அடுத்த நாள் காலையில் மகனின் அசைவில் கண் விழித்திருந்த பிரணாவ் அவனை தூக்கம் முற்பட
இம்முறை தந்தையின் முகத்தைப் பார்த்தே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு ….
நேற்று கூட ஏதோ சுய நினைவில் இல்லாது போனதால் தான் மகன் தன்னிடம் வரவில்லை என்று பிரணாவிற்கு நெஞ்சோரம் ஒட்டியிருந்த நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாய் உடைந்து இருக்க
அழுகை சத்தத்தில் விழித்த மைத்ரேயி
கணவனின் முகம் பார்த்து பயந்தே போனாள் ….
“என்னாச்சு பிரணாவ்????” என்றதும்
அவள் புறம் திரும்ப மறுத்த விழிகளோடு
“என்னை என் பையனிற்கு பிடிக்காமல் போய்விட்டது போலும் !!!!” என்றான் ஜீவன் இன்றி …..
“என்ன உளறுகிறாய் ????
சோட்டுவிற்கு பசி எடுத்து இருக்கும் ….
அதான் அழுகிறான்!!!
இப்போது பார்…. பால் குடித்தால் மீண்டும் உன்னிடமே வந்து விடுவான் !!!” என்று அவசரமாக அழும் குழந்தையை தூக்கிக்கொண்டு அடுப்பை நோக்கி விரைந்தாள் மைத்ரேயி….
பாலை பாட்டிலில் ஊற்றி கொண்டு மகனுக்கு புகட்டியவாறு தன் அறைக்கு வந்தவளுக்கு இன்னும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தவனை பார்க்க பாவமாக இருந்தது…
” சீக்கிரம் இந்த பாலை குடித்து விட்டு அப்பாவிடம் போய் விடுடா …. சரியா?????”
மைத்ரேயி கூறியதற்கு
“வேண்டாம்டி பஜாரி ….
இப்போது வந்து விடுவான் அப்புறம் வந்து விடுவான் என்று நம்பி ஏமாறுவது ரொம்பவும் வலிக்கிறது!!!!!
என் பையனுக்கு என் மேல் ஏதோ கோபம் என்று தெரிகிறது….
சரியானதும் அவனே வந்துவிடுவான் பார்!!!”
தனக்கும் சேர்த்து ஆறுதலாக பிரணாவ் கூறிய போது அவன் போன் அடித்தது….
வெளியில் போய் பேசுகிறேன்!!!!” என்று மனைவியிடம் சைகை மொழியில் கூறிவிட்டு வெளியே சென்றிருந்தான் பிரணாவ்….
உதிதா தான் மைத்ரேயிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்….
“நைட் முழுவதும் சோட்டு தூங்காமல் சிரமபட்டானா மைத்தி????
இப்போது பரவாயில்லையா?????”
உதிதா கேட்டதற்கு
” அதெல்லாம் பரவாயில்லை உதிஅண்ணி…..
நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்????? பப்புமா , யுகி அண்ணா ?????”
“நல்லா இருக்கோம்… உங்க அண்ணா இங்கே தான் இருக்கிறார்… உன்னிடம்
பேச வேண்டுமாம்!!!” என்று யுகனிடம் போனை கொடுத்து இருந்தாள் உதிதா ….
பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு
” சுந்தரமூர்த்தியின் மாப்பிள்ளை சரியான ஃபிராடாம்….. அவனை கைது செய்து விட்டாலும் வேறு யாரை வைத்து அவன் திரும்ப எதையாவது செய்து வம்பிழுக்க வாய்ப்பு இருக்கிறது!!!!
நீங்கள் சென்னைக்கு உடனே புறப்பட்டு வந்து விடுங்கள் மைத்தி….” யுகன் கூற கேட்டு
“அண்ணா உங்களுக்கு எப்படி சோட்டுவை கடத்தியது தெரியும் ????
வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று பிரணாவ் கூறினானே????” மைத்ரேயி சற்றே ஆச்சிரியமாய் கேட்டாள்…
” கமிஷனர் அத்விக் என்னுடைய பிரண்ட் தான்மா …. ஜாக்கிரதையாக இருக்கும்படி
சொன்னார்….
நானும் வீட்டில் அம்முவிடம் கூட இதைப் பற்றி கூறவில்லை….
எதற்கு ரிஸ்க் எடுத்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும்????
கிளம்பி இங்கு வாருங்கள் !!!” என்று யுகன் கூறும்போது
யசோதாவிடம் போன் பேசி முடித்துவிட்டு ரூமினுள் நுழைந்து இருந்தான் பிரணாவ்….