யுகம் சுகம் தானே 10

“இன்னும் பர்ஸ் கிடைக்கலையாங்க..? நேரம் ஆச்சு, அப்பறம் நல்ல நேரம் முடிஞ்சிடும்..”  கண்ணம்மா ஹாலில் இருந்து கணவரிடம் கத்தி கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்த உதய்யோ கண்ணம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்

இதோ வந்திட்டேன் கண்ணு, ஏன் இவ்வளவு டென்க்ஷன்..?”   கணபதி கையில் பர்ஸுடன்  வந்தார்

டென்க்ஷன் ஆகாம, நல்ல நேரத்துல முகூர்த்த பட்டு எடுக்க வேண்டாமா..? கிளம்புங்க.. வள்ளி பார்த்துக்கோ, நாங்க வந்துடுறோம்..” சொல்லி கொண்டு வெளியே வர, உதய் இன்னும் சோபாவிலே

உங்க மகனுக்கு ஆரத்தி ஏதும் எடுக்கணுமா..?” கண்ணம்மா கடுப்பாக கேட்டார்

ம்மா..  இதுக்காகவாது என்கிட்ட பணம் வாங்கிக்கோ, அப்போ தான் நான் வருவேன்..” உதய் அமர்ந்தபடி கண்ணம்மாவிடம் கேட்க

ஏங்க நாம எங்கேயும் போகல, வாங்க ரூமுக்கு போலாம்..” என்றார் கண்ணம்மா கணவரிடம்

என்ன கண்ணு இது..?”

பின்ன என்னங்க..? முகூர்த்த பட்டு எடுக்கலைன்னா என்னை விட சாருக்கு தான் நஷ்டம் அதிகம் எனக்கென்னநான் தான் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வைக்க சொல்லி கெஞ்சிட்டு இருந்தேனாக்கும்..”

தப்பு தான்.. உங்களை பத்தி தெரிஞ்சிருந்தும் கேட்டது தப்பு தான், கிளம்புங்க..”  உதய் காருக்கு சென்று ஸ்டார்ட் செய்ய, மூவரும் ஒரு வழியாக கிளம்பினர்

ஏங்க.. ராம் அண்ணாகிட்ட பேசி கிளம்பிட்டாங்களா கேளுங்க..”  கண்ணம்மா சொல்ல, போச்சு.. உதய் மானசீகமாக தலையில் கை வைத்தான்

இதோ..”  கணபதி போன் செய்து பேசி வைத்தவர், “கிளம்பிட்டீங்களாம் கண்ணு, ஆனா மருமக மட்டும் வரல போல, எதோ முக்கியமான மீட்டிங்க இருக்குன்னு ஆபிஸ்க்கு போயிருக்காம்..”  என, கண்ணம்மா மகனை தான் முறைத்தார்

ம்மா.. என்கிட்ட சொல்லிட்டு தான் ஆபிஸ் போனா.. நான் மீட்டிங் முடிச்சிட்டு வரச்சொல்றேன்..”  உதய் அடித்துவிட

பார்க்கிறேன்.. அப்படி அவ வரல முகூர்த்த பட்டு இன்னிக்கு எடுக்கல..”  முடித்துவிட்டார்.

அவரும் என்ன தான் செய்வார், பவ்யாவிடம் இருந்து அவருக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. திருமணத்திற்கான முகூர்த்தம் குறித்தாகி விட்டது. உதய் விருப்பப்படி அடுத்த மாத முகூர்த்தம்

ராம் வீட்டில் பெண்கள் இல்லாததால் கண்ணம்மா ஷாராவிற்கு எது செய்வதாக இருந்தாலும் அவளிடம் கேட்டே செய்ய நினைத்தார்அதன்படி அவர் போன் செய்து பேசினால் மரியாதையாக பேசினாள் தான் ஆனால் அதில்  ஒருவித விலகல் நிச்சயம் இருந்தது

திருமணம் சம்மந்தப்பட்ட அவளின் அலங்காரம், மெஹெந்தி, பார்லர் என்று எது கேட்டால், உங்களுக்கு எதுக்கு சிரமம், நான் பார்த்துகிறேன் அத்தை என்றாள்

என்கூட புதுசா பழகுற தயக்கம் போல..” என்று கண்ணம்மாவும் விட்டுவிட்டவர், இன்விடேஷன் செலக்ட் செய்ய போகும் போது அவளையும்  கூப்பிட்டார்

இல்லை அத்தை.. எனக்கு வேலை இருக்குநீங்களே பாருங்க..” என்றாள்

கல்யாண வேலை, ஆபிஸ் வேலை இருக்கும்.. நினைத்து கொண்டவர், உதய் செலக்ட் செய்த மாடலை அவளுக்கு போட்டோ எடுத்து அனுப்பி வைத்தவர். “இதுல உனக்கு எது ஓகே..?” என்று போன் செய்து கேட்க, அதற்கும்  உங்க விருப்பம் என்று வைத்துவிட, கண்ணம்மாவிற்கு சந்தேகம் தான் வந்தது.

“ஏன் இப்படி..?  கல்யாணம்ன்னாலே பொண்ணுங்களுக்கு  ஒரு பரபரப்பு, ஆசை இருக்க தான் செய்யும், அதிலும் இவங்க லவ் மேரேஜ், அப்புறம் என்ன..”  மனதில் சந்தேகம் முளைவிட்ட பிறகு கண்ணம்மாவால் நிம்மதியா இருக்க முடியவில்லை. மகனை கவனித்து பார்த்ததில் அவனிடமும் அப்படி ஒரு எக்ஸைட்மென்ட், ஆர்வம்   தெரியவில்லை

என்னடா இது ரெண்டு பேரும் நேரலையும் மீட் பண்ற மாதிரி தெரியல, போனும் பேசுறதில்லை. இது சரியில்லையே..?”  அவரின் கோவத்தை விட்டு மகனிடம் நேரடியாகவே   கேட்டுவிட்டார்

உதய் ஒரு நொடி ஜெர்க்காகவே செய்தவன், “அப்படி எல்லாம் ஒன்னுமில்லைம்மா, அது ரெண்டு பேருக்கும் வேலை அதிகம், அதான்..”  சமாளிக்க, கண்ணம்மாவிற்கு எனோ ஏற்று கொள்ள முடியவில்லை

சரி பார்ப்போம்..”  என்று அப்போதைக்கு அமைதியாகிவிட்டவர்க்கு, இப்போது பவ்யா முகூர்த்த புடவை எடுக்க வரவில்லை என்று தெரிந்த பிறகு அப்படி விடமுடியவில்லை

நேற்றே அவளிடம் கேட்டார், “உன்னால வரமுடியாதுன்னா பிரச்சனை இல்லை, ஆல்பம் எடுத்துட்டு உங்க வீட்டுக்கோ, ஆபிஸ்க்கோ வரோம் என்று..”

பவ்யா தான், “வேண்டாம் அத்தை, உங்களுக்கு எதுக்கு சிரமம்.. நானே வர பார்க்கிறேன்..” என்று சொல்லியிருந்தாள். 

இப்போது வரவில்லை எனவும் கோவம் தான். அதனாலே மகனுக்கு, “பவ்யா வந்தா தான் முகூர்த்த புடவை எடுக்கிறோம்.. இல்லை இல்லை தான்..” என்று முடிவாக சொல்லிவிட்டார்

உதய்க்கும் புரிந்து போனது. என்ன செய்ய என்று யோசனையுடன் காரை அந்த ஜவுளி கடைக்குள் விட்டவன்,பெற்றவர்கள் இறங்கவும், பார்க்கிங்கில் கார் நிறுத்திவிட்டு முதலில் ஜித்தனுக்கு தான் அழைத்தான்

சொல்லுங்க சார்..”  ஜித்தன் எடுக்கவும், இன்று ஏதும் முக்கியான வேலை இருக்கா என்று கேட்டு தெரிந்து கொண்டவன், அடுத்து ஷாவிற்கு தான் அழைத்தான். 

“ஹலோ..” ஷா பார்முலாக பேசநேத்து கோவமோ.. என்று நினைத்தான்

ஏன் என்றால் நேற்று தான் இருவரும் RK குரூப் போர்ட் மீட்டிங்கில் பார்த்து கொண்டனர். அதுவும் உதய் அங்கு வருவது ஷாரா விற்கு தெரியாமல் தான்.

ஆம் நேற்று தான் போர்ட் மீட்டிங். ராம் குமார் ஓய்விற்கு பிறகு பவ்யா ஷாராவின் தலைமையில் நடக்கும் முதல் மீட்டிங். முழு பொறுப்பும் இவள் வசம். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது ராம்,  “நான் வரவா..?” என்று கேட்டார் தான்

பவ்யா மறுத்துவிட்டாள். “என்னால முடியும்ப்பா.. நம்புங்க..”  என்று கிளம்பி வந்துவிட்டவளுக்கு தைரியம், நம்பிக்கை கடலளவு உண்டு என்றாலும், மனதில் ஏதோ ஒரு இடத்தில உதய்யை நிச்சயமாக தேடினாள்

ஆனால் எப்படி வருவான்..? அவன் தான் ரோஷக்காரன் ஆச்சே..? RK குரூப்ஸ்க்குள்ள நீங்க எதுக்கு..? என்று முகத்திற்கு நேராக சொல்லி இவள்  விலக்கி வைத்த  பிறகு அவன் வருவானா என்ன..?  

மேம்.. எல்லாம் வந்துட்டாங்க..”  ஜித்தன் வர, மூச்சை இழுத்துவிட்டு மனதில் ஷாக்க்ஷியை நினைத்தவள், தெளிவாக முகத்துடன் ஜித்தன், ஜின்னா பின் தொடர மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்தாள்

நடு நாயகமாக வீற்றிருந்த  ராம் சேரை மனதில் வலியுடன் பார்த்தவள், அதற்கு பக்கத்து சேரில் அமர்ந்தாள். அவளுக்கு நேர் எதிரில் பிரசாத்.. அவனுடன் கலாதரன். மூக்கில், வாயில் இன்னும் காயம் மிச்சம் இருக்க, அவ்வளவு வன்மம்

இன்று எதாவது செய்தே ஆக வேண்டும்..”  என்ற வெறியுடன் வந்திருந்தனர்  இருவரும். அவர்கள் உடன் அவர்களின் கை கூலி ஆட்கள். நேர் பார்வையுடன் பிரசாத்தை பார்த்தவள், மீட்டிங் ஆரம்பிக்க சொன்னாள்

முதலில் ப்ரெசிடெண்ட் மீட்டிங் துவைக்கி வைக்க, அடுத்து ஷாரா பொறுப்பை தன் கையில் எடுத்து கொண்டாள். முதல் செக்ஷன் முழுதும் அந்த வருடத்திற்கான கம்பெனி வளர்ச்சி, டர்ன் ஓவர், வருங்கால திட்டம்.. என்று போய் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம். ப்ராஜெக்ட்டரை நிறுத்தி ஷாரா ஜித்தனை பார்க்க, சென்று கதவை திறந்தவன், அங்கு நின்றிருந்த ராம், உதய்யை எதிர்பார்க்கவில்லை

சாரி பார் தி இன்டர்பியரன்ஸ்..” சொல்லி உள்ளே நுழைந்த ராமை பார்த்து எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் வைக்க, ஏற்று கொண்டவர், “வாங்க உதய்..”  ஷாராவின் சேரில் உதய்யை அமர சொன்னவர், அவரின் சேரில் தான் அமர்ந்து கொண்டார்

உதய்யும்  எவ்வித மறுப்பும் இன்றி அமர்ந்து கொண்டவன் ஷாராவை பார்க்க அவளிடம் முழு வியப்பு மட்டும் தான். பிரசாத், கலாதரன் இருவரும் சற்று அதிர்ச்சியுடன் ராமை பார்த்தனர்

ஷா நீ கன்டினியூ பண்ணு..”  என்று ராம் மகளிடம் சொல்ல, அவளும் விட்ட மீட்டிங்கை தொடர்ந்தாள்

ப்ராஜெக்ட்டரின் வெளிச்சத்தில் வெள்ளை ஷர்ட், ப்ளூ கோர்ட், ப்ளூ  பேண்ட், சற்று மேலே தூக்கிய போனி டைல், கையில் ரோலக்ஸ் வாட்ச், கணீர் குரல், கம்பீர உடல் மொழி, பார்வையில் கூர்மை.. என்று முழு ஆளுமையுடைன்   மீட்டிங்கை நடத்தி சென்ற ஷாராவை ரசிக்காமல் இருக்க உதய்யால் எப்படி முடியும்..? 

காதுகள் அவளின் பேச்சை உள்வாங்கி மூளையில் சேமித்து கொண்டிருக்க, கண்களோ அவளை உள்வாங்கி இதயத்தில் சேமித்து கொண்டிருந்தது. “யப்பா.. சரியான பாஸ் மெட்டீரியல்..”  மனம் அவளை ஏகத்துக்கும் மெச்சி கொண்டது

ஓகே.. பர்ஸ்ட் செக்ஷன் முடிஞ்சது, பிரேக் அப்புறம் டிஸ்கஷன் செக்ஷன் ஸ்டார்ட் ஆகும்..”   ஷாரா முடிக்க, ஒவ்வொருவராக வந்து ராமை நலம் விசாரித்து சென்றனர்

என்ன அங்கிள் திடீர்ன்னு..?” பிரசாத் கேட்க

சொல்றேன் பிரசாத், அதுக்கு தானே வந்திருக்கேன்..” முடித்துவிட, அவனால மேற்கொண்டு கேட்க முடியவில்லை

நாம ரூமுக்கு போலாம்..”  அப்பா, உதய் இருவரையும் பார்த்து ஷா  பொதுவாக சொல்ல, மூவரும் அவளின் ரூம் சென்றனர். ராம் ரூமை தான்  இப்போது ஷா உபயோக படுத்தி கொண்டிருந்தாள்.  

ஏண்டா அப்பா  சேர் யூஸ் பண்றதில்லையா..?”  அவரின் சேர் பக்கத்தில் தனி சேர் போட்டு வேலை பார்த்து கொண்டிருந்த மகளிடம் கேட்க

ஏன் இனி நீங்க இங்க வரவே கூடாதுன்னு நினைச்சிட்டிங்களா..? உங்க கம்பெனி உங்க பொறுப்பு. ஏதோ உங்களுக்கு ரெஸ்ட் இருக்கட்டும்ன்னு தான் நான் இப்படி உங்களுக்கு பதில் பார்த்துட்டு இருக்கேன், ஒன்ஸ் உங்களுக்கு சரியானதுக்கு அப்பறம் நான் ஷாக்க்ஷி இண்டஸ்ட்ரீஸ்க்கு ஓடிடுவேன், RK குரூப்பை, RK சாரே மேய்க்கட்டும்..”  என்றாள் மகள் மிரட்டலுடன்

மகளின் மிரட்டலில் சிரித்த ராம்  மிகுந்த ஆசையுடன் அவரின் சேரை வருடி அதில் அமர்ந்தார். முகத்தில் ஒரு தனி தேஜஸ். அவரின் வாழ்க்கையே இது தான் என்று வாழ்ந்த மனிதர். தன் இடம் சேர்ந்த திருப்தி

இதுக்காகவே சீக்கிரம் வரேன்டா..” மகளிடம் உணர்ச்சிவசத்துடன் சொல்ல, ஷா அவளின் கண்களில் தேங்கும் கண்ணீரை அடக்க கைகளை இறுக்கி கொண்டாள். இருவரையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்த உதய்க்கு இருவரின் மனநிலையும் புரிந்தது

சாரி உதய்.. உட்காருங்க..” ராம் மருமகனுக்கு சேரை காட்ட, ஷா அவளின் சேரை இழுத்து போட்டாள்.