திகம்பரனின் திகம்பரி அவள் 8

“இப்போ எதுக்குடா அவகிட்ட இப்படி எல்லாம் பேசின..? அவ ஏற்கனவே என்னை எப்படி ரிஜெக்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கு.. இதுல அய்யா வேற  உள்ள வந்து அவளுக்கு ஐடியா எடுத்து கொடுக்கிறாரு..”  ஈஷ்வர் கோவமாக விஷ்ணுவிடம் பேசிவிட்டு வேக நடையுடன்  பார்க்கிங் சென்றான்

டேய்.. நான் அவ மனசுல என்ன நினைக்கிறான்னு தான் சொன்னேன்..”  விஷ்ணு அவனின் பின் செல்ல, ஈஷ்வர் அவனின் பைக் இருக்குமிடம் சென்றவன், அதை கிளப்ப, விஷ்ணு பைக்கில் இருந்த கீயை எடுத்தான்

ம்ப்ச்.. விஷ்ணு.. கீ கொடு..”

ஈஷ்வர்.. காம் டவுன்.. ஏன் இவ்வளவு கோவம்..?”

உனக்கு புரியாது விடு..”

எனக்கு எப்படி புரியாம இருக்கும்..? நான் ஜஸ்ட் பல்லவியை கெஸ் பண்ணேன் அவ்வளவு தான்.. அண்ட் உனக்கு தெரியும் இல்லை என்னோட பிரச்சனையே ரொம்ப சீக்கிரம் மனுஷங்களை கண்டுபிடிக்கிறது தான்..”

நீ பேசாம மாஸ்டர் சைக்காலஜி பண்ணு, அது தான் உன்னோட பிரச்சனையை, ப்ரொபஷனா  மாத்தும்..”

ம்ம்.. இது தான் என் மச்சிங்கிறது.. கரெக்ட்டா என்னை பிடிச்சுட்ட.. நானும் அதை தான் நினைச்சிட்டு இருக்கேன்..” விஷ்ணு பேசி கொண்டிருக்க, ஈஷ்வர் அவனின் கையில் இருந்த கீயை பிடுங்கி ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்


டேய்.. ஈஷ்வர்..” விஷ்ணு அவனின் பின்னால் கத்தி கொண்டிருக்க, ஈஷ்வரோ அளவில்லா ஏமாற்றத்துடன் சென்று கொண்டிருந்தான். வரும் போது இருந்த மனநிலை என்ன..? இப்போது இருக்கும் மனநிலை என்ன..? 

தான் காதல் சொன்னவுடனே  பல்லவி ஏற்று கொள்வாள் என்றெல்லாம் ஈஷ்வரே எதிர்பார்க்கவில்லை. தயங்குவாள், டைம் கேட்பாள் என்றே நினைத்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ய போனான்

ஆனால் இறுதியில் அவன் காதலையே அவன் சொல்லவில்லை. காதல் சொல்லாமலே பல்லவி இது சரி வராது என்று அவனின் காதலுக்கு முடிவுரை எழுத பார்க்கிறாள்

உனக்கு என்னை பத்தி தெரியலடி..” பல்லவியை நினைத்தபடி வீட்டிற்கு சென்றான்

வந்துட்டியா ஈஷ்வர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட..?” கங்கா மகனை கவனித்து வர, அவனோ சோபாவில் விழுந்தவன்

ம்மா.. ஜுஸ்..” என்றான்

சாப்பிட்டியா முதல்ல..” மகனின் சோர்ந்த முகத்தை பார்த்து கங்கா கேட்க, ஈஷ்வருக்கு அப்போது தான் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது. ச்சு.. விஷ்ணுவை வேற விட்டுட்டு வந்துட்டோம்.. போன் எடுத்து அவனுக்கு அழைக்க, ரிங் சத்தம் வாசலில் கேட்டது

என்ன அதிசயம்.. விஷ்ணு மகாபிரபு வீட்டுக்கு எல்லாம் வரார்..”  கங்கா விஷ்ணு பார்த்து ஆச்சரியமாக கேட்டார்

என்ன செய்ய அத்தை..? ஒருத்தனை நம்பி போனா அவன் என்னை நடுவழியிலே விட்டுட்டு வந்துட்டான்..”  ஈஷ்வரை முறைத்தபடி சொல்ல,

நீ செஞ்ச வேலைக்கு உன்னை கடல்ல தூக்கி போட்டு வந்திருக்கணும்..” ஈஷ்வர் கடுப்பாக முணுமுணுத்தான்

சரி வாங்க.. முதல்ல சாப்பிடலாம்..” கங்கா டேபிள் செல்ல, இருவரும் ரிப்ரெஷ் செய்து சாப்பிட சென்றனர்.

“அப்பா எங்கம்மா..?” ஈஷ்வர் சாப்பிட்டு கொண்டே கேட்க

வெளியே போய்ட்டு  இப்போதான் வந்தவர் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க போயிருக்கார்.. நாலு மணிக்கு கூட்டம் இருக்காம்..”  கங்கா பரிமாறியபடி சொன்னவர்,  “விஷ்ணு.. இன்னும் கொஞ்சம் மட்டன் வச்சுக்கோ..”  அவனுக்கு வைத்து, ஈஷ்வருக்கு வைக்க, அவன் எனக்கு போதும்.. என்று கை கழுவவே சென்றுவிட்டான்

என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப கொஞ்சமா சாப்பிட்டிருக்கான்..”  கங்கா யோசனையுடன் மகனை பார்த்தார். விஷ்ணு சாப்பிட்டு முடிக்க, இருவரும் ஈஷ்வர் ரூம் சென்றனர்

விஷ்ணு பெட்டில் படுக்க, ஈஷ்வர் கண் மூடி அமர்ந்தான். அவனுக்கு என்னமோ பல்லவி அவனின் பேச்சை காது கொடுத்து கேட்பாள் என்று தோன்றவில்லை

அவளின் நம்பருக்கு வாட்ஸ் ஆப்பில்  மெசேஜ் அனுப்பினான் எப்போது கூப்பிடட்டும் என்று. பார்த்து பதில் வரவில்லை. சில நிமிடங்கள் சென்று திரும்ப மெசேஜ் போட்டான். அதற்கும் பதில் இல்லை. அனுப்புவாள் என்று நம்பிக்கையும் இல்லை

கால் செய்யலாமா..?” யோசிக்க, அவளின் நிலை அங்கு வீட்டில் என்னவோ என்று அதை விட்டான். இரவு அவரை பல்லவியின் பதில் மெசேஜுக்காக காத்திருக்க, அப்படி ஒன்று வரவே இல்லை

அன்று மட்டுமில்லை அடுத்த சில மாதங்களுமே பல்லவி அவனின் மெசேஜுக்கு பதில் அனுப்பவில்லை. கால் செய்யவும் சொல்லவில்லைஈஷ்வர் விடாமல் தினமும் மெசேஜ் அனுப்பி கேட்டான்

அவள் சொல்லாமல் கால் செய்ய கூடாது என்று வைராக்கியமும். “பார்ப்போம் இன்னும் எத்தனை நாளைக்கு என்னை சுத்தல்ல விட்றான்னு..?” 

அடுத்த சில வாரங்களில்  ஈஷ்வரின் முதல் வருட செமஸ்டர் முடிந்தது. சம்மர் லீவ்தோணும் போதெல்லாம் பல்லவி வீடு பக்கம் சென்று வந்தான். சில நேரம் பார்க்க முடிந்தால் பல நேரம் பார்க்க முடிவதில்லை

பல்லவிக்கு ரிசல்ட் வந்த போது, “அடுத்து என்ன செய்ய போற..? எந்த காலேஜ்..? சென்னையிலே இரு..”  பல மெசேஜ். பார்த்தால் தான். வழக்கம் போல பதிலில்லை

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் தான் எடுக்க போகிறாள் என்று தெரிய, “எங்க காலேஜ் வா..”  என்றான் மெசேஜில். ம்ஹூம்.. மேடம் மகளிர் காலேஜ் சேர்ந்தாள். மெசேஜில் கோவமான ஆங்கிரி ஸ்டிக்கர் பறந்தது

லீவ் முடிய, இன்னும் சில நாட்களில் காலேஜ் தொடங்கி விடும் என்பதால் அண்ணனுடன் ஷாப்பிங் சென்று வந்தாள். ஈஷ்வர் பொறுமையாக அவளை தொடர்ந்தான். பல்லவி பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் சென்றாள்

முதல் வருட காலேஜ் சேரும் நாளும் வந்தது. கோவிலுக்கு சென்று அப்பாவுடன் காலேஜ் சென்றாள். சிக்னலில் பைக் ஹார்ன். திரும்பி பார்க்கவும், ஹெல்மெட் கழட்டி சிரித்த ஈஷ்வர்கட்டை விரல் உயர்த்தி காண்பித்தவன்,  “ஆல் தி பெஸ்ட்..”   என்று உதடு அசைத்தான்

சிக்னல் முடியவும் கிளம்பிவிட்டான். அவள் காலேஜ் பக்கம் சென்று நிற்க முடியாது. போலீஸ் கெடுபிடி.   “பர்ஸ்ட் டே காலேஜ்  எப்படி போச்சு..?” மாலை மெசஜ் அனுப்ப, இந்த மெசேஜுக்கும் பதில் இல்லை

இப்படியே மூன்று மாதம் சென்றது. ஈஷ்வரின் பொறுமையும் முடியும் நிலையில் இருந்தது. “எவ்வளவு மெசேஜ்.. எதுக்கும் பதில் இல்லை.. அப்படியென்ன..?” அவளின் விலகல் முன்பு போல மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது

அந்த வாரம் அவள் அம்மாவுடன் ஷாப்பிங் வரும் போது முன் சென்று நின்றுவிட்டான். “ஐயோ..”  அவள் பதறி போய் அவள் அம்மாவை தேட, அவர் சற்று தூரம் இருந்தார்

எனக்கு உன்கிட்ட பேசியே ஆகணும்.. இன்னிக்கு நைட்டே.. மெசேஜ் பண்ணு..”  பல்லவி அம்மா வரவும் விலகிவிட்டான்

என்னடா.. சொல்லிட்டியா..?”  உடன் வந்த விஷ்ணு கேட்க, ம்ம்.. தலை மட்டும் அசைத்தவன், விஷ்ணு பைக்கிலே வீடு சென்றான். கங்கா கொடுத்த மதிய உணவை முடித்தவர்கள் ரூம் செல்ல, “படம் பார்க்கலாம்..” விஷ்ணு நெட் ப்ளிக்சில் படம் பார்க்க, ஈஷ்வர் கண் மூடி படுத்திருந்தான்மனம் முழுதும் பல்லவியே

முழு படம் முடிந்து, விஷ்ணு அடுத்த படமும் பார்க்க செய்ய, கங்கா இருவருக்கும் மாலை டீ, ஸ்னேக்ஸ் எல்லாம் கொடுத்து விட்டிருந்தார். ஈஷ்வர் டீ மட்டும் எடுத்து கொண்டவன், பால்கனி சென்றான். மெலிதான குளிர் காற்றுஇருண்ட வானம், மழை வரும் அறிகுறியை காட்ட, கையில் டீயுடன் நகரும் மழை மேகத்தை பார்த்தான்

சட்டென அவன் மனம் பல்லவியை தான் நினைக்க வைத்தது. காதல் மழையை அவன் மேல் பொழிவேனா என்று ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள். டீ முடியவும்கீழே வந்தவன்

ம்மா.. மகா வந்துட்டாளா..?” என்று பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தங்கையை கேட்டான்

இன்னும் இல்லை ஈஷ்வர்.. அவளுக்கு இன்னிக்கு ஷட்டில் கிளாஸ் இருக்கு..”

சரி.. நானே போய் அவளை கூட்டிட்டு வரேன், ட்ரைவர் கிட்ட சொல்லிடுங்க..” ரூம் வந்தவன் டிரேக் பேண்ட் போட, “எங்க கிளம்புற..?”  கேட்டான் விஷ்ணு

மகாவை கூப்பிடமழை வர மாதிரி இருக்கு..” என்றவன் பைக் சாவியுடன் கிளம்பினான்

மழையா..? இரு நானும் வரேன்..” விஷ்ணுவும் கிளம்ப, இருவரும் காரில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சென்றனர். விஷ்ணு காரில் சாய்ந்த படி நின்று விட, ஈஷ்வர் ஷட்டில் கோர்ட் உள்ளே சென்றான்

கண்ணாடி தடுப்புக்கு அந்த புறம், நான்கு ஷட்டில் கோர்ட் இருக்கஇரண்டாவது கோர்ட்டில் விளையாடி கொண்டிருந்தாள் மகாலக்ஷ்மி என்று மகா.

“மகாவை வரச்சொல்லுங்க..”  ஈஷ்வர் வெளியே இருந்த கோச்சிடம் சொல்லி அனுப்பினான்

டேய்.. அண்ணா.. இப்போ எதுக்கு என்னை வரச்சொன்ன..? இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் விளையாடியிருந்தா நான் தான் வின் பண்ணியிருப்பேன்..” மகா குதித்து கொண்டு வந்தாள்

க்கும்.. அப்படியே விளையாடி தங்கம் வாங்கிற மாதிரி தான்.. சும்மா விளையாட இவ்வளவு குதிக்கிற..?”  அவளின் கை பிடித்து வெளியே கூட்டி வர

டேய்.. இருடா.. பேக் எடுக்கணும்..” திரும்ப உள்ளே சென்று ஸ்போர்ட்ஸ் பேக்குடன் வெளியே வந்தவள், விஷ்ணுவை பார்த்ததும் முகம் திருப்பினாள்

விஷ்ணுவும் இவளை பார்த்தவன், நக்கலாக சிரித்து டிரைவர் சீட்டில் ஏறினான். “போலாமா..?” பேக் வாங்கி டிக்கியில் வைத்த ஈஷ்வர் முன்னால் ஏற, மகா உர்ரென்ற முகத்துடன் பின்னால் ஏறி கொண்டாள்.

கார் சிறிது தூரம்  சென்றதும்,    “ண்ணா.. டேய் அண்ணா.. எனக்கு பசிக்குதுபர்கர்  வேணும்..”  மகா ஈஷ்வரை கூப்பிட்டு சொல்லவிஷ்ணு முன் கண்ணாடி வழியே அவளை முறைத்தவன்

எத்தனை முறை சொல்றது ஒன்னு அண்ணா கூப்பிடு.. இல்லை டேய் ஈஷ்வர் கூப்பிடுன்னு, அது என்ன டேய் அண்ணா..” கடுப்படித்தான்

என் அண்ணா.. நான் எப்படி வேணும்ன்னாலும் கூப்பிடுவேன்..” மகாவோ சிலிர்த்து கொண்டாள்

ஆமா பெரிய அண்ணன், அதான் இவ்வளவு மரியாதையா கூப்பிடுற..”

மரியாதை வேணும்ன்னு என் அண்ணா கேட்டா நான் கொடுத்துகிறேன், நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை.. என்னமோ இவரை டேய் கூப்பிட்ட மாதிரி..”

அடிங்க.. கூப்பிட்டு பாரேன்.. வாய் சைடு வாங்கிக்கும்..”

ஓஹோ.. எங்க மேல கை வச்சு தான் பாருங்க..”

மகா..” ஈஷ்வர் கண்டிப்புடன் தங்கையை அதட்டியவன், “விஷ்ணு..  மெக் டொனல்ட்ஸ் போலாம்.. ப்ளீஸ்..” என்றான்

இல்லை இருவரும் இறங்கும் வரை வாயாலே அடித்து கொள்வர். வேறெங்காவது என்றால் ஓடிவிட முடியும். கார் எனும் போது எங்கு ஓட..? தன் காதை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இடையிட்டு விட்டான் ஈஷ்வர்

ஷாப் வரவும்,  “மகா வீட்டுக்கு வாங்கிட்டு போயிடலாம்..” ஈஷ்வர் சொல்லி கீழிறங்க,  

நானும் வரேன்..” விஷ்ணுவை முறைத்து கீழிறங்க போனாள் மகா.  

ஈஷ்வர் நீ போ.. அவ  கார்லே இருக்கட்டும்..”  விஷ்ணு சொல்ல, ஈஷ்வர் சரியென்று உள்ளே போனான்

நான் போனா உங்களுக்கு என்ன..?”  மகா அவனிடம் பாய

முதல்ல உன் ட்ரெஸை பாரு.. உன் அண்ணன் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனா மத்த பசங்க அப்படி இல்லை..”  பெரியவனாக கண்டிக்க, தன்னை குனிந்த பார்த்த மகாவிற்கு புரிந்தது

முட்டி வரை ஸ்கர்ட், வேர்வை இன்னும் வடியாத டீசர்ட் என்று இருந்தாள். சென்னையில் இது பெரிது இல்லை என்றாலும் அவள் பழக்கமும் இது இல்லையே. விஷ்ணு மேல் இருக்கும் கோவத்தில் தன்னை மறந்துவிட்டாள். அதனாலே விஷ்ணு அதை குறிப்பிடவும் வாதாடாமல் விட்டுவிட்டவள், மொபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்

என் முன்னாடி மொபைல் எடுக்காத..”  விஷ்ணு எரிச்சலுடன் சொல்ல, மகா இன்னும் ஜோராக பார்த்தாள்

ஸ்கூல் படிக்கிற பிள்ளைக்கு ஐபோன் வாங்கி கொடுக்காத சொன்னா  எங்க கேட்டான், நீ அண்ணா சொன்னவுடன் உருகிட்டான்..”  ஈஷ்வரை திட்டி கொண்டிருக்க, மகா அவனை கவனித்தால் தானே..?