மறுநாள் மதியம்  போல மகள் வரவும் அவள் குடும்பத்துடன் கிளம்பி மருமகள் வீடு வந்தனர் கணபதி தம்பதி. ஜின்னா, அவனின் மனைவி கவிதா  மட்டும் அவர்களுடன்  கிளம்பி நிற்க, வீட்டை, கம்பெனி பார்க்கும் பொறுப்பு, ஜித்தன், அவனின் பெற்றவர்களிடம் ஒப்படைக்கபட்டது. 

அடுத்து சில மணி நேரங்களில் மதுரை வந்தடைய, அவர்களின் தனி கேரவன் மூலம் திருநெல்வேலி அருகில் இருக்கும் உதய் பண்ணை வீடு வந்தனர். 

“இது தான் நம்ம  பூர்வீக வீடு, சுத்தி நிலம், எங்க மாமனார் காலத்துலே இதை எல்லாம் விட்டுட்டு சென்னை வந்துட்டோம், அப்பறம் இவர் தலையெடுத்து தான் இந்த நிலத்தை, வீட்டை பராமரிக்க ஆள் வச்சோம்..” மருமகளுக்கு அவர்களின் குடும்பத்தை பத்தி சொன்னார் கண்ணம்மா. 

ஷா ஆர்வமாக  சுற்றி பார்த்தாள். அந்த காலத்து வீடு. முற்றம் வைத்து  பெரிதாக கட்டபட்டு இருந்தது. பராமரிப்புக்காக அங்கேயே இருந்த குடும்பம் இவர்கள் தங்க வசதிகளை செய்து கொடுத்தனர்.  

“இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடி தான் உதய் ஆல்டிரேஷன் ஒர்க் எல்லாம் செஞ்சான், அவனுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரிலாக்ஷேனுக்காக இங்க தான் வருவான்..” கண்ணம்மா மேலே இருக்கும் உதய் ரூமை அவளுக்கு ஒதுக்கி கொடுத்தார். 

அங்கு வந்து தான் இரவு உணவு என்பதால் எல்லோரும் ரெப்ரெஷ் செய்து உணவுண்ண அமர்ந்தனர். உணவு முடித்து உதய்க்கு அழைத்து தாங்கள்  வந்து சேர்ந்ததை சொன்ன கண்ணம்மா மகன் எங்கிருக்கிறான் என்று கேட்டு கொண்டார். அவன் மதுரை வந்துவிட்டேன்  என,  சரி என்று வைத்துவிட்டவர், மருமகள், ராமை பார்த்தார். 

“அவங்க முன்னாடி இருக்காங்கம்மா..” அனிதா சொல்ல, பால் கொடுக்கணும் என்று கிட்சன் சென்றார் கண்ணம்மா. 

வெளியே அமர்ந்திருந்த ராமோ முகுந்தனிடம் போன் பேசி கொண்டிருக்க,  ஷா அவளின் வழக்கமான  போன் கால்களை கேட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு வரும் போன் கால்கள் எப்போதும் ரிக்கார்டர் தான். அதை நிதானமாக கேட்டு, சிலதை மனதில் குறித்து கொண்டவள்,  தேவையில்லாதது எல்லாம் நீக்கி கொண்டிருந்தாள்.  

சில நாட்களாக  கேட்காததால்  நிறைய இருக்க எல்லாம் பொறுமையாக கேட்டு வந்தவளுக்கு கணவனின் கால் வரவும் முகத்தில் மெல்லிய புன்னகை. ஆனால் கேட்க கேட்க முகம் கசங்கி போனது. 

“பவிக்குட்டி..”  அழைப்பையே அப்போது தான் உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கி தான் போனது. அவனின் அந்த மகிழ்ச்சியும் உணர, தன்னை தானே திட்ட மட்டும் முடிந்தது அவளால். 

“என்ன செஞ்சிருக்கேன் நான்..? ச்சே.. நிறைய சொதப்புறேன்.. ஏற்கனவே நம்ம மேல கோவம், இப்போ இதுவும் சேர்ந்திருக்கும்.. ம்ப்ச்..”

“ஷாம்மா.. என்ன..?” ராம் போன் வைத்து  மகளின் தோள் தொட்டு கேட்க, ஹெட் செட்டை எடுத்தாள். 

“என்னடா முகம் எப்படியோ இருந்துச்சி..?”  ராம் கேட்க, 

“கல்யாணம் ஆனதில இருந்து நிறைய சொதப்புறேன்ப்பா..” என்றாள் மகள்.  

“ஷாம்மா.. உனக்கு புரியறது எனக்கு ரொம்ப சந்தோஷம், இனியாவது பார்த்து நடந்துக்கோ, பாரு நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்க, நாமும் அதுக்கு ஏத்தது போல நடந்துக்கணும், முக்கியமா வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னு இனி உளற கூடாது..” என்றவர் அவளின் தலை வருடி பக்கவாட்டில் இருந்த அவரின் ரூமிற்கு செல்ல, கொல்லபபுற வாசல் வழியே வந்த கண்ணம்மா கேட்டுவிட்டார்.  

“அப்போ அவன் சொன்னது உண்மையா..?” சந்தேகம் ஊர்ஜிதமாக மருமகள் முன் வந்து நின்றவர், 

“பவ்யா.. உனக்கு உதய் வீட்டோட மாப்பிள்ளையா வரணும்ன்னு ஆசை இருக்கா..?” பட்டென அவளிடம்  கேட்கவும் செய்துவிட்டார். ஷா அதிர்ந்து போனாள்.

அவரே பார்த்து தனி குடித்தனம் வைப்பது வேறு, இப்படி வீட்டுடன் மாப்பிள்ளை என்பது வேறு இல்லையா..? ஷாவை நேராகவே குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்

“அத்தை.. அப்போ எனக்கு உங்களை எல்லாம் தெரியாது, அப்பாக்கு ரொம்ப உடம்பு முடியாம இருந்ததால..”  அவரின் பார்வையில் மேலும் சொல்ல முடியாமல் நின்றாள்.

அதுக்காக எங்க பிள்ளையை எங்ககிட்ட இருந்து பிரிப்பாங்களா..?” கண்ணம்மாவால்  ஏற்று கொள்ள முடியவில்லை.

பிரசாத் அவரிடம் இப்படி என்று சொல்லவில்லை என்றால்..?  அன்று ரிசப்ஷனில் அவரை தேடி வந்த பிரசாத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேச்சோடு பேச்சாக இந்த விஷயத்தை கண்ணம்மாவிடம் கொளுத்தி போட்டிருந்தான்

அது மட்டும் இல்லாமல், ஷா தான்  மொத்த சொத்திற்கும் ஒரே வாரிசு, அவளுக்கான பாதுகாப்பு, அவளுக்கான வாழ்க்கை முறை எல்லாம் பெரிதாக சொல்லி அவரை குழப்பியும் விட்டிருந்தான்

உங்க வீட்ல இருந்தா அவளுக்கு எந்தளவு பாதுகாப்பு இருக்கும்..?  அங்கன்னா கூட வீடு புல்லா சிசிடிவிபாடிகார்ட், இருபத்தி நன்கு மணி நேரமும் ஜின்னா, ஜித்தன் கண் பார்வையில்  இருப்பா, உங்க வீட்ல எப்படி முடியும்..? நாளைக்கு பிஸ்னஸ் எதிரி யாராவது அவளை ஏதாவது செஞ்சுட்டா..”  பிரசாத் பேசி கொண்டே போக

என்ன பேசுறீங்க நீங்க..?” கண்ணம்மா இடையிட்டு அதட்டவே செய்தார்

நான் இருக்கிற உண்மையை தான் சொல்றேன் ஆன்ட்டி, ஷா அவ வீட்ல இருக்கிறது தான் பாதுகாப்பு, அதை தான் அவங்களும் ஆசை படுறாங்க, அது தப்புன்னு சொல்ல முடியாதே, RK அங்கிளுக்கு தெரிஞ்ச எதிரி விட தெரியாத எதிரி அதிகம், அதுக்கு தான் சொன்னேன்..”  என்றவன், அதோடு நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தான்.

ஷா, ராம் அங்கிளுக்கு உங்ககிட்ட இப்படின்னு கேட்க தயக்கம், அதான் அவங்க கேட்கல, ஆனா அஸ் பேமிலி ப்ரண்டா என்னால அப்படி அமைதியா இருக்க முடியல, ஷாவோட பாதுகாப்புக்காக உங்கிட்ட பேசிட்டு இருக்கேன், எனக்கு தெரியும் உதய் உங்களோட ரொம்ப குளோஸ்ன்னு..”

அப்படி உங்களால அவரை மட்டும் அனுப்ப முடியலன்னாலும் பிரச்சனையில்லை, நீங்களும், அங்கிளும் கூட ராம் சார் வீட்லே தங்கிக்கலாம்எத்தனை பேர் வந்தாலும் தங்க கூடிய பேலஸ் தான் அது..”

என்ன இருந்தாலு நீங்க அவர் மகளோட மாமியார், மாமனார் இல்லையா..? கண்டிப்பா உங்களுக்கான எல்லா வசதியும் கிடைக்கும், சொர்க்கத்துல இருக்கிறது போல இருக்கலாம்..”  உள்குத்து வைத்து பேச, கண்ணம்மாவிற்கு புரியாமல் இருக்குமா..? 

அவனை நேருக்கு நேர் பார்த்து இப்போ பேசு என்று நின்றார். அவரின் அந்த பார்வை பிரசாத்தை மேலும் பேச விடவில்லை

நான் சொன்னதை யோசிங்க.. என்ன இருந்தாலும் உங்க மகன் வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு..” விடை பெற்று சென்றுவிட்டான்.

அவனின் பேச்சு கண்ணம்மாவிற்கு சஞ்சலத்தை கொடுத்தது. அவன் சொன்ன வீட்டோட மாப்பிள்ளை மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஷா, ராம் அப்படி என்று அவர் நினைக்கவில்லை

ஆனால் ஷாவின் பாதுகாப்பு தான் அவரை மிகவும் குழப்பியது. அடுத்த நாட்களில் அவர் கவனித்து பார்த்ததில் ஷாவிற்கு கண்ணிற்கு தெரியாத பாதுகாப்பு உண்டு என்பது தெரிய தான் செய்தது. அவளின் உணவு கூட கண்காணிக்க படுகின்றது என்பதும் புரிந்தது. ஆனால் நம் வீட்டில் இது போல.. குழம்பி தான் போனார்

“அதற்காக மகனை மொத்தமாக தாரை வார்த்து கொடுக்கும் தெய்வ தாயும் இல்லை நான், சாதராண அம்மா நான். கஷ்டமோ நஷ்டமோ என் மகன், அவன் குடும்பம் எங்க கூட இருக்கட்டும்..”  இதில் கண்ணம்மா மிகவும் உறுதியாக தான் இருந்தார்

ஆனால் உதய் மும்பை சென்ற அன்று  பிரசாத் மீண்டும் போன் செய்து அவரை குழப்பி விட்டான்

என்ன ஆச்சு ஆன்ட்டி, உதய்க்கும், ஷாக்கும் என்ன பிரச்சனை..? ஏன் உதய் ஷாகிட்ட கோவப்படுறார்..? நீங்க எதுவும் வீட்டோட மாப்பிள்ளையா போறதை பத்தி கேட்டுடீங்களா..? இல்லை ஷா ஏதும் உதய்கிட்ட இப்படின்னு பேசிட்டாளா..? அதான் உதய் கோவப்படுறாரா..?” என்று கேட்டான்

ஏர்போர்ட்டில் அவன் பார்க்கும் போது உதய் ஷாவிடம் கோவப்பட்டு பேசுவது தெரிய, அதை உடனே பயன்படுத்தி கொண்டான் பிரசாத். அவனுக்கு எல்லா வழியிலும் உதய்யை பலவீனமாக்க வேண்டும் என்று வெறி

உதய் பற்றி முழுதும்  அலசி ஆராய்ந்து வைத்திருப்பவன் என்பதால் கண்ணம்மா அவனிற்கும் உண்டான அந்த பாசமும் தெரியும்அதில் கல் எரிய நினைத்தான். எப்படியும் இதை கேட்டு ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைய கொண்டிருத்தவன், இந்த வாய்ப்பையும் விடவில்லை. அவன் நினைத்தது போல தான் நடக்க செய்தது.

“உதய்க்கு இது தெரியுமா..?” கண்ணம்மா கேட்க, தெரியும் என்று தலை ஆட்டினாள் ஷா

அதான் உங்களுக்குள்ள சண்டையா..?” அடுத்து கேட்க, ஷாவின் மௌனமே உண்மை உரைத்தது

உன்  கிட்ட இருந்து நான் இதை எதிர்ப்பார்கல..” கண்ணம்மா  அதிருப்தியாக சொல்லி சென்றுவிட்டார்

அன்றிரவு எல்லாம் தூங்க சென்றிருக்க, மாமியாரும், மருமகளும் மட்டும் முழித்திருந்தனர். உதய் வரும் போதே இருவர் முகம் பார்த்தான். இருவரிடமும் வித்தியாசம் தெரிந்தது.

அம்மா முகத்தில் கோவம் என்றால் மனைவி முகம் கலங்கி போய் இருந்தது. கேள்வியாக பார்த்தான்.