யுகம் சுகம் தானே 1

“கந்தண்ணே.. ஜிம்முக்கு கிரீன் டீ கொடுத்து விட்டுடுங்க..”  சொல்லி போனை வைத்துவிட்ட  “உதய்.. உதய் கிருஷ்ணா..” தொடர்ந்து டம்பிள்ஸை எடுக்க செய்தான். தினமும் காலையில் இங்குதான் அவனின் நாள் தொடங்கும்

தம்பி டீ..” கந்தனின் மனைவி வள்ளி எடுத்து வந்து கொடுத்தார்

தேங்க்ஸ்க்கா..”  எடுத்து கொண்டவன் குடிக்க ஆரம்பிக்க, போன் ஒலித்ததுட்ரு காலரில் தி பேமஸ் லாயர் கிஷோர் என  காண்பித்தது.  

இவர் ஏன் இவ்வளவு காலையில் நமக்கு கூப்பிடுறார்..?” யோசித்தவாறே, எடுத்தவன், “ஹலோ..” என்றான்

ஹாய் மிஸ்டர் உதய்.. நான் கிஷோர்..” அறிமுகம் செய்து கொண்டவர், அவனை பார்க்க  கேட்டார்.

“என்ன  விஷயம் சார்..?” உதய் கேட்க

நேர்ல பேசலாமே உதய்..” என்றுவிட்டார்

ஓகே.. இந்த வீக்..”

நோ.. நோ உதய் உடனே  பார்க்கணும், இன்னிக்கு நீங்க நம்ம குணா வீட்டு பங்க்ஷனுக்கு வரீங்க தானே..? அங்க பார்க்கலாம்..” சொல்ல

நான் வரது இவருக்கு எப்படி தெரியும்..?”  மனது யோசிக்க, வாய் தானாகவே, “நான் வருவேன் தான், ஆனா உங்களை மீட் பண்ண முடியாது..”  என்றுவிட்டது. என்னுடைய ப்ரோகிராம்மை இன்னொருவர் பிக்ஸ் செய்வதா..? 

ஓஹ்.. காட் இட்  உதய்.. நான் உங்க புரோகிராமை ட்ரேஸ் பண்ண கோவம்.. சாரி..”   உடனே மன்னிப்பு கேட்க, உதய்க்கு ஆச்சரியத்தோடு சந்தேகம்

தி கிரேட்  கிஷோர் இது இல்லையே..”  கேட்டும் விட்டான்

ஹாஹா.. என்ன செய்ய உதய்..? என்னோட கிளையண்ட் பெத்த கை ஆச்சே..”  சொல்ல, அவரின் க்ளையண்ட்டுக்காக மனிதர் இறங்கி பேசுகிறார் என்று புரிந்து கொண்ட உதய்

சோ.. உங்க பெத்த கைக்காக தான் இந்த மீட்டிங்..?” கேட்டான்

ஆமா.. அவரோட விஷ் தான் இந்த மீட்டிங், ஆனா நம்மளோட மீட்டிங்குக்கு அப்பறம் உண்மையாவே நீங்க ரொம்ப லக்கின்னு பீல் பண்ணுவீங்க..”  என்றார் சிரிப்புடன்

மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட அதே  வார்த்தை.. “லக்..”

இதுக்காகவே உங்களை மீட் பண்ண வேண்டாம் நினைக்கிறேன்..”  உதய் குரல் காரமாக

நோ.. நோ உதய்.. ஜஸ்ட் பன்.. நாம மீட் பண்ணலாம்.. ப்ளீஸ்.. வேண்டாம் சொல்லாதீங்க.. இட்ஸ் மை ரெகுவஸ்ட்..” என,  அதற்கு மேல் மறுக்க உதய்யால் முடியவில்லை

சரி.. பங்க்ஷன்லே மீட் பண்ணலாம்..” வைத்துவிட்டவன், அவனின் தினசரி வழக்கமாக யோகா ஆரம்பித்தான். முடித்து குளிக்க ரூம் சென்றான்

சென்னை அடையார் தான் உதய் அவனின் குடும்பத்துடன் வசிக்குமிடம்குடும்பம் என்றால் பெரிதாக இல்லை. அவனின் அப்பா கணபதி.. அம்மா கண்ணம்மா..  ஒரு தங்கை அனிதாஅவளுக்கு திருமணம் முடித்து லண்டனில் வசிக்கிறாள். ஐடியில் வேலை பார்க்கும் கணவன், இரு மகள்கள், அங்கேயே குடியுரிமை இருக்க, எப்போதாவது தான் இந்தியா வருவாள், இவர்களும் முடியும் நேரத்தில் அங்கு சென்று பார்த்து வருவர்.   

உதய் குளித்து கீழிறங்க, அவனின் குடும்பம் டைனிங் டேபிளில். “ம்மா.. டிபன் வைங்க..”  சாப்பிட அமர, கண்ணம்மாவோ வலியில் முகம் சுளித்து அழுவது போல அமர்ந்திருந்தார்

ஆரம்பிச்சுட்டாங்க..” பல்லை கடித்த உதய், “இன்னிக்கு என்ன டிராமா போட பிளான் போட்டிருக்கீங்க..?” என்றான்

ஏண்டா பெத்த அம்மா வயித்து வலியில் துடிச்சிட்டு இருக்கிறது உனக்கு டிராமாவா தெரியுது.. நாங்க என்ன டிராமா கம்பெனியா நடத்துறோம்..?” கண்ணம்மா தன் இயல்பான குரலில் பொங்கி தோளை வெட்டினார்

ஆஹா.. டிராமா கம்பெனி போட்டுட்டாலும் உங்க கேவலமான நடிப்புக்கு அப்படியே கூட்டம் அள்ளிரும், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க..”

ஓஹோ.. என் வயிறு வலி  கூட உனக்கு நாடகமா இருக்கா..? நீயெல்லாம் என்ன மகன்டா..?” காய்ந்தார் அம்மா

நானெல்லாம் என்ன  மகன்ங்கிறது  இருக்கட்டும், நீங்க எல்லாம் என்ன அம்மா..? ஏன் பிறந்ததில் இருந்து என் உயிரை வாங்குறீங்க..?”  கடுப்பாக கேட்டான். 

அம்மா.. மகன் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவனின் பாச்சா பலிக்காத ஒரே ஆள் கண்ணம்மா மட்டும் தான். இருப்பத்தெட்டு  வயது ஆகும் மகனுக்கு திருமணம் செய்து விடும் வேகம் கண்ணம்மாவிடம். அதற்கான போராட்டம் தான் அம்மா மகனுக்கும்.

“ஓஹோ.. அந்தளவுக்கு ஆகி போச்சா, என்னை பார்த்து உயிரை வாங்குறேன்னு கேட்டுட்ட இல்லை, இது சரி வராது, நானும் என் புருஷனும் தனி குடித்தனம் இருந்துகிறோம், நீ எங்க வீட்டை விட்டு கிளம்புடா..”   என்றார் கண்ணம்மா  அதிகாரமாக. 

எல்லாம் என் நேரம்..? மத்தவங்க எல்லாம் சண்டை போட்டா அவங்க தான் கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போவாங்க, இங்க மட்டும் தான் பெத்த மகனை துரத்தற கொடுமை எல்லாம் நடக்கும்..” உதய் அம்மாவை பார்த்து பல்லை கடித்தான்

எதுக்கு..? இல்லை எதுக்குன்னு கேட்கிறேன்..? நாங்க வம்பாடுபட்டு சம்பாரிச்சு கட்டின வீட்டை உனக்கு தாரைவார்த்துட்டு நாங்க ஏண்டா வீட்டை வெளியே போகணும்.. நீ போடா..” கண்ணம்மா  பொங்கினார்

நீ ஒவ்வொரு முறை இப்படியே சொல்லிட்டு இரு, ஒரு நாளைக்கு போயிடுறேன் பாரு..”  உதய் பேச

எங்க போக மாட்டேங்கிறியே..?” உதட்டை சுளித்து கேலியாக கேட்டார்

பெத்த பிள்ளைக்கு ஒரு வாய் சாப்பாடு போட இவ்வளவு பிரச்சனையா..? இதுல என்னை வேற வீட்டை விட்டு வெளியே போக சொல்றீங்க.. போறேன் போங்க..” உதய் சாப்பிடாமலே எழுந்திருக்க, கண்ணம்மா அதற்கெல்லாம் கவலைப்படும் ஆளா..? 

போடா போ.. எருமை மாடு வயசாகியும் இன்னும் சோறு போடு, குழம்பு ஊத்துன்னு அம்மாகிட்ட வந்து நிக்கிறான், காலகாலத்துல கல்யாணம்  பண்ணிகிட்டா என்னவாம்உன்னை எல்லாம் இத்தனை வருஷம் வளர்த்ததே பெருசு, இனியும் உனக்கு சோறு போடா என்னால முடியாது, நீயே போட்டு சாப்பிடு,   இல்லை கிளம்பு..”  மகனை விரட்டியவர், அவன் கண் முன்னே, பூரி போட்டு சாப்பிட,  உதய் அவரை கடுப்பாக பார்த்துவிட்டு தானே போட்டு சாப்பிட்டவன்   கிளம்பிவிட்டான்

வேறென்ன செய்ய..? நின்று பேசினால் இன்னும் பேசுவார், இல்லை பெண் போட்டோ காட்டி உறுதி செய்ய நாள் குறித்துவிடுவார்அவரிடம் வாக்குவாதம் செய்யவும் நேரம் இல்லை, முக்கியமான வேலைகள் வரிசை கட்டி நிற்க  கிளம்பிவிட்டவன் நேரே அவர்களின்  கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு தான் சென்றான். 

சில மணி நேரம்  வரை அங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு அவனின் புது கம்பனியான UK கன்சல்டன்ஸிக்கு சென்றான். உள்ளே நுழைந்தவுடன் எப்போதும் போல ஒரு மலர்ச்சி அவனின் முகத்தில். அவனின் இத்தனை வருட கனவு இது. படித்தது.. பிடித்தது எல்லாம் சாப்ட்வேர் தான். 

கன்ஸ்ட்ரக்ஷன் அவர்களின் தாத்தா ஆரம்பித்தது. இது இவனின் உழைப்பு. இரண்டு வருடம் முன்பு தான் ஆரம்பித்திருந்தான். இன்னும் பேர் சொல்லி கொள்ளும் அளவு வரவில்லை. வரவைத்துவிடுவதற்கான குறிக்கோளுடன் ஓடி கொண்டிருக்கிறான். 

அதற்கான முதல் வெற்றி தான் அவனுக்கு கிடைத்த அந்த ப்ராஜெக்ட். மிக பெரிய அளவிலான ப்ராஜெக்ட். கோடிகளில் அதன் மதிப்பு. அந்த டெண்டரில்  பெரிய பெரிய கம்பெனிகள் போட்டி போட்டு அதில் வென்றது இவன் தான். அப்போது தான் இப்படி ஒருவன் இருக்கிறான் என்று மற்ற பிஸ்னஸ் மேன்களுக்கு தெரிய வந்தது. 

அமைதியாக உள்ளே நுழைந்து அடித்து விட்டவனை வீழ்த்த ஒரு பெரிய  கூட்டமே வேலை செய்து கொண்டிருந்தது. அது தெரிந்தும் தெரியாமலும் ஓடி கொண்டிருக்கும் உதய்க்கு மிகப்பெரிய சவால் அதை வெற்றிகரமாக முடித்து கொடுப்பது தான். 

இந்த வாரம் தான் அதற்கான டெட்லைன். ப்ராஜெக்ட்டும் கிட்டத்தட்ட முடியும் நிலை. நாள் நெருங்க நெருங்க அதிக பதட்டம். கொஞ்சம் மகிழ்ச்சியும். அன்று முழுதும் அவனின் டீம் ஆட்களுடன் தானும் இறங்கி வேலை பார்த்தவன், ஐந்து  மணி போல  வீட்டிற்கு சென்று குளித்து குணா வீடு கிளம்பினான். 

கார் நிறுத்தி இறங்கும் போது கண்ணாடி பார்க்க கண் துறுதுறுத்தாலும், “ம்ப்ச்.. எப்படியும் மேடம் வரமாட்டாங்க.. விட்றா..”  தனக்கு தானே சொல்லி கொண்டவன் இறங்கும் போது கண்ணாடி பார்த்து தலை கோதியே இறங்கினான். “அவள் வந்துவிட்டால்..?”

“வா.. வா..” முகில்,  குணா குடும்பம் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். கொலு பூஜைக்கு  வந்திருந்தான்.  பெரிய ஹால் முழுதும் கொலு வைத்திருந்தார்கள். மாலை நேரம் என்பதால் ஊதுபத்தி, பூ,  சீரியல் லைட் என  ஒரு ஆன்மீக வாசம் உள்ளேயும்.. வெளியேயும்.. 

நாளை இறுதி நாள் என்பதால் இன்று எல்லா வருடம் போல அவரின் பிஸ்னஸ் நண்பர்கள் வரவைத்து பூஜை செய்வார் குணா. ஆறு மணிக்கு பூஜை ஆரம்பிக்க, உதய்யின் கண்கள் இந்த வருடமும் அவளை தேடியது. ம்ஹூம்.. இல்லை. ஏமாற்றம் தான். தோளை குலுக்கி கொண்டான். 

நான்கைந்து வருடம் முன்பு இதே கொலுவில் வைத்து தான் அவளை முதல் முறை பார்த்தான். இருப்பத்தி ஐந்து வயது கூட நிரம்பாத உதய்க்கு அவளின் அந்த நளினமான அழகு பிடிக்க தான் செய்தது. ட்ரெண்டி ஹால்ப் சேரியில் அவனை ரகசியமாய் பார்த்த அவளின் அந்த பார்வை.. இன்று நினைத்தாலும் ஓர் சிலிர்ப்பு தான். ஆனால்..