்லவியை  பார்க்கணும்ன்னு கேட்டுகிட்டு இருந்தாங்க இல்லை..” என்று மூர்த்தி வந்தார்

ஆமா கூட்டிட்டு போலாம்.. என் பொண்ணு இவளை பார்க்க கேட்டுட்டு தான் இருந்தா..”  மகள் என்று வரவும் கோமதி உடனே ஒத்துக்கொண்டார்

அப்பா.. அப்போ நீங்களே இவங்களை அத்தை வீட்ல விட்டுட்டு ஆபிஸ் போயிடுங்க, அந்த வழி தானே..”  பரணி சொல்ல, எல்லோரும் மூர்த்தியுடன் கிளம்புவது என்று முடிவானது

அங்கு ஈஷ்வரோ பஸ் ஸ்டாப்பில் இவளுக்காக காத்திருந்தவன், இவள் வரவில்லை எனவும்,  “லவி.. இன்னிக்கு நீ காலேஜ் வரலையா..?”  மெசேஜ் அனுப்பினான்

மூர்த்தி பக்கத்தில் அமர்த்திருந்த பல்லவி , பதில் ஏதும் அனுப்பாமல் வைத்துவிட்டாள். “கிளம்பிட்டிங்களா..?”  மூர்த்தி பெண்களை ஏற்றி கொண்டு கார் எடுத்தார்

அவர்கள் தெரு முனையில்  கார் சென்று கொண்டிருக்க, நரசிம்மன் கார் அவர்கள் தெருவிற்குள் நுழைந்தது. அந்த தொகுதிக்கு அவர் தான் MLA என்பதால் பல்லவி அவரை இது போல சில நேரங்களில் பார்ப்பதுண்டு

வெள்ளை வெட்டி சட்டையில், கண்ணாடி வழியே வெளியே பார்த்து கொண்டு சென்றவரை பார்த்த பல்லவிக்கு ஈஷ்வர் நினைவு தான். அவர் கார் பின் இரண்டு கார் செல்ல, அதுவரை ஓரங்கட்டியிருந்த மூர்த்தி அவர் கார் எடுத்தார்

தெரு முனையில் காரை லெப்ட் எடுக்க, இரு பைக் வேகமாக வந்து அவர் காரை உரசி சென்றது. எந்த ஹார்ன், இண்டிகேட்டரும் இல்லாமல் வந்தவர்கள், மூர்த்தி காரை உரசியதும் இல்லாமல், இறங்கி வந்து கார் ஜன்னலை அடித்து அவரை இறங்கவும் சொன்னனர்

மூர்த்தி அவங்க அந்த MLA  ஆளுங்கஎந்த சண்டையும் வேண்டாம், நீ சமாதானமா வந்துடு..” முன்னால் அமர்ந்திருந்த கோமதி மகனுக்கு சொல்லியே அனுப்பினார்.

வண்டி வர்றது கண்ணுக்கு தெரியல, இஷ்டத்துக்கு கார் திருப்புற, ஆமா நீ இந்த தெரு ஆள்தானே, உனக்கு நாங்க வரது தெரியல, இன்னொரு முறை இப்படி பண்ண திருப்ப கார் இருக்காது..”  ஒருவன் அடாவடியாக பேச

தம்பி.. தப்பு  என் மேல இல்லை, அது உங்களுக்கும் தெரியும், எனக்கு நேரம் ஆச்சு..”  என்று மூர்த்தி  கார் கிளப்பி கொண்டு வந்துவிட்டார்

இவனுங்க ரவுசு  தாங்க முடியல, அராஜகம் பிடிச்சவங்க, இந்த தெருவுக்கு ஏன்தான் வந்தோம்ன்னு இருக்கு.. எப்போ பாரு எதாவது வம்பு தான்..” 

ஆமாத்தை.. தப்பா வந்தது அவங்க, பேசுறதை பாருங்க மிரட்டுற மாதிரி..”

ரத்னா அவங்க எல்லாம் அப்படி தான். அவங்களை போல ஆளுங்க மூச்சு காத்து கூட நம்ம மேல படறது நமக்கு தான் நிம்மதி கெடுக்கும்..”

சரிதான்ம்மா.. அதான் நாம ஒதுங்கி போயிடுறது.. எதுக்கு வீணான தொல்லைன்னு..”  மூவரும் திட்டி கொண்டே  வர, பல்லவி ஹாண்ட்ஸ் ப்ரீ வைத்து தன் காதை மூடி கொண்டாள்.  

மெசேஜ் வரும் சத்தம் கேட்க, பார்த்தால் ஈஷ்வர் தான். “உன் காலேஜ் பஸ் கிளம்பிடுச்சு, ஏன் வரல..?  லீவா..?”  

ஆர் யூ ஓகே..?”  அடுத்த மெசேஜ். பார்த்தவள் ஆப்லைன் போய்விட்டாள். சிறிது நேரம் சென்று மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள். திரும்ப தனக்குள் மறுக ஆரம்பித்தாள்

அங்கு ஈஷ்வரோ நேற்றிரவு  தன் மனதை அவளிடம் சொன்ன உற்சாகத்தில் இன்று அவளை  பார்க்க ஓடிவந்திருந்தான். அவள் வரவில்லை. மெசேஜ் அனுப்ப, பார்த்தும் எப்போதும் போல பதில் இல்லை. ஓய்ந்து தான் போனான் திகம்பரன். முழு சந்தோஷமும் அப்படியே வடிந்து போனது

காலேஜ் கிளம்பிவிட்டான். அங்கு சென்றும் எதிலும் ஒட்டவில்லை. “ச்சே.. வீட்டு பக்கம் போய் பார்த்திருக்கணும்..”  மெசேஜ் ஒன்டிக் காட்டியது. என்னவா இருக்கும்..? இப்படி இருத்ததில்லையே

அவ்வளவு சீக்கிரம் லீவ் போட மாட்டாளே..? வேறெதுவும் இருக்குமோ..?”  அவளையே நினைத்திருந்தான். சில  மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. காலேஜிலிருந்து கிளம்பிவிட்டான்.

பல்லவி வீடு பக்கம் இரண்டு மூன்று முறை சுற்றினான். பூட்டியிருந்த வீடு திறக்கவே இல்லை. “காலேஜ் போயிருப்பாளா..? எப்படி தெரிய..?  வெளியே எங்கேயாவது போயிருப்பாங்களா..? வீடும் பூட்டி தானே இருக்கு..”

அவளுக்கு எதுவும் இல்லை என்று உள்மனம் உறுதியாக சொன்னாலும் அவன் கேட்கும் நிலையில் இல்லை.

“அவ நல்லா இருக்கா.. எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பே இல்லை.. பாரு வீடு பூட்டியிருக்கு.. பேமிலியோட வெளியே போய் இருப்பா.. நீ வீட்டுக்கு  போடா..”  அவனின் மூளை கட்டளையிட, ஈஸ்வரோ அசைந்தான் இல்லை

காதல்  அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்தது. அதன் மாயவலை அதனுள் அவனை இழுத்து கொண்டதுஅவளை பார்த்தால் தான் ஆச்சு என்று அவள் தெரு பக்கமே சுற்றி கொண்டிருந்தான்

நரசிம்மனுக்கும் இங்கு தான் இருக்கிறேன் என்று எதுவும்  சொல்லவில்லை. காதல் அவனை எதுவும் யோசிக்க விடாமல் செய்தது. யார் யார் அவனை பார்க்கிறார்கள் என்று கூட உணராமல் சுற்றி கொண்டிருந்தான்

கங்கா போன் செய்த போது தான் மதிய உணவு நினைவிற்கு  வந்தது. “நான் பிசியா இருக்கேன்ம்மா, லன்ச் கேன்டீன்ல பார்த்துகிறேன்..”   சொல்லி வைத்துவிட்டான்

விஷ்ணு போன் செய்ய, எடுக்கவே இல்லை. அவனிடம் பொய் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டான். சொன்னால் கோவப்படுவான். “படிக்காம இதெல்லாம் என்ன..?” என்று காது தீய்ந்துவிடும்

வெளியே சுற்றியது தண்ணீர் தாகம், தலை வலி இரண்டும் சேர்ந்தது. மெயின் ரோடில் இருக்கும் கபே  சென்றவன்தலைவலிக்கு காபி  மட்டும் வாங்கி குடித்தான். வேர்த்த சட்டை முதல் பட்டனை எடுத்துவிட்டான்

நேரம் பார்த்து அங்கேயே அமர்ந்திருந்தான். காலேஜ் விடும் நேரம் கணக்கில் கொண்டு திரும்ப பல்லவி வீடு பக்கம் சென்றான். பூட்டி தான் இருந்தது. இதற்கு மேல் தாங்கவே முடியாது எனும் நிலையில், 

“லவி ப்ளீஸ்.. நீ எனக்கு பேச வேண்டாம், மெசேஜ் பண்ண வேண்டாம், எதுவும் வேண்டாம், ஜஸ்ட் ஓகே வா இருக்கியான்னு மட்டும் சொல்லு போதும்..”  வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவன், பைக்கிலே கை கட்டி அமர்ந்தான். 

சில நிமிடங்கள் சென்று  அவனை கிராஸ் செய்த கார் பல்லவி வீடு முன் நின்றது.  ஒரு இளைஞன் இறங்கி முன் பக்க கதவை திறந்துவிட கோமதி இறங்கினார். பின் பக்க கதவை திறந்து கொண்டு ரத்னா இறங்க, மறுபக்கம் பல்லவி இறங்கினாள். 

அந்த இளைஞன் சென்று அவளிடம் ஏதோ சொல்ல சிரித்தவள், அவனுடனே நடந்தாள். பார்த்த ஈஷ்வர் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. 

புது மொட்டு மல்லி வைத்திருந்தவளின் பளிச்  சிரித்த முகம், அந்த நொடி வரை பார்த்தே ஆக வேண்டும் என்று தவித்த முகம்..  பார்க்காமல் முகம் திருப்பினான். 

அவளின் கையில் இருந்த மொபைல் பார்க்க, பிடுங்கி உடைக்கும் ஆத்திரம். ரத்னா முன் பக்க கேட்டை திறந்து கொண்டிருக்க, அந்த இளைஞனுடன் பேசி கொண்டிருந்த பல்லவி ஏதோ தோன்ற டக்கென திரும்பி பார்த்தாள். 

சில அடி இடைவெளி உள்ள மரத்துக்கு அடியில் ஈஷ்வர் பைக்கில் அமர்ந்திருந்தான். ஹெல்மெட் கழட்டி வைத்திருக்க, அவன் முகம் நன்றாகவே தெரிந்தது. பார்த்த பல்லவி அதிர்ந்து தான் போனாள். 

வெயிலில்   சுற்றியது, சரியாக சாப்பிடாதது,   கருத்து, வேர்த்து, மிகவும் சோர்ந்து வாடி போயிருந்தான். காலேஜ் போகலையா..? இங்கேயே தான் இருந்தாரா..? 

அவனை விலக்கி  வைக்க  வேண்டும் என்று  மட்டுமே நினைத்தாள். இப்படி தவிக்க வைக்க நினைக்கவில்லையே..? 

பல்லவி..” அந்த இளைஞன் கூப்பிட

ஆங்..” என்றவள், அவன் கேட்டிற்குள் கை காட்ட ஈஷ்வரை பார்த்துக்கொண்டே  வீட்டிற்குள் சென்றவள், “நான் ரூம் போறேன்..” என்றுவிட்டு மெல்ல  வீட்டின் மொட்டை மாடிக்கு தான் ஓடினாள். 

ஈஷ்வர் இன்னும் அங்கு தான் இருந்தான். கை கட்டி கண் மூடி பைக்கின் மேல் அமர்ந்திருந்தான். பல்லவி வேகமாக மொபைல் ஆன் செய்தவள், நெட்டையும் ஆன் செய்ய, மெசேஜ் வந்து குவிந்தது. 

கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆன் செய்து காதுக்கருகில் வைத்து கேட்டாள். அவனின் குரல்.. அந்த தவிப்பு.. அப்படியே உணர, மிகவும் குற்ற உணர்ச்சி திகம்பரிக்கு. 

அவனுக்கு காலே செய்துவிட்டாள். கண் திறந்த பார்த்த ஈஷ்வர் மொபைல் எடுத்து பார்க்க, இவள். நிமிர்ந்து அவள் வீட்டை பார்த்தவன், மாடியில் நின்ற பல்லவியை கண்டு கொண்டான். 

அவள் அங்கிருந்தே ப்ளீஸ்.. என்று மொபைல் காண்பிக்க, இவன் அவளையே தான் பார்த்தான். அவனின் பார்வையில் பல்லவியின் கண்கள் கலங்கி போக, கெஞ்சலாக பார்த்தாள். 

ஈஷ்வரோ  இமை கூட சிமிட்டாமல் அவளை பார்த்தவன் பார்வை கேட்டது என்னமோ..? என்னை என்ன செய்ய பார்க்கிற..? என்ன தாண்டி வேணும் உனக்கு..? என்பதே.

“ஏன் ஒரு பாதி சிரித்தாய்..?

என் உயிர் பூவை எரித்தாய்..?

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்..

முறையா என்றேன் கண்கள் பறித்தாய்..

 என் வலி தீர ஒரு  வழி என்ன..?