“அன்னிக்கு இப்படித்தானே பதட்டத்தோட என்னை பார்க்காம பார்த்துட்டு இருந்த, அப்போ உன்கிட்ட வந்து சொல்ல தோணுச்சு ஏன் இவ்வளவு பதட்டம், நான் தானேன்னு..” ஷாராவின் கை பிடித்து உதய் சொல்ல, அவளின் முகம் சிவந்து தான் போனது.
“இப்போ என்ன திடீர்ன்னு..” மனதில் நினைத்தவள், அவனிடம் இருந்து தன் கைகளை விலக்கி கொண்டாள். உதய்யும் விட்டுவிட்டான்.
“போலாமா..?” ஷாரா அவசரமாக முன்னால் நடக்க, உதய் லேசான சிரிப்புடன் தலையை ஆட்டி கொண்டவன் அவளின் பின் சென்றான்.
“பிப்த் ப்ளோர்..” உதய் லிப்டின் பட்டன் அழுத்தியவன், “சாரி.. நேத்து மீட்டிங் போற டென்க்ஷன்ல அப்படி பண்ணிட்டேன்..” நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுக்க,
“பரவாயில்லை..” என்றாள் அவள் அமைதியாக.
“என்ன இப்படி சொல்லிட்ட..? நான் கூட சட்டை பிடிச்சு சண்டை போடுவ நினைச்சேன்..” உதய் சற்று ஏமாற்றத்துடன் தான் கேட்டான். உரிமை உள்ள இடத்தில தானே ஊடல் உண்டு.
லிப்ட் நிற்க, ஷாரா பதில் சொல்லாமல் வெளியே செல்ல, ராம் மகளை எதிர்கொண்டார். ராம்முன்னமேவந்திருக்க, உடன்ஜின்னா, அவனின்பெற்றோர், குணாகுடும்பம்எனஎல்லாம்இருந்தனர்.
“வாடா..” அவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மகள் அவளின் திருமணத்தில் எந்த ஈடுபாடும் காட்டாததில் வருத்தம் கொண்டிருந்தவர், முகூர்த்த பட்டு எடுக்க வரவும் சந்தோஷம் கொண்டார்.
“கண்ணம்மாகிட்ட போம்மா..” மகளிடம் சொல்ல, “வா..” உதய் அவளை அழைத்து சென்றான்.
“வந்துட்டியா.. இங்க உட்காரு..” கண்ணம்மா இவள் வரவும் பக்கத்தில் அமர வைத்து கொண்டவர், “இந்தஆல்பம்லஇருக்கபுடவைஎல்லாம்பாரு.. இதுலஉனக்குஎதுபிடிச்சிருக்கோஅதைஆர்டர்கொடுத்திடலாம்..” என, ஷாமுழிக்கவேசெய்தாள். அவள்முன்கிட்டத்தட்டஐந்துபடாசைஸ்ஆல்பம்இருந்தது.
கண்ணம்மாவும், குணா வீட்டு பெண்களும் உறவினர்களுக்கு கொடுக்க, அவர்களுக்கு பார்த்து கொண்டிருந்தனர். “கண்ணம்மா.. இந்த சாரீஸ் பைனல் பண்ணிடலாம், ஆம்பிளைங்களுக்கு என்ன வேஷ்டி,சட்டை, இளவயசு பசங்களுக்கு பேண்ட், ஷர்ட் தானே, அதை உதய் பார்த்துக்கட்டும்..” குணா மனைவி சொல்ல,
“சரிண்ணி.. முதல்ல இந்த புடவைகளை ஆர்டர் கொடுத்திடலாம், பத்திரிக்கை வைக்கும் போது துணியும் வச்சு கொடுக்க சரியா இருக்கும்..” என, இருவரும் மேனேஜரிடம் எவ்வளவு புடவை வேண்டும், எப்போது வேண்டும் என்று ஆர்டர் கொடுக்க, இங்கு ஷாரா, உதய் கையில் ஆல்பத்துடன் தடுமாறி கொண்டிருந்தனர்.
இருவருக்கும் இது புதுசு, ஷாராவிற்கு எப்போதும் அவளின் டிஸைனர் அவளுக்கு ஏத்தது போல உடைகளை டிசைன் செய்து கொடுப்பார். இவள் ட்ரையல் பார்த்து பிடித்ததை எடுத்து கொள்வாள். இப்படி நூறு கணக்கில் முன்னால் வைத்து எடுக்க சொன்னால் அவளால் முடியவில்லை.
“கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு..” உதய்யும் ஏற்று கொண்டவன், “யூசுவலா உனக்கு எங்க எடுப்ப..? அங்க வேணும்னாலும் பார்க்கலாம்..” என்றான்.
“எனக்கு என்னோட பர்சனல் டிஸைனர் தான் பார்ப்பாங்க..” ஷா சொல்ல,
“சூப்பர் அவங்களை இங்க வரமுடியுமா கேளு, இல்லை அவங்களே உனக்கு பட்டு சாரீ டிசைன் பண்ணி கொடுத்தாலும் ஓகே..” என,
“அவங்களே பட்டு செய்வாங்க தான், ஆனா..” கண்ணம்மா என்ன நினைத்து கொள்வார் என்று ஷாரா தயங்கினாள். அவள் இதை முதல்லே கண்ணம்மாவிடம் சொல்ல நினைத்து சொல்லமால் விட்டுவிட்டாள்.
“அம்மாவை நினைச்சு தயங்குறியா..? இரு.. ம்மா..” என்று கண்ணம்மாவை அழைத்து விட்டான்.
“என்ன செலக்ட் பண்ணிட்டீங்களா..?” கண்ணம்மா வர,
“இல்லைம்மா..” என்ற உதய் ஷா சொன்னதை சொன்னான்.
“நல்லதா போச்சு, அவங்க கிட்டேயே ஆர்டர் கொடுத்திடலாம், உனக்கு எது நல்லா இருக்கும் அவங்களுக்கு தெரியும் இல்லை..” கண்ணம்மா உடனே ஏற்று கொண்டார்.
“நன்றி அத்தை.. “ என்றாள் ஷா.
“எதுக்கு நன்றி எல்லாம், இதை நீ முதல்லே சொல்லியிருந்தா வீணா அலையை வேண்டியிருந்துக்காது இல்லை..” என்றவர், “அவங்க கடை எங்க..?” கேட்டார்.
“இங்க திநகர்ல தான்த்தை..”
“அப்போ இங்க முடிச்சிட்டு அங்க போயிடலாம்..” என்றுவிட்ட கண்ணம்மா, “உதய்.. நீ நம்ம வீட்டு ஆம்பிளைங்களுக்கு எடுத்துடுறியா..? ஆர்டர் கொடுத்துட்டு போயிடலாம்..” மகனிடம் சொன்னார்.
“சரிம்மா..” என்றவன் அவரிடம் லிஸ்ட் வாங்கி கொண்டான். “ஜின்னா மாப்பிள்ளைக்கு உதவி பண்ணு..” கணபதி, குணாவிடம் பேசி கொண்டிருந்த ராம் சொல்ல, “இதோ..” ஜின்னா உதய்யுடன் கீழே சென்றான்.
“அண்ணி.. உங்களுக்கு எடுத்திடலாமா..?” குணா மனைவியிடம் கேட்க, ஷா முகில் மனைவி துர்காவிடம் சென்றாள்.
“வா ஷா.. உள்ள இருந்தா ஒரே ஆட்டம், அதான் இங்க வந்துட்டேன்..” தள்ளி மகளுடன் இருந்தவள் சொல்ல,
“அண்ணா வரலையா..?” பாப்பாவிற்கு முத்தம் கொடுத்து முகிலை கேட்டாள் ஷா.
“கம்பெனிக்கு போயிருக்கார்.. எப்படியும் உதய்ண்ணாவும், அவரும் சேர்ந்து அவங்களுக்கு எப்போவும் எடுக்கிற கடையிலே எடுத்துடுவாங்க..” என,
“சரிக்கா..” என்றாள் ஷா
“அண்ணி கூப்பிடு ஷா..” என்றாள் துர்கா.
“மறந்து போயிடுறேன்.. சாரிண்ணி..” உடனே ஏற்று கொள்ள, எப்போதும் போல அவளின் எளிமையில் துர்காவிற்கு பிரமிப்பு தான்.
“உதய் அண்ணாக்கு உன்னை விட பெஸ்ட் மேட்ச் இருக்க முடியாது..” வாய்விட்டே சொல்லிவிட்டாள்.
“யாரு ஷா அவனுக்கு பெஸ்ட் மேட்ச்சா..? ஏன் துர்கா பொய்யா சொல்ற..? அவனுக்கு ஷா கொஞ்சம்.. ம்ஹூம்.. ரொம்பவே அதிகம் தான்..” என்று வந்தார் கண்ணம்மா.
“சித்தி.. நீங்க ஆயிரம் தான் அண்ணாவை ஓட்டினாலும் குணத்துல ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம்..” என்றாள் துர்கா.
“ம்ம்.. அது கொஞ்சம் ஏத்துக்கலாம்..” போனால் போகிறதென்று சொன்ன கண்ணம்மா, “வா உனக்கும் பாப்பாக்கும் எடுத்திடலாம்..” மூவருக்கும் எடுக்க சென்றனர்.
உதய்யும் ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய உடைகளை தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்து வந்தான். “எடுக்க வந்ததே பொண்ணுக்கும், பையனுக்கும் தான், ஆனால் அவங்களுக்கு எடுக்காம பாக்கி இருக்க எல்லோருக்கும் எடுத்தாச்சு..” குணா மனைவி சொல்ல,
“இருக்கட்டும்ண்ணி.. பவ்யாக்கு சாப்பிட்டு போய் எடுத்துடலாம், உதய் முதல்லே அவனுக்கு எடுத்துகிறேன் சொல்லிட்டான்..” என்றுவிட்ட கண்ணம்மா, “எல்லாம் சாப்பிட போலாம்.. லஞ்சுக்கு நேரம் ஆச்சு..” என எல்லோரும் அங்கிருந்தே மதிய உணவிற்கு சென்றனர்.
ஷா எப்போதும் போல ராம் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, உதய் கணபதி, ஜின்னாவுடன் அமர்ந்து கொண்டான். கண்ணம்மா மற்ற பெண்களும் தனி டேபிளும் அமர்ந்து கொண்டனர். உணவு முடிய குணா குடும்பமும், ஜின்னா பெற்றவர்களும் அங்கிருந்தே விடை பெற்று கொள்ள, மற்றவர்கள் மட்டும் ஷாவிற்கு முகூர்த்த புடவை பார்க்க சென்றனர்.
“என்னம்மா முதல்லே இப்படின்னு சொல்லியிருக்கலாம் இல்லை..” அவர்களின் காரிலே வந்த ராம் மகளிடம் கடிந்து கொண்டார்.
“சாரிப்பா.. எனக்கு அத்தை என்ன நினைப்பாங்கன்னு யோசனை, அதான்..” ஷா சொல்ல,
“சரி விடு.. இனி இப்படி நடக்காம பார்த்துக்கோ..” முடித்துவிட்டார். மேற்கொண்டு பேச முடியவில்லை. அவரின் மிக பெரிய பலவீனம் மனைவியும், மகளும் தானே. மனைவி இல்லாமல் போய்விட, செத்து பிழைத்து வந்தவர்க்கு மகள் தானே சகலமும்.
ஷா முதலிலே போனில் இப்படி என்று சொல்லியிருக்க, அவளின் டிசைனர் எல்லோரையும் வரவேற்று அவரின் தனி அறைக்கு அழைத்து சென்றார்.
“நீங்க முதல்லே என்கிட்ட இப்படி சொல்லியிருந்தா இன்னும் நிறைய டிசைன் ரெடி பண்ணியிருப்பேன், இப்போதைக்கு இது இருக்கு பாருங்க, இல்லை இன்னும் டிசைன் ரெடி செஞ்சு அனுப்பி வைக்கிறேன்.. நம்ம ஷா மேடம் மேரேஜ், சாரீ அப்படியே ஜொலிக்கணும்,” என்றவர் சிஸ்டமை திருப்பி,
“இது எல்லாம் தங்க சரிகை, அண்ட் இந்த புடவையிலும் தங்க சரிகை வரும், வைரம் பதிச்ச டிசைனும் இப்படி வரும்.. அண்ட் இது புல்லா பியூர் பட்டு, வெய்ட் அதிகமா வேண்டாம் சொன்னா குறைச்சிக்கலாம்..” அடுக்கி கொண்டே போக, ராம், ஷா தான் சங்கடம் கொண்டனர்.
அவர் காட்டின டிசைன் எல்லாம் சில லட்சங்களில் அடங்காது. பல.. பல லட்சங்கள் வரும். கண்ணம்மா, கணபதி என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஆட்கொள்ள திரும்பி பார்க்க, அவர்களோ டிஸைனர் காட்டிய மாடல்களை மிகவும் கவனத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே உதய்..ஷா திருமணம் முழுதும் கணபதி, கண்ணம்மா தான் எடுத்து செய்து கொண்டிருந்தனர். அவர்கள் குடும்ப வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டார் தான் திருமணம் செய்வார்கள்.