கங்கா உள்ளே சென்று அனு, பல்லவியை கூப்பிட, மகளுக்கு உணவு நேரம் என்பதால் மறுக்காமல் மகளுடன் வெளியே வந்தாள் பல்லவி. “பேபி.. என்கிட்ட உட்காருங்க..”  ஈஷ்வர் கூப்பிட, அனு இந்த முறை மறுக்காமல் அவனின் பக்கத்தில் அமர்ந்தாள்

ஈஷ்வரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. பல்லவி கிட்சன் சென்று வாங்கி வந்த உணவை பிரித்து பிளேட்டில் வைத்து  கணவனுக்கு கொடுத்தாள். “பேபிக்கு கொடுடி முதல்ல..”

எனக்கு தெரியும்..”   பல்லவிக்கு கத்த வாய் துறுதுறுக்க, சுற்றி இருந்தவர்களை கருத்தில் கொண்டு அமைதியாக மகளுக்கு எடுத்து வந்து  ஊட்டினாள். ஒரு குடும்பமாக அமர்ந்திருந்தவர்களை பார்க்க கங்கா மனம் நிறைந்து போனது. திரும்பி அர்த்தமாக பரணி, ரத்னாவை பார்க்க, புரிந்த இருவரும் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

பல்லவி..”  வாசலில் மேரியின் குரல் கேட்க, பல்லவிக்கு அப்போது தான் நினைவிற்கு வந்தது

உள்ள வாங்கக்கா..” அவர் தயங்கி வெளியே நிற்கவும் கூப்பிட்டாள்

ஏஞ்சல்க்கு கேக்..”  கொடுக்க, வாங்கி வைத்தவள், “சாப்பிடுங்கக்கா..” என்றாள்

இல்லை வேண்டாம்மா..” என்றவர் எல்லோரையும் கேள்வியாக பார்க்க

இது தான் அனு அப்பா.. இது அத்தை.. என்னோட அண்ணா, அம்மா.. வெளியே இருக்கிறது என் மாமனார்..”  என்று எல்லோரையும் அறிமுகம் செய்தாள்

அப்படியா..?” அப்போது தான் நன்றாக பார்த்தவருக்கு அவர் மினிஸ்டர் என்பது புரிந்தது. ஏதோ கடன்ல இருக்கிறதா சொன்னாளே..? புரிந்த பல்லவி முகத்தில் சங்கடம்

ரொம்ப சந்தோசம்.. இனியாவது தனியா கஷ்டப்படாம குடும்பமா இரு.. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு, அனுக்கும் அப்பா வேணும் இல்லை..”  அவர் பொதுவாக பேசி விடைபெற்றார்

எதுக்கு கேக்..?” கங்கா கேட்க

அனுக்கு இன்னிக்கு தான் பிறந்த நாள் அத்தை..”  ஈஷ்வர் மனைவியை முறைத்தான்.  

என்ன பல்லவி இப்போ சொல்ற..? குட்டி தங்கத்துக்கு இன்னிக்கு பர்த்டேவா..” எல்லோரும் விஷ் செய்ய, அனு வாயில் இட்லியுடன் முழிக்கவே செய்தாள். பார்த்த ஈஷ்வர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தான்.  

நரசிம்மன் கார் டிக்கியை திறந்து ஒரு பெரிய பார்சலை கொண்டு வந்து கங்காவை வெளியே கூப்பிட்டார். “ஓஹ்.. உங்களுக்கு முன்னாடியே  தெரியுமா..?” கங்கா வியப்புடன் கேட்டபடி பார்சலை எடுத்து வந்து அனு கையில் கொடுக்க, அவளால் வாங்க முடியவில்லை

ம்மா.. குட்டி கையில எப்படி பிடிப்பா..? வாங்குடி பார்த்து நிக்கிற..” மனைவியை பார்த்து சொல்ல, அவள் உர்ரென்ற முகத்துடன் வாங்கி கொண்டாள்

நீ சாப்பிடும்மா..”  கங்கா மருமகளிடம் சொல்ல, பல்லவி மறுத்துவிட்டாள்

பல்லவி.. சாப்பிடு..”  ரத்னாவும் சொல்ல, “எனக்கு பசிக்கலம்மா..” என்றுவிட்டாள்

நல்லது சாப்பிடாமலே இரு.. அங்கங்க கொழுப்பு  கூடி போய் இருக்கு, குறையட்டும்..”  ஈஷ்வர் பக்கத்தில் இருந்த மனைவி காதில் விழுமாறு கிசுகிசுத்தான். பல்லவி பல்லை கடித்து கணவனை பார்த்தவள், மகளுக்கு ஊட்டி முடித்து எழுந்துவிட்டாள்

பல்லவி கிளம்பலாமா..?”  பரணி கேட்க

நான் எங்கேயும் வரலண்ணா..” என்றாள் பல்லவி உறுதியாக

உனக்கு நாங்க எப்போவும் தேவையே இல்லையா பல்லவி..?” பரணி ஆதங்கத்துடன் கேட்க, அவள் என்ன சொல்வாள்..? 

தம்பி.. உங்க கோவத்தை விட்டு பொறுமையா யோசிங்க, அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு, அவ  குடும்பம் இது தானே, உங்களோட எப்படி வர முடியும்..?” கங்கா சொல்ல,

ம்ஹ்ம்.. அது இத்தனை வருஷம் இல்லாம  இப்போ தான் உங்களுக்கு தெரியுதா..?” எகத்தளமாகவே கேட்டான் பரணி.  

பரணி.. நீ பேசாம இரு..”  மகனை அதட்டிய ரத்னா, மகளிடம் சென்றவர்

உனக்கு எங்க மேல கோவம்ன்னு தெரியும், தப்பு எங்க மேலயும் இருக்கு தான், அதுக்காக அம்மா மன்னிப்பு கேட்டுக்கிறேன், ஆனா தயவு செஞ்சு இப்படி தனியா இருக்காம கிளம்பி வா, அது நம்ம வீடா இருந்தாலும் சரி, இல்லை உன் வீடா இருந்தாலும் சரி, உன் முடிவு தான், ஆனா கண்டிப்பா இனி இப்படி உன்னை பிள்ளையோட தனியா விட முடியாது.. கிளம்பு..”  நிதானமாக, ஆனால் உறுதியாக பேச, கங்கா அதை ஆமோதித்து நின்றார்

பல்லவிக்கும் இது அவர்களை பார்த்த முதல்லே தெரியத்தான் செய்தது தன்னை தனியே விட்டு கிளம்ப மாட்டார்கள் என்று. கணவனை பார்க்க, அவனோ மகளிடம் ஐயக்கமாகி இருந்தான். அவன் கூப்பிடாமல் எப்படி செல்ல..? க்கும்.. அவன் சொல்லித்தான் அவனை விட்டு வந்தாயா..? மனசாட்சி கேள்வி கேட்டது

பரணிக்கு தங்கையின் மனது கொஞ்சம் புரிய, “சரி.. கொஞ்ச நாள் நம்ம வீட்ல இரு.. அப்பறம் உனக்கு எப்படியோ அப்படி..” என, பல்லவி அப்போதும் ஈஷ்வரை தான் பார்த்தாள்

ம்ஹூம்..”  அவன் இவளை கவனிக்கும் எண்ணமே இல்லாமல் மகளுடன் கொஞ்சி கொண்டிருந்தான். பார்த்த பல்லவிக்கு கோவம், அழுகை பொங்கியது. முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டவள், உள்ளுக்குள் யோசிக்க எந்த வழியும் தெரியவில்லை

இங்கேயே இருக்கலாம் என்றால் கண்டிப்பாக இரு வீட்டாரும் விட மாட்டார்கள் என்பது நிச்சயம். யார் தான் இப்படி அவர்களை தனியே விட்டு செல்வர்..? 

கிளம்பலாம்..” என்றுவிட்டாள். அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.  

“அதுக்கு முதல்ல நான் வேலை பார்த்த இடத்துக்கு, அனு டே கேர் போகணும்..” என

வேலை பார்த்த இடத்துக்கு போகணும் இல்லை, டே கேர் போய்ட்டு பாப்பா பர்த் டே கேக் கட் பண்ணிட்டு சொல்லிட்டு அப்படியே கிளம்பிடலாம்..”  நரசிம்மன் வெளியே இருந்து சொன்னார்

அதன்படி அடுத்த சில நிமிடங்களுக்குள் தங்களின்  உடைகளை மட்டும் எடுத்து கொண்டு பல்லவி மகளுடன் கிளம்பினாள். “வீட்ல இருக்கிற  பொருள் எல்லாம் இவங்க எடுத்துக்கட்டும்..” நரசிம்மன் பக்கத்து  வீட்டு அம்மா, மகனுக்கு கொடுத்தார்

அவர்கள் இவரை பார்த்து பேசி செல்ல, பல்லவிக்கு புரிந்தது அவர்கள்  நரசிம்மனின் ஏற்பாடு என்று. அவளுக்கு பிரசவ நேரத்தில் உதவியது அந்த அம்மா தான், அப்போது மட்டுமில்லாமல் அடுத்த ஒன்பது மாதமும் அவர்தான் மொத்த வீட்டு வேலைக்குஅனு வளர்ப்பிற்கு உதவினார்

அதற்கென்று பல்லவி தனியே பணம் கொடுத்தாள் தான். ஆனால் அவர் பார்த்த எல்லா வேலைக்கும் அது மிக சொற்ப பணம் தான். ஆனால் அவளால் முடிந்தது அது தானே. இப்போது யோசிக்க புரிந்தது நரசிம்மன் எல்லாம் பார்த்திருக்கார் என்று

வீட்டை பூட்டி வெளியே வர, ஈஷ்வர் மனைவி, மகளை கூப்பிடாமல் அவன் மட்டும் சென்று  விஷ்ணு காரில் ஏறிக்கொண்டான். பார்த்த பரணிக்கு தான் டென்ஷனானது

எங்களோட வாம்மா..” கங்கா அவளை கூட்டி கொண்டார். முதலில் டே கேர் செல்ல, எல்லாம் இறங்கி உள்ளே சென்றனர். ஈஷ்வர், விஷ்ணு தவிர, இருவரும் இறங்கவில்லைபல்லவி சென்று கூப்பிடவும் இல்லை. உள்ளுக்குள் கொதித்தது அவளுக்கு

அங்கு கேக் கட் செய்துவிட்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வர, பரணி காரை எடுத்து வந்து தங்கை முன் நிறுத்தினான். பல்லவி என்ன முயன்றும் அவளின் கண்கள் கணவன் புறம் செல்ல, அவன் இறங்கி வந்தான். முகம் லேசாக மலர்ந்தது

ஆனால் வந்தவனோ மகளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “பை பேபி.. சீக்கிரம் பார்க்கலாம்..” சிறு சிரிப்புடன் சொன்னவன் வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியே விட்டான். 

பல்லவிக்கு கணவனின் செயல்கள் சந்தேகத்தை கொடுத்தது.என்ன இவர் இப்படி நடந்துகிறார்..? இது இவர் இல்லையே..? அட்லீஸ்ட் அனுவை கேட்டாவது பிரச்சனை பண்ணுவார் நினைச்சா அமைதியா போறார்..”  யோசித்து கொண்டே  கிளம்பினாள்

அங்கிருந்து கிளம்பி கோயம்பத்தூர் வந்தவர்கள்,  பிளைட் மூலம் சென்னை வந்தனர். “பல்லவி.. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வரணும்..” கங்கா சொல்லி அனுப்ப, நரசிம்மன் தலை மட்டும் ஆட்டினார். மூர்த்தி அனுப்பியிருந்த கார் மூலம் வீட்டிற்கு சென்றனர்.

மூர்த்தி மட்டும் பேத்தியுடன் வாசலில் நின்றிருந்தார் மகளை எதிர்பார்த்து. கோமதி உள்ளே எதோ புலம்பி கொண்டு இருக்க, பல்லவிக்கு அவளின் வீட்டை பார்க்கவும்  பல நினைவுகள் நல்லது, கெட்டது என்று. எதையும் வெளி காட்டி கொள்ளாமல் மகளுடன் காரில் இருந்து இறங்கினாள்

பல்லவி..” மூர்த்தி மகளிடம் வர, மகளால் அவரிடம் முகம் திருப்ப முடியவில்லை. அதற்காக அவரிடம் முன் போல பேசவும் முடியவில்லை. சிறு ஒதுக்கத்துடன் பேசியவள் உள்ளே வர, மகிளா வரவேற்பாக ஏதோ பேசினாள்

ஸ்மிதா அனுவுடன் ஓட்ட முயன்று கொண்டிருக்க, கோமதி வெளியே வரவே இல்லை. அவரின் பேச்சு சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருக்க, பல்லவியால் இருக்க முடியவில்லை. எங்கோ வந்துவிட்ட உணர்வு. உடலும், மனதும் சோர்ந்தது. சுற்றிலும் நடப்பது கருத்தில் பதியவில்லை

விட்டால் போதும் என்ற உணர்வுடன் ரத்னா அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த மேல் அறைக்கு மகளுடன்  சென்றுவிட்டாள். இரவு வரைக்கும் வெளியே வரவில்லை. மூர்த்தி தான் தவித்து போனார். மனைவியை நச்சரித்தார். அவர் மட்டும் என்ன செய்ய..? 

உணவு ரூமிற்கே சென்றது. இரவு பத்து மணி போல வீடு அடங்கிவிட்டது. அனுவும் தூங்கியிருந்தாள். பல்லவிக்கு தூக்கம் என்பது நெருங்கவில்லை. ஏதேதோ எண்ணங்கள். அதில் ஈஷ்வர் தான் முழுதும். அவனை நினைத்தபடி இருக்க, காலிங் பெல் சத்தம்

இந்த நேரத்தில் யார்..?” பல்லவி அமைதியாகவே படுத்திருந்தவள், சட்டென எதோ தோன்ற கீழே வந்தாள். அவள் நினைத்தது போல் ஈஷ்வர். கோமதி, பிள்ளைகள் தவிர எல்லாம் வந்துவிட்டிருந்தனர். ஏதோ உடமைப்பட்டவன் வீடு போல சோபாவில் கை நீட்டி அமர்ந்திருந்தான்.

“தம்பி இந்த நேரத்துல..” ரத்னா கேட்க

என் பொண்டாட்டி, மகளை பார்க்க வந்தேன், ஏன் வரக்கூடாதா..?”  திரும்ப கேள்வி கேட்டான்

அனுப்புற மாதிரி அனுப்பிட்டு இப்போ எதுக்கு வரணும்..?” பரணிக்கு ஈஷ்வரை பார்க்க பார்க்க கோவம் வந்தது

சாப்பிடுறீங்களா..?” ரத்னா மருமகனை உபசரிக்க

சாப்பிட்டேன்..” என்றவன், “அனு எங்க..?” கேட்டான் மனைவியிடம்

தூங்கிட்டா..” பல்லவி முணுமுணுக்க, அவளுக்காக.. என்று இரு பெரிய பேக்கை எடுத்து கொடுத்தான்

கொடுத்துடுறேன்..” இப்போ நீ கிளம்பு பார்வை பார்த்தாள் மனைவி. “போகவா வந்திருக்கேன்..?” ஈஷ்வர் முகத்தில் மர்ம சிரிப்பு. இவன் கிளம்புறதை போல தெரியல.. குடும்பத்தார்க்கு புரிய, பல்லவிக்கோ எதோ போல இருந்தது

பல்லவி ரூம்க்கு கூட்டிட்டு போ..”  ரத்னா மகளிடம் சொல்லியே விட்டார்

ஈஷ்வர் எழுந்து நின்றவன், “போலாமா..?” என்று மனைவியிடம் கேட்டபடி அவள் வந்த வழி நடக்க, பல்லவியால் யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை. வேகமாக கணவன் பின் சென்றவள், அவளின் ரூம் உள்ளே செல்ல, ஈஷ்வர் பின்னாலே வந்தவன் கதவை அடைத்து லாக் செய்தான்

இப்போ எதுக்கு கதவை பூட்டுறீங்க..?”  கணவனிடம் பாய்ந்தாள். அவன் பதில் ஏதும் சொல்லாமல் மகளிடம் சென்று முத்தம் வைத்தான்

ஈஷ்வர்..” பல்லவி கோவமாக கூப்பிட

என்னடி..” எழுந்து மனைவியிடம் வந்தான்

இப்போ எதுக்கு இந்த நேரத்துக்கு வந்துருக்கீங்க..?”

கீழே தானே சொன்னேன்..”

பொண்டாட்டி, பிள்ளை மேல அவ்வளவு பாசம் இருந்தா உங்களோட கூட்டிட்டு போக வேண்டியது தானே..”

ம்ஹூம்.. அதுக்கு வாய்ப்பில்லை..”

“அப்போ கிளம்புங்க..”

“எனக்கு என் பொண்டாட்டி, பொண்ணு கூட இருக்கணுமே..”   சொன்னவன் அவளை நெருங்க, பல்லவிக்கு இதயம் எக்கு தப்பாக துடித்தது. ஈஷ்வர் எண்ணம் புரிய, முகம் கோவத்தில் சிவந்தது. 

“என்ன பண்றீங்க..? தள்ளி போங்க..”

“இன்னும் கிட்ட வரவே  இல்லையே..?” சொன்னவன் அடுத்த நொடி அவளை வளைத்து பிடித்தான். 

“ஈஷ்வர்.. என்னை விடுங்க..” திமிற, 

“நீ தாண்டி எனக்கு முத்தம் கொடுத்து என்னை கிளப்பிவிட்ட.. இப்போ நீ இல்லாமல் என்னால முடியாது..”

“ஐயோ.. அது..” பல்லவி திணறினாள். 

“முன்னைக்கு நான் இப்போ ரொம்ப மேன்லியா இருக்கேன்னு ரசிச்சு சொன்ன, இப்போ என்ன..?” அவளின் கன்னத்தில் இதழ் பதித்து தேய்த்தான்.  

“ஈஷ்வர்.. எனக்கு பிடிக்கல, விடு என்னை..” பல்லவி முழு மூச்சில் எதிர்க்க, ஈஷ்வரோ அவளின் துடித்த உதடுகளை மூடி பேச்சை நிறுத்திவிட்டான். முதலில் லேசாக ஆரம்பித்த இதழ் தாக்குதல் நீண்டு கொண்டே சென்றது.

அவனின் முத்தமே அவனின் கோவத்தை, தேடலை சொல்ல பல்லவிக்கு மூச்சு முட்டியது. கணவனின் முத்தம் வன்முத்தமாக மாற பல்லவி விலக முயன்றாள்

ம்ஹூம்..” அவளின் விலகல் ஈஷ்வரை தடுக்கவில்லை. “ஏண்டி..” கன்னம் பிடித்து சீறியவன், மீண்டும் அவளின் உதடுகளை கவ்வி கொண்டான். பல்லவி அவனின் தோளை இறுக்கமாக பற்ற, தன் முகத்தோடு தூக்கி கொண்டான்

ப்ளீஸ்..” பல்லவி கிடைத்த நொடி இடைவெளியில் முனக, அடுத்த இடைவெளி அவளுக்கு கிடைக்கவில்லை. அவனின் தீவிர முத்தம் பல்லவியின் உதடுகளை எரிக்க, அவனின் பின் முடியை வலிக்கும் படி பிடித்தாள்அந்த வலியும் ஈஷ்வருக்கும் பிடித்தது போல, இன்னும் நெருக்கம் கூட்டினான்.  

பல்லவிக்கு அவளின் காதலையும் மீறி ஈஷ்வரின் செயல்கள் கோவத்தை கொடுக்க அவனின் உதட்டில் கடிக்கவே செய்தாள். ரத்த சுவை ஈஷ்வரின் பிடிவாதத்தை இன்னும் கூட்ட, “என்னை விட்டுட்டு போனவளுக்கு என்மேல் கோவப்பட தகுதியே இல்லை..”  தரையிலே மனைவியுடன்  சரிந்தான்

பல்லவியின் எதிர்ப்பு அவனை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. மனைவியுடன் வாழ்ந்தே அவளை விட்டான்

பகல் புல்லா உங்க இந்த வீட்டு பொண்ணா இரு, நைட்ல என் பொண்டாட்டியா இரு..”  அவனை தள்ளிவிட்டு படுத்திருந்த மனைவியை திருப்பி அவளின் காதில் சொன்னவன், அதிலே முத்தம் பதித்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தான்.