விஷ்ணுவிற்கு அந்த மொபைலை பிடுங்கி உடைக்கும் ஆத்திரம் தான். ஆனால் மகாவை புரிந்தவன் என்பதால் அதை விட்டுவிட்டான். இதை உடைத்தால் இன்னொன்று இரவிற்குள் வாங்கி விடுவாள். செய்யாத என்றால் செய்யும் ரகம். எப்படியோ போ.. விஷ்ணு எரிச்சலுடன் கீழிறங்கி விட்டான்.

“ஏய்.. விஷ்ணு..”  அவனின்  கல்லூரி நண்பர்கள் கடையில் இருந்து வெளியே வந்தவர்கள், இவனை பார்த்ததும் பேச ஆரம்பித்துவிட்டனர்

ஏண்டா  இன்னிக்கும் காலேஜ் வரல..? சார் ரொம்ப கோவபட்டார்..”  நண்பர்கள் கேட்டு கொண்டிருக்க, அதில் ஒரு பெண் விஷ்ணுவை பார்க்காமல் பார்த்து கொண்டிருந்தாள்

காருக்குள் இருந்து அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகா கண்ணில் அது பட்டுவிட, மிகவும் உற்சாகமாக அந்த பெண்ணையும், விஷ்ணுவையும் மாறி மாறி பார்த்தாள். கவனித்த சில நொடிகளிலே புரிந்தது அந்த பெண்ணின் ஒன் சைட் காதல். விஷ்ணு அவள் பக்கம் கூட திரும்பவில்லை

க்கும்.. அதானே பார்த்தேன்.. இந்த சூடு தண்ணி போய் ஐஸ் கிரீம் கூட மிங்கிள் ஆகுமா..? இதுக்கு இன்னொரு கொதிக்கிற தண்ணீர் தான் சரிவரும்..”  மகா நொடித்து கொண்டாள்

ஈஷ்வர் பர்கருடன் வர, விஷ்ணு நண்பர்களிடம் விடைபெற்று காரை எடுத்தான்நேரே வீட்டிற்கு செல்ல, மகா குளித்து வந்து பர்கரை சாப்பிட, ஈஷ்வர் தோட்டத்திற்கு சென்றவன் எப்போது இரவு வரும் என்று வானத்தை பார்த்தான்

பல்லவியிடம் பேசாமல் மனம் ஒரு நிலையிலே இல்லை. நேரத்தை கடத்த சோஷியல் மீடியா எல்லாம் சுற்றி வந்தவன் நேரம் பார்க்க, பத்து நிமிடம் தான் சென்றிருந்தது. ம்ப்ச்.. டைம் நகராதே.. அங்கேயே நடக்க, விஷ்ணு அவனை தேடி வந்தவன், புரிந்து சிரித்தான்

சிரிக்காத விஷ்ணு.. கண்டாயிடுவேன்..” ஈஷ்வர் கடுப்படிக்க

இது தான் காதல் நோய்.. மருந்து இன்னும் கண்டுபிடிக்கல.. வந்தா உனக்கு முதல்ல தரேன்..” மேலும் சிரித்தவன், ஈஷ்வர் அவனை அடிக்க வரவும், ஓடினான்

அப்படியே நேரத்தை நெட்டி தள்ள, இரவு உணவிற்கு கங்கா கூப்பிட்டார். பேருக்கு இரண்டு தோசை சாப்பிட்டவன், அவர் கூப்பிட கூப்பிட ரூமுக்கு சென்றுவிட்டான்

அத்தை.. அவனுக்கு தலை வலிக்குது, டேப்ளெட் போட்டிருக்கான் சரியாகிடுவான்..” விஷ்ணு சொல்லி வீட்டுக்கு கிளம்பிவிட்டான்

ரூமிற்கு சென்ற ஈஷ்வர் மெசேஜ் அனுப்பினான் எப்போது கால் செய்ய என்று. சில நிமிடங்கள் சென்றே பார்த்தாள் பல்லவி. ஆனால் பதில் இல்லை

அரை மணி நேரம் சென்றது. பொறுக்க முடியாமல் திரும்ப ஒரு மெசேஜ். அதற்கும் பார்த்து பதில் இல்லை. நேரடியாக கால் செய்துவிடலாம் என்று நினைக்க, பல்லவியிடம் இருந்து மெசேஜ்

அவளே கூப்பிடுகிறேன் என்று..” முதல் பதில் அவளிடம் இருந்து. ஈஷ்வர் முகம் மலர்ந்தது. மேலும் அரை மணி நேரம் சென்றது. இந்த முறை பொறுமையாக காத்திருந்தான். ஆனால் அந்த காத்திருப்பு நீண்டு கொண்டே சென்றது

அவள் மீதான காதல் உணர்ந்த போதும் இப்படி தான் அழுத்தமான மனநிலை.  இதோ இப்போதும் காதலை அவளிடம் சொல்ல வேண்டும்.. அதுவும் மனதில் உள்ளதை சரியாக சொல்ல வேண்டும் என்பதில்  அழுத்தம்  கூடியது

ரூமிலே நடக்க ஆரம்பித்துவிட்டான்.   எவ்வளவு நேரம் நடந்தானோ..? நேரம் பார்க்க பதினொன்றுக்கு மேல் சில நிமிடங்கள். “கூப்பிட மாட்டாளா..?” ஈஷ்வருக்கு ஏமாற்றம் கோவத்தை கொடுத்தது

கூல் ஈஷ்வர்.. கூல்..” தன்னை தானே கட்டுப்படுத்தி கொண்டவன் பால்கனி வந்து நின்றான். மழை மேகம் தான் இன்னும் வானத்தில். மழை இல்லை. இதுவும் அவள் போல தான் நினைத்து வானம் பார்த்தான்

பாக்கெட்டில் இருந்த மொபைல் வைப்ரேட் ஆகவும், அவசரமாக எடுத்தான். அவள் தான்

லவி..” ஆழ்ந்த குரல். பரவசம் வெளிப்படையாக தெரிந்தது.

“சொல்லுங்க..” பல்லவியின் கிசு கிசு குரல் ஈஷ்வர் காதை மட்டும் இல்லை மனதையும் நிறைத்தது. அவனின் உதடுகள் விரிந்தது

ஏன் இவ்வளவு மெதுவா பேசுற..?”

பாட்டி இருக்காங்க..”

அவங்க கூடவா ரூம் ஷேர் பண்ணுவ..?”

இல்லை.. நைட் தூங்க மட்டும் பாட்டி கூட.. என் ரூம்ல தனியே தூங்கவிட மாட்டாங்க..”

ஓஹ்.. எப்படி பேசுற..? பாட்டி முழிச்சிடுவாங்களா..?”

தெரியல.. பாட்டி மாத்திரை போட்டு தான் தூங்குவாங்க.. இருந்தாலும்..” இழுத்தாள்

ஓகே.. சீக்கிரம் பேசி வச்சிடுறேன்..” என்றான் அவள் நிலை உணர்ந்து.

“நான் வேணா நாளைக்கு கூப்பிடுவா..?” ஈஷ்வருக்கு அதுவரை பொறுக்க முடியும் என்று தோன்றவில்லை

பேசிடுறேன் லவி.. இல்லை நைட் என்னால தூங்க முடியாது..”

ம்ம்..”

நீ இப்போ எதுவும் பேச வேண்டாம்.. நான் பேசுறதை கேட்டா மட்டும் போதும்..”

“சொல்லுங்க..”

ம்ம்..” ஈஷ்வர் மூச்சை இழுத்து விட்டான். சில நொடி அமைதி. அவன் காதல் சொல்ல ஆரம்பித்தான்.

நான் டென்த் படிக்கும் போது நீ நைன்த் கிளாஸ்க்கு நம்ம ஸ்கூல் வந்த.. பர்ஸ்ட் உன்னை பார்க்கும் போது ரொம்ப கியூட்டா தெரிஞ்ச.. பார்த்தேன்.. ஜஸ்ட் பார்த்தேன் அவ்வளவு தான், வேறெந்த எண்ணமும் இல்லை உன்மேல..”

நான் பார்க்கிறதை வச்சு பசங்க கிரஷ்ன்னு பேர் வச்சாங்க.. நான் அதை மைண்ட் பண்ணிக்கல, எனக்கு நீ கியூட்டா இருக்க.. நான் பார்க்கிறேன்.. இந்த எண்ணம் தான்.. இது அப்போ மட்டும் இல்லை, நான் ப்ளஸ் டூ முடிக்கிற வரைக்குமே தான்..”

அதனால தான் என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் ஸ்கூல் முடியும் போது உனக்கு ப்ரொபோஸ் பண்ணலயான்னு கேட்டப்போ சிரிச்சிட்டு கடந்துட்டேன்.. ஆனா ஒன்ஸ் காலேஜ் போனப்பறம் தான் எல்லாம் மாறிச்சு..”  நிறுத்த, அந்த பக்கம் பல்லவி அவன் சொல்வதை உள்வாங்கி கொண்டிருந்தாள்

“லவி.. நான் இப்போ சொல்ல போறதை சரியா புரிஞ்சுக்கோ..” கொஞ்சம் தடுமாற்றத்துடன் சொல்ல, பல்லவி புருவம் சுருங்கியது

ஸ்கூல் லைப் முடிஞ்சு  காலேஜ் போனப்போ எல்லோரையும் போல எனக்கும் பயங்கர எக்ஸைட்மென்ட்.. டீனேஜ்ல இருந்து அடல்ட் ஸ்டேஜ். என்னோட காலேஜ் உனக்கு தெரியும் இல்லை கோஎஜுகேஷன். அங்க நம்ம ஊர் பொண்ணுங்க மட்டுமில்லை  அதர் ஸ்டேட் பொண்ணுங்களும் உண்டு..”

அதுல ஒரு பொண்ணு.. க்கும்.. நார்த் சைட்.. பேர் ஹீனா.. என்னோட கிளாஸ் தான். அவளுக்கு என்மேல ஒரு தாட் போல. என்னை பார்ப்பா.. பேச ட்ரை பண்ணிட்டே இருப்பா.. எனக்கு அது ஒரு கெத்தா இருந்தது. பசங்க அவளை வச்சு என்னை பேசும் போது  முதல்ல கொஞ்சம் கெத்தா இருந்தாலும் போக போக ஒரு மாதிரி.. பிடிக்கல..”

கோவம் கூட வர ஆரம்பிச்சது. அவ பேச வந்தா அவாய்ட் பண்ணேன், பசங்களை பேசாதீங்கன்னு கத்திவிட்டுட்டேன்.. நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கே புரியல, கொஞ்ச நாள் ஒரு மாதிரி அழுத்தம் மனசுல..”

உன் ஞாபகம் அடிக்கடி. முன்னமும் நினைப்பேன் தான், ஆனால் அது ஜஸ்ட் ஒரு ரிமெம்பரிங்கா தான் இருக்கும். பட் அப்பறம் உன்னை நிறையவே நினைக்க ஆரம்பிச்சுட்டேன், போக போக பார்க்கணும்ன்னு ஆசை. உனக்கு தெரியாம உன்னை பார்க்கவும் ஆரம்பிச்சேன்..”

எனக்கே புரிஞ்சு புரியாமல் சுத்திட்டு இருந்தப்போ தான்  விஷ்ணு கேட்டான், ‘உன் ப்ரண்ட்ஸ்  பல்லவி கூட உன்னை  சேர்த்து பேசும் போது சிரிச்சிட்டே இருப்ப, இப்போ மட்டும் ஏன் கோவம் வருதுன்னு..’ அவன் எப்போவும் ரொம்ப ஈஸியா மனசை படிச்சிடுவான், யோசின்னு.. சொல்லிட்டு போயிட்டான்..”

உண்மையை சொன்னா எனக்கு யோசிக்க ஒரு நிமிஷம் கூட தேவைப்படல. என்னை புரிஞ்சது..  நீ யார் எனக்குன்னு உணர ஆரம்பிச்சுட்டேன். பட் உன்கிட்ட சொல்ல முடியல, நீ இன்னும் டீனேஜ்ல தான் இருந்த.. இந்த ஒரு வருஷம் நீ எப்போ ஸ்கூல் முடிப்பன்னு நாள் எண்ணவே ஆரம்பிச்சுட்டேன்..”

அட்லாஸ்ட் உன்கிட்ட சொல்லவும் வந்தேன்.. ஆனா சொல்ல முடியல.. இப்போ சொல்லணும் போல இருக்கு.. சொல்லட்டா..”  பல்லவியிடமே கேட்டான்

அவள் அந்த பக்கம் வேர்த்து போனாள்.   “ப்ளீஸ்..” மிகவும் மெல்லிய குரல். அவளின் தவிப்பு உணரும் குரல்

ஏய் பயப்படாத.. நீ பயந்து என்னையும் பயமுறுத்தாத..” 

அந்த பக்கம் பல்லவியின் வேர்த்த உள்ளங்கைகள் மொபைலை நழுவ வைக்கஇறுக்கி பிடித்தவள், “ப்ளீஸ்.. இப்போ எதுவும் வேண்டாம்..” மறுத்தாள்

சரி ஓகே.. இப்போ வேண்டாம்.. எப்போன்னு நீயே சொல்லு..”  ஈஷ்வர் தன் ஏமாற்றத்தை மறைத்து கேட்டான்

எனக்கு தெரியல..”

லவி.. என்னை மட்டும் பாரு.. என் பேமிலி, அப்பா எல்லாம் எனக்கு பின்னாடி தான் உனக்கு, புரியுது தானே..?”

அதெப்படி..?” பல்லவியின் மனதில் கேள்வி. மௌனம் காத்தாள்

லவி.. பேசு..”

ம்ப்ச்.. லவி..”

 என் காதல் இவளுக்கு புரியலையா..? என்னை இவ உணரலையா..? அதுவரை இருந்த குளிர்ச்சி மாறியது. தனக்குள்ளே சூடாக உணர்ந்தான்

“இல்லை.. இவளுக்கு என்னை புரியும், தெரியும்..” உள்ளுணர்வு அடித்து சொன்னது

எனக்கு உன்னை பார்க்கணும்..” என்றான்

என்ன..?” பல்லவி அதிர்ந்து கேட்க

இப்போவே உன்னை பார்க்கணும்.. வீடியோ கால் வரேன்..” கட் செய்துவிட்டான்

சொன்னபடி வீடியோ கால் வரபல்லவிக்கு கைகள் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது. எங்கு என்று பேச..? ரூமிற்குள் இடம் தேட, உடை மாற்றும் தடுப்பு தெரிய, அதன் பின் சென்று அட்டண்ட் செய்தாள்

மிக மெல்லிய வெளிச்சத்தில் அவளின் முகம். பார்த்தே இருந்தான். பல்லவி எட்டி பாட்டியை பார்த்தவள், “சொல்லுங்க..” என்றாள். ஹாண்ட்ஸ் ப்ரீ காதில் இருக்க, முகத்தில் பதட்டம்

பல்லவி..  ஒரு டூ மினிட்ஸ் என்னை மட்டும் பாரு..”  ஈஷ்வர் குரல்  அழுத்தமாக  காதில் ஒலித்தது. அதில் தெரிந்த மாற்றமும் புரிந்தது.

அவளை மிகவும் தீர்க்கமாக பார்த்தவன்,  “நான் இப்போ வேறெதுவும் சொல்ல போறதில்லை.. ஜஸ்ட் இது மட்டும் தான் சொல்ல போறேன்.. ரிலாஸ்க்ஸ்..” என,  

என்ன சொல்ல போறான்..?” பல்லவி கண்கள் சுழன்றது

லவி.. லுக் அட் மீ..”  ஆண்மகனின் அடிக்குரல் அவளை வசியம் செய்ய கண்கள் அவன் மேல் நிலைத்தது. அவனின் கண்கள் அவளை காதலாக பார்க்க, உதடுகள் அசைந்தது

லவி.. யூ ஆர் மை கேர்ள்.. நீ எனக்கானவ..” அதே அடிக்குரல் பல்லவியின் காதில் இறங்க, அவள் தவிப்புடன் உதடு கடித்தாள்

ஈஷ்வர் கண்கள் அவள் கடித்த உதடுகளில் பதிய, பல்லவி அதனை கொஞ்ச கொஞ்சமாக விடுவித்தாள். பார்த்த ஈஷ்வர் தொண்டை குழி ஏறி இறங்கியது. இரவு நேரம், முகத்தின் அருகில் அவளின் பெண்.. ஆண்மகனின் நுண்ணிய உணர்வுகளை முதல் முதலாக கிளம்பியது

க்கும்..” கரகரத்த தொண்டையை செருமியவன், “இது மட்டுமாவது சொல்ல தோணிச்சு,  சொல்லிட்டேன்.. அடுத்து நான் சொல்ல  நினைச்சதை எப்போ சொல்லணும்ன்னு நீ தான் சொல்லணும்..”   கேட்டான்

நான்.. நானே சொல்றேன்.. வச்சுடவா..”

ம்ம்.. எதாவது சொல்லிட்டு வை..”

என்ன சொல்லட்டும்..?”

என் பேர்..”

என்ன..?”

ப்ளீஸ்.. வேறெதுவும் நான் கேட்கல.. இது மட்டும்..”

நான் எப்படி..?”

ஏன் சொல்லு..” விடமாட்டான் புரிந்தது

அவளின் உதடுகளை ஈரம் செய்து கொண்டவள், “ஈஷ்.. ஈஷ்வர்..” என்றாள்

சொல்லும் போது அசைந்த அவளின் உதடுகள், அந்த மெல்லிய குரல்.. அதில் அவன் உணர்ந்த உணர்வு.. அவ்வளவு திருப்தி

பை..” நிறைந்த மனதுடன்  ஈஷ்வர் போன் வைத்தான்

இங்கு பல்லவியின் கன்னத்தில் கண்ணீர் கோடாக இறங்க, மொபைலை நெஞ்சோடு இறுக்கி பிடித்தாள்

“காலம் சொல்வதை காதல் கேட்பதுவும் இல்லை.. 

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை..

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..?”