ஆதியும் நீயே..அந்தமும் நீயே 20 3096 20 சிறிது நேரத்துக்கெல்லாம் விஷாலும் ஆதியை பார்க்க விரும்ப குழந்தையுடன் அங்கே சென்றாள்.. “அத்தான்” “ஆதி..என்னோட அபி“ “அக்..அக்காக்கு எதுவும் இல்லை அத்தான்“ “இல்ல..அவள் இப்போ என்கிட்ட இல்லை..எனக்கு தெரியுது..ஆதி..அவ இல்லாத இடத்தில எனக்கும் எதுவும் இல்ல“ “அய்யோ அத்தான் இப்பிடி எல்லாம் பேசாதிங்க“ “ஆதி..எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி கொடு“ “சொ..சொல்லுங்க அத்தான்..” “இனி குழந்தையையும் பாவனாவையும் நீ தான் பாத்துக்கனும்..என்னோட அம்மா அப்பா ஆசை பாவனாக்கு நல்ல இடத்துல வாழ்க்கை அமைக்கனும் என்றது..பாத்துக்குவ ல?” “அய்யோ அத்தான் நான்..பாத்துக்கிறேன்..ஆனா அதை நீங்களும் இருந்து பார்ப்பீங்க” என்று கூற ஒரு புன்னகையுடனே விஷாலின் விழிகளும் மூடியது.. ஆயிற்று ..இருவரின் கிரியைகளும் முடிந்து போனது..அந்த காதலின் மகத்துவம் இப்போது புரிந்தது ஆதிக்கு,.,ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்ற் அந்த உன்னத நிலை.. குழந்தையையும் பாவனாவையும் தன்னுடனே அழைத்து வந்துவிட்டாள்.. அதன் பின்னர் தான் ஹரிஷின் அட்டகாசம் தொடங்கியது..நேரம் கெட்ட நேரத்தில் வீட்டு கதவை தட்டுபவன் கேள்வி கேட்டால் “அண்ணனோட குழந்தை, தங்கை” என்று கதை அளப்பான்.. ஆனால் அவனது வக்கிரமான பார்வை ஆதியை மேயும்.. அந்த நேரத்தில் எல்லாம் கவினின் நினைவு அவளை அதிகமாக தாக்கும்.. போலிஸிற்கு புகார் கொடுப்பதென்றால் என்னவென்று ஒரு வயது பெண்ணுடன் ஸ்டேஷன் அலைப்வது என்று அமைதியாக இருந்தாள்.. நாளாக நாளாக சொத்து கேட்பது, குழந்தையை கொன்று சொத்தை எடுத்திடுவேன் என்று மிரட்டுவது,பிரெண்ட்ஸை வீட்டிற்கு அழைத்து வந்து கூத்து அடிப்பது என்று எல்லை மீறிகொண்டே சென்றது ஹரிஷின் நடவடிக்கைகள்.. ஸ்ரீக்கோ,பாவனாவிற்கோ அவனால் ஆபத்து வரும் அபாயம் நிறையவே இருந்ததால் என்ன செய்வது என்று தவித்து இருந்தாள்..அவனது அட்டகாசத்துடன் அக்காவின் கூற்றும் சேர ஆதி ஆறுமாத குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.. சொத்தை எல்லாம் அவனுக்கு கொடுக்கலாம்..ஆனால் அது அவளின் தந்தையின் உழைப்பு அல்லவா? எனவே ஒரு குழு அமைத்து அவர்களின் பொறுப்பில் நிறுவனங்களை இயங்க வைத்தவள் வக்கீலிடம் சென்று தனது நிலையை கூறி அவரையும் பார்க்க கூறிவிட்டு சுதாவின் உதவியால் இங்கு வந்து சேர்ந்தாள்.. அக்காவின் வாரிசுக்காகவும் நாத்தனாருக்காகவும் அவர்களையே உறவாக ஏற்று மாளிகையில் வசித்தவள் இங்கு ஒரு சாதாரண வீட்டில் அக்காவின் தொழிலை ஏற்று அமைதியுடன் வாழ தொடங்கினாள்..ஆனாலும் ஆன்லைன் மூலமாக அங்குள்ள ஆபிஸ் விபரங்கள் இவளது கைக்கு வந்து கொண்டு தான் இருக்கும்..அந்த இடங்களை ஹரிஷ் நெருங்க கூட முடியாமல் வகை செய்து விட்டு தான் வந்தாள்.. நடந்ததை கூறிவிட்டு அப்படியே மடிந்து அமர்ந்து அழுதவளை ஓடிவந்து தனம் தாங்கி கொள்ள பாவனாவும் அவளின் மறுபுறம் அமர்ந்து அழத்தொடங்கினாள்..பாவனா மூலம் ஓரளவிற்கு விஷயம் தெரிந்த கருண் கூட ஆதிராவின் வாயால் முழு விடயத்தையும் கேட்டு சற்று கலங்கி தான் போனான்.. கவினோ கல்லோ சிலையோ என்று உணராத வகையில் அப்படியே விறைத்து நின்றிருந்தான்..கண்கள் மட்டும் சிவந்து போய் இருந்தது.. அவனது நிலையுணர்ந்து கருண் ஆதரவாக தோளை அழுத்தவும் அவன் புறம் பார்வையை திருப்பியவன் பின்னர் கீழே தனத்தின் மடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த ஆதியை நோக்கினான்..குலுங்கியபடியே “நான் எதுவுமே திட்டமிட்டு வரல மா“ “சத்தியமா எனக்கு மனோகர் சார் தான் எங்க அப்பா சொன்ன சக்கரவர்த்தி குடும்பத்தோட மூத்தவர் என்றோ, கருண் அவரோட தங்கை பையன் என்றோ, சிந்துவும் கருணும் சகோதரர்கள் என்றோ தெரியாது மா..எனக்கு தெரிஞ்சதெல்லாம் கவின் தான் எங்க அக்காக்கு பார்த்த மாப்பிள்ளை..” என்று கூறியவள் சட்டென்று எழுந்து விழிகளை துடைத்த படி “நீ..நீங்..நீங்க நம்புறீங்கல மா?” என்று பாவமாக வினவினாள்.. அவளின் கதை கேட்டு ஏற்கனவே நொந்திருந்த கவினுக்கு அவள் தன்னை பொருட்டே எடுக்காமல் தனலக்ஷ்மியிடம் அவ்வாறு வினவவும் ஐயோ..ஐயோ என்று இருந்தது.. தன் மேலே வெறுப்பு வந்தவனாக கைவிரல்களை மடக்கி காற்றில் குத்தினான்.. ஆதிரா அவ்வாறு வினவவும் பாய்ந்து அவளை அணைத்த தனம் “ஆதி..உன்னை நாங்க நம்புறோம் மா..அழாத டா” என்றூ கூறி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.. விசித்தபடியே அமர்ந்து இருந்தவள் “ஆதிரா” என்ற மனோகரின் குரல் கேட்கவும் விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்து விழிகளை துடைத்து கொண்டாள்.. அவள் அருகே வந்தவர் “ஆதிரா.. என்ன அழுகை எழுந்திரு” என்று அதட்டல் போடவும் அவரின் சொல்படி தயங்கி தயங்கி எழுந்து நின்றாள்..அவளை தாங்கியபடியே தனமும் மறூபுறம் பாவனாவும் எழுந்தனர்.. “என்னங்க” என்று தனம் ஏதோ கூற தொடங்கவும் அவரை கைகாட்டி மறித்தவர் “எல்லாம் தெரியும் தனம்..சுமதி கால் பண்ணா..அதான் மச்சானையும் கூட்டிடு அப்பிடியே வீட்டுக்கு வந்தேன்” என்றவர் மெல்ல ஆதிரா அருகில் நெருங்கி சென்று அவள் தலையை தடவி கொடுத்தார்.. அவரின் செய்கையில் மீண்டும் உடைந்தவள் அவரின் தோள் சாய்ந்து அழவும் ஆதரவாக அவளை பற்றியபடி“அழாதடா.. நீ தேவனோட மகள் என்று எனக்கு முன்னமே தெரியும்” என்று கூறினார்.. அவர் கூறியதும் சட்டென்று நிமிர்ந்தவள்“ப்பா?” என்று திக்க மற்றையோரின் அதிர்ந்த பார்வையும் அவரையே நோக்கியது.. “ஹ்ம்ம்..ஆமாடா.. தேவன் இறந்தது சத்தியமா எனக்கு தெரியாது மா..நான் அவனை தொடர்பு கொள்ள முயன்றபோ..அது வேர்க் ஆகல.. அவனை நம்பி சம்பந்ததுக்கு சரி சொன்னா அவன் பொறுப்பில்லாம செய்த காரியத்துல கோவிச்சுகிட்டு அப்பிடியே தொடர்பு கொள்ளாம விட்டுட்டேன்.. ஆனா அவன் குடும்பமே சிதைஞ்சு போனது எனக்கு தெரியாதுடா..என்னை மன்னிச்சுடு ஆதிமா” எனவும் பதறி போனவள் “அய்யோ பா..உங்க சைட் ல நீங்க செய்தது தான் சரி..நான் தப்பாலாம் நினைக்கல பா..ஆனா நான் தான் தேவனோட மகள் நு” என்று கேள்வியாக இழுத்தாள்..அவளை பார்த்து புன்னகைத்தவர் கவினை ஒரு தரம் நோக்கிவிட்டு“பின்ன..சட்டுனு இவனுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணபோறோம் நுட்டு வந்து நிறாங்க..நாங்க விசாரிக்காம தலை ஆட்டிடுவோமா?? உன்னை பத்தி விசாரிச்சேன்.. உன்னை பத்தி கண்டுபிடிக்க உண்மையிலேயே என் டிடெக்டிவ் ரொம்ப கஷ்டப்பட்டாங்க..ஆனா எப்பிடியோ கண்டு பிடிச்சுட்டாங்க. தேவனோட பொண்ணு தான் இந்த வீட்டுக்கு என்று இருக்குது என்று ரொம்ப சந்தோஷத்தோட தான் இதுக்கு நான் அக்செப்ட் பண்ணேன்.. வீட்ட உள்ள மத்தவங்க கிட்ட நான் சொல்லாம மறைச்சதுக்கு காரணம் நீ இப்படி தேவனோட மகள் என்ற அடையாளம் இல்லாம வந்திருக்கே என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கும்..அதை நீயா உடைக்கனும் என்று பார்த்துக்கிட்டு இருந்தேன்“ “இப்போ உன்னை சந்தேகப்பட்டவங்களுக்கு பொருத்தமான பதில் கிடைச்சிருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அழுத்தி கூறி கவினை பார்க்க ஆதியின் பார்வையும் கவினையே நோக்கியது.. ஆதியையே பார்த்துக்கொண்டிருந்த கவினின் பார்வையும் ஆதியின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து அப்படியே உறைந்து நின்றது.சிறிது நேரத்தில் விழிகளை இறுக்க மூடி திறந்த கவின் மனோகரை கோவமாக நோக்கினான்.. அவன் பார்ப்பதை கண்டதும் புருவம் உயர்த்தியவரை பார்த்து இன்னும் முறைத்தவன் “உங்க மருமகளா வர போறவளை பற்றியே விசாரிக்காம உங்களால விசாரிக்காம இருக்க முடியலையே? என்னோட மனைவியா வந்தவளை பற்றி எதுவுமே விசாரிக்காம ஏத்துக்கிட்டவன் நான்..அப்போ அவள் பொய் என்று தெரிய வாறப்போ எவ்வளவு கோவம் வரும்?? இதோ இருக்கிறாளே இவளை நான் அப்பிடி ஏமாற்றி இருந்திருந்தா தாங்கி இருப்பாளா?? என் பக்கம் யோசிக்க மட்டும் யாரும் முயற்சி பண்ணாதிங்க” என்று இரைந்தவன் சிந்து என அழைத்து ஸ்ரீயை தூக்கிகொண்டு விறுவிறுவென படிகளில் ஏறி அறைக்கு சென்று ஓங்கி கதவை மூடினான். அவன் கதவை அறைந்து மூடியதும் விழிகளை இறுகமூடி திறந்த ஆதி பாவமாக மனோகரை பார்க்க அவரோ புன்னகையுடன் கவினின் அறையை நோக்கிக்கொண்டு இருந்தார்..பின்னர் ஆதியை நோக்கி ஆறுதலாக புன்னகைத்தவர் “கவலைப்படாதம்மா..இனி உன்னோட புருஷனே எல்லாத்தையும் பார்த்துப்பான்..ஆனா” என்று இழுக்கவும் ஐயமாக அவரை நோக்கினாள் ஆதிரா. “ஆனா.. உன் புருஷனை நீ தான் பார்த்துக்கனும் பார்த்துக்க” என்று கூறி சிரித்தவர் “தனம் ஆதியை உள்ள கூட்டிப்போ..” என்றவர் புயல் ஓய்ந்து அடித்தது போல தொப்பென்று சோஃபாவில் சரிந்தார். அவர் அருகில் அமர்ந்த மகாதேவன் அவரின் தோளை தட்டி ஆசுவாசப்படுத்தினார்.. “மகா எல்லாமே நல்லபடியா முடியனும் டா“ “ஹ்ம்ம்.. கவலைப்படாதடா.. எல்லாம் நல்லபடியா முடியும்” என்று தனக்கும் சேர்த்தே கூறிக்கொண்டார்.. அறைக்குள் சென்ற கவின் ஸ்ரீயை சோஃபாவில் அமர செய்துவிட்டு அவள் முன்னே தரையில் அமர்ந்து ஸ்ரீயின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.. “ப்பா” என்று ஸ்ரீ அழைக்கவும் கண்களில் நீர் துளிக்க அவளை தாவி அணைத்து முகமெங்கும் முத்தமிட்டவன் “அப்பா தான் டா..உன் அப்பா தான் சரியா?? எப்போவுமே நான் தான் உன் அப்பா சரியா?” என்று புலம்பினான்.. அவன் பேசுவது புரியாமல் மிரண்ட குழந்தை அவனருகே இறங்கி அமர்ந்து அவன் கன்னத்தை துடந்துவிட்டவள் “அதாதப்பா” என்றாள்..அவளை மீண்டும் நெஞ்சில் சாய்த்து தட்டிக்கொடுத்தவன் “இல்லடா நான் அழல..அழல..” என்று கூறிக்கொண்டான்..அப்படியே ஸ்ரீயை தட்டிக்கொடுத்து உறங்க செய்தவன் கட்டிலில் அவளை தூங்க வைத்துவிட்டு அவளையே நோக்கி கொண்டு இருந்தான்.. ‘என்னோட குழந்தையை கொல்லுவியா?? ஹரிஷ்..என்னோட பொண்ணு மேல உன்னோட விரல் நகம் கூட பட விடமாட்டான் டா இந்த கவின்.. பிஸ்னஸ்ல இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க ரௌடிஸமும் செய்திருக்கேன் டா..நான் இருக்கிறப்போவே வந்து எனக்கு அருகிலேயே நின்று என்னோட ஆராவையே மிரள வைச்சு..ச்சே..உனக்கு இருக்குடா‘ என்று உள்ளுக்குள் கறுவிக்கொண்டான்.. பின்னர் ஸ்ரீயை விட்டு விலகி பால்கனி கம்பியை பற்றியபடி வானத்தை வெறித்தவனுக்கு அன்று தான் செய்த மடத்தனம் எல்லாம் நியாபகம் வந்தது.. ஆதிராவை சந்தேகம் கொண்டது முட்டாள் தனம் எனில் அவளை விசாரிக்காமலேயே அறைந்தது?? முட்டாள்தனத்தின் உச்சம்.. ஆதிராவின் கதையை கேட்டும் அவளை அணைத்து ஆறுதல் படுத்த முடியாமல் போனது அந்த அவசரத்தினால் வந்த விளைவு அல்லவா?? இனி ஆரா என்னுடன் பழைய படி பேசுவாளா?? சண்டை போடுவாளா? என்று எண்ணிக்கொண்டு இருந்தவன் கதவு தட்டும் ஒலியில் கலைந்தான்.. ஆதிராவோ சற்று நேரத்திலேயே தெளிந்துவிட்டாள்..பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவள் நிதர்சனம் உரைக்க அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பிவிட்டு மெல்ல மெல்ல தயங்கியபடி அறைக்கு சென்றாள்..சென்றவள் சாற்றி இருந்த கதவை சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவள், பின்னர் ஒரு ஆழ மூச்சு எடுத்தவாறு அறைக்கதவை தட்டினாள்.. அறைக்கதவை யாரோ தட்டவும் நினைவலைகள் அறுபட எரிச்சலோடு சென்று கதவை திறந்த கவின் அங்கு அழுது அழுது சிவந்த முகத்துடன் ஆதிரா நிற்கவும் சற்று திகைத்து தான் போனான்..அவனை சிவந்த விழிகளால் நோக்கியவள் “க..கருணும்..பா..பாவன்..பாவனாவும்..ஹுக்.. ஆபிஸ் போயாச்சு..ஹுக்” என்று விசித்தவாறு கூறியவள் அறைக்கு செல்ல வழிவிடாமல் நிற்கவும் புருவம் சுருக்கியவாறு அவனை நோக்கினாள்.. அவனது பார்வையோ அவளது சிவந்த கன்னத்திலேயே பதிந்து இருந்தது..அவன் பார்வையின் போக்கை உணர்ந்தவளுக்கு அவன் அறைந்தது நியபகம் வர கன்னத்தை தடவி கொடுத்தாள்..அவள் கன்னத்தை தடவியதும் பார்வையை விலக்கிய கவின் அறையின் வாசலில் இருந்து விலகி ஆதி உள்ளே நுழைவதற்கு வழி விட்டான்.. உள்ளே நுழைந்த ஆதி ஸ்ரீயின் அருகில் சென்று அமர்ந்து விழிகளில் நீர் நிறைய அவளின் தலையை வருடிக்கொடுத்து கொண்டு இருந்தாள்.. அவளை பார்த்தவாறே கதவை சாற்றியவன் அதன் மீதே சாய்ந்து கைகளை முன்னுக்கு கட்டியபடி அவர்களையே பார்த்தவாறு நின்றான்.,. திடீரென ஸ்ரீயை பார்த்துக்கொண்டிருந்த ஆதி வெறிப்பிடித்தது போல ஸ்ரீயை முத்தம் கொடுக்கவும் குழந்தை தூக்கத்திலேயே சிணுங்க தொடங்கினாள்.. அதுவரை அமைதியாக இருந்தவன் ஆதியின் இந்த திடீர் செய்கயால் திகைத்து விரைந்து சென்று அவளை வலுக்கட்டாயமாக எழுப்பினான்..அவன் எழுப்பவும் திமிறியபடி எழுந்தவள் மீண்டும் ஸ்ரீயின் பக்கம் திரும்பவும் அவளது தோள்களை அழுந்த பற்றி குலுக்கியபடி “ஆதி என்ன பண்ற? இங்க பாரு..பாரு“என்று சற்று பலமாக குரலை உயர்த்தினான். அவனின் குரல் அதட்டலாக உயரவும் திடுக்கிட்டு நினைவுக்கு வந்தவள் திரு திருவென விழித்தபடி கலங்கிய விழிகளுடன் கவினை நிமிர்ந்து பார்த்தாள்..அவள் அவ்வாறு பார்க்கவும் நெஞ்சினுள் சுளீரென ஊடுருவிய வலியுடன் அவளது கூந்தலை அழுந்த பற்றி தன் நெஞ்சினில் அழுத்திக்கொண்டான்.. அவள் அப்பொழுதும் திமிறப்பார்க்க இன்னும் அவளை தன்னுள் புதைப்பது போல அழுத்தியவன் “ஏன்டி இப்படி பண்ற?? நான் இருக்கேன் உனக்கு..உன் கவின் இருக்கான் உனக்கு..” என்று கூறி அவளது கண்ணீர் வழியும் முகத்தை கையில் ஏந்தியவன் “என்னடா? என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்கவும் விழிகளை அசைக்காமல் அவனையே நோக்கியவள் “கவின்” என்ற கதறலுடன் அவன் நெஞ்சில் மீண்டும் விழுந்தாள்.. அவள் விழுந்த வேகத்தில் சற்று தடுமாறியவன் அவளை இறுக பற்றி சமாளித்து கால்களை அழுந்த ஊன்றி நின்றான்.. நெஞ்சில் விழுந்தவளோ வேறு யோசனை ஏதும் இன்றி விசித்து விசித்து அழ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து தான் போனது கவினின் காதல் கொண்ட மனது.. அவளது இத்தனை நாள் மனழுத்தம் தீரும் மட்டும் அழட்டும் என எண்ணியவாறு அவளது கூந்தலை வருடியவாறு அமைதியாக நின்றான். ஆதியோ தனக்கு கிடைத்த ஆறுதல் கவின் தான் என எண்ணியவள் போல் அவனைது நெஞ்சிலேயே அங்கும் இங்கும் முகத்தை புரட்டியபடி “என்னால முடியலையே கவின்..என்னோட அப்பா அக்கா..ஹுக்..எனக்கு திரும்பவும் வேணும் கவின்“ “அக்கா மடியில சாய்ஞ்சுக்கனும்“ “அப்பாகூட நிறைய பேசனும்“ “என்னோட பழைய வாழ்க்கை எனக்கு வேணும் கவின்“ “என்னால இப்பிடி இரும்பா இருக்க முடியல கவின்“ “என்னை மட்டும் தனியா விடுட்டு அவங்க ரெண்டு பேரும் போய் சேர்ந்திட்டாங்க“ “ப்ளீஸ் கவின்..அவங்கள வர சொல்லுங்க“ “அவங்க பொண்ணு ரொம்ப நொந்து போய் இருக்கா நு சொல்லுங்க“ “அய்யோ அப்பா..அக்கா..” என்று விக்கி விக்கி அழுதவளை தேற்றும் வகையறியாமல் கலங்கிய விழிகளை இறுக மூடி திறந்தவன் அவளது முதுகை வளைத்து இறுக அணைத்து அவள் காதருகே குனிந்தான்.. குனிந்தவன் “அவங்க உன்னை பார்த்துக்கொண்டு தான் இருக்காங்க ஆரா“ “அழாதடா..ப்ளீஸ்“ “அவங்களுக்கு பதிலா தான் நான் வந்திருக்கேன் உன்னோட வாழ்க்கைக்குள்ள“ “நான் இருக்கேன்,ஸ்ரீ இருக்கா,பாவனா இருக்கா, என்னோட குடும்பம் இருக்கு“ “அழாத கண்ணம்மா“ “நான் உன்னை பார்த்துப்பேன்..உனக்கு எந்த கவலையும் வராம“ “நம்புடா“ என்று மெல்லிய குரலில் ஆறுதல் கூற அவளது மூளைக்கு அது எட்டியதோ என்னமோ அவனது கைகளிலேயே துவள தொடங்கினாள்.. களைப்பிலேயே தனது கைகளில் துவண்டவளை அப்படியே அள்ளித்தூக்கியவன் கட்டிலில் அவளை ஸ்ரீக்கு பக்கத்தில் படுக்க வைத்தவன் அப்பொழுதும் விடாமல் மெல்லிய குரலில் புலம்பிக்கொண்டிருந்தவளின் தலையை வருடி அவள் அடங்கி தூங்கும் வரை அங்கேயே நின்றான்..