கண்ணம்மாமகனைகூர்மையாகபார்த்தவர், “என்கிட்ட இதை ஏன் முன்னாடியே சொல்லலை உதய்..?” கேட்டார். அவரின் அருகில் சென்று கை பிடித்து கொண்டவன்,
“ம்மா.. அது அப்போ அவளோட சூழ்நிலைக்காக யோசிச்சது, அதுவும் ஒரு நாலு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ அவளோட மெச்சூரிட்டி லெவலும் இப்போ இருக்கிற மாதிரி இல்லை. ஆனா இப்போ அப்படி இல்லையே, நம்ம கல்யாணத்தப்போ எல்லாம் அவளுக்கு அந்த நினைப்பே இல்லையே, அப்பறம் என்னம்மா, விடுங்க..”
“ம்ப்ச்.. உதய் புரிஞ்சுக்கோ, ஒரு மூணாவது மனுஷங்க இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி யோசிங்கன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும் சொல்லு, உண்மையை சொல்லணும்ன்னா நான் அந்த பையன் சொன்னதை நம்ப கூட இல்லை கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும், ஆனா அது உண்மைன்னு தெரியும் போது கோவம் வராமல் இருக்குமா..? இதுக்கு பவ்யாவே என்கிட்ட ஓப்பனா பேசியிருக்கலாமே..?”
“அத்தை.. சாரி நடுவுல பேசுறதுக்கு, உங்க மகன் சொல்றது போல நான் இதை முதல்ல நினைச்சிருந்தேன் அப்பாவுக்காக, எனக்கு தெரியும் அது முழுக்க முழுக்க சுயநலமான முடிவுன்னு, ஆனா இப்போ எனக்குள்ள அப்பாவை தனியா விட்டு வர வருத்தம் இருந்தாலும் இந்த நினைப்பு இல்லை, அதான் அதை பத்தி உங்ககிட்ட எதுவும் பேசல, ஆனா இது இந்தளவு உங்களை ஹர்ட் பண்ணும்ன்னு நான் நினைக்கல, சாரித்தை..” வருத்தத்துடன் சொல்ல, கண்ணம்மாவால் மேலும் பேச முடியவில்லை.
அவருக்கும் புரிந்து தான் இருந்தது, ஆமா இப்போ என்னாங்கிறீங்க என்று நிற்காமல், மருமகள் உண்மையாகவே வருத்தப்படுகிறாள் என்று. மேற்கொண்டு எப்படி பேச, என்ன பேச.
“நீ சொல்றதும் சரி தான் பவ்யா, நான் தான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் போல.. தூங்க போலாம், நேரம் ஆச்சு..” என்று ரூமுக்கு சென்றுவிட, ஹாலில் கணவன், மனைவி மட்டுமே.
“வா..” உதய் அவனின் பேக்குடன் ரூமிற்கு செல்ல, ஷா அவனுடன் சென்றாள். நேரே ரெப்ரெஷ் செய்து வந்தவன், மனைவி தூங்காமல் அமர்ந்திருக்கவும், “எதையும் யோசிக்காம தூங்கு, காலையில பூஜைக்கு போகணும்.. நான் போய் அம்மாவை பார்த்துட்டு வரேன், அவங்க முகமே சரியில்லை..” என, ஷா தலையாட்டி படுத்துவிட்டாள்.
கணவன் வந்தவுடன் மனம் விட்டு எல்லாம் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்தவள், உதய் அம்மாவை பார்க்க போறேன் என நிறுத்தி வைத்து பேச மனம் வரவில்லை. அவளும் பார்த்திருந்தாளே கண்ணம்மாவின் வருத்தத்தை, கோவத்தை. பேசிட்டு வரட்டும்.. என்று படுத்து கொள்ள, உதய் பெரு மூச்சுடன் மனைவியை பார்த்து கீழே சென்றான்.
அவன் நினைத்தது போல கண்ணம்மா தூங்காமல் விழித்து அமர்ந்திருக்க, உள்ளே சென்றவன், கணபதியின் தூக்கம் கெடாமல், வெளியே போலாம்.. என்று அம்மாவிற்கு சைகை செய்து வெளியே அழைத்து வந்தான். அவரும் மறுக்காமல் வந்தவர் சோபாவில் அமர்ந்து கொள்ள, உதய் அவரின் பக்கத்தில் அமர்ந்தான்.
“எனக்கு காபி வேணும் உதய்..” கண்ணம்மா கேட்க,
“ஹாஹா.. என்கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டம்மா..” சிரிப்புடன் இருவருக்கும் காபி போட்டு எடுத்து வர, அமைதியாக குடித்தனர்.
“ம்மா.. அவளுக்குஇருக்கிறஒரேசொந்தம்அவங்கஅப்பா மட்டும் தான், அவரும் உடம்புமுடியாமன்னும்போதுஅவரைஎப்படிதனியாவிடங்கிறஅவளோடஅந்தகவலை, பயம்தான்இப்படிஅவளையோசிக்கவச்சிருக்கு..”