நான் என்பதே நாம் தானடி 5 1 9810 5 விபத்து நடந்த அன்று மாலை.. அடித்து கொட்டிக் கொண்டிருந்த மழையும்., ஆங்காங்கு நடந்த மண்சரிவுகளையும் எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்., அவனுக்கு அம்மாவின் மேல் தான் கோபம் வந்தது., ‘எல்லாம் இந்த அம்மாவால வந்தது., ஒரு வாரம் ன்னு சொல்லிட்டு என்ன செய்து வச்சிருக்காங்க., இவங்கள ச்சு., என்ன பண்றது., நேற்றே கிளம்பலாம் ன்னு இதுக்கு தான் சொன்னேன்., நான் சொல்லுறதை யாரும் கேட்குறதே இல்லை‘ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கோபத்தை அறியாமல் அவன் அம்மாவோ டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தவர்., “சரவணா” என்று அழைத்தார். கோபத்தை கட்டுப்படுத்தியவன் “சொல்லுங்கம்மா“., என்று சொன்னான். “டீயை கையில் கொடுத்தவர் குளிருக்கு இதமா இருக்கும் பா சரவணா., குடி” என்று சொன்னார். “அம்மா என்ன பார்த்தா உங்களுக்கு கிண்டலா தெரியுதா“., என்றான். ” நான் எதுக்குடா சரவணா கிண்டல் பண்ண போறேன்“., என்று சொன்னார். “ஏன்மா சரவணா சரவணா ன்னு கூப்பிடாதீங்க ன்னு., எத்தனை தரம் சொல்லி இருக்கேன்., எனக்கு பேரு ஸ்கூல் காலேஜ் ல எல்லாத்தையும் நான் ஸ்ரவன் தான்., ஆனா நீங்க வேணும்னே சரவணா சரவணா கூப்பிட்டு என்னை பேச வைக்கிறீங்க“., என்று சொன்னான். “டேய்., அது உங்க அப்பா ஆசைப்பட்டு வெச்ச பேருடா., அப்புறம் ஸ்கூல்ல சேர்த்தா பழைய பெயர் மாதிரி இருக்குன்னு நீ சொல்ல கூடாதுன்னு தான்., உங்கப்பா பேரை மாத்தி வச்சாங்க., எனக்கு சரவணன் பேரு தான் பிடிக்கும்“., என்று சொன்னார். “எப்படியோ கூப்பிட்டுட்டு போங்க., நான் சொன்னேனே ம்மா நேத்தே கிளம்பி இருக்கலாம்., நான் சொன்னது எதையாவது கேட்டீங்களா“., என்று சொன்னான்., “ஏண்டா நேத்திக்கு போனா என்ன., இன்னைக்கு போனா என்ன“., என்று ராகம் போட்டு சொன்னார். “அம்மா நேத்து போனா என்ன., இன்னைக்கு போன என்ன., நீங்க பாடுறது எல்லாம் சரி தான்., இங்க பாருங்க மழை அடிச்சு ஊத்திட்டு இருக்கு., அங்க மண்சரிவை சரியாகவே இரண்டு நாள் ஆகும் போங்கம்மா., உங்களால் இன்னும் ரெண்டு நாள் எனக்கு வேற ஒர்க் வீணா போகும்., இங்க பாருங்க இந்த ஊர்ல போன் டவர் கூட ஒழுங்கா கிடைக்காது., எப்படி வேலையை பார்க்க முடியும்“., என்று சொன்னான். “டேய்., உன் கம்பெனிய என்ன காக்காவா தூக்கிட்டு போக போகுது., கம்பெனி பத்திரமாக இருக்கும்., உன் மேனேஜர் பார்த்துப்பான்., பிஏ வ உன் வேலையும் சேர்த்து பார்க்க சொல்லு., அவங்க பார்த்துப்பாங்க., இதுக்கு முன்னே பாத்ததே கிடையாது பாரு“., என்று சொன்னார்., டீயை கையில் வைத்தபடி அவன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான்., அவன் அம்மாவோ “நீ டீ குடிடா ஆறிப் போகுது“., என்று மிக நிதானமாக அவர் கையில் இருந்த டீயை ரசித்து குடித்து கொண்டே சொன்னார்., “அம்மா அது எப்படி மா இவ்வளவு கூலா இருக்கீங்க., அந்த கம்பெனியை கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டு வர அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க“., என்றான். “டேய் உங்க அப்பா கூட இவ்வளவு பீல் பண்ணுது இல்லடா“., என்றார். அவரையே குறுகுறு என்று பார்த்தவன்., “ம்மா., ஒரு டவுட்“என்றான். “என்னடா மகனே., உனக்கு இன்னைக்கு முளை ரொம்ப வேலை பார்க்குது போல“., என்றார். “ம்மா… என் இமேஜ் அ டேமேஜ் பண்ண நீங்க மட்டும் போதும் ம்மா“., என்றான். “ஹா ஹா ஹா., அடேய் உனக்கு ஆபிஸ் வேலைல மட்டும் தானே சந்தேகமே வரும்“., என்றார் “ம்மா., கேட்பிங்களா மாட்டீங்களா” என்றான். “கேளு சரவணா கேளு“.,என்றார். “எப்படி ம்மா இப்படி.., ஸ்ஸ் முடியலை” என்றவன்., “நீங்களும் சரி அப்பாவும் சரி., ரொம்ப கூல் பெர்சன்ஸ்., அப்புறம் நான் எப்படி மா“., என்று முடிப்பதற்குள்., “ஆமா டா.., நீ சின்னதுலேயே சரியான டென்ஷன் பார்ட்டி.., அப்பவே நான் உங்க அப்பா ட்ட சொன்னேன் டா“., என்றார் சீரியஸாக., அம்மா இப்படி பேசும் ஆள் கிடையாதே என்ற எண்ணத்தோடு., “என்னம்மா“., என்றான். “அது வேற ஒன்னும் இல்லை., நீ பிறந்த அப்ப அதே நேரத்தில் அங்க வேறு யாருக்கும் குழந்தை பிறந்து மாத்தி எதுவும் எங்க கிட்ட உன்னை கொடுத்துட்டாங்க ளோ ன்னு தான்“., என்றார். “அம்மா“., என்றான்., டென்ஷனாக., “பார்த்தியா பார்த்தியா“., இதுக்கு தான் சொன்னேன்., எதுக்கும் பெங்களூர் போன உடனே ஆஸ்பத்திரியில் போய் பெர்த் ரெக்கார்ட்ஸ் செக் பண்ணனும் டா“., என்றார் சிரித்தபடி.. அம்மா என்று சிணுங்கவும்., சிரித்த படியே அவன் தலையை கோதி விட்டார்., தன் அம்மாவின் தோளில் சுகமாக தலை சாய்த்து இருந்தான்., ஷ்ரவன் என்ற சரவணன். “அப்பாக்கு இந்த மாதிரி மழை லேசா தூறிட்டு இருக்கும் போது இப்படி இங்கே உட்கார்ந்து டீ குடிக்க ரொம்ப பிடிக்கும் டா“, என்றார் தன் கணவன் நினைவோடு., ” இந்த டீ எஸ்டேட் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச எஸ்டேட்., அதனால தான் இப்ப வரைக்கும் இதை விக்காம வெச்சிருக்கோம்., அப்பாவோட ஆசையே அட்லீஸ்ட் 6 மந்த்ஸ் ஒன்ஸ் இங்க வரணும் அப்படின்னு., அப்பா இருந்த வரைக்கும் சொல்லிக்கிட்டு இருந்தாரு., அதற்காக தான் இப்ப வரைக்கும் எஸ்டேட்டை வச்சிருக்கேன்., இல்லை னா இத வித்துட்டு போயிருப்பேன்“., என்று சொன்னான்., “டேய் நீ இந்த மாதிரி செஞ்சுருவேன்னு சொல்லி தான்., உங்க அப்பா அவர் காலத்துக்கு அப்புறம் நீ இதை விக்காமல் இருக்கணும் அப்படின்னு தான்., அப்பாவோட கடைசி ஆசை ன்னு அவர் சொன்னது., அவரை எஸ்டேட்ல அடக்கம் பண்ண சொன்னது., இப்போ இங்க தானே அப்பா வ அடக்கம் பண்ணி இருக்கோம்., அப்பாவை கும்பிடனும் ன்னு., அட்லீஸ்ட் வருஷத்துக்கு ஒரு முறை வருவ.., அதுமட்டுமில்ல., எஸ்டேட்டை விக்க மாட்ட இல்ல“., என்று சொன்னார். “தெரியுமா., எல்லாம் பிளான் பண்ணி இருக்கீங்க ன்னு தெரியும்“., என்று சொன்னான்., “அதுக்கு தான் சொல்றேன்., சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நீயும் வொய்ப் ம் சேர்ந்து ப்ளான் பண்ணுங்க“என்றார். “கல்யாணம் ஒன்னு தான் எனக்கு குறைச்சல் மா“., என்று திட்டி கொண்டே டீயை குடித்தான். “அம்மாவோ உனக்குன்னு ஒருத்தி பிறந்தா வரப் போறா., பிறந்திருப்பா தேடி வருவா“., என்று சொன்னார். “அம்மா தயவு செய்து கல்யாணத்தை பத்தி பேசாதீங்க., ஒரு டூ இயர்ஸ் போகட்டும்” என்றான்., “ஆமாடா இப்பவே வயசு 30 ஆக போகுது., இன்னும் டூ இயர்ஸ் போனா 32 ஆயிரும்., அதுக்கப்புறமா கல்யாணம் பண்ண போறியா“., என்று சொன்னார். “இதுல என்ன ம்மா இருக்கு., இப்ப எல்லாருமே செட்டில் ஆயிட்டு தான் கல்யாணம் பண்றாங்க., நீங்க கவலைப் படாம இருங்க“., என்று சொல்லி கொண்டே இருந்தான் டீ குடித்தபடி வெளியே இன்னும் தூறல் போட்ட மழையை தான் பார்த்துக் கொண்டிருந்தான்., அதேநேரம் எஸ்டேட் மேனேஜர் வந்து நிற்க., “எஸ்டேட் வரைக்கும் போயிட்டு அப்படியே டீ பேக்டரியும் பார்த்துட்டு வரேன்“., என்று சொன்னான். “பிசினஸ் விழுந்து விழுந்து கவனிக்கிற., என் கம்பெனி போய்டும்னு பயப்படுவ., இந்த எஸ்டேட்டும் இந்த டீ பேக்டரி ம் கூட உங்க அப்பா ஆரம்பிச்சது தான் இதை கவனிக்க மாட்டாயா” என்று கேட்டார். “அம்மா இங்க ரொம்ப நம்பிக்கையானவங்க இருக்காங்க., அவங்க நம்மளை ஏமாற்ற மாட்டாங்க ன்கிற தைரியம்., எனக்கு அது மட்டுமில்லாம இங்க எல்லாம் கரெக்டா இருக்கு., கணக்கு வழக்கெல்லாம் எனக்கு டெய்லி மேனேஜர் அனுப்பிருவாரு., சொன்னதை அப்டேட் பண்ணிட்டே தான் இருக்குறார்., பயப்படாதீங்க“., என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர். அதே நேரம் மேனேஜர் அருகில் வரவும் சரியாக இருந்தது., “வாங்க சார்“., என்று அழைக்கவும். திலகவதி அம்மாவோ உள்ளே பார்த்து “பாக்கியம் மேனேஜருக்கு டீ கொண்டு வாங்க“., என்று சொன்னார். உள்ளே இருந்து பாக்கியம் என்ற நடுத்தர வயதுடைய பெண்மணி டீயை கொண்டு வந்து மேனேஜர் கையில் கொடுத்தார்., “மழை பாதிப்பு எப்படி இருக்கு“., என்று திலகவதி கேட்டார். மேனேஜரோ “அங்கங்க பயங்கரமான மண்சரிவு., அது மட்டுமில்லாமல் இந்த தடவை தண்ணி ஓட்டம் ஜாஸ்தி., காட்டு வெள்ளம் அடிச்சு கொண்டு போயிருச்சு., நல்ல வேலை நம்ம எஸ்டேட் பக்கம் ரொம்ப பாதிப்பு இல்லை., மேல இருக்குற எஸ்டேட் ல தான் கொஞ்சம் ஜாஸ்தி அடிச்சிட்டு போய்., ஜாஸ்தியாக பாதிப்பு போல., மண்சரிவு இதெல்லாம் நமக்கு வர்றதுக்குள்ள அங்கே நின்னுருச்சு., தண்ணிதான் ஓடிக்கிட்டு இருந்துச்சு., அதுவும் தண்ணியோட வேகம் கொஞ்சம் இப்ப தான் அங்கங்க மட்டு பட்டு இருக்கு., அதனால நம்ம பிளான்ட் எல்லாம் கொஞ்சம் பத்திரமா தானிருக்கு., அப்புறம் பழையபடி மண் அணைத்து கொஞ்சம் சரி பண்ணி விட்டா சரியாகிடும்“., என்று சொல்லி பேசிக்கொண்டிருத்தார். “இது ஒண்ணு தான் இந்த ஊர்ல பிரச்சனையே“., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார் திலகவதி., இதையெல்லாம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷ்ரவன் “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்., ஃபேக்டரி வரைக்கும் போயிட்டு வந்திடலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான். ” சரிங்க சார்“., என்று சொன்னார்., “மற்ற பக்கம் ஒன்னும் பிரச்சனை இல்லையே., போகலாமா“., என்று கேட்டான். “தண்ணி விட்டு கொஞ்சம் சகதி கிடக்கும் அவ்வளவு தான்“., என்று சொன்னார்., சரி என்று சொல்லி எப்பொழுதும் போல., முரட்டு ஜீனும் கீழே மண் ஏறாத படி உள்ள ஷூவும் அணிந்து கொண்டவன்., நடப்பதற்கு அதுதான் வசதியாக இருக்கும் என்பதால் அணிந்துகொண்டான்., ஏனெனில் மழை பொழிந்து மண் சரிவுகள் மற்றும் தண்ணீர் ஓடி சகதியுமாக இருக்கும் போது சாதாரண செருப்பு எல்லாம் போட்டுக் கொண்டு நடக்க முடியாது., அதுபோல சாதாரண ஷூ போன்றவற்றையும் போட்டுக் கொண்டு நடக்க முடியாது., எனவே அவன் கிளம்பி நடக்கத் துவங்க மேனேஜரும் விடைபெற்றுக் கொண்டு அவனோடு சென்றார்., ஜீப்பில் ஏறி அமரவும் மேனேஜர் ஓட்டத் தொடங்கினார். பின்பு “வேறு ஏதும் நஷ்டம் ஏற்படுமா” என்று கேட்டார். “இல்ல சார் இந்த தடவை நமக்கு மேலே உள்ள ரெண்டு எஸ்டேட் ல தான் கொஞ்சம் பாதிப்பு., இப்பவும் நான் ரவுண்ட்ஸ் போயிட்டு தான் வந்தேன்“., என்று சொன்னார். “ஊருக்கு போக முடியுமா“., என்று கேட்டார். “இல்ல சார் மேல கொஞ்சம் நல்ல சரிவு., நீங்க கிளம்ப ஒருநாள் பொறுத்துக்கோங்க., அதுக்குள்ள கிளீன் பண்ணி விடுவாங்க., பாதையை கிளீன் பண்ணதுக்கப்புறம் நீங்க கிளம்பலாம்., இந்த முறை மண்சரிவில் மிஸ் ஆனாவங்களை தேடிட்டு இருக்காங்க“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.