என்னிடம் பேசாமல் என் ஸ்வீட் ஹார்ட்டால் இருக்க முடியுமா????
இது சும்மா விளையாடி பார்க்கிறான்”
அவ்வளவு வலியையும் மறைத்து புன்னகைக்க முயன்றாள் உதிதா…..
அன்றிரவு யுகன் போன் செய்த போதும் பிரணாவின் நினைவுகளால் சிக்குண்டவளுக்கு தன் கணவனிடம் சரியாக பேச முடியாது போக “தூக்கம் வருகிறது யுகி….. குட் நைட்” என்க
” வரவர பேச கூட மாட்டேன்கிறாய்
அம்மு…..
இப்போதே இப்படி கழற்றி விட்டால் என் பொண்ணு பிறந்ததும் என்னை பார்த்து ‘யார் நீ?’ என்று கேட்டாலும் கேட்பாய் போலவே ????????”
” உங்களிடமும் பேசாது போனால் எனக்கு கண்டிப்பாக பைத்தியம் தான் பிடித்து விடும்…. ஆனால் இப்போது நிஜமாவே தூக்கமாக தான் இருக்கிறது…. நான் வைக்கிறேன்!!!!!”
” வேண்டாம் அம்மு வைக்காதே!!!!! உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு போனை என் பொண்ணுவிடம் கொடுத்துவிட்டு தூங்கு ” யுகன் கூறவும்
போனை தன் வயிற்றின் அருகில் வைத்தவள் கண்களை இறுக்க மூடி படுத்து கொண்டாள்……
மனைவியின் பேச்சிலே ஏதோ சரியில்லை என்று யூகித்தவனுக்கு
பிரச்சினை அவள் உடன் பிறந்தோன் சம்பந்தபட்டது என்றால்
அதை வெளியில் கூட சொல்ல மாட்டாளே!!!???? என்று தான் போனை அணைக்க மனமில்லாது அவ்வாறு சொன்னான்…..
அவன் நினைத்தது போலவே அறையினுள் வந்த யசோதா
” எப்படிடி பிரணாவ் இப்படி மாறிவிட்டான்?????” ஆற்றாமையோடு உதிதாவிடம் கூறிய வாக்கியத்தை
கேட்டதும் போன் பட்டென்று அணைக்க பட்டிருந்தது…..
திரும்பி அழைத்தால் ‘தூங்கிவிட்டேன்’ என்று பொய்யுரைப்பாளே ஒழிய எதையும் காட்டி கொள்ளமாட்டாள் என்று அறிந்து வைத்திருந்ததால் மனைவியின் நினைவுகளிலேயே தத்தளித்தான் யுகன்….
இரவு பன்னிரெண்டு மணி வரையிலும்
எழுந்து வலது பக்கமும் இடது பக்கமும் மாறி மாறி படுத்த போதும் உதிதாவிற்கு தூக்கம் வந்தபாடில்லை ……
அப்போது அடிவயிற்றில் சுள்ளென்று ஒரு வலியை நிமிடத்திற்கும் குறைவாக உணர்ந்தவள்
அருகில் அவ்வளவு நேரம் பிரணாவ் பற்றி புலம்பிக் கொண்டே இருந்துவிட்டு அப்போது தான் அசந்த அன்னையை எழுப்ப மனமின்றி
அறைக்குள்ளே 10 நிமிடங்கள் நடை பயின்று விட்டு வந்து படுத்து கொண்டாள்……
ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் அதேபோல் ஒரு வலி ஏற்பட இம்முறை சற்று சுதாரித்து
“ஹாஸ்பிடல் போய் விடலாம்…. இரு அப்பாவை கூப்பிடுகிறேன்” என்று ஓடிச்சென்று தன் கணவர் ரகுநாதனை அழைத்த யசோதா
விரைந்து காரை எடுக்கச் சொல்லி பதற
மொத்த வீடும் விழித்துக்கொண்டது!!!!!
அப்போது தான் தூங்கி இருந்தான் சோட்டு ……
யசோம்மாவிடம் தான் உதிக்காவோடு உரையாடாதிருப்பதை சொல்லிக் கொடுத்ததால் மனைவி மீது முளைத்த புதிய கோபத்தில் லேப்டாப்பில் தன் வேலைகளை பிரணாவ் பார்த்துக்கொண்டிருக்க
மைத்ரேயியும் அவளது லேப்டாப்பில் தான் மூழ்கி இருந்தாள்……
ஒரு டாக்டருக்கு லேப்டாப்பில் என்ன ஓவர்டைம் டியூட்டி இருக்கப்போகிறது????????
என்று எண்ணியபோதும்
அவள் மீதிருந்த கோபம் அவளிடம் பேசுவதற்கு தடா செய்ய
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவனை
யசோதாவின் சப்தம் எழுந்து கீழே ஓட செய்திருந்தது……
” ரொம்ப வலிக்குதாடா ???? ஹாஸ்பிடல் போய்விடலாம்!!!” கதிரேசன் மகளிடம் கூற கேட்டு
ரகுநாதனிடம் “பேசுவதற்கு இது நேரமில்லை….. போய் வண்டியை எடுங்கள்!!!!! எத்தனை முறை சொல்வது??????” யசோதா பதற்றத்தில் கத்த தொடங்கினார்…..
” அம்மா பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லைமா…… இப்போது தான் வலி வர ஆரம்பித்திருக்கிறது!!! நீ பிரணாவை கூப்பிடு…… நாம் கரெக்ட் டைமிற்கு போய்விடலாம் ” என்று தன் அன்னையை சமன்படுத்த முயன்றாள் உதிதா ….
ஆனால்…..
“பிரணாவ் வேண்டாம்……
நீங்களே கூட்டி போங்கள் !!!!!!” என்றபடி கணவனிடம் திரும்பிய யசோதாவை பார்த்து ஒட்டுமொத்த வீடும் அதிர்ந்தது….
அப்போது அவர் அருகில் வேகமாய் வந்த பிரணாவ்
“லூசா யசோம்மா நீ????????????????” என்று கோபமாக திட்டிவிட்டு
காஞ்சனாவிடம் “அம்மா நீயும் கை பிடித்து கூட்டி வா……. நான் வண்டியை
எடுக்கிறேன்!!!!!”
என்றவன் தன் மனைவியிடம் திரும்பி
” சோட்டுவை தூக்கி கொண்டு வா!!!!! சீக்கிரம் !!!!” என்று விட்டு விரைந்தான்.
அதுவரை தூறல் இட்டபடி மென்மையாய் கீதம் ஒலித்த வானம் பிரணாவ் அவனது பகானியை எடுத்ததும்
கண்களை அச்சுறுத்தும் பளீர் மின்னல்களுடனும்
காதுகளை துளைத்தெடுக்கும் பெரும் இடியுடனும்
பேய் மழை பொழிய ஆரம்பிக்க
வண்டியை அவ்விரவு வேளையில் ஓட்டுவதே சிரமம் ஆகிப்போனது !!!!!!!!
அவனது பகானியில் மனைவி மற்றும் மகன் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க
தமக்கை தன் அன்னைகளின்
கதகதப்பிற்கு இடையில்
வலியை பொறுத்துக்கொண்டு கண்களை இறுக்க மூடி
யுகனின் நினைவுகளில் சிறு தெம்பை பெற்று வீற்றிருந்தாள்…..
உதிக்காவின் நிலை உணர்ந்தவனோ கவனத்தை சிதற விடாது லாவகமாய் வண்டியை செலுத்திய போதும்
அந்த கும்மிருட்டில் ஒரு பள்ளத்தாக்கின் அடியில்
அவனது பகானியின் ஒரு சக்கரம் நன்றாக மாட்டிக்கொண்டதோடு
வண்டியே சற்று சாய்ந்தபடி அப்படியே நின்ற போனது !!!!!